முதல் பக்க செய்திகள் 

பஸ் பாஸ் இல்லாததால் பொதுமக்கள் முன் மாணவியை கதற வைத்த அதிகாரிகள்
மார்ச் 16,2010,00:00  IST

Front page news and headlines today

ராமநாதபுரம் : "இலவச பஸ் பாஸ்' எடுத்து வர மறந்த மாணவியை கதறவிட்டு, அபராதம் விதித்த அதிகாரிகளின் செயல், பொதுமக்களை வேதனையடைய செய்தது.கிராமத்து மாணவர்கள் கல்வியை பெற வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் "பஸ் பாஸ்'. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் பஸ் வசதியே இல்லை, வரக்கூடிய பஸ்சில் இடம் கிடைப்பதும் அரிது. இத்தனை தொல்லைகளுக்கு மத்தியில்தான், கிராம மாணவர்கள் உயர் கல்வி தேடி நகர் பகுதிக்கு வருகின்றனர். இந்த பரபரப்பில் மறதி என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதனால், பால்கரை கிராமத்தை சேர்ந்த மாணவி சாரதா பிரீத்தா, அவமானத்திற்கு ஆளாகி உள்ளார்.ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர், 23ம் எண் டவுன் பஸ்சில் இடம் பிடிக்க வேண்டுமே, என்ற பதட்டத்தில் தனது பஸ் பாசை எடுக்காமல் மறந்து வந்து விட்டார். ராமநாதபுரத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்த போது, மாணவியிடம் பஸ் பாஸ் இல்லை. "மறதியில் வைத்து விட்டு வந்ததாகவும், பள்ளிக்கு நேரமாகி விட்டதாகவும்,' மாணவி அதிகாரிகளிடம் கெஞ்சினார். அவர்களோ, அதை ஏற்க மறுத்து, அபராதம் செலுத்துமாறு கறாராக பேசினர்.எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் அபராதம் செலுத்தும் அளவுக்கு பணமிருக்குமா, என்பதை கூட யோசிக்காமல், அதிகாரிகள் தனது நிலைப் பாட்டில் உறுதியாக இருந்தனர். மாணவி கதறி அழுதும் எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பொதுமக்கள், ஒத்த குரலில் எதிர்ப்பை தெரிவிக்க, அபராதம் நூற்றுக்கணக்கிலிருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதையும் பொதுமக்கள் சிலரே செலுத்திய பின் தான், மாணவியை விடுவித்தனர். "கூடுதலாக பஸ் இயக்க கூறினால், அதை கண்டுகொள்வதில்லை, சிறு குழந்தையை மட்டும் இப்படியா பாடாய்படுத்துவது,' என முணுமுணுக்காதவர்களே இல்லைபிஞ்சு உள்ளங்களை நோகடிக்கும் இது போன்ற செயல்களை இனியாவது தவிர்க்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யத்தான் வேணும், ஆனால்,ஒரு சிறு மாணவியிடமா தங்கள் கை வரிசையை காட்டுவது?மனிதாபம் இல்லாத ஜென்மங்கள்.....தங்கள் பிள்ளைகள் என்றாலோ,தங்களின் சக நண்பர்களின் பிள்ளை என்றாலோ இப்படி செய்து இருப்பார்களா?இவர்களுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும். 
by G AMMIYA,DENHELDER,Netherlands    19-03-2010 02:15:44 IST
 இவனுக கடமைக்கு ஒரு அளவே இல்லை.வெறும் பத்துப்பேரு பயணம் பண்ற பஸ்சுல நடுராத்தியில் காட்டுக்குள்ள நின்னுகிட்டு டார்ச் அடிச்சு,செக் பண்ணுவானுங்க.நிக்கிறது திருடனா இவனுகலான்னு எப்படி தெரியும். ஏழை என்பதால்தான் பஸ் பாஸ் எடுத்து படிக்குது புள்ளிக. அதுங்க பாஸ் இல்லாமல் வந்ததால் இந்தியப்,பொருளாதாரமா சரிஞ்சுபோச்சு! 
by J RAJAMOHAMED,Riyadh,SaudiArabia    19-03-2010 01:06:27 IST
 SO MANY USERS FOR DINAMALAR.....AMAZED... HE HAS DONE HIS DUTY..SHOULD APPRECIATE..BUT HE COULD HAVE BEEN LIBERAL WITH THE SCHOOL GIRL IN UNIFORM..INSTEAD HE SHOULD HAVE CHECKED SOME OTHERS IN OTHER BUSES ALSO IN THIS TIME.. 
by geetha,florida,UnitedStates    18-03-2010 19:56:59 IST
 அவர்களின் செலவிற்கு பணம் இருந்திருக்காது அதுதான் உண்மை ,சின்சியர இருக்கன்கலாமா நம்ம உரு ஒபிபிசெர்,அவர்கல பதி நமக்கு தெரியாத  
by G SASIKUMAR,chennai,India    18-03-2010 17:31:55 IST
 தலைநகர் சென்னையில் நடக்கும் அநியாயம் இது. பொதுவாக புதிதாக சென்னைக்கு வருபவர்களுக்கு மாநகர பேருந்தில் டிக்கெட் நடத்துனர் தம்மிடம் வந்து (மற்ற ஊர்களைப் போல) வழங்குவார் என்று எதிர்பார்த்து பயணம் செய்கிறார்கள். இந்த அப்பாவிகள் தான் பரிசோதகர்களுக்கு பலிகிடா. இவர்களை இறக்கி, பையில், பர்சில் இருக்கும் பணத்தையெல்லாம் (திருடன், போலீசை விட கேவலமாக) புடுங்கிக் கொள்கிறார்கள். அபராதம் என்று ஏதும் போடுவதும் இல்லை - ரசீது வாழ்க்கையில் கொடுத்து பழக்கமும் இவனுகளுக்கு பழக்கம் இல்லை. இதில் கொடுமை என்னவென்றால் முதல் நிறுத்தத்தில் ஏறி படிக்கட்டில் தொங்கி பயணிக்கின்ற அப்பாவி, அடுத்த நிறுத்தத்திலேயே டிக்கெட் எடுக்க அவகாசம் இல்லாமல் மாட்டிக் கொள்வது தான். கொள்ளையர்களை விட மோசமானவர்கள் இந்த சென்னை மாநகரபேருந்தின் டிக்கெட் பரிசோதகர்கள்.  
