முதல் பக்க செய்திகள் 

தமிழகத்தில் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லை : இளங்கோவன் பேச்சு
பிப்ரவரி 25,2010,00:00  IST

Front page news and headlines today

மதுரை : ""தமிழகத்தில் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லாமல் போய்விட்டது'' என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்.,வக்கீல்கள் பிரிவு சார்பில் மதுரையில் நடந்த வன்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கில் பேசினார். வக்கீல் கோபாலன் தலைமை வகித்தார்.இளங்கோவன் பேசியதாவது: பயங்கரவாதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்கள், 72 நாட்கள் அவகாசம் கேட்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் படிக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்காமல், சீர்குலைக்கும் விதமாக, தீய கருத்துக்கள் திணிக்கப்பட்டால் வளர்ச்சி பாதிக்கும். தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, இலவச "டிவி', அரசு மருத்துவ காப்பீடு போன்ற நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை முழுமையாக மக்களுக்கு சென்றடைய, அமைதி நிலவ வேண்டும். தமிழகத்தில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பயங்கரவாத கருத்துக்களை பரப்புகிறவர்களை அடக்க முடியவில்லையே?உங்களுக்கு பல்லக்கு தூக்க, கவிதை பாடச் சொல்கிறீர்கள். அதற்கு பலர் உள்ளனர். நானும், காமராஜரும் ஒரே மாதிரி என்கின்றீர்கள். காமராஜர் கடைசிவரை சாமானியனாகத்தான் இருந்தார். ஆனால் பதவிக்கு வரும்வரை சாமானியனாக இருந்தவர்கள், இன்று அப்படி உள்ளனரா? நாங்கள் வெள்ளையர்களையே எதிர்த்தவர்கள். எங்கள் ஆதரவுடன் நடக்கும் ஆட்சி என்பதால், நல்லமுறையில் அது இருக்க வேண்டும் என, தோழமை உணர்வுடன் உணர்த்துகிறேன். அடுத்த தேர்தலில் உங்களை, மக்கள் நிராகரித்துவிடக்கூடாது என்பதற்காக கூறுகிறேன். தமிழகத்தில் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லாமல் போய்விட்டது. சிலர் ஆறு மாதம் மலைக்குப் போய்விடுகின்றனர்.மதுரை மேற்கு தொகுதியில் நாங்கள் இல்லையெனில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வெற்றி பெற்றிருக்க முடியுமா? என சிலர் கூறுகின்றனர். காங்., கூட்டணி இல்லாமல் இதை அவர்களால் பேசியிருக்க முடியுமா? தமிழகத்தில் காங்., ஆட்சிக்கு வரவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு. எல்லா கூத்துக்களுக்கும் விடிவு உண்டு. தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், பழனிச்சாமி பங்கேற்றனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அப்போ மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ரொம்ப ரொம்ப நல்லா நடக்குதா?

விலைவாசி, பாதுகாப்பு பிரச்சனை சந்தி சிரிக்குது.
 
