முதல் பக்க செய்திகள் 

முல்லை பெரியாறு முழுக்கட்டுப்பாடு கேரள அரசு வசம் இருக்க மந்திரி ஆசை
மார்ச் 04,2010,00:00  IST

Front page news and headlines today

திருவனந்தபுரம் : "முல்லைப் பெரியாறு அணையின் முழுக்கட்டுப்பாடும் கேரள அரசு வசம் இருக்க வேண்டும் என்பதே ஆசை' என, அம்மாநில அமைச்சர் கூறியுள்ளார்.கேரள சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியதாவது: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டவுள்ள புதிய அணையின் கட்டுமான உரிமை மற்றும் உடைமையுரிமை, செயல்பாடு மற்றும் பராமரிப்பு என, அனைத்தையும் கேரள அரசே வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதே நேரத்தில், தமிழகத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அம்மாநிலத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழகத்துடன் நீண்ட காலமாக உள்ள பிரச்னைக்கு புதிய அணை கட்டுவதே சரியான தீர்வாக இருக்கும். சிறுவாணி அணை விவகாரத்தில் என்ன முறை பின்பற்றப்படுகிறதோ, அதே முறை இதிலும் பின்பற்றப்படும். இந்த விஷயங்களை எல்லாம், சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்துள்ளோம்.சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டிக்கு தமிழக அரசு சார்பில் பிரதிநிதி நியமிக்கப்பட மாட்டார் என, இதுவரை அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் மட்டுமே, இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதுதான், கமிட்டி அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அப்படிப்பட்ட நிலையில், "அந்த கமிட்டியில் இடம் பெற மாட்டோம்' என, தமிழக அரசால் சொல்ல முடியாது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விட மாட்டோம் என, கேரள அரசு ஒரு போதும் சொல்லவில்லை. அணையின் பாதுகாப்பு பற்றியே கவலைப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் நியமித்த அதிகார கமிட்டியில் இடம் பெற வேண்டிய கேரள பிரதிநிதி யார் என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்.முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணி முடிந்து விட்டது. அதனடிப்படையில், விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்னை காரணமாக, நெய்யாறு தண்ணீரை திறந்து விடவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இவ்வாறு பிரேமச்சந்திரன் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 புளகாகிதம் அடியுமலவூகு நல்ல விஷயம் அல்ல கவனம் தேவை 
by m ramesh,trichy,India    04-03-2010 22:09:35 IST
 Malayalies who are living prosporousand peasefully in tamilnadu need to raise voice to kerala government. 
by S Tamilan,singapore,India    04-03-2010 18:50:49 IST
 Good. The Dam has not been constructed by kerala govt. And it was not constructed for kerala people too. But they like to have full power. Feel shame of kerala people having inspire of other man property. 
by N Ram,Chennai,India    04-03-2010 16:35:32 IST
 இரு மாநிலமும் உண்மை நிலையை வெளிபடையாக பேசி அதில் சமரசம் ஏற்படும் நிலைக்கு வரவேண்டும். ஆனால் உள் நோக்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் இன்று வரை உடன்பாடு எட்டப்படவில்லை.
காவிரியில் கலந்த அரசியல் சாக்கடை முல்லை பெரியாரில் கலக்காமல் இருப்பது இரு மாநில உறவுகளுக்கு நல்லது.
இல்லையேல் காவேரி வரிசையில் முல்லை பெரியார் சேரும் நாள் வெகு துலைவில் இல்லை.  
by R சுந்தர்,Australia,India    04-03-2010 05:11:48 IST
 கவலைய விடுங்க அமைச்சரே..நிச்சயம் உங்க ஆசையை எங்க ''''மஞ்ச துண்டு'''' நிறைவேற்றும்.. அதுவும் சீக்கிரமாய்..

அவருக்கு இதிலெல்லாம் எப்போதுமே ''''கவனம்'''' இருந்ததுமில்லை இருக்கபோவதுமில்லை..

அவருக்கு இந்த வயசில் மானாட..நமீ ஆடன்னும், ஸ்பாட் டயலாக்'''' எழுத..சினிமாகாரங் களுக்கு ''''தொண்ணூறு'''' ஏக்கரா தானம் பண்ண.. கே.ப அறிக்கை எழுத..(கேள்வி பதில் அறிக்கை என்று புரிந்துகொள்ளவும்..கேன பய அறிக்கை என்று புரிந்து கொண்டால் நான் பொறுப்பல்ல) இதற்கே டைம் இல்லாத பொது.. இந்த முல்லை பெரியார் எல்லாம் ஒரு பிரச்சினையா.. நிச்சயம் அமைச்சரே உம்ம ஆசை நிறைவேறும்.. 
by P சேகர்,SINGAPORE,Singapore    04-03-2010 01:15:04 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்