by ராம்,சென்னை,India    18-03-2010 07:31:53 IST
 மனிதாபிமானம் இல்லாத நடமாடும் மாமிசங்கள்!! அரசு அந்த குழந்தையின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கண்டிப்பாக குடுத்து அந்த அதிகாரிகள் ( ___ ) மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
by R கஜேந்திரன்,chennai,India    17-03-2010 22:23:08 IST
 சட்டம் எல்லோருக்கும் சமம். இந்தியாவில் இவராவது தன் கடமையை செய்து இருக்கிறார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மத்தியில் ரசீது கொடுத்தற்காக பாராட்ட வேண்டும். இந்தியாவில் கடமையை செய்பவனையும் தடுக்க எத்தனை கருத்து. எனக்கு தெரியவில்லை. கருத்து தெரிவித்த அத்தனை மனிதனும் தன் கடமையை சரியாக செய்கிறார்கள்  
by m ராஜ பெருமாள் ,roorkee,India    17-03-2010 19:29:30 IST
 Rules & Regulation for people,Peoples is not for rules... This is the reason that y india is in back in the world...  
by V THIRUMALAISELVAN,SHARJAH,India    17-03-2010 16:05:19 IST
 பள்ளி சீரூடை அணிந்தவர்களிடம் டிக்கெட்டு அல்லது பாஸ் கேட்க கூடாது.  
by L PRABHAKARAN,Bhavani,India    17-03-2010 15:18:51 IST
 this is too bad 
by r nagaraj,ambattur,India    17-03-2010 10:31:10 IST
 ஏழைகள் என்றால் துணிவதும் எடுப்பானவர்கள் என்றால் பணிவதும் நம்மவர்களுக்கு பழகி போன ஓன்று. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் ..எல்லோரும் அறிந்த ஓன்று.இதையே ஆளும்கட்சியின் சொந்தகார்களிடம் உங்கள் வீராப்பை காட்ட முயன்றால் உங்களை மதிக்கிறேன்.நீங்கள் அந்த பெண்ணிருக்கு அபராதம் விதிகாதிருந்தால் உங்கள் வேலை ஒன்றும் காலியாயிருகாதே! அதே நேரம் மாணவர்களுக்கும் மன வலிமை வேண்டும். 
by R.S Mathusoothan,Rsmpp@aol.com,UnitedStates    16-03-2010 23:50:52 IST
 அதிகாரி தன் வேலையை செரியாக செய்துள்ளார். அனால், அவர் கொஞ்சம் மனம் இறங்கி இருக்கலாம்.  
by K கே,sanjose,UnitedStates    16-03-2010 23:20:11 IST
 intha athihariyoda relatives (or) oru police station staff avanga pass a maranthuttu vantha fine poduvara sollunga Mr.Senthil chennai avarhale pass kekkave mattar puriutha? 
by G Kalaichelvan,Dalmiapuram,India    16-03-2010 21:27:33 IST
 பாதிக்கப்பட்ட மாணவி, புல்லுக்கட்டும் காய்கறிக்கூடையும் சுமந்து வந்திருந்தால், சோதனையாளர் சந்தேகப்பட்டதை நியாயப்படுத்தலாம்.புத்தகக்கட்டுக்களை சுமந்து வந்த மாணவியை பரிசோதனை என்ற பெயரில் சோதனைக்குள்ளாக்கியவரை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்ற வேண்டும். ஆமா! காலகாலமாக தண்ணி இல்லாத காடுன்னு சினிமாவுல வரும் ராமநாதபுரத்தில் சம்பவம் நடந்திருப்பதால் வாசகர் நல்ல இடத்தைக் குறிப்பிட்டால் அங்கு மாற்றி விடலாம்! 
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates    16-03-2010 21:24:29 IST
 எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியை கதற விட்ட முட்டாள் அதிகாரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அபராதம் போட்டால்தான் இந்த மாதிரி கொடுமை திரும்பவும் நடக்காது. பள்ளி சீருடையில் சென்ற சின்ன பெண்ணை பஸ் பாஸ் கேட்டு தொந்தரவு செய்வதே முதலில் தப்பு. பார்த்துக்கொண்டு சும்மா இருந்தவர்களையும் திட்ட வேண்டும் ! 
by V Jay,Singapore,Singapore    16-03-2010 21:07:35 IST
 அவன் ரொம்ப சில்ரையா இருப்பான் போல இருக்கு. சின்ன குழந்தை கிட்ட இப்படி நடந்திருக்கான்.  
by r vimal,tirupur,India    16-03-2010 20:26:32 IST
 எல்லாரும் அந்த அதிகாரியை குற்றம் சொல்லுகிறார்கள், ஆனால் அந்த சிறுமி தவறு செய்திருக்கிறாள் என்று யாரும் சொல்வதில்லை. இதுபோன்ற பொறுப்பில்லாத சிறுமிக்கு வக்காலத்து வாங்கினால் நாளை அந்த அதிகாரிபோல்தான், இந்த சிறுமியும் இருப்பாள். ஆனால் அதிகாரி செய்ததும் தவறுதான்.  
by A valentine,Nairobi,Kenya    16-03-2010 20:23:16 IST
 ௦புடிக்க வேண்டியதை புடிக்க மாட்ட்ங்க. பள்ளி மாணவர்களையா பிடிக்கணும். 
by siva kumar,boonlaysingapoore,India    16-03-2010 19:51:37 IST
 Dear sir, please suspend concerned authority and action taken against this type of event in future  
by ks paramanandan,trivendrum,India    16-03-2010 19:28:47 IST
 லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவனிடம், மனித பண்பை எதிர்பார்ப்பது நல்லது இல்லை.. அவனை செருப்பினால் அடித்து கழுதை மேல் வைத்து ஊர்வலம் செல்ல வேண்டும்!!!!!!  
by A பாலன்,VanavasiSalem,India    16-03-2010 19:00:41 IST
 வணக்கம்!.. ''அரசு போக்குவரத்து தொழிலாளர்களும், அவர்கள் குடும்பத்தினரும், ( குடும்பத்தினர் என்ற பெயரில் அவர்களின் நண்பர்களும்) டிக்கெட் இல்லாமல் உட்கார்ந்து பயணம் செய்ய, டிக்கெட் வாங்கியவர்கள் நின்று கொண்டே பயணிக்கிறார்கள். அரசு போக்குவரத்து தொழிலாளர்கலின் குடும்பம் மற்றும் நண்பர்கள் என ஓசியில் பயணம் போறவங்க இவனுங்க கண்ணுக்கு தெரியாது......... இவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லமாட்டேன் உன்னுடைய கடமை உணர்ச்சியை எல்லா இடத்திலும் காட்டு. ... (வயதானவர் இறங்கும் முன் பஸ்சை எடுப்பது...50பைசா 75 பைசா சில்லரை கொடுக்காம அப்புடியே இருப்பது....முறையான நிறூத்ததில் நிருத்தாமல் செல்வது....சில்லரை திரும்ப கேட்டா லா பாயின்ட் பேசுரது.... இதலாம் இவுங்க சரியா பண்ணுராங்கப்பா மன்னாங்கட்டிக). 