by hh muttalilagano,panni theru, kaattoor.,India    25-02-2010 23:08:42 IST
 எல்லா கூத்துக்கும் ஒரு நால் காலம்
பதில் சொல்லும் என்று சொல்லி
இருக்கிருர்கள் அன்று தான் எங்களுக்கு உண்மையான தனி
மனித சுதந்திரம் நல்லா நாடகம்.  
by பெரியசாமி,sivagangai seemai.murukkappatti,India    25-02-2010 21:00:35 IST
 mr.elango your voice is correct. keep it up 
by sri sridhar,kovai,India    25-02-2010 19:57:01 IST
 Mr. Elangovan, Your comments in respect of the ruling party in Tamil Nadu is highly appreciable and perfectly correct.  
by M R Ganesan,Madurai,India    25-02-2010 17:56:54 IST
 இளங்கோ! உன்னே சொல்லி குத்தமுள்ள உனக்கு ஓட்டு போட்ட மக்களை சொல்லணும்!! எவ்வளவு நாளைக்குத்தான் மக்களை எமாதுவிங்கே!!! 
by ramu MC.RAMU,Pudukkottai(singapore),India    25-02-2010 16:51:38 IST
 இளங்கோவன் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்,மண்ணுளி பாம்பு இருக்கே தெரியுமா இளங்கோவனார் அவர்களே,ஆறு மாதம் ஒரு முறை தலை வாலுக்கும்,வால் தலைக்கும் மாறி மாறி வாழுமாம்,பட் அதன் செயல் பாட்டில் எந்த குறையும் இருக்காதாம்,அதே மாதிரி மலையில் இருந்தால் என்ன,கீழே இருந்தால் என்ன,அவர் வேலையை அவர் செய்து கொண்டுதானிருக்கிறார்,ஆனால் தி.மு.க ஆவாள் ஏமாற்றப்பட்ட நீங்கள் தான் கூட்டணியில் இருந்து கொண்டு நல்ல நண்பனாக செயல் படாமல் இருக்கிறீர்கள்.ஏன்னா நல்ல நண்பனால் தான் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து போக்கிட முடியும்,ஒங்களுக்கு தான் அங்க வேலையே இல்லையே,எப்படி முடியுன்கிரீங்களா அதானே பாத்தேன்.  
by k thiru,chennai,India    25-02-2010 16:01:03 IST
 நான் சுட்டி காட்றேன்...................இவன போட்டு தள்ளாம வச்சிருக்கோமே அது தப்பு......  
by m ராம்,tirunelveli,India    25-02-2010 14:44:08 IST
 தேங்க்ஸ் இளங்கோவன் இதை மாதிரி அடிக்கடி தட்டி எழுப்புங்க அப்பா தான் புரியும்  
by S J Basu,Nagercoil,India    25-02-2010 14:26:34 IST
 EVKSஒழுங்கா பேசுவீர்!
கலைஞருக்கு கோபம் வந்துச்சு அவ்வளவுதான்!காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபடுவாய்! என்ன வாசகர்களே நான் சொல்றது! 
by கண்ணன் ,பரமக்குடி,India    25-02-2010 14:23:40 IST
 தாயிற் சிறந்த்த கோயிலில்லை, ஆனால் நீ உனது தாயை மதிக்கின்றியா கேவலம், கேவலம், வெட்க்கக் கேடு உனக்கு பின்னாலே நாலு கேனையர்கல் நிற்க்கினரர்கள் அவ்வளவுதான், நீயெல்லாம் ஒரு அவமான சின்னம்மடா தமிழர்கடக்கு. 
by A Ananth,Badhomburg,Germany    25-02-2010 14:03:34 IST
 மருத்துவர் இருக்கிறார். 
by V இராமச்சந்திரன் ,Dharmapuri ,India    25-02-2010 13:09:10 IST
 ஐயா! திட்ட உங்களுக்கு இல்லாத உரிமையா! நன்றாக திட்டுங்கள் !அப்பொழுதாவது அறிவு வருகிறதா என்று பார்ப்போம் !அதே சமயம் இந்த காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு என்ன ஆச்சு என்று மத்திய அரசை கேட்டு சொல்லுங்கள் , ஏன் இன்னும் கேஜட் செய்யவில்லை? இதிலும் அதே மாதிரி மத்திய அரசையும் திட்டுங்கள் !அப்ப தான் நீங்கள் சரியான ஆண் பிள்ளை !  
by R Sellva,coimbatore,India    25-02-2010 12:41:23 IST
 வந்துட்டான்யா,வந்துட்டான்..
வாய்ச்சொல் வீரன் வந்துட்டான்.
 
by s. shahulhameed,salem,India    25-02-2010 12:17:20 IST
 தமிழனுக்கு நடக்கும் கொடுமைகளை பேசு தலைவா. நீ போடும் நாடகத்தில் திமுக என்ன வாயில்லா புளுவா?

காப்போம் தமிழனை, வளர்ப்போம் தமிழை, வெல்வோம் உலகை.
 
by M தமிழன்,Sinagpore,Singapore    25-02-2010 10:43:58 IST
 இது இவரது பாணி, இப்படி ஆரம்பித்து கடைசியில் கூட்டணிக்கு வில்லங்கம் வைத்து முடிப்பார். ஐயா இப்பதான் எதோ தல எடுத்திருக்கீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க. இல்லன மறுபடியும் மத்திய பதவிகளுக்கு காத்துகிடக்க வேண்டி இருக்கும். 
by சீலர்,chennai,India    25-02-2010 10:43:15 IST
 Dear Illango
can you do to arraqnge all MLA''''S of cngress to
resign in tamil nadu,A GREAT CHANGE WILL
HAPPENED towards ensuing election 2011.kks  
by K.K. shanmugam,chennai,India    25-02-2010 10:39:10 IST
 நண்பர்கள் செய்யும் நல்லகாரியங்களை மனம் திறந்து பாராட்டுபவருக்குத் திட்டும் உரிமை தானே வரும். திட்டமட்டும் ஒரு தேடல் தேவையா? 
by ப திருநாவுக்கரசு,thanjavur,India    25-02-2010 10:01:53 IST
 தமிழ்நாட்டு அரசியல்பற்றி தைரியமாக பேசக்கூடிய ஒரே காங்கிரஸ் காரர் என்ற வகையில் உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.  
by k balesan,chennai,India    25-02-2010 09:56:59 IST
 சார், பென்னாகரம் தொகிதியில அந்த கட்சி போஸ்டர் கிழிச்சிட்டு வேற கட்சி போஸ்டர் ஒட்ட ஆளு தேடுறாங்களாம், ஒரு நாளைக்கு Rs.100 தருவாங்களாம். நீங்க தான் போஸ்டர் கிழிக்கிற வேலையெல்லாம் நல்ல செய்வீங்களே? வெட்டியா பேசுறத விட்டிட்டு தொழில பாருங்க. வருமானம் வந்த மாதிரி இருக்கும்ல. கூட நிக்கிற தொண்டர்களுக்கும் வாய்ப்பு உண்டு. அட அட சண்டை போடாதிங்கபா, வரிசைல வாங்க. எல்லார்க்கும் போஸ்டர் கிழிக்க அண்ணன் இளங்கோவன் சான்ஸ் தருவார். 
by MS அருள் ஜீவா ,Bangalore,India    25-02-2010 09:40:59 IST
 எந்த கட்சியில் இருந்தாலும் எதித்து கேட்பவர் அய்யா மட்டும்தான்.....
வாழ்க அய்யா!.. வளர்க பா. ம.க .... மற்றும் மக்கள் தொலைகாட்சி  
by r விஜய்,chennai,India    25-02-2010 09:23:29 IST
 இந்த இளங்கோவன் காங்கிரஸ் கட்சியுன் சூப்பர் கோமாளி, விளபரபிரியர் தயவு செய்து இந்த கோமாளி செய்திக்கு முக்கியம் தராமல் இருக்கவும் .அது தான் தினமலர் பேப்பர் கு அழகு
 
