முதல் பக்க செய்திகள் 

ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொலை : இந்தியர்கள் பீதி
மார்ச் 06,2010,00:00  IST

Front page news and headlines today

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், வீட்டிலிருந்து காணாமல் போன, இந்திய சிறுவனை கொலை செய்தவர்களை, அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.ஆஸ்திரேலியாவின் லலூர் பகுதியில் வசித்து வருபவர் ஹர்பிரீத் கவுர் சன்னா. இந்தியரான இவர், ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறார். இவரது மகன் குர்ஷன் சிங் கவுர்சன்னா(3). இவன் விடுமுறையில், தன் பெற்றோருடன் வசிக்க ஆஸ்திரேலியா வந்திருந்தான். இந்த வாரம் இறுதியில், இச்சிறுவன் இந்தியா திரும்புவதாக இருந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை முதல், சிறுவன் குர்ஷன் கவுர்சன்னாவை காணவில்லை. சிறுவனின் தாய் ஹர்பிரீத் கவுர் உட்பட வீட்டில் இருந்த அனைவரும் சிறுவனை தேடியும், அவன் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறுவனின் தந்தை ஹர்ஜித் சிங்கின் உறவினரான, ராமன் தீப் சிங் என்பவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். நேற்று முன்தினம் மாலை, சிறுவன் குர்ஷன் கவுர்சன்னாவின் உடல், லலூர் பகுதியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள புல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதாக, விக்டோரியா மாகாணப் போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து, விக்டோரியா மாகாணப் பிரதமர் ஜான் பிரம்பி கூறுகையில், "சிறுவன் கொல்லப் பட்டிருப்பது, நினைத்துப்பார்க்க முடியாத சோகம். இதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த, தேவையான அனைத்தையும் போலீசார் செய்வர்' என்றார். போலீஸ் துணை ஆணையர் கென் ஜோன்ஸ் மீடியாவில், நேற்று முன்தினம் இரவு அளித்த பேட்டி: தற்போதைய சூழ்நிலைகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. இதை கொலையாகவே கருதுகிறோம். இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் உடல், ஊதா நிற ஜீன்ஸ் மற்றும் சாம்பல் நிற சட்டை அணிந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணை நடத்துபவர்களுக்கு மீடியாக்கள், அமைதியான முறையில் ஒத்துழைப்பு அளித்து, விசாரணையை முழுமையாக பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும். இது கொலைக் குற்றமாக இருந்தால், குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், சிறுவன் எவ்வாறு கொலை செய்யப் பட்டான் என்பது குறித்து, அவர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Media is simply blowing out the issue, let Australian police and officials do their job, soon or later they will find the ruthless murderer. Deepest condolences to the family of Guruchan. 
by M சுந்தர்,Melbourne,India    06-03-2010 21:11:08 IST
 முதலில் இந்தியாவில் மட்டும் வாழ முயற்சி செய் வெளிநாடு செல்லதீரி தயவு செய்து  
by k sss,kovai,India    06-03-2010 18:15:45 IST
 hello sundar don''t blame on media. may be your family is safe but is it all the family in australia safe. can u give that assurance. for every week there will be an indian attaked. its not media fault. truly austrilia is a nation that not giving security to indians. 
by M நண்பன்,Tamilnadu,India    06-03-2010 16:46:19 IST
 Dinamalar,pls wait for police to confirm whether its been killed by local or something else. Please don''t conclude based on first information. We Indians in Melbourne are becoming crazy about money and making shame of fellow Indians. 
by ks சிவா,Melbourne,Australia    06-03-2010 16:04:39 IST
 திரு சேது அவர்கேள, தங்களின் ஆதங்கம் புரிகிறது. இதக்குமுன் நடந்த கொலை இனவெறி தான் என செய்தகள் போடப்பட்டன. இன்சூரன்ஸ் பணம் வேண்டி நடத்தப்பட்ட நாடகமும் இதேபோலத்தான். ஆனால் விசாரணை முடிவு அவ்வாறு இல்லை. எனவே கொலையாளி யார் என்பதை கண்டறிந்த பின்னர் வார்த்தைகளை விடுவோம் என்பதில் தவறு இல்லை.  
