* கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண் டம் அருகே உள்ள அருமனையில், காதல் திருமணத்திற்கு மறுத்த கல்லூரி பேராசிரியை ஷர்மின் (24), காதலனால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டார். கல்வி தகுதி குறித்து, காதலன் பொய் சொன்னதால் காதலுக்கு, "குட் பை' சொன்ன பேராசிரியையின் உயிரை பறித்ததன் மூலம், "காதல் பரிசு' வழங்கியுள்ளார் விபரீத காதலர்.
* சென்னையில் காதல் தோல்வியால், இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியை சுவர்தினி(24) கல்லூரியின் ஐந்தாவது மாடிலிருந்து குதித்து மரணத்தைத் தழுவினார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாலும், காதலன், "குட் பை' சொன்னதாலும் அவரது உயிர் பறிபோயுள்ளது.
* சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி ரேவதியை ஒருதலையாக காதலித்தார் மாணவர் ஒருவர். காதலுக்கு மாணவி எதிர்ப்பு தெரிவிக்க, "விடுவேனா பார்' என்ற நோக்கில், அந்த மாணவியின் காதை பிளேடால் அறுத்துவிட்டு, மாணவர் தப்பி ஓடினார்.
*முத்துக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் 15 நாளில் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டார் என நடிகை கனகா காதல் தோல்வி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
* திருச்சி பெண் டாக்டர் ஒருவர் மூன்று கணவர்கள், நான்கு நண்பர்கள் என பட்டியல் போட்டு காதலித்து, ஏமாற்றி, காதலர் தினத் தன்று போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். காதல் என்ற பெயரில், தனது, "செக்ஸ்' ஆசையை தீர்த்துகொள்வது அவரது பழக்கம் என்று பெண் டாக்டரின் கணவர்கள் தொடர் "ஸ்டேட் மென்ட்' விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரம் தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய, "காதல்' விவகாரங்கள் இவை. இவை தவிர, காதலை மையப்படுத்தி, தினந்தோறும் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. உண்மையான காதலுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், நடக்கும் இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த விபரீத காதல் குற்றங்கள் குறித்து, மன நல மருத்துவர்கள் கூறியதாவது: காதல் என்பது இருவரும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறி, புரிந்து கொண்டு, திருமணத்தில் முடிந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. காதல் புனிதமானது, தெய்வீகமானது என்று இப்போதுள்ள இளைய தலைமுறையிடம் சொல்லிப் பாருங்கள். என்ன, "காமெடி-கீமடி' பண்றீங்களா, என்ற கேலியான பதில் தான் கிடைக்கும். "பிக்கப்-டிராப்-எஸ்கேப்' தான் இந்தக் கால, "காதல் ஸ்டைல்' என்று சொல்லும் நிலைக்கு காதல் தரம் தாழ்ந்துள்ளது. கிராமங்களைவிட, நகரங்களில் தான் காதல் பிரச்னைகள் விசுவரூபம் எடுக்கின்றன.
வக்கிரத்துடன் உருவாக்கப்படும் திரைப்படங்களினாலும், காதலில் விழுந்து பல இளசுகள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர்; சிக்கல்களிலும் மாட்டிக் கொள்கின்றனர். இதை தவிர்ப்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களின் 17 வயதிலிருந்து 25 வயது வரை, பெற்றோரின் கவனம், பிள்ளைகள் மீது அதிகம் இருக்க வேண்டும். கவனிக்க நேரமில்லை என்று காரணம் கூறி, பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. காதல் தோல்வியால் ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு குற்றங்களை செய்ய வைக்கிறது; தற்கொலைக்கும் தூண்டுகிறது. இதைத் தவிர்க்க, மனநல மருத்துவர்களிடம், "கவுன்சிலிங்' பெறுவது நல்லது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர் கருத்து |
![]() தங்கள் கருத்துக்கள் என்றுமே அருமை. . ![]() |
by ராஜா,Chennai,India 24-02-2010 16:24:17 IST |
![]() ![]() |
by S samir khan,DUBAI,United Arab Emirates 24-02-2010 13:23:49 IST |
![]() ![]() |
