முதல் பக்க செய்திகள் 

சச்சின் ஒரு பாரத ரத்னா : கங்குலி புகழாரம்
மார்ச் 05,2010,00:00  IST

Front page news and headlines today

கோல்கட்டா : ""ஒருநாள் போட்டிக் கான கிரிக்கெட் அரங்கில், 200 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒரு "பாரத ரத்னா' என,'' முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.



இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சமீபத்தில் குவாலியரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார். கிரிக்கெட் அரங்கில் மேலும் ஒரு புதிய சரித்திரம் படைத்த இவரை, முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர், புகழாரம் சூட்டினர். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இவ்வரிசையில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும் இணைந்து கொண்டார்.



இதுகுறித்து கங்குலி கூறியதாவது: கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் சச்சின், ஒரு "பாரத ரத்னா'.  இவருக்கு கட்டாயமாக பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். இவர் கிரிக்கெட் அரங்கில் மேலும் பல புதிய சாதனைகளை படைக்க எனது வாழ்த்துக்கள். மூன்றாவது ஐ.பி.எல்., தொடருக்கு கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு தொடர்களில் சோபிக்க தவறிய எங்கள் அணி, இம்முறை முழுதிறமையை வெளிப்படுத்தி கோப்பை வெல்ல போராடும். இம்முறை எங்கள் அணியில் மிகச் சிறந்த பவுலர் கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலம். ஷேன் பாண்ட், பிராட் ஹாஜ், இஷாந்த் சர்மா, அஜந்தா மெண்டிஸ், அசோக் டிண்டா, அஜித் அகார்கர், சுக்லா உள்ளிட்ட முன்னணி பவுலர்கள், சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் மெக்கலம், விரைவில் அணிக்கு திரும்புவார். அவர் வரும் வரை, விக்கெட் கீப்பர் பொறுப்பை விருதிமன் சகா கவனித்துக் கொள் வார். தவிர, மூன்றாவது விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் தீர்மானித்து உள்ளது.இவ்வாறு கங்குலி கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 sachin is a great batsman, nan indian irukirathula enaku perumaiyai iruku hats of salouts for sachin 
by t seenuvasan,villupuram,India    07-03-2010 14:12:38 IST
 சச்சின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான் இருந்தலும் இந்த சாதனை சீக்கிரம் முறியடிக்கப்படும் . ஒரு வேலை இதை சேவாக் செய்தால் அவருக்கும் பாரதரத்னா வழங்க முடியுமா. இது போன்று ஒவ்வொரு சாதனைக்கும் விருதுகள் வழங்கினால் அவட்றிற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். 
by G பாஸ்கர்,Dharmapuri,India    07-03-2010 12:36:47 IST
 நான் சச்சின் டெண்டுல்கர் மிகத் திவிமான ரசிகன், இவருடைய இந்த சாதனை என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இதுதான் மிகமிகப் பெரிய சாதனை. நான் எப்பவும் இந்தியா ரசிகன். ஆனால் இந்தியாவை எம்மினத்தால் மறக்க முடியாதுள்ளது எனென்றால் செய்தது துரோகம்  
by s jathu,paris,SriLanka    07-03-2010 01:08:18 IST
 i like your hard work your my impression to develope my work 
by A RAMAYA,coimbatore,India    06-03-2010 14:34:57 IST
 wish you sir 
by A DEEPAJOTHI,coimbatore,India    06-03-2010 14:32:14 IST