by R சுந்தர்,Australia,India    06-03-2010 15:12:58 IST
 சேது ஜயா! நீங்கள் உண்மையான இந்தியராகவே இருந்துவிட்டு போங்கள்!... இதுவரை நடந்த 2 கொலைகளில் இந்தியர்கள்தான் ஈடுபட்டதை ஆஸி போலிஸ் நிருப்பித்தார்கள். இதை எத்தனை மீடியாவில் இந்தியாவில் கூறினார்கள்... இந்த குழந்தை சம்பவத்திலும் இந்தியர்கள் எவரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது ஜயமே!...  
by கதிர்,Canberra,Australia    06-03-2010 14:17:24 IST
 திரு.Ash,melbourne,ஆஸ்திரேலியா, அவர்களே, மீடியா வதந்தி பரப்புகிறதா? அப்படியானால் இந்த பச்சிளம் குழந்தை என்ன ஆனது? எப்படி இறந்தது? ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து யோசித்து பாருங்கள், அதன் வலி தெரியும். இன்டியர்களை மட்டும் குறி வைத்து தாக்கபடுவதை உலகமே பார்த்துகொண்டுள்ளது. கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள். 
by A ஜீவா ,Maldives,Maldives    06-03-2010 11:54:48 IST
 சொந்த சனத்த விட்டு, கடல் தாண்டி படிச்சு நல்ல நிலைக்கு வர இது போன்று சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டுமா? எந்த படிப்பு வசதி இல்லை நமது திருநாட்டில்? வெளயுரவுதுரை அமைச்சகம், குடிமக்களுக்கு தக்க பாதுகாப்பு இல்லாத தேசங்களுக்கு ஏன் செல்ல அனுமதிக்க வேண்டும்?  
by J Swamynathan,Coimbatore,India    06-03-2010 11:36:34 IST
 இந்திய அரசு என்ன செய்தது ? ' நம் அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.' ஒரு பூவை கிள்ளி எறிவதா? ஒரு இந்தியனின் அவலம் இப்படியா ? என் இந்திய தேசமே பதில் சொல்லு ? காங்கிரஸ் அரசு இதற்கு பதில் சொல்லுமா?  
by E. VIJAYARAJ,Puducherry,India    06-03-2010 11:32:26 IST
 யாரும் ஆஸ்திரேலியா போக வேண்டாம். ஆஸ்திரேலியா ஒரு காட்டு மிராண்டி நாடு. தயவு செய்து அங்கு செல்லாதிர்கள்.  
by N Rajesh,singapore,India    06-03-2010 10:03:03 IST
 இந்த கொலையை செய்தவர்களை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும்.. ஆனால் நம் இந்தியாவில் மூன்று ஆஸ்திரேலிய சிறுமிகளை சில இந்திய கிருமிகள் கோவா வில் வைத்து கற்பழித்தார்கள் அல்லவா, அதற்கு நம் நாட்டு அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அவர்கள் எல்லாம் பச்சிளம் குழந்தைகள் இல்லையா? இதை நாம் எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? இப்பொது ஆஸ்திரேலியாவில் நடக்கும் இன வெறி கொலைகளுக்கு நடவடிக்கை எடுக்க சொல்ல நம் நாட்டுக்கு அருகதை இல்லை.  
by mr India,Chennai,India    06-03-2010 09:48:35 IST
 What kind of action will be taken by indian government ? (Nothing will be taken) but foreign External Minister will be explaining about their Own Pride but what he is going to do with this kinds of murder and all ? If such things happends for N R I ? so we dont belive indian govt being in foreign countries INDIAN GOVT IS SUPPORTLESS FOR NON RESIDENTIAL INDIAN  
by ART grace,dubai,India    06-03-2010 09:40:17 IST
 இந்தப் போலிசின் வாக்குமுலமும் சரியில்லை. ரொம்ப அடக்கி வாசிக்கிறார்கள். மூன்று வயது குழந்தையைக் கொல்பவன் குறுறமானவன். சாலையில் சென்று யாராவது கார் மோதி காயமோ எதோ ஆகியிருக்க வேண்டும். இரக்கமற்ற அவர்கள் கண்டு பிடிக்கப் பட்டு தண்டனை தரப் பட வேண்டும். பாவம் பேசக் குடத் தெரியாது. 
by v balu,Kovai,India    06-03-2010 09:39:40 IST
 சுந்தர், அஷ் மற்றும் பழனிசாமி அவர்களே, நீங்கள் இந்தியர்களா என்று அய்யப்படுகின்ன்றேன். தயவு செய்து தங்கள் குடும்பங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். ஆஸ்திரேலியா வில் அடி விழுந்தால் இந்தியாவில் தான் இனி ''அம்மா'' கேட்கும்.  