by M.S. ராஜா,chennai,India    16-03-2010 18:26:08 IST
 not only bus dept sir our railway also like that only, its my experience please read it. i took ticket from online while travelling i show my licence photo copy, but the ttr not accept, fined for me. while taking internet rs.550 again he collect rs.550 and the fine rs.500. this way acting indian railway. please awarenes from indian govt and also tamilnadu govt. 
by Ariy Kannadhasan,chennai,India    16-03-2010 18:18:52 IST
 உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லியா, பொறம்போக்கு  
by A தமிம்,khaitan,Kuwait    16-03-2010 18:09:30 IST
 இந்திய சட்டம் தன் வலிமையை காட்டுவது சாமானியர்களிடம் மட்டும்தான்....சுவிஸ் பங்கில் இருந்து பணத்தை மீட்ட இன்னும் வக்கில்லை...இந்த லட்சணத்தில் சிறுவர்களிடம் தான் அபராதம் வசூலிக்கிறார்கள் ...ரயில்களில் கூட ஒழுங்காக பரிசோதனை செய்வதில்லை !!!!அவர்களின் target அளவான குறைந்தது 2 பேர் சிக்கியவுடன் அந்த நாள் முழுவதும் ஓய்வுதான் !!!!! அதிகாரிகளுக்கு தருமடி கொடுத்திருந்தால் இது போன்று மீண்டும் நடை பெறாது 
by R.S மோகன்,chennai,India    16-03-2010 17:50:18 IST
 Law is empowered by people through electing the Govt. based on Majority. In Majorities opinion details are not evaluated, which throws away the Basic Human Values. Law has no Human values  
by M Siva,Kuwait,India    16-03-2010 17:38:33 IST
 தவயு செய்தது ஈந்த வெசயம் நமது முதல்வர் பார்வைக்கு செல்ல வேண்டும்  
by சக்டேவேல் ,Chennai,India    16-03-2010 17:19:36 IST
 இது போல அரைகுறைய வச்சி வேலை வாங்குற அரைகுறை உயர் அதிகரிய கவனிக்கணும். லஞ்சம் கொடுத்து வேலை வாங்கின கும்பல். 
by D MURUGANANDAM,chennai,India    16-03-2010 16:26:31 IST
 நல்ல ஆட்சி நடக்குதா? பின்ன அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் . 
by s sathish,vellore,India    16-03-2010 16:17:16 IST
 அந்த ஆபீசர் மட்டும் என் கைல கிடைச்சான் அவனுக்கு கண்டிப்பா செருப்பு அடி விழும்..... 
by N சங்கர்,ramanathapuram,India    16-03-2010 16:16:07 IST
 I Think the conductor/Inspector should have asked the student to take bus ticket instead of imposing fine,that is the way the authorities should behave with students/children,because authorities not to behave like dictators,they are for the people ,by the people. In case of adults it can be different. Only in India authorities behave like mugals and britishers.still they have not come out that effect/impact .Let true democracy and freedom be available to all citizens. 
by N ELANCHEZHYAN,SINGAPORE,Singapore    16-03-2010 16:05:44 IST
 ivanga veetla irukkravangala mattum osiyileye oor oora free ya busla kooti poi suthikaatuvanga.....ana intha mathiri ezhai manarvalai bus pass illainu kodumai paduthuvathaa???? i juz want to look those fu**ing idiot photo..... thirunthanga pa.....kozhantha kitta kooda lancham vanga arambichittingale naadu eppadi uruppadum  
by S Sathish,Villupuram,India    16-03-2010 16:02:37 IST
 ரொம்ப மோசம் இந்த அதிகாரிகள். அவர்களுக்கும் இந்த மாதிரி பசங்க இருந்தா இதை செய்வார்களா?? வெட்கம்  
by n மோகன்,CHENNAI,India    16-03-2010 15:46:16 IST
 ithai malar asiriar kandippaga pathirikayin valga amaicharukku therivikka vendum 
by s fgrfhgfh,thoothukudi,India    16-03-2010 15:41:16 IST
 எத்தனையோ பேருந்துகள் சரியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை அதையெல்லாம் கண்டு கொல்லாத அதிகாரிகள் இந்த மாதிரி கீழ்த்தரமாக மனிதாபிமானம் இல்லாத செயல்களை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் பள்ளி சீருடையை பார்த்தே மன்னித்து இருக்கலாம். நம் தலைவர்கள் எல்லாம் எத்தனனையோ வசதிகள் மாணவர்களுக்காக செய்தலும் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கும் வரை இந்திய முன்னேறது. ஜெயஹிந்த்.  
by sa esakkiappan,thoothukudi,India    16-03-2010 15:39:10 IST
 BUS PASS ILLANA THAPPA.... INTHE MATAHRI SINCERE WORKER PHOTOVA KONJAM NALLIKU MAILA KONJAM PODUNGA ANTHA NALLAVARA KONJAM PAKKANUM... IVAR THAN GOVERMENT KAPATHARARA.. CHINNA PONNIN VEDHANAIYODAVA........ 
by M KARTHIK,A.PATTANAM,SALEM,India    16-03-2010 15:38:08 IST
 இப்பொழுதெல்லாம் லக்கேஜுக்கு டிக்கெட் கொடுப்பதிலேயே பெரிய குழப்பமா இருக்கு. எத்தனை கிலோ வரைக்கும் அனுமதி என்றே தெரிவதில்லை. நடத்துனரை கேட்டால் மூன்று, ஐந்து, பத்து என்று அவரவர்க்கு ஒன்றை கூறிவிட்டு இரண்டு லக்கேஜு மூண்டு லக்கேஜு என்று தீடிவிடுகின்றனர். இதனை பற்றி தினமலர் கேட்டு விளக்கம் கொடுத்தல் நன்றாய் இருக்கும். ஏழைகள் பாவம் வெறும் கட்டைபையில் கொண்டுவரும் பொருட்களுக்கெல்லாம் லக்கேஜு கொடுக்க வேண்டி உள்ளது.  
by R Venkatesan,Chennai,India    16-03-2010 15:10:21 IST
 ஊரில் எத்தனயோ தில்லு முள்ளு நடக்கும் போது சின்ன குழந்தையை ஏன்யா வதக்கிறிங்கோ பெரிய மனுசங்களா  
by K SABAREVIJAY,tirupur,India    16-03-2010 15:07:59 IST
 வணக்கம். நான் மதுரையில் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். மதுரை ஊமச்சிகுளம் பஸ் ரூட்டில் 23ம் நம்பர் பஸ்ஸில் மாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவன் (5 அல்லது 6 படிப்பான்) பஸ் பாஸூடன் பஸ்ஸில் ஏறினான். கட்டுக்கடங்காத கூட்டம். மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் பலர் அந்த பஸ்ஸி்ல ஏறுவ‌தை தவிர்த்தனர். தனக்கு கிடைக்கும் கமிஷன் கிடைக்காமல் போக இந்த மாணவர்கள் காரணாமாக இருக்கிறார்களே... என நினைத்த அந்த பஸ் கண்டக்டர் மாணவர்களை தாறுமாறாக திட்டினார். நான் குறிப்பிடும் மேற்படி மாணவனை திட்டும்போது... ஏண்டா... ப்ரீயா பஸ் பாஸ் குடுக்குறாங்கன்னே உங்க அப்பன், ஆத்தா உங்களை பெத்து வுட்ருக்காங்களாடா,ன்னு கோபத்துடன் திட்டினார். அந்த பிஞ்சு மனது என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றது. பாவம்! இதேபோல தினம் தினம் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. இலவச பஸ் பாஸ் என்று கொடுத்துவிட்டு, மாணவர்களை இப்படி அவதிக்குள்ளாக்கும் அரசாங்க‌த்தை குறை சொல்வதா? கமிஷனுக்காக பிஞ்சுகளை நோகடிக்கும் கண்டக்டர்களை குறைசொல்வதா?  