 சச்சின் டெண்டுல்கர் படைத்திருப்பது உலக சாதனை என்பது மறுக்க முடியாத உண்மைதான். இருப்பினும் கிரிக்கெட் உலகில் இது சர்வசாதாரணமான விஷயம் தான். சாதனைகளை ஒருவர் படைப்பதும், சில காலத்திற்குப் பின்னர் ஒருவர் முறியடிப்பதும் சாதாரண விஷயம். அன்வர் படைத்த சாதனையைத் தான் சச்சின் முறியடித்துள்ளார். அதேபோல நாளை இன்னொருவர் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும். 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார், பல ஆயிரக்கணக்கான ரன்களைக் குவித்துள்ளார் என்று சச்சின் குறித்துப் பெருமைப்பட்டுக் கூறும் அதே நேரம், அத்தனை காலத்திற்கு அவருக்கு தொடர்ந்து-தங்கு தடையின்றி-அவரது சரிவுகளை மனதில் கொள்ளாமல் தரப்பட்ட வாய்ப்புகளால் தான் இத்தனையும் கைகூடி வந்தது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. சச்சின் மிகச் சிறந்த வீரர், இந்த வயதிலும் சிறப்பாக ஆடுகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவருக்குப் பாரதரத்னா தருவதற்கு முன்பு மேலும் சில இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகளையும் அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒலிம்பிக்கில் நம்மால் தங்கம் வாங்க முடியுமா என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரின் கனவாகவே இருந்து வந்தது. அதெல்லாம் நடக்கவே முடியாத ஒன்று என்ற எண்ணமும் நம்மில் நிலைத்திருந்தது. ஆனால் அபினவ்பிந்த்ரா அந்தக் கனவைத் தகர்த்தால் தனது கையிலிருந்த துப்பாக்கியால். இதுதான் மிகமிகப் பெரிய சாதனை. முற்றிலும் இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான சாதனை.இந்த சாதனையை நிச்சயம் இந்தியாவால் மறக்கவே முடியாது. எனவே பாரதரத்னாவுக்கு மிகமிகப் பொருத்தமானவர் பிந்த்ராவும் கூடத்தான்.  
by S SIVA,Bangalore,India    06-03-2010 12:20:33 IST
 சச்சின் இஸ் really கிரேட் பாரத் ரத்னா ரொம்ப ஓவர்பா. I WILL suggest the great maestro & music genius AR RAHMAN is the best example who made the whole WORLD to listen and dance and UNITE the WORLD with music especially in Tamil & Hindi music... thats really great.. NO MAN CAN DO this GREATNESS..... he has made our language தமிழ் great....so i prefer the best INDIAN and BHARATH RATHNA should confer him.JAI HO.RAJESH. 
by sam ராஜேஷ்,Chennai,India,India    05-03-2010 23:04:30 IST
 சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் இந்தியாவுக்கு தனி ஒருவராக ஒலிம்பிக் தங்க பதக்கம் பெற்று தந்த அபினவ் பித்ராவுக்கும் வழங்க வேண்டும். சற்று நிதானமாக பார்த்தல் ரெகார்டுகள் அனைத்தும் முரியடைக்கபடுகின்றன. சச்சினின் சாதனையையும் யாரவது முறியடிப்பார். எதுவும் உலகில் நிரந்திரம் அல்ல.  
by R Kathirvel,Tambaram,India    05-03-2010 20:11:55 IST
 சச்சின் ஒரு சிறந்த மட்டைபந்து வீரர் இவருக்கு பல பெயர்கள் உண்டு மச்டேர்பட்ச்மன் ,லிட்டில் மாஸ்டர் , இவருக்கு கண்டிப்பாக மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க நன் thazhmiyudan kettukolkirean 
by Aa காசிநாதன்,chennai,India    05-03-2010 18:21:30 IST
 HE IS SUPERMAN NO DOUBT. BUT HE IS PLAYING FOR BCCI a private organaisation not for INDIA 
by P RAJ,chennai,India    05-03-2010 17:26:52 IST
 சச்சின் சிறந்த வீரர், ஆனால் இது மிகவும் தாமதமாக படைக்கப்பட்ட சாதனை, இதை சேவாக் சீக்கிரமே முறியடித்து விடுவார்.  
by r பாலா,mayiladuthurai,India    05-03-2010 17:19:09 IST
 அவருக்கு அதிக வாய்புகள் கொடுத்தது உண்மையே.இந்தியரில் அதிக பூஜியம்(இருபது) எடுத்தவரும் அவரே.உடனே வாசகர்கள் கொந்தளிக்க வேண்டாம்.நான் அவரின் இருபது ஆண்டு ஆட்டத்தை பார்த்து, ரசித்து, பூஜித்து வருபவன்.  
by c manavalan,bintulu,Malaysia    05-03-2010 15:27:14 IST
 திரு அமனுல்லா
அப்படியே விஸ்வநாதன் ஆனந்தையும் சேர்த்திருக்கலாமே .
 