by s.s hameed,chennai ambattur,India 24-02-2010 09:26:46 IST |
![]() ![]() |
by R Raja,kian teck,Singapore 24-02-2010 07:18:09 IST |
![]() ![]() |
by M ரேணுகா தேவி,coimbatore,India 23-02-2010 11:12:39 IST |
![]() ![]() |
by m khajamohaideen,deira dubai 0503437535,India 22-02-2010 20:02:37 IST |
![]() ![]() |
by m riyaskhan,saudi arbia,India 22-02-2010 16:53:12 IST |
![]() ![]() |
by GU GUGAN,singapore,India 22-02-2010 15:00:48 IST |
![]() காதல் என்பது நம் வசத்தில் இல்லை அது ஒரு விநோதமான நெருப்பு.... பற்றவைத்தால் பற்றாது- அணைத்தால் அணையாது. - மிர்சா காலிப். ![]() |
by M Mohi,Dammam(KSA),India 22-02-2010 10:53:54 IST |
![]() ![]() |
by Mr Raja,London,United Kingdom 22-02-2010 02:40:35 IST |
![]() ![]() |
by c வெங்கட்,cuddalore,India 21-02-2010 23:15:50 IST |
![]() ![]() |
by kalai kalaiarasan,kardum sudan,Sudan 21-02-2010 22:37:51 IST |
![]() ![]() |
by V gandhi,Nairobi,Kenya 21-02-2010 22:09:29 IST |
![]() ![]() |
by s babu,chennai,India 21-02-2010 21:47:00 IST |
![]() ![]() |
by N ராஜேஷ்,Virudhunagar,India 21-02-2010 19:59:40 IST |
![]() athu unmayaka nesikum manakaluku mattuma Puriym!!!! ![]() |
by T easwaran,indore,India 21-02-2010 19:42:27 IST |
![]() காதலர்கள் தற்கொலை செய்து கொண்டு கொலைக்காரர் போல் ஆகின்றனர். தேடும் கனவின் தேவதை நீயே, தேயும் மனதின் தேவையும் நீயே, உறங்கா விழிஇன் உட்புறம் நீயே, உற்றுபற்கும் விழிகளும் நீயே, காதல் ஓர் சுகமான ராகம். ![]() |
by A அருண்குமார்,Manama,Bahrain 21-02-2010 18:02:15 IST |
![]() laila maju romiyo juliyet sajahan mumjaj andru iranthathu ivarhalmattum illai intha kaathalumthan... ![]() |
by m khaja,tamilnadu trichy,India 21-02-2010 15:19:17 IST |
![]() ![]() |
by s balamurugan,kuwait,India 21-02-2010 15:14:39 IST |
![]() ![]() |
by sree ஸ்ரீ ,Thanjavur.,India 21-02-2010 14:56:29 IST |
![]() இந்த நாடில் இருந்து யாரயும் பார்க்ககூட முடியாது அப்புறம் என்ன காதல் ............... ![]() |
by s mohamed shaheed,Al-khobar(dammam),Saudi Arabia 21-02-2010 14:25:17 IST |
![]() இது தவறான காதலர்களுக்கு மட்டும்... ![]() |
by S ஸ்ரீதர் ,chennai,India 21-02-2010 14:20:01 IST |
![]() ![]() |
by R Emmanuel,shuwaikh,Kuwait 21-02-2010 14:03:58 IST |
![]() ![]() |
by J Prabu,Trichy,India 21-02-2010 13:34:34 IST |
![]() அரசியல் பக்கம் இருந்து விலகி இந்த இடத்திலும் உங்கள் கருத்து இருக்கும் என நான் எதிர் பார்க்கலை..அருமையாக இருக்கு... தினமலரில் இந்த செய்திக்கு போடப்பட்ட படம் என்னவோ எனக்கு நல்ல காதல் ஜோடி மாதிரி இல்லை..ஹா ஹா... கள்ள காதல் ஜோடியாக இருக்கோமோ ? காதலில் எது நல்ல காதல் ?? என்ன தினமலர் நிருபரே? ![]() |
by RK மனோஜ் ,chennai ,India 21-02-2010 13:29:45 IST |
![]() ![]() |
by T ரமேஷ்,Yangon,Burma 21-02-2010 13:26:51 IST |
![]() உண்மையான காதல் நிச்சயம் வெற்றி பெரும். ![]() |
by RM சுப்ரமணியன்,chennai,India 21-02-2010 13:21:27 IST |
![]() நன்றி < ![]() |
by r rajagopal,palladam,India 21-02-2010 13:15:52 IST |
![]() ![]() |
by b rakesh,singapore,Singapore 21-02-2010 13:12:13 IST |
![]() ![]() |
by jabir mohamed,jeddah,Saudi Arabia 21-02-2010 12:26:18 IST |
![]() ![]() |
by v christopher,sanaa,Yemen 21-02-2010 11:51:07 IST |
![]() என்றைக்கு பெண்கள் பாய் பிரண்டு தேடி அலைவதையும் ஆண்கள் கேர்ள் பிரண்டை தேடி அலைவதையும் நிறுத்துகிறார்களோ அன்று தான் பெண்களின் அவல நிலை மாறும். ஆண்களின் காம வலைகளில் பெண்கள் சிக்காமல் தலை நிமிர்த்து கண்டுகொள்ளாமல் போகும்போது ஒருபோதும் ஆண்கள் தொந்தரவு செய்வதில்லை, அப்படியே பிரச்னை செய்தாலும் சொல்லவேண்டிய இடத்தில சொல்லி தடுத்துவிட்டால் பிரச்சனியாகளுக்கும் முற்றுபுள்ளி வைத்துவிடலாம். ஆனால் பெண்கள் தாங்களே காதல் என்ற கவர்ச்சியின் மாயையில் விழுந்து ஆணின் ஆசை வார்த்தைகளை நம்பி தன்னை இழந்து நிற்கும் நேரத்தில் அவள் வாழ்க்கையினை தொலைத்துவிட்டு காதல் தோல்வி என்ற பட்டத்தினை ஏந்திக்கொண்டு சமுதாயத்தின் கண்களில் தீண்டத்தகாத நிலைக்கும் போகும் நிலை எப்படி வந்தது என்று சிந்தித்து பார்க்கவேண்டும். வாழ வேண்டும் என்ற பல கனவுகளோடு படிக்க வேண்டிய நேரத்தில் பாதாள கிடங்க்காகிய காதல் எனும் காலி கிணற்றில் ஆழம் பார்க்காமல் பெற்றோர்களுக்கு பிள்ளைகளாய் இருந்தால் எதிலும் தோல்வி என்பதை விரட்டிவிடலாம். ![]() |
by j mohideen,chennai,India 21-02-2010 11:46:11 IST |
![]() ![]() |
by r k,qatar,India 21-02-2010 10:57:40 IST |
![]() ![]() |
by R Jaya,Dubai,United Arab Emirates 21-02-2010 10:50:39 IST |
![]() ![]() |
by A பாலன்,Vanavasi Salem,India 21-02-2010 10:23:48 IST |
![]() ![]() |
by R Kalappaiya (jurong),sigapore,India 21-02-2010 10:13:01 IST |
![]() இந்த மாதிரி மிருக காதல் இருக்கும் வரை ஏன் கொலை,கொள்ளை நாட்டில் அதிகமாகாது? இதனால் பாதிக்கபடுவது உண்மையான காதலர்களும் கூட! ![]() |
by mg அரவிந்தன்,guangzhou,china,India 21-02-2010 09:59:31 IST |
![]() ![]() |
by R சாமி ,Tirupur,India 21-02-2010 09:23:56 IST |
![]() ![]() |
by G Suresh,Singapore,India 21-02-2010 09:20:48 IST |
![]() ![]() |
by M Ramasamy,Bangalore,India 21-02-2010 09:08:04 IST |
![]() ![]() |
by j rajesh,singapore,Singapore 21-02-2010 07:59:00 IST |
![]() ![]() |
by S. பூபதி,chennai,India 21-02-2010 07:53:26 IST |
![]() ![]() |
by j jahir,al-hassa, saudi arabia,India 21-02-2010 07:33:24 IST |
![]() வார்த்தை, வாக்கியம். நீ, நான், நம் காதல்! இது எல்லாம் ஒரு பொழைப்பு! ![]() |
by thula baram,coimbatore,India 21-02-2010 06:13:46 IST |
![]() ![]() |
by kumaran,vedaranyam,India 21-02-2010 05:49:37 IST |
![]() என் இதயத்துள் உன் நினைவு நிறைகின்றது. சொக்க வைக்கும் உன்னுருவம் தெரிகின்றது, என்னுள் சொந்தம் கொண்டாடும் சோகம் மிளிர்கின்றது. என்காதலெல்லாம் உன்காலடியில் கிடக்கின்றது உன்கண்திறவும் காலத்தை எதிர் நோக்குகின்றது. என்னிதயம் உன்பார்வைக்கு ஏங்குகின்றது. உன் நிழலும் ஏனோ எனைநெருங்க மறுக்கின்றது. காலம்காலமாய் உன்காதலை எதிர் நோக்குகின்றேன். காதலே எனை ஏன் கற்பழிக்கின்றாய்? காதலுக்கு கண்ணுண்டோ இல்லையோ, காதலன் என்னை கவனிப்பாரில்லையே ? சிறையினும் கொடியது உன் நினைவுகள், அதில் சிதைந்திடும் என் எண்ணக் கனவுகள். மரணத்தினும் உன் நினைவு கொடியது எந்தன் மனம் வழியின்றி அலையுது. நீ கண்திறவும் நாளொன்று உண்டானால், அதற்குள் கலைந்து விடுமடி என்னுருவம். நீ, புரிந்திடும் நாளொன்று உண்டானால், அதற்குள் புதைந்து விடுமடி என் தேகம். கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் நம் காதலிலும் கட்டாயம் வேண்டுமோடி? ![]() |
by g ஸ்ரீதர்,California,United States 21-02-2010 04:16:50 IST |
![]() நேசித்தவனுக்கு தான் நேசம் புரியும்,தெரியும்,நேசிப்பை மறந்து பேதங்களை காட்டினால் காதல் சாகும். காதல் போயின் சாதல். அதாவது மனத்தால் சாவது பிணமாய் வாழ்வது பேயாய் வளருவது. அளவுக்கு மிஞ்சின திமிர் வாழ்க்கைக்கு வளம் தராது.வாழ ஆசை படுபவனுக்கு..பெண் ஒரு தேவதை, பெண்ணுக்கோ ஆண் சுந்தரன். உண்மையாக காதலியுங்கள். காதலில் ஏமாந்தால் தற்கொலை செய்யாதிர்கள். வாழ்ந்து காட்டுங்கள். வாழ்ந்து காட்டுதலை விட வேறு பழி தீர்த்தல் இல்லை. Leading a good life is a better revenge வாழ்க உண்மையான காதல் நன்றி வணக்கம் .. ![]() |
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 21-02-2010 04:01:18 IST |