முதல் பக்க செய்திகள் 

பாக்., - ஆப்கன் இரட்டையர்கள் : சொல்கிறார் அதிபர் கர்சாய்
மார்ச் 12,2010,00:00  IST

Front page news and headlines today

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போன்றது; இந்தியா நெருங்கிய நட்பு நாடு என, ஆப்கன் அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஹமீத் கர்சாய், பாகிஸ்தானில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் கிலானியை அவர் சந்தித்து பேசினார். அப்போது உடனிருந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், "ஆப்கானிஸ்தானில் சில நலபணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டி விடுகிறது' என குற்றம்சாட்டினார்.இது குறித்து அதிபர் கர்சாய் கூறியதாவது: இந்தியா எங்கள் நட்பு நாடு. ஆப்கானிஸ்தானை சீரமைக்கும் பணிக்கு உதவி வருகிறது. ஆப்கானிஸ்தான் இளைஞர்களுக்கு கல்வி புகட்டி வருகிறது. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒட்டி பிறந்த இரட்டையர்களை போன்றது. எங்கள் நாட்டில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள எந்த நாடும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். அதே போல பாகிஸ்தானில் தங்கியுள்ளவர்களும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செயல்படுவதை இந்தநாட்டு அரசு அனுமதிக்கக்கூடாது. ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் பாகிஸ்தான் எல்லை பகுதியிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்காது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இன்னும் எந்த இருநாடுகளுக்கிடையே பனிப்போர் ஏற்படும் களமாக ஆப்கானிஸ்தான் இருக்க விரும்பவில்லை. இவ்வாறு கர்சாய் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்தியர் பாகிஸ்தானியர் ஆப்கானியர் ஆகிய நாம் மூவரும் ஒருவர்தான். நாம் எல்லாம் ஒரே மதத்தில் இருந்தவர்கள்தான். நடுவில் நமிடம் மதம் வந்துவிட்டது. அதனால் நமக்குள் பகை வந்துவிட்டது. ஆயிரம் ஆண்டாக ஏற்பட்ட அரசுகள் நமக்குள் சண்டையும் சச்சரவுகளையும் உண்டாக்கி வைத்து விட்டன. நமக்குள் உள்ள மத வேறுபாட்டை மறந்து ஒருவராகி மூன்று நாட்டையும் ஒன்றாக்கி ஒரு ஆட்சி அமைத்து நாம் கட்டினோமானால் முதலில் அப்பாவி மக்கள் உயிர் விடுவது குறையும். ஆண்டவனால் படைக்கப்பட்ட உயிர்கள் தேவையில்லாமல் பலி ஆகிக் கொண்டு இருக்கின்றன. யாராக இருந்தால் என்ன? எல்லாம் உயிர்கள்தான். மதம் வாழ்க்கை முறைதான் அதில் ஏது உயர்வு தாழ்வு? நண்பன் உறவினன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். நாம் மூன்று பெரும் ஒன்றாகிவிட்டால் நம்மைவிட பெரிய நாடு உலகத்தில் எங்கு இருக்கிறது. நாம் கனிஷ்கர் காலத்தில் ஒன்றாக இருந்தவர்கள்தான். மகாபாரத காந்தாரி இன்றைய கண்டகாரில் பிறந்தவர்தான். நாம் ஒன்றாவது மூலம் அப்பாவி உயிர்களை அழிவிலிருந்து காப்பாற்றலாம். 
by R KOTHANDAPANI,Chennai,India    12-03-2010 17:35:25 IST
 இதுக்கு மேலும் நாம அவங்களுக்கு சேவை செய்யணுமா. உடனே நம்ம ஆட்களை திரும்பி வரசொல்லுங்க  
by M patchaimalai,puducherry,India    12-03-2010 09:12:21 IST
 Thank you so much mr.kat_jai..!  
by AR Rajesh,Bagram,India    12-03-2010 07:54:51 IST
 ''இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட அனுமதிக்கமாட்டோம் '' சூப்பர் ஆப்பு இந்தியாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்  
by K Rajasekaran,chennai,India    12-03-2010 06:27:04 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்