by C manavalan,bintulu,Malaysia    05-03-2010 15:20:43 IST
 சசினஊகு பாரத ரத்னா தருவதாக இருந்தால் விஸ்வநாதன் ஆனந்துக்கும் அந்த தகுதி உண்டு, உலக கோப்பை பெற்றுதந்த கபிளுக்கும் தகுதி உண்டு, கலை துரெயில் சிவாஜி கணேசனுக்கும் அந்த தகுதி உண்டு. இன்னும் கூறி கொண்டே போகலாம். வான் புகழ் வள்ளுவருக்கும் அந்த தகுதி உண்டு, இன்னும் சூலி கொண்டே போகலாம் அதனால் பரத ரத்னா விருதுக்கு மேல் ஒரு புதிய விருதெய் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். எனவே முதலில் அந்த விருதுக்கான தகுதி அடிப்படை என்னவென்று தெரிந்து அதில் குறைந்தபட்சம் தொநூறு சதவிகிதமாவது இருந்தால் பின்னர் அதை பற்றி யோசிக்கள்ளலாம். இது துறைவனின் பர்வேயில் பாரத ரத்னா விருது.
 
by V.Y Thuraiva,Dubai,United Arab Emirates    05-03-2010 14:41:14 IST
 டெண்டுல்கர் சாதனை செய்தார் என்று சொல்லும் நாம் 10000 ran எடுக்க டெண்டுல்கர் 311 போட்டிகளில் விளையாடினர் aanal கங்குலி 276 போட்டிகளில் 10000 ran eduththar endral yar unmaiyanavar, thiramaiyanavar. yosigga makkale. 
by B PALANIYAPPAN,singapore,India    05-03-2010 14:05:25 IST
 அவருடைய சாதனை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதே சமயம் பாரத ரத்னா விருது குடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சாதனை ஒன்றும் மக்கள் முன்னேற்றர்திற்கு அல்லது இந்திய முன்னேற்றர்திற்கு உதவாது. 
by K Murugan,Bangaloote,India    05-03-2010 12:22:36 IST
 கhலை வணக்கம். எனது முடிவும் சச்சின்கு தன பாரத ரத்னா விருது கிடைப்பது தன.
இப்படிக்கு
ஜெச்சிந்தமேரி
 
by P. ஜெச்சிந்தமேரி,Pudhucherry,India    05-03-2010 11:17:43 IST
 Bharat Ratna is a civilian award conferred for highest degree of national service. Conferring the award to individuals for achievements is not a recommended procedure. No doubt he is great, but what kind of service has he done for the society? 
by jay kay,india,India    05-03-2010 11:12:30 IST
 sachin is very gracefull... 
by p praveen,chenai,India    05-03-2010 11:10:21 IST
 Dhoni and Ajay jadeja are the idiots who was tried to avoid the double centuries...

But Sourav and Rahule are great and great friends to Sachin too.....
 