by எஸ். பொன்கலாநிதி,Madurai,India    16-03-2010 15:05:14 IST
 நாட்டில் எவ்வளவோ தப்பு நடக்குது. அதையெல்லாம் கேட்க்க யோக்கிதை இல்லை. சின்ன பிள்ளைகளிடம் கடமையும் வீரத்தையும் காட்டுறாரு இந்த சிரிப்பு அதிகாரி. பெரிய பொறுப்பு வெளக்கெண்ணை போய் பெரிய தப்பு பண்ணுறவங்கள புடிடா பொறம்போக்கு  
by தமிம் தம்மாம்,DAMMAAM,SaudiArabia    16-03-2010 15:02:36 IST
 B சிவகுமார்,Madurai,India avarkala unga veetil ponnu kidyatha ?en inth aavesam 
by k bas,ramnad,India    16-03-2010 14:57:31 IST
 It is a very tricky mater. The law is for the people and the people are not for the law. Human beings are above the law. They need to be respected. Having said that, the lawa are there not to be in the books, but to be implemented properly. When it is unimplemented, corruption comes in. This is the great difference between the developed countries and the undeveloped countries. Here in Germany for example the offender, wether he is a Minister or ordinay citizen, all are liable to pay the penalty, if they cross the limit. Rules have to be implemented. well, in this case the Inspector had mercy and reduced the penalty, is good. On humanitarian basis; I would propose two solutions; 1. The officer could have asked the student to pay the penalty later (if the law permits) If not tomorrow more students will start to do the same deliberately. how do you control then? The transport will run in loss. 2. To increase the number of the Buses especially dering school time. If our country have to develop as for the dream of our fgreat Abdul Kalam (former President) we all need to cultivate the virtue of 'HONESTY' beginning from Politicians and the Ministers and the leader of our country. R. Mani Germany 
by R. mani,Marienhehide,Germany    16-03-2010 14:48:09 IST
 i dont some people comments so harsh on the girl. All know school student are given free bus pass(free). It just enough to warn a little girl at the peak hour. Many people, college students run when seeing the checker. they dont even run or try to catch them esply if they know he is rowdy/pickpocket who noever takes the ticket. It is digusting truth that all the conductor know who is pickpocket travelling. 
by S S,Chennai,India    16-03-2010 14:37:49 IST
 மாணவியிடம் மாலை வரை கால அவகாசம் கொடுத்து அபராதத்தை செலுத்த சொல்லி இருக்கலாம் நமது அதிகாரிகள். எது எப்படியோ மாணவர்களுக்கு இது ஒரு பாடம்.  
by S சங்கரநாராயணன் ,coimbatore,India    16-03-2010 14:35:56 IST
 the media should not leave like this issue,they has to brought this for their management 
by k Ashokkumar,sharjah,UnitedArabEmirates    16-03-2010 14:31:23 IST
 அய்யா செக்கிங் இன்ஸ்பெக்டர், அந்த குழந்தை பள்ளி குழந்தை என்பது தங்களுக்கு தெரியாதா சார் ? உங்க கடமை உணர்ச்சியை டிக்கெட் எடுக்காத ஆளிடம் காட்டலாமே. அந்த குழந்தையின் இன்றைய நிகழ்ச்சியின் மன உளைச்சலால் பாடம் கெட்டு போகும் பாவத்திற்கு ஆளாகி விட்டீரே.  
by A சிராஜுதீன் சிராஜி ,Jeddah,SaudiArabia    16-03-2010 14:30:16 IST
 Mistakes are always happen in human beings, she is very small girl, so they should have forgive her, by worning or advicing her, i will not accept the way they express by TTR officers, any way they should appoligize to that school girl and her family as well 
by J Prasanna,DubaiUAE,UnitedArabEmirates    16-03-2010 14:24:47 IST
 கடமையில் கருத்தாக இருந்ததற்காக அந்த அதிகாரியைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனாலும், பொதுமக்களுக்கு முன்னிலையில் இப்படி நடந்துகொண்டால் யாருக்குத்தான் கோபம் வராது? அதிகாரிக்கு வக்காலத்து வாங்குகிறோம், நூறு பேர் முன்னிலையில் வெட்கித் தலைகுனிந்த அந்த சிறுமிக்காக யாராவது வருந்தினோமா? யாரோ இரண்டு மூன்று பெண்கள் பேருந்தில் செய்யும் அட்டூழியத்தைப் பார்த்து மனம் நொந்தவர்களே, எல்லாரும் பெண்களும் ஒரே மாதிரி என்ற முடிவுக்கு எப்படி வரலாம்? ஒருவேளை அந்தச்சிறுமி தினமும் பாஸ் எடுத்து வரும் பழக்கம் உள்ள பெண்ணாக இருந்து, அன்று மட்டும் மறந்து போயிருந்தால், அதுவும் தப்பா? பயன் பெறுவோரிடம் நேரிடையான தொடர்பு இருக்கும் என்றுதான் இன்னும் அரசுகள் மனிதஉழைப்பை இன்னும் விரும்புகின்றன. இல்லாவிட்டால், அதற்கும் சேர்த்து ஒரு மெஷின் வைத்து, அதையும் இயந்திரமயமாக்கி விடலாமா? இவர்கள் என்ன எல்லா விஷயத்திலும் ஒரேபோன்று சட்டத்தை பின்பற்றுகிறார்களா? இவர்களுக்குத் தெரிந்தவர்கள் பேருந்து ஏறினால் பெரிய பாரி வள்ளல் போன்று டிக்கெட்டே வாங்காத நடத்துனர்கள் எத்தனை? அல்லது, மிகவும் கரிசனமாக குறைந்த விலை டிக்கெட் தருபவர்கள் எத்தனை பேர்? மாணவியின் செயலை நான் நியாயப்படுத்தவில்லை, ஏனெனில் அவள் ஒன்றும் மன்னிக்கவே முடியாத குற்றத்தைச் செய்து விடவில்லை என்பது என் கருத்து. இவர்கள் தண்டனைக்கும் தண்டத்துக்கும் தப்பி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் கில்லாடிகளை இவர்கள் சரியாக பிடிக்கும் அன்றுதான் இவர்களுக்கு தண்டிக்கும் உரிமை இருக்கிறது.  