by r சிவசங்கர்,trichy,India    25-02-2010 09:13:50 IST
 ஓட்ட வாயன்; இப்போது இவன் இப்படி கண்டிப்பாக பேசித்தான் ஆகா வேண்டும்; இல்லையேல் மறந்து விடுவார்கள்.  
by G பன்னாடை பாண்டியன் ,chennai,India    25-02-2010 09:11:41 IST
 ஏன் இவங்கதான் தட்டி கேக்க முயற்சி செய்யட்டுமே? டெல்லியிலே என்னும் நாலு வருஷம் ஓட்டியாகணும்! பெரியார் பேரனுக்கு நெனவு இருக்காதா என்ன?  
by S பாலா ஸ்ரீனிவாசன் ,chennai,India    25-02-2010 07:40:27 IST
 அதுக்கு தான் நீங்க இருக்கங்கில  
by m சம்பத் குமார் ,SANKAGIRI,India    25-02-2010 07:30:05 IST
 ivvalavu thayirayimaga pesuvatharku parattukiren tamilnattai kappatra idhupol niraya per vendum 
by K TAMILARASU,dhayiriyam,India    25-02-2010 07:19:26 IST
 நேற்று கலர் டிவி கலைஞர் கொடுக்கிறார் என்று திட்டினீர்கள், இன்று அப்படியே மாற்றி, இலவச டிவி நல்ல திட்டம் என்கிறீர்கள். நேற்று சொன்னதை, மக்கள் இன்று மறந்து விடுவார்கள் என்ற உங்களின் நம்பிக்கைக்கு பாராட்டுக்கள். ஒரு ரூபாய் அரிசி, அரசு மருத்துவ காப்பீடு நல்ல திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த அரசில் ஊழல் அதிகமாக உள்ளது. ஓட்டிற்காக, அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுப்பதை ஏற்கமுடியாது. மற்ற ஏழை மக்களுக்கும் வரி சமமாக செல்ல வேண்டும். நன்றாக வேலை செய்யும் அரசு ஊழியர்கள், அங்கிகாரம் கிடைக்காததால், வேலை செய்வதில்லை. லஞ்சம் வாங்கும் வேலை செய்யாத ஊழியர்களை பார்த்து மனம் நொந்து, பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டனர். இனி நேர்மையாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுக்கவேண்டும்  
by ரவி,TORONTO,Canada    25-02-2010 03:27:02 IST
 உண்மைதான். அப்படி யாரும் இருந்தால் வேண்டுமென்றே தமிழக அரசைக் குறை கூறுகிற, தமிழ் நலனுக்குஎதிராகவே உளறுகிற வன்முறைக் காங்கிரசுக் கட்சியை நன்முறைக் கட்சியாகப் பேசுகிற, தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எதையாவது உளறுகிற , நாடு நலனுக்கு எதிரான - தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டட- காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார் எனக் கனவு காண்கின்ற இவருக்கு அறிவுரை கூறியிருப்பார்களே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
by I. Thiruvalluvan,chennai,India    25-02-2010 03:03:32 IST
 யாருதான் தமிழ்னாட திருத்த போறான்னு தெரியல
வெள்ளையர்களையே எதிர்த்தவர்கள் என்று சொல்லுகிறீகர்கள் ஆமா நீங்க மட்டும் தானா எதிர்த்திற்கள்
போங்கயா போய் எதாவது வேலை இருந்த போய் பாருங்க.
நீங்க என்னா சொல்ல வாறீங்கன்னு யாருக்கும் ஒன்னும் புரியல
பாசு நீங்க யார சொல்லுரிங்க???? இதை எதுக்கு சொல்லுரிங்க அதையும் கொஞ்சம் தெளீவா சொன்னா நல்லா இருக்கும்
அதாவது வெளீபடையா சொன்னா நல்லா இருக்கும்


 
by A சரவணன் (யாமிருக்க பயமென்),DUBAI(MADURAI),India    25-02-2010 02:29:29 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்