by G Nandakumar,Chennai,India    05-03-2010 09:11:26 IST
 I appreciate Ganguly.:) 
by s காதர்,Bengalooru,India    05-03-2010 07:57:09 IST
 சச்சின் ஒருநல்லவர்.கங்குலி, டிராவிட்கருங்களிகள் .பலசமயம் சச்சின் சாதனைகளை செய்யவிடாமல்தடுத்தவாங்கல் இப்போது வேடம் ஊதுகிறார்கள். 
by DR SANKAR,KRISHNAGIRI,India    05-03-2010 07:53:34 IST
 சச்சினுக்கே விருதா? சச்சினே இந்தியாவுக்கு கொடுக்கபட்ட விருது தானுங்கோ... 
by அம்முகுட்டி,malaysia,India    05-03-2010 02:46:55 IST
 அதேபோல லியாண்டர்பயஸ். இந்திய டென்னிஸ் உலகில் எத்தனையோ பிரபலங்கள் வந்திருந்தாலும் கூட, இந்திய டென்னிஸை இன்று இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் பயஸுக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு. இந்தியாவிலேயே அதிக அளவிலான கிராண்ட்ஸ்லாம் விருதுகளை குவித்துவைத்திருப்பவர் இவர் மட்டுமே. அவரும் மகேஷ்பூபதியும் சேர்ந்து இந்திய டென்னிஸின் சிறப்பை உலக அரங்கில் வலுவாகப்பதிவு செய்தவர்கள். இன்று இந்தியாவில் கிரிக்கெட் வெறியையும் தாண்டி டென்னிஸ் மீதான காதல் வலுவாக இருப்பதற்கு இவர்களும் முக்கியக்காரணம். எனவே பயஸ்-பூபதியும் கூட பாரதரத்னாவுக்கு மிக மிகப்பொருத்தமானவர்களே. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. நிறையப்பேருக்கு இது தெரிந்திருந்தாலும் இந்த விளையாட்டு இன்று சவலைப்பிள்ளையாக சுணங்கிப் போய்க்கிடக்கிறது-அரசுகளும், மக்களின் பாரமுகத்தால். இந்திய ஹாக்கி அணி முன்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தது. ஹாக்கி அணி மட்டுமே இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஹாக்கி அணிக்கு இந்திய அரசு என்ன செய்தது, அதை மேம்படுத்த என்ன செய்தது என்பதற்கு சரியானபதில் இல்லை. கிரிக்கெட் மட்டுமே மிகப்பெரியவிஷயம், அதில் சாதனை நிகழ்த்தினால் பாரதரத்னா என்ற அளவுக்கு படுவேகமாக சிந்திப்பவர்கள், இப்படி வெளிச்சத்திற்கு வராமல் போன மற்றவர்களையும் மனதில் கொண்டு நியாயமான முறையில் எதையும் முடிவு செய்தால் தான் கொடுக்கப்படும் விருதுக்கும் கெளரவமாக அமையும் .-தட்ஸ்தமிழ்.காம் 
by M Amanullah,Dubai,UnitedArabEmirates    05-03-2010 00:23:09 IST
 சச்சின் டெண்டுல்கர் படைத்திருப்பது உலக சாதனை என்பது மறுக்க முடியாத உண்மைதான். இருப்பினும் கிரிக்கெட் உலகில் இது சர்வசாதாரணமான விஷயம் தான். சாதனைகளை ஒருவர் படைப்பதும், சில காலத்திற்குப் பின்னர் ஒருவர் முறியடிப்பதும் சாதாரண விஷயம். அன்வர் படைத்த சாதனையைத் தான் சச்சின் முறியடித்துள்ளார். அதேபோல நாளை இன்னொருவர் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும். 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார், பல ஆயிரக்கணக்கான ரன்களைக் குவித்துள்ளார் என்று சச்சின் குறித்துப் பெருமைப்பட்டுக் கூறும் அதே நேரம், அத்தனை காலத்திற்கு அவருக்கு தொடர்ந்து-தங்கு தடையின்றி-அவரது சரிவுகளை மனதில் கொள்ளாமல் தரப்பட்ட வாய்ப்புகளால் தான் இத்தனையும் கைகூடி வந்தது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. சச்சின் மிகச் சிறந்த வீரர், இந்த வயதிலும் சிறப்பாக ஆடுகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவருக்குப் பாரதரத்னா தருவதற்கு முன்பு மேலும் சில இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகளையும் அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒலிம்பிக்கில் நம்மால் தங்கம் வாங்க முடியுமா என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரின் கனவாகவே இருந்து வந்தது. அதெல்லாம் நடக்கவே முடியாத ஒன்று என்ற எண்ணமும் நம்மில் நிலைத்திருந்தது. ஆனால் அபினவ்பிந்த்ரா அந்தக் கனவைத் தகர்த்தால் தனது கையிலிருந்த துப்பாக்கியால். இதுதான் மிகமிகப் பெரிய சாதனை. முற்றிலும் இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான சாதனை.இந்த சாதனையை நிச்சயம் இந்தியாவால் மறக்கவே முடியாது. எனவே பாரதரத்னாவுக்கு மிகமிகப் பொருத்தமானவர் பிந்த்ராவும் கூடத்தான். -தட்ஸ்தமிழ்.காம் 
by M Amanullah,Dubai,UnitedArabEmirates    05-03-2010 00:22:11 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்