by I சாம் ருத்ரன் ,Madurai,India    16-03-2010 14:14:36 IST
 Govt. wasting money to giving the salary for these useless people. In peak hours they giving irritate sense to all kind of people in the name of sincere duty. For giving salary to this people govt can buy new buses. I request govt. to give some useful work to this peopel. 
by N NAGARAJAN,chennai,India    16-03-2010 14:07:55 IST
 oru velai andha ponnu manam udaindhu edhaavadhu seydhirundhaal.......... 
by r ramesh,mys,India    16-03-2010 13:41:59 IST
 kadamaiyai seivathil endha kuttramum illai,......aaanaal.. adey kadamaiyai andha adhigari yellath tharunangalilum kadai pidikka vendum.... andha idathil avarathu magal irundhirundhalum idey thandanaiyai....kodukka vendum...seivaaraa andha adigari....? thamizhaga pookkuvarathu kazhagathil panipuriyum,,,,,adhigarigal .....ootunar...mattrum..nadathunar....ivargalin uravinargal....ivargalukku therindhavargal kooda....payanacheetu illamal... payanikka vaippathu... indha athigarikku theritadha enna? Ayya kadamaiyai seyyungal.....koodavey manidhabimanamum theyvai.....enbadhai... yeppoathuthan unaruveergaloa........?  
by s mugundan,manama,Bahrain    16-03-2010 13:41:15 IST
 sabhaash s.selvan bangalore. நெத்தி அடி சூப்பர். 
by G raju,Bangalore,India    16-03-2010 13:39:09 IST
 yea yaa kadamai thavaraadha checking inspectere nee thaan lanjam vaanguviye adhula irundhu indha chinna ponnukaaga oru 50 rubaai kudutha enna da.unnoda ponnuku idhu pola oru nilamai vandha thaan unaku arivu varum da. 
by i siraj,sharjah,UnitedArabEmirates    16-03-2010 13:12:46 IST
 THIS IS TOO MUCH........... 
by T GEETHA,TAMILNADU,India    16-03-2010 13:02:02 IST
 government has to make a rule like பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் தேவை இல்லை அவர்கள் school ID is enough for the travlling between their school and home.and ticket inspectors are not required except metro politan cities they are only sleeping at home up to the evening.government has to use all these fellows as a conductor 
by k ramasamy,tuticorin,India    16-03-2010 12:49:10 IST
 ETTAM CLASS PADIKARA PONNU ENRAVUDAN ELLARUM VARINTHU KATTI KONDU VARUTHA PADUKIRARKAL, IDUVE ORU PAYYAN ENRAL VAAYE THORAKKA MATTARKAL ENNA ULAGA MADA IDU? 
by PP MUTHU,SRINAGAR,India    16-03-2010 12:46:30 IST
 அய்யா பொது ஜனம் ... அந்த சிறுமிக்கு உதவி செய்திர்கள் .. இன்னொன்றை செய்ய மறந்து விட்டீர்கள் .. அதிகாரிகளுக்கு தருமடி கொடுத்திருந்தால் இது போன்று மீண்டும் நடை பெறாது ... 
by Covai Tamil,Coimbatore,India    16-03-2010 12:29:34 IST
 யானை அளவுக்குப் போவது தெரியாது, ஆனால் எறும்பு அளவுக்குப் போவதற்கு கணக்குப் பார்ப்பானாம். வேற என்ன சொல்ல! 
by பி மூர்த்தி,Hyderabad,India    16-03-2010 12:27:15 IST
 இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 
by m arjun,chennai,India    16-03-2010 12:18:04 IST
 இந்திய சட்டம் தன் வலிமையை காட்டுவது சாமானியர்களிடம் மட்டும்தான்....சுவிஸ் பங்கில் இருந்து பணத்தை மீட்ட இன்னும் வக்கில்லை...இந்த லட்சணத்தில் சிறுவர்களிடம் தான் அபராதம் வசூலிக்கிறார்கள் ...ரயில்களில் கூட ஒழுங்காக பரிசோதனை செய்வதில்லை !!!!அவர்களின் target அளவான குறைந்தது 2 பேர் சிக்கியவுடன் அந்த நாள் முழுவதும் ஓய்வுதான் !!!!! 
by R.S மோகன்,chennai,India    16-03-2010 12:15:58 IST
 சார் உங்க டூட்டி சூப்பர். கவேர்மென்ட் ஆபீஸ் கரெக்டா நடக்குது. இந்த பஸ்ல உங்க சன் இருந்தா நீங்க உங்க கடமை இருக்குமா..... 
by p.s senthil,coimbatore,India    16-03-2010 12:13:02 IST
 மிகச் மிகச் மிகச் மிகச் சரியாக சொன்னீங்க செல்வன்..........................(அரசாங்கம் நடத்த வேண்டிய கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு, தனியார் நடத்த வேண்டிய சாராய வியாபாரத்தை அரசாங்கம் நடத்துகின்ற காலக்கட்டத்தில் நாம் இருப்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.).............................................................................. 
by a sivabalan,bangalore,India    16-03-2010 12:08:20 IST
 INTHA TIME LA ORU UNMAYAANA RAMANATHAPURATHUKKAARANAA ARIVAAL EDUTHAA THAPPU ILLA...VETTI YERIYALAAM.. 
by S. MUTHU RAJA,VELLORE,India    16-03-2010 11:58:24 IST
 Uncultured, uncivilised and whatnot else idiots. 
by J லிவிங்க்ஸ்டன் Joshua,Nagercoil,India    16-03-2010 11:53:22 IST
 பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்களை எதற்காக பாஸ் இருக்கிறதா என்று சோதனையிட வேண்டும்? பள்ளி மாணவர்கள் என்றால் அரசாங்க பேருந்தில் எக்காரணம் கொண்டும் பாஸ் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எந்தவித பிரச்னையும் கொடுக்க கூடாது! 
by B Moorthy,Delhi,India    16-03-2010 11:53:09 IST
 அப்போ 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பிள்ளை பணத்தை மறந்து விட்டு வந்தாலும் அவர்களை மண்ணித்து அபராதம் இல்லாமல் இலவசமாக பேரூந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்???  
by Mr. Jubail,Jubail,SaudiArabia    16-03-2010 11:45:18 IST
 ஐயா B சிவகுமார்,Madurai,India அவர்களே வணக்கம், சில நேரம் அரசு துறையில் (காவல் துறை) உள்ளவர்கள் கூட பேருந்தில் பாஸ் என்று பயணம் மேற் கொள்ளுகிறார்கள், இவர்கள் எவரேனும் ஒரு முறையாவது அவர்கள் ID card ஐ கேட்டிருப்பார்களா? பெற்றோர்களே, குழந்தை பள்ளிக்கு போகும் போது, அவர்கள் தேவையானதை எடுத்துக்கு கொண்டார்களா என்று சரி பார்த்து அனுப்புங்கள். கூடவே உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து அனுப்புங்கள். என் நண்பனை ஒரு ஆசிரியர் ஒரு சிறிய காரணத்திற்காக எல்லோர் முன்னிலும் அடித்து விட்டார், சற்றே அதிகமாக. அன்றோடு அவன் பள்ளி வாசம் முடிந்தது. அவன் செய்த தவறு, ஆசிரியரின் தவறை சுட்டி காட்டியது தான். கடமை உணர்வு இருக்க வேண்டியது தான், இல்லை என்று சொல்லவில்லை. பிஞ்சு மனசை கொன்னுடாதிங்க, சொல்லிகுடுங்க. அவங்க வளரும். 
by S பிரபு,Kumbakonam,India    16-03-2010 11:36:45 IST
 உண்மையில் அவர் ஒரு நல்ல அதிகாரியா இருந்திருந்தா அந்த சிறுமியிடம் அன்பாய் அறிவுருத்தியிருக்கலாம் ... அதை விட்டுவிட்டு அத்தனைபேர் முன்பு இவ்வளவு கடுமையாய் நடந்திருக்க வேண்டாம் ... அவள் பள்ளிக்கு செல்கிறாள் .. சந்தோசமாக செல்ல வேண்டிய இடம்.. டிக்கெட் மட்டுமே பரிசோதிக்கும் அதிகாரிகள் ... எத்தனை பேர் பயணிகள் ஒழுங்காக பயணிக்கிறார்களா... முதியோர்களுக்கு முடியாதவர்களுக்கு இடம் தருகிறார்களா ... பேருந்து நேரத்திற்கு வருகிறதா .... இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை ... ஒரு சிறுமியிடம் இப்படி நடந்துதான் அவர்கள் வேலை செய்கிறார்கள் என்று காண்பிக்க வேண்டியதில்லை .. செய்வதற்கு எத்தனையோ வேலைகள் உண்டு ....  
by a சாய் மாதவன் ,kozhikodu,India    16-03-2010 11:17:18 IST
 தவறு இரண்டு பக்கமும் இருக்கிறது . இப்படி பட்ட தவறுகளை களைய ஒரே வழி . அணைத்து மாணவர்களுக்கும் இலவச பயணம் .பாஸ் கொடுக்காதே .யூனிபாம் புக்ஸ் இருந்தாலே போதும் ! அறிவிப்பாரா மஞ்சளார் !!! 
by k விஜய்,Hochimin,Vietnam    16-03-2010 11:16:36 IST
 சிவகுமார், எட்டாம் கிளாஸ் படிக்குற பொண்ணு குழந்தை தான்,..  
by s. steephen,madurai,India    16-03-2010 11:13:51 IST
 மனிதருக்காக தான் சட்டம் சட்டத்தை அமல் படுத்துவது மனிதனாக இருந்தால் இந்த பிரச்சனை இருக்காது  
by j இசாக்,nazareth,India    16-03-2010 11:02:22 IST
 மறதி எல்லாருக்கும் வருவது சகஜம் அது சிறியோர் பெரியோரை பார்பதில்லை. ஆனால் இந்த அதிகரி நடந்துகொண்டது முற்றிலும் சரி இல்லை, அரசு கல்விக்காக பல ஆயிரம் கோடி செலவு செய்கிறது, அப்படி இருக்கும்போது பஸ் பாஸ் மறந்து வைத்த எட்டாம் வகுப்பே படிக்கும் பிள்ளையிடம் தன் கடமை உணர்ச்சியை காட்டிய அதிகாரியை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிள்ளையை கண்டித்து விட்டிருக்கலாம், பணம் செலுத்தியே ஆகவேண்டும் என்று 'மிட்டாய்க்கு' அடம்பிடித்திருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு தான் இந்த இலவச வசதி செய்துள்ளார்கள் அதை கூட மறந்து நூறு ரூபாய் கேட்டு ஆர்பாட்டம் செய்தார் என்றால் என்ன சொல்வது... இதற்கு பிச்சை கேட்டிருக்கலாம்... 
by M rajkumar,chennai,India    16-03-2010 10:54:34 IST
 இட்ஸ் டூ bad 
by v mahesh,chennai,India    16-03-2010 10:38:41 IST
 அரசாங்கம் நடத்த வேண்டிய கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு, தனியார் நடத்த வேண்டிய சாராய வியாபாரத்தை அரசாங்கம் நடத்துகின்ற காலக்கட்டத்தில் நாம் இருப்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.  
by s செல்வன்,bangalore,India    16-03-2010 10:32:43 IST
 ரெம்ப கடமை உள்ளவரா என்ன? மனிதனா அவன்  
by G அழகுநம்பி,QATAR,India    16-03-2010 10:13:09 IST
 சட்டம் உண்மையானால் இந்தத் திமிர் பிடித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
by R காண்டீபன்,Coimbatore,India    16-03-2010 10:05:28 IST
 பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான அரசு ஊழியர்களின் கடமையுணர்ச்சி எப்படிப்பட்டது என்பதை நாம் ஒன்றும் அறியாதவர்கள் அல்லர். எனவே ............. 
by இரா செந்தில்குமார்,Nagapattinam,India    16-03-2010 10:02:16 IST
 This is too much. In Abu Dhabi goverment given buses for all passesngers in Free more than 1 year. Our ministers visit many country in goverment money 
by s GANESH,AbuDhabi,UnitedArabEmirates    16-03-2010 09:54:45 IST
 this is to show that even we are working sincerely..but they dont think most frauds occured in their department itself....shameless Govt.employee(not everyone) particularly persons like this... 
by Arun,Tamilnadu,India    16-03-2010 09:51:58 IST
 போக்குவரத்து அமைச்சர் நல்ல மனம் கொண்டவர். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். 
by PK Ravikumar,chennai,India    16-03-2010 09:51:46 IST
 IF GOD IS THERE REALLY THEY WILL PUNISHED FROM THE GODS COURT.THEY ARE NOT SIX SENCE PEOPLE,ANIMALS 
by yuvaraj,abudhabi,UnitedArabEmirates    16-03-2010 09:49:36 IST
 For long days this checking inspector only travel in without,  
by M Pradeep,Mettupalaya-Coimbatore,India    16-03-2010 09:49:27 IST
 ஒரு சின்ன பொண்ணு பஸ் பாஸ் இல்லாம போனா கடமைய செய்யிராரோ?! அரசாங்கமே இலவச கல்வியை சிந்திச்சிகிட்டு இருக்கு. 
by v கார்தீசன்,jeddah,SaudiArabia    16-03-2010 09:48:55 IST
 checking inspector தன் கடமையை தான் செய்துள்ளார்.இந்த மாதிரியான சிறு அபராதங்கள் அந்த பள்ளி மாணவிக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்தும்.  
by J Nagamani,Channai,India    16-03-2010 09:48:31 IST
 TAMILNADU TRANSPORT COPORATION SHOULD BE SUSPENDED THOSE CHECKING INSPECTORS IMMEDIATLY FOR ONE MONTH .  
by AR thoufeeq,dubai,India    16-03-2010 09:43:47 IST
 இந்த அதிகாரிகள் இப்படிப்பட்ட குழந்தைகள்,அப்பாவி சிறார்கள் வசம் தான் கண்டிப்பு காட்டுவார்கள். பள்ளி சீருடையியில் இருந்தாலே இலவச பஸ் பாஸ் இருக்கும் என்பது தெரியாதா? பிள்ளைகளின் அவசரத்தால் ஏற்படும் மறதி ஒரு பெரிய குற்றமா? யாரிடம் பணம் வசூலிப்பது என வரைமுறை இல்லையா உங்களுக்கு? கேட்டால் கடமையைத்தான் செய்தோம் என்பீர்கள். இதே கடமை உணர்ச்சியை எல்லாவற்றிலும் காட்ட முடியுமா? தமிழகத்தில் நடத்துனர் ஓட்டுனர் இவர்களை தவிர இவர்களின் உறவினர்கள் கூட பஸ்சில் இலவசமாக தான் பயணம் செய்கிறார்கள்.அவர்களை பிடிக்க முடியுமா உங்களால்?  
by r. jothi,chennai,India    16-03-2010 09:43:16 IST
 வியாக்கியானம் பேசுபவர்களே, கடமையை செய்த ஒருத்தனுக்கு இவ்வளவு வசவா. எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் ஒன்றும் குழந்தை இல்லை. அந்த வயதை ஒட்டியுள்ள பிள்ளைகள் செய்யும் அட்டூழியங்கள், பேருந்தில் பயணம் செய்தால் உங்களுக்கும் தெரியும். கடமையை செய்தவனை மதிக்கா விட்டாலும் வையாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.  
by B சிவகுமார்,Madurai,India    16-03-2010 09:39:40 IST
 I dont find any fault on the checking inspector. I also suggest that the checking inspector should excuse the girl student and educate her the importance of the pass.The fine is too much and the bus corporation officer should be trained to handled school kids and senior citizens on board. 
by s Aswiniyer,peelameducoimbatore4,India    16-03-2010 09:36:34 IST
 சம்பத்தப்பட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்  
by RR ஜெகதேச்வரன்,tirupur,India    16-03-2010 09:28:37 IST
 இதேபோல் ஏதேனும் அரசியல் கட்சிக்காரன் மாட்டியிருந்தால் இந்த அதிகாரிகள் சலாம் போட்டு அனுபியிருபார்கள். இவர்களுடைய கடமை உணர்வு ஏழை மற்றும் அப்பாவிகள் முன்பு மட்டுமே தலை தூக்கும்.  
by s satheeshkumar,jubail,SaudiArabia    16-03-2010 09:28:09 IST
 s raja,pune,India S செந்தில்,india, I agree with you.. I hope the child would never again forget to carry her pass. Let this be of an learning experience to that child. Ticket Checker just did his job. The bus conductor is also at fault for allowing the child to travel without a pass..or he did not check whether the child has a valid pass to travel in the bus.  
by KP Yogendran,Chennai,India    16-03-2010 09:21:33 IST
 பதினெட்டு வயது என்றால் மேஜர்- எட்டாம் வகுப்பு படிக்கும் பதி மூன்று வயது குழந்தை ஒரு மைனர். தர்மப் படி பார்க்க வேண்டியதை சட்டப் படி பார்ப்பது தவறு. இவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடக்காதவர்களா என்ன? ஏதோ இவர்கள் கண்ணகி பரம்பரை போல குழந்தைகளிடம் சட்டம் பேசுகிறார்கள். குழந்தைகளை மதிக்காத தர்மம் அழிந்துபோன கேவலமான நாடு! 
by u manimaran,chennai,India    16-03-2010 09:20:01 IST
 இவங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்! 
by R banglacric,chennai,India    16-03-2010 09:14:41 IST
 குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது நமது பண்பாடு. சட்டம் ஆயிரம் இருக்கட்டும் - தர்மம் என்று ஒன்று நாட்டில் இல்லையா? இந்த அரசு டிரைவர்கள் செல் போன் பேசிக் கொண்டே சென்று எத்தனை குழந்தைகளை சாகடித்து இருக்கிறார்கள்? அந்தக் குழந்தைகள் இவர்களை இப்படியா அவமானப் படுத்தி இருக்கின்றன? மறதி ஒரு சிறு பிழை-அவ்வளவே! அரசு தரும் இலவச பஸ் பாஸ்- அதை மறந்தால் என்ன? இவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இல்லையா என்ன-குழந்தைகளின் விளையாட்டு-மறதி-பரபரப்பு இதை நாம் அறிய மாட்டோமா? குழந்தைகள் மீது தன்மை மென்மை காட்ட வேண்டும் என்று அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்! இல்லையென்றால் இந்த மர மண்டைகளுக்கு புரியாது! இவர்களை பதவி நீக்கம் பண்ணி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் ! வேறு சிறிய தண்டனை கூடாது! 
by j jayakumar,Karur,India    16-03-2010 09:13:36 IST
 வெளிநாட்டை பத்தி நூறு தடவை பேசுகிறோம் . ஆனால் எட்டவது படிக்கும் பெண்ணுக்கு தெரிய வேண்டாம் .ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது  
by b mani,chennai,India    16-03-2010 09:12:00 IST
  சட்டம் மனிதனால் கொண்டுவரப்பட்டது ஆகாயத்திலிருந்து வரவில்லை  
by dubai syeed,uae,UnitedArabEmirates    16-03-2010 09:11:08 IST
 இதே போல் இல்லாதவர்கள் இருக்கிறவர்கள் என சொல்லி சொல்லி அதிகாரிகளை அவர்களது பணியை செய்ய தடுப்பதால் தான் இந்திய இன்னும் இப்படியே இருக்கிறது. அந்த மாணவி செய்த தவறை யாரும் உணர்ததுபோல் தெரியவில்லையே  
by r இந்தியன்,saudiarabia,India    16-03-2010 09:08:15 IST
 விவரம் பேசும் லபகுதாஸ் எல்லாரும் ஒரு நிமிடம் சுவிஸ் பங்குல 70 ௦ லட்சம் கோடி நம்ம பணம் இறுக்கு அத யோசிங்க ................ இதெல்லாம் ஒரு பிழைப்பு து ........... 