by R சேது,Melbourne,Australia    06-03-2010 08:44:17 IST
 அன்பு நண்பர்களே தயவுசெய்து உங்கள் கோப கணைகள் அவசரப்பட்டு வீசி பின் அவமானப்படாமல் ,காவல்துறையின் விசாரனைக்கு பின் முடிவு செய்வோம் தவறு யார் செய்தது என.அதுவரை நம் தலைவர்களை போல் குளிர்சாதன அறையில் இருந்துகொண்டு நம் அனுதாபத்தை மட்டும் தெரிவிப்போம் குழந்தையின் குடும்பத்திற்கு  
by v priyan,covai,India    06-03-2010 08:25:24 IST
 இ I would like to state the same, I have not had a problem so far, but if a kid of this age has been killed....I would like to know what happened..there and when....everybody is good until proven guilty 
by J மைகேல்,tuticorin,India    06-03-2010 07:58:39 IST
 இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கொலையில் இந்தியருக்கு பங்கு இல்லை என்று முடிவு ஆனபின் நம் வாதங்களை தொடருஒம்.  
by R சுந்தர்,Australia,India    06-03-2010 07:36:41 IST
 நியூஸ் மீடியா மட்டும் தான் இந்தியன் பிரச்சனயை பெரிதுபடுத்துகிறது. நான் இங்கு பலவருடங்கள் வசித்து வருகிறேன் ஆனால் இன்னும் சிறு பிரச்சனை கூட வந்ததில்லை. இங்கு வந்து ஒவ்வொரு இந்தியனியும் கேட்டு பாருங்கள் அனைவரும் மீடியாவை தான் குற்றம் சொல்ல்வார்கள். நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவால்லை தயவு செய்து வீண் வதந்தி பரப்பாதீர்கள்.... இங்கு அனைவரும் நலம்.... 
by Ash,melbourne,Australia    06-03-2010 07:22:17 IST
 You the news media gone crazy.I dont know you people getting these sort of headlines.hole lot of rubbish.You people know very well,The INDIANS never scared of any body or anything.Please stop this prpaganda. 
by Cel Palaniswamy,Sydney,Australia    06-03-2010 05:46:17 IST
 No indian in melbourne are living in a live threatening situation. Everybody is looking forward in this case. Don''t spread any unrealistic message to the tamil community. I request media not to spread news for your own sake. It is ridiculous. Even though u r not going to publish my comment, i hope atlease one of you from dinamalar read this. Never think media is smarter than people, if there is a beginning there is end. It applies to DINAMALAR too..  
by R VIVEK,melbourne,Australia    06-03-2010 05:06:34 IST
 அவர்கள் அங்கு சென்றது படிக்கவா அல்லது சம்பாதிக்கவா? என் இந்த அவல நிலை. பணத்தாசை ஒரு சிறுவனை கொலைசெய்ய காரணமாகிவிட்டது. திருந்துவார்களா? 
by M ராஜா,Mumbai,India    06-03-2010 01:46:13 IST
 இந்தியனுக்கு மட்டும்தான் இப்படி நடக்கும் யூதனை செய்து பாருங்கள் .இந்தியா வல்லரசாம் , வல்லரசு குடுகுடுப்பைதான் ஆட்டலாம் . 
by A Sitpi,duesseldorf,Germany    06-03-2010 01:20:36 IST
 என்ன அநியாயம்டா இது? அந்த பச்சிளம் பாலகனை கொலை செய்ய எப்படி வந்ததடா மனம்? கொலை செய்த மிருகம், போதை மருந்தில் இருந்திருக்கும், அந்த மிருகத்தை கண்ட இடத்தில கண்டம்துண்டமாக வெட்டவேண்டும். கையாலாகாத இந்திய அரசாங்கம் தயவு செய்து பொத்திக்கொண்டு இரு. நீ வேற வன்மையா கண்டிக்கிறேன் என்ற மாமுல் அறிக்கையை விட்டு அந்த பச்சிளம் பாலகனை இழந்து வாடும் குடும்பத்தாரின் சோகத்தை மேலும் கூட்டாதே. 
by KN கிள்ளிவளவன்,Chennai,India    06-03-2010 01:19:06 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்