முதல் பக்க செய்திகள் 

ஆய்வாளருடன் நித்தியானந்தர் புதிய வீடியோ பேட்டி
மார்ச் 11,2010,13:50  IST

Front page news and headlines today

பெங்களூரு: நடிகை ரஞ்சிதாவுடன் இணக்கமாக இருந்த நித்தியானந்தர் எங்கு இருக்கிறார் என்று இது வரை உறுதியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் , இவரது 2 வது வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் ஒரு ஆய்வாளர் ஒருவர் பேட்டி காண்பது போல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா குறித்து எவ்வித கேள்வியும் , பதிலும் இந்த வீடியோவில் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரே தனியாக தோன்றி ஸ்லோகத்துடன் தனது தியான பீடத்தின் தவறு எதுவும் இல்லை . அந்த செய்தி தொடர்பாக ஆதாரம் திரட்டிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.இந்நிலையில் நித்தியானந்தர் இவரது பக்தரும் , ஆய்வாளருமான ராஜீவ் மல்கோத்ரா இவருடன் பேட்டி காணும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மல்கோத்ரா அமெரிக்காவை சேர்ந்த தியானபீடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் கூறியிருப்பதாவது: என்மீதான புகார்களுக்கு நான் மனதார அத்த‌னையும் வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.சீடர் கூறிய புகாருக்கு பதில் : தங்களது மடத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அவர் இந்த சீடர் எப்போதும் சுவரின் மீது அமர்ந்து கால் தொங்க விட்டபடியே எப்போதும் அமர்ந்திருப்பார். இப்படி இருக்க வேண்டாம் என்று பல முறை கூறியும் அவர் கேட்கவில்லை .இந்நிலையில் அவர் ஒரு நாள் தானாக நிலை தவறி கீழே விழுந்து விட்டார். உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது முறைப்படி போலீசுக்கு தகவல் தெரிவித்து , உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்கள் சம்மதத்துடன் இறுதி்ச்‌சடங்கு செய்யப்பட்டது. இதில் எவ்வித மர்மமும் இல்லை.தங்களது மடத்தில் இளைஞர்கள் அடைப்பா ? : இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள நித்தியானந்தர் யாரும் கட்டாயமாக அடைக்கப்படுவதில்லை. பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் சேர்க்கப்படுவர். அனைவரும் கையெழுத்திட்டு விருப்பத்தை முறைப்படி தெரிவித்து விட்டுத்தான் தங்கியுள்ளனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நாட்டம் குறைந்தால் எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியேற முடியும். இது ஒளிவுமறைவில்லாத ஒரு ஆசிரமம். இங்கு எந்த ரகசியமும் இல்லை.தமிழக பெண் கற்பழிப்பா ? : தமிழக பெண் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு , இது முற்றிலும் பொய். மீடியாக்கள் வேண்டுமென்றே திரும்ப, திரும்ப புனைந்து மக்களை சீரழிக்க வதந்திகளை குழப்புகிறார்கள் . மீடியாக்கள் இது போன்று செயல்படுவது துரதிர்ஷ்டம்.தியான பீட ஆசிரமம் இடம் எப்படி வந்தது ? : பெங்களூர் அருகே பிடாதியில் உள்ள தியான பீட ஆசிரமம் அமைந்துள்ள இடம், பெங்களூரைச் சேர்ந்த புகழ் பெற்ற சஜ்ஜன் ராவ் குடும்ப வாரிசுகளான வினாயக் ராவ், பிரதாப் ராவ், ஜீவன் ராவ் ஆகியோரால் எனக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்தச் சகோதரர்கள் என் மீது அன்பு கொண்டவர்கள், எனது போதனைகளால் பலன் பெற்றவர்கள், இறை பக்தி நிரம்பியவர்கள். என் மீது கொண்ட அன்பாலும், எனது இறைப் பணிக்காகவும் எனக்கு நிலத்தைத் தானமாக கொடுத்தனர்.2003ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பகுதியையும், பின்னர் இன்னொரு பகுதியையும் தானமாக அளித்தனர். அங்கு எனது இறை மையத்தையும், இறைப் பணியையும் மேற்கொள்ள தானமாக அளித்தனர்.அங்குள்ள மிகப் பழமையான ஆலமரம் மற்றும் சிவன் கோவிலை அவர்கள் நீண்ட காலமாக வழிபட்டு வணங்கி வந்தனர். அவற்றையும் எனக்கே அளித்தனர்.இவை அனைத்தும் முறைப்படி, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான, சட்டப்பூர்வ ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது தொடர்பான வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள் :www.youtube.com/lifeblissfoundation#p/a/u/0/tgiFa5uQt7k

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 we should not involve in his personal life.He taught us yoga.Let us try to learn postive from him.The person who keeps the video camera inside his room should be punished.One should not take the others personal life video that too in his bed room. Will u accept some body take the video what u r doing inside your bed room. ??? 
by L RAM,Bangalore,India    12-03-2010 02:14:03 IST
 நீ ஒரு சாமி ஒனுக்கு ஒரு பொழப்பு அதுக்கு 10 peru ethu deviyuada,olunga unga appa amma pollappukku help pannieruntha kuda motcham kettum ....poda poi avangala paruda,,,,, 
by k saravanan,chennai,India    12-03-2010 00:15:36 IST
 dont ever never believe the samygii.......in the name of god doing things like this is totally unforgivable....u r not a god..i believe in god but not the humans as act as a god 
by mr indian,heaven,UnitedKingdom    11-03-2010 23:50:53 IST
 இவனை இனிமேல் விட்டு வைக்க கூடாது. போட்டு தள்ளனும்  
by m padhu,US,UnitedStates    11-03-2010 23:30:14 IST
 இவனது வண்டவாளங்கள் அனைத்தும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஆதாரப் பூர்வமாக சிக்கிக் கொண்டான். இவன் தரப்பிலிருந்து வரும் செய்திகளை மீடியா புறக்கணிக்க வேண்டும். இந்த கேடு கெட்டவனை கழுவில் ஏற்ற வேண்டும். 
by T. ராஜா ,Nairobi,Kenya    11-03-2010 23:24:04 IST
 THIS FELLOW IS A BIG CHEAT.HE DOES NOT HAVE ANY CONSCIENCE,HIS ONLY AIM IS TO MISGUIDE PEOPLE AND EXTRACT MONEY.HELLO PEOPLE, BEWARE OF SUCH THIEVES.I ACCEPT HE IS A VERY BIG ACTOR. 
by k natarajan,pondy,India    11-03-2010 22:25:29 IST
 this person is sick and dont know what to say about the people who blindly follow this idiot. i have seen people doing pooja to his kaavi dress and his ''seuppu''. Well said by E vleraj ''epporul yaar yaar vai ketpinum apporul mei porul kaanbathu arivu'' why worship an ordinary man??  
by ss susi,Portland,UnitedStates    11-03-2010 22:19:04 IST
 இவன் ஒரு திருடன் என்பதில் அய்யமில்ல. உண்மையானவனாக இருந்தால் கோர்ட்டில் சரண்டர் ஆக வேண்டியது தானே. அதை விட்டு விட்டு சும்மா சிடி யா அனுப்பி போய் பிரச்சாரம் பண்ணும் இவனை நம்பாதீங்க தமிழாக மக்களே. 
by V gandhi,nairobi,Kenya    11-03-2010 22:06:54 IST
 BETTER TO BELIEVE THIS TYPE OF SAMIARS 
by K MOHAMED FAROOK,CHIDAMBARAM,India    11-03-2010 21:57:36 IST
 சாமியார்னா காலில செருப்பு போடகூடாது. இப்படி ஆசிரமம் வைக்க கூடாது. வெறும் காலில் தான் நடக்கணும். காட்டில தான் வாழனும். சும்மா அத கொண்டு வரேன் இத பண்ணுவேன்னு சீன் போடக்கூடாது. சும்மா என்னோட ஆசிரமத்துல வந்து சேருங்கன்னு விளம்பரம் செய்யக்கூடாது. வியாபரதுக்குதான் விளம்பரம் தேவை. காட்டில் கிடைக்கும் பழங்களை மட்டும் தான் சாப்பிடனும்.  
by ஆத்திரத்தில் ஒரு பெண்.,coimbatore,India    11-03-2010 21:57:05 IST
 எப்புருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பெருள் காண்பதறிவு . - குறள் அகவே மக்களே! நீங்கள் சாமியார் சொல்வதை மட்டும் எடுத்துகொள்ளுங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு தேவை இல்லை! உலகில் நாம் அனைவரும் 100% சரியானவர்கள் இல்லை அவரை பற்றி தீர்ப்பு சொல்வதற்கு. நன்றி  
by E velraj,madurai,India    11-03-2010 21:48:18 IST
 நீ இந்த மாதிரி ஏமாத்தி பிழைப்பதற்கு பதில் பிச்சை எடுக்கலாம். 
by பிரபு ரா ,newjersy,UnitedStates    11-03-2010 20:58:21 IST
 பேட்டி எடுத்தவனையும், கொடுத்தவனையும் பார்த்தா ''வேலிக்கு ஓணான் சாட்சி'' என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது. சாமியார் என்னமா தேனொழுக பேசுறான்! கடுமையா எதிர்ப்பவனும் கூட இதைக்கேட்டா இவனோட மடத்தில சேர்ந்திடுவான் போல இருக்கே! உடனடியா விளக்கம் கொடுக்காமா ஒரு வாரம் ஒழிந்திருந்தது, அப்புறம் பேட்டியில் ரஞ்சிதா மேட்டர் மிஸ்ஸிங் ஆனது, மேலும் ரஞ்சிதாவும் வாயை திறக்காமலே இருப்பது இது எல்லாத்தையும் வச்சி பாத்தா அது உண்மைதான் என்று சாமியார் ஒப்புக் கொள்வது போலத் தெரிகிறது. ஆனால் திரு மல்ஹோத்ரா, உமக்கு இந்த ஈனப் பிழைப்பு தேவைதானா? 
by K ஜெயதேவா தாஸ் ,Bangalore,India    11-03-2010 20:38:21 IST
 i advice people, not to follow or think any individual human as god. god is superior and he is with everyone of us when we think or do good for others. 
by KK MANI,madurai,India    11-03-2010 19:29:54 IST
 ''நீ எதை விதைதியோ அதை அறுப்பாய்'' 
by Raja,Madurai,India    11-03-2010 19:29:12 IST
 நீ ஒரு அயோக்கியன் சாமி வேடம் போட்டது போதும்.  
by K Kannan,Nattarasankottai,India    11-03-2010 18:56:26 IST
 இந்த மாதிரி கண் மூடி தனமான சீடர்கள் இருக்கும் வரை இன்னும் பல நிதயனந்தாக்கள் வுருவாகி கதவை திறந்து வைத்து கொண்டு இருப்பார்கள் ..... 
by r.m. nimesh,chennai,India    11-03-2010 18:39:07 IST
 நல்லாத்தான் பேசறிங்க சாமி! ஆனா இப்படி பண்ணிடிங்களே அய்யனே! 
by C. ஜான் சைமன்,Chennai,India    11-03-2010 18:35:50 IST
 ennu evalavu than poo suthivinga  
by V Nandakumar,Vellore,India    11-03-2010 17:56:50 IST
 ''சாமியை நம்பு சாமியார நம்பதா'' 
by D damodharan,chennai,India    11-03-2010 17:30:15 IST
 ''நி தமிழகம் வராத வந்த மக்கள் உன்னை மனிக்கமாட்டர்கள்''  
by R Damu,Covai,India    11-03-2010 17:20:50 IST
 Press Conference க்கு கூப்பிட வேண்டியது தானே, கேள்வி கேட்டு கிழிசுடுவாங்கன்னு பயமா  
by a ராஜா,Bangalore,India    11-03-2010 17:17:40 IST
 Samiyar is following Bin Laden. Video after video. Call CIA for help. 
by B Ebenezer,Tirunelveli,India    11-03-2010 17:15:22 IST
 குட் acting 
by D க,s,Georgia    11-03-2010 16:50:13 IST
 beautiful answer THANK YOU !!!!! வாழ்க நீவிர் ஸ்ரீ பரமகம்ச நித்தியானந்த ! I hope Dinamalar will allow my comment !  
by rajasji,münchen,Germany    11-03-2010 16:41:45 IST
 வர வர சந்தன மரம் கடத்தல் வீரப்பன் போல் அல்லவே இவன் வீடியோ விடுறான். போற போக்க பார்த்தல் வீடியோ முலமாக அடுத்த ஏமாற்று வேளைக்கு ரெடி ஆகிவிடுவான் போல் உள்ளது  
by s சிவசங்கர்,trichy-4,India    11-03-2010 16:27:48 IST
 சுவாமி ஜி உங்கள் முகத்தில் பயம் இறுப்பது கண் கூடாக தெரிகிறது.. அனால் ஒரு சின்ன கேள்வி ரஞ்சிதா பற்றி ஒன்றும் கூற வில்லையே... 
by M.R. சந்தோஷ்,madurai,India    11-03-2010 16:24:16 IST
 உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் ...... அனுபவி ராஜா அனுபவி....  
by t saravanan,singapore,India    11-03-2010 15:42:49 IST
 he is the one the god i can blew he is my god  
by v.v machado,bardubai,UnitedArabEmirates    11-03-2010 15:25:39 IST
 Shut up you idiot...we wont believe you anymore... Belief is like a mirror..once broken, its broken foreever.  
by Shanmu,Bahrain,Bahrain    11-03-2010 14:36:27 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்