by அறிமுகம் ,chennai,India    16-03-2010 09:00:58 IST
 ஏம்பா செந்திலு, எல்லா இடத்திலும் கடமையை செய்தால் யார் திட்ட போகிறார்கள். தங்கள் திறமையை படிக்கட்டில் தொங்கி கொண்டு வரும் பெரியவர்களிடம் காட்ட வேண்டியவேண்டியது தானே. அதை விட்டு அந்த அப்பாவி பள்ளி மாணவியிடம் காட்டியதற்கு தான் எல்லோரும் கோபபடுகிரர்கள்.  
by r செல்வன்,chennai,India    16-03-2010 08:53:44 IST
 checking inspector தன் கடமையை தான் செய்துள்ளார்.இந்த மாதிரியான சிறு அபராதங்கள் அந்த பள்ளி மாணவியுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்தும். 
by K மகேந்திரன்,vellore,India    16-03-2010 08:53:37 IST
 இவர்களை அதிகாரிகள் என்று சொல்வதற்கு பதில் திமிர் பிடித்த ஓநாய்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.  
by MR INDIA,Chennai,India    16-03-2010 08:42:50 IST
 யோவ் செந்திலு, இது ஒரு சராசரி பிரயாணியிடம் நடந்து இருந்தால் நியூஸ் ஆஹி இருக்காது. உன் பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு போகும்போது இலவச பஸ் பாஸ் எடுத்து குடுத்து தினசரி 500 ருபாய் கை செலவுக்கு குதித்து விடுவாயா? நீ என்ன MPTC ல வேலை செய்கிறாயா? நீ காரைக்குடி மருதுபதி வந்து பாரு. இவனுக எவ்வளவு பிராடு செய்கிறானுகன்னு. சூழ்நிலை தெரிஞ்சு பேசு என்ன? நிச்சயமா சொல்லுறேன் அந்த பிள்ளை இன்னும் ஒரு வாரத்திற்கு தூங்காது.  
by A விநாயகம்,Chennai,India    16-03-2010 08:33:00 IST
 டீ குடிக்க காசு இல்லைனா இப்படியா பிச்சை எடுக்குறது,,,,  
by ராம் KUMAR,DELHI,India    16-03-2010 08:20:25 IST
 அந்த சோதனை அதிகாரி அந்த மாணவியிடம் ' நாளை மறக்காமல் பஸ் பாஸை கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கூறி எச்சரித்து அனுப்பியிருக்கலாம்  
by S ARUNACHALAM,ERODE,India    16-03-2010 08:15:59 IST
 இவங்களுடைய கடமையையும் வீரத்தையும் தொழில் பற்றையும் எல்லோரிடமும் காட்டினால் நன்றாக இருக்கும். மனிதாபிமானம் இல்லாத அரசு ஊழியர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    16-03-2010 08:10:21 IST
 கோடி கோடியை கொள்ளை போகும் போக்குவரத்து துறையில், இதயமில்லாத அரக்க குணம் படைத்த மிருகங்களை விட கேவலமாய் நடந்து கொண்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் சீருடையில் புத்தகங்கள் கொண்டு வந்தாலே போதும் பஸ் பாஸ் தேவை இல்லை என்று அரசு உத்தரவிட வேண்டும்.தேர்வுகள் நடை பெரும் இந்த நேரத்தில் அந்த சின்னஞ்சிறு குழந்தையின் மனது என்ன பாடு பட்டு இருக்கும் .அன்றைய தேர்வில் அந்த மாணவி தேர்ச்சி அடையவில்லை என்றால் அந்த கடமை தவறாத அதிகாரி தான் காரணம்.  
by Dr.R. ரவீந்திரநாத் நேரு Ph.D.,VilathikulamPudur,India    16-03-2010 07:52:33 IST
 தினமும் பல சீருடை இல்லா காவலர்கள் தங்கள் சொந்த வேலையாக ஓசியில் பயணம் செய்கிறார்கள் . 
by m karthik,chennai,India    16-03-2010 07:46:02 IST
 வேண்டுமென்றேவா இப்படிச் செய்தார்?கடமையைத்தானே அவர் செய்தார். பச்சிளம் பிள்ளையோ ஆணோ பெண்ணோ அபதாரம் தானே விதித்தார். அவர் அதிகாரத்தை மீறி வேறு ஏதாவது செய்திருந்தால் அது தான் தவறு. நம் பிள்ளை என்று சட்டத்தை கையில் எடுத்திருந்தால் சட்டம் சீரழிந்திருக்கும்  
by s raja,pune,India    16-03-2010 07:21:20 IST
 These checkers should be little flexible in this matter. The school student must have been warned and forgiven. School kids are not going to take advantage in this.  
by J sam,markham,Canada    16-03-2010 07:02:44 IST
 இவர்கள் இதயமற்றவர்கள். இரக்கமில்லாதவர்கள். அந்த பிஞ்சு உள்ளத்தின் மனதை நோகடித்த அந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்படவேண்டும்.  
by t subash,singapore,India    16-03-2010 06:44:04 IST
 கடமையை செய்த அதிகாரிக்கு இத்தனை திட்டுகளா? அந்த மாணவி ஒன்றும் குழந்தை அல்ல! எட்டாவது படிக்கும் மாணவி!!,பஸ்பாஸை எப்போதும் புத்தகங்களுடன் வைத்திருக்க தெரியாதா? அந்த ஆபிசர் கடமையை செய்யாமல் காசு வாங்கியிருந்தால் திட்டலாம்! ஆனாலும் இருபக்கமும் தவறு உள்ளது, மூன்றவதாக வாசகர்களும் திட்டுவதன் மூலம் தவறு செய்கிறார்கள். இதற்கு போய் இத்தனை அளப்பலா? 
by S செந்தில் ,india,India    16-03-2010 06:27:31 IST
 அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும், ( குடும்பத்தினர் என்ற பெயரில் அவர்களின் நண்பர்களும்) டிக்கெட் இல்லாமல் உட்கார்ந்து பயணம் செய்ய, டிக்கெட் வாங்கியவர்கள் நின்று கொண்டே பயணிக்கிறார்கள். டிக்கெட் சோதனையாளர்கள் தங்கள் வேலையை சரியாக செய்தால், இதையும் பாராட்டலாம். 
by G Loganathan,coimbatore,India    16-03-2010 06:20:52 IST
 கடமையைத்தான் செய்தோம் என இந்த கடமை வீரர்கள் சொல்வார்கள். சிறு குழந்தைக்கு பள்ளி செல்லும் அவசரத்தில் மறதி ஏற்படுவது சகஜமே. பள்ளி மாணவிகளுக்கு பஸ் பாஸ் உண்டு. எடுத்து வர ஏனோ இன்று மறந்து விட்டாள் என்று மன்னித்து விட்டிருக்கலாம். பாவம்..... அந்த பