முதல் பக்க செய்திகள் 

சூடு பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை :கண்டும் காணாத போலீசார்
பிப்ரவரி 22,2010,00:00  IST

Front page news and headlines today

சேலம்:சேலம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, அமோகமாக நடக்கிறது.



சேலம் மாவட்டத்தில், நாகாலாந்து, சிக்கிம், கேரளா உள்ளிட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை, சக்கை போடு போடுகிறது.வெளிமாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் மொத்தமாக சேலம் கொண்டு வரப்பட்டு, பஸ், கார், டூவீலர் மூலம் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது. பகுதி வாரியாக இருக்கும் மொத்த லாட்டரி வியாபாரிகள், தங்களுக்கு கீழ் சில்லரை வியாபாரிகள் மூலம் பல லட்சம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்கின்றனர்.பத்து சேம் பார்ச்சூன், 12 சேம் சிங்கம், 20 சேம் குயில், 30 சேம் ரோசா, 50 சேம் டீர், 100 சேம் நல்லநேரம், 200 சேம் குமரன், 300 சேம் டயம் லட்சுமி, 400 சேம் மணி லட்சுமி, 500 சேம் உள்ளிட்ட பெயரில், லாட்டரி சீட்டு விற்பனை கொடி கட்டி பறக்கிறது.



பில், போனஸ் உடன் விற்கப்படும் 100 லாட்டரி சீட்டு 90 ரூபாய்க்கும், பில் மற்றும் போனஸ் இன்றி "கட்டிங்' லாட்டரி 100 டிக்கெட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.லாட்டரி சீட்டுகள் நாள்தோறும் மாலை 3 மணிக்கு குலுக்கல் நடத்தப்பட்டு, அதன் முடிவு அடங்கிய பட்டியல் மாலை 6 மணிக்கு பேக்ஸ் மூலம் எல்லா வியாபாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது.இது வரை, மாலை 3 மணிக்கு குலுக்கல் நடக்கும் லாட்டரி சீட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, மாலை 7 மணிக்கு குலுக்கல் நடக்கும் லாட்டரி சீட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது.



நாகாலாந்து மாநிலத்தில் இருந்து வெளிவரும் 3 மணி குலுக்கல் லாட்டரி சீட்டு போலவே ஈவ்னிங் 7 மணி குலுக்கல் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. பத்து சேம் முதல் 200 சேம் வரையில் ஈவ்னிங் 7 மணி குலுக்கல் லாட்டரி பிப்., 15ம் தேதி முதல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.இதனால், அப்பாவி ஏழைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உள்ளுர் போலீசார், ஆளுங்கட்சியினரை லாட்டரி அதிபர்கள் கவனிப்பதால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.போலீசார் மாமூலுக்கு ஆசைப்பட்டு, லாட்டரி விற்பனையை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, சேலம் புறநகர் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து தான், மாவட்டம் முழுவதற்கும், மாநகர பகுதிக்கு லாட்டரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 போலிசுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் . நீங்கள் இந்த செய்தி மூலம் சொல்லிவிட்டீர்கள் . நடவடிக்கை எடுக்கும் என்று நம்பலாம்
 
by r raman,madurai,India    22-02-2010 14:07:04 IST
 இது கோவை மற்றும் பொள்ளாச்சியிலும் தன பகிரங்கமாக நடக்கிறது. மேலும் பொள்ளாச்சியில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள கடைகளில் விற்கபடுகிறது. போலீஸ்காரர்களும் இதனை வாங்குகிறார்கள் என்பதுதான் வேதனையே. வேலை காரணமாக செல்லும் பொது இதையெல்லாம் பார்த்து வருதபடதன் முடிகிறது.  
by R சக்திவேல்,COIMBATORE,India    22-02-2010 13:56:51 IST
 அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட அனைத்தும் திமுக ஆட்சில் கொடி கட்டி பறக்கின்றன. திமுக கொடியை போல பலே யாரும் எதுவும் கேட்க கூடாது திமுகவினருக்கு கேட்டால் கோவம் வரும், இந்த தினமலர் செய்திக்கு என்ன பதில் கருத்து சொல்ல போகிறிர்கள் திமுகவினர்களே ஐயா கருப்பா. அறிவு சிகாமணி ஜோபெட், கவிதா புகழ் ஸ்ரீதர் ?.
 
by RK மனோஜ் ,CHENNAI,India    22-02-2010 01:44:20 IST
 அம்மா அவர்கள் ஏழைகள் பாதிக்ககூடாது என்றுதான் லாட்டரியை ஒழித்தார்கள். பாருங்கள் மஞ்ச துண்டார் தன் கட்சியினர் சம்பாதிக்க எவன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்கிற ரீதியில் விட்டுவிட்டார்.

எத்தனை போலிகளோ..பாலும் தேனும் பெருகுவதை நினைத்துகொண்ட மஞ்ச துண்டாரே..லாட்டரி விறபனையை பாருமைய்யா..ஏழைகளின் நிலையை எண்ணிபாரும்.. அப்பறமா மானாட பார்ப்போமே..

மனசாட்சியே இல்லாத போலீசாரே..எல்லா வகையிலுமே நீங்கள் சம்பாதிக்க நினைத்தால் அந்த பாவப்பட்ட காசு நிலைக்காதுங்க..தயவுசெய்து தடை செய்த லாட்டரியை மீண்டும் வர வைத்து ஏழைகளின் வயிற்றில் மண் அள்ளி போடாதீர்கள். 
by p SEKAR,SINGAPORE,Singapore    22-02-2010 00:54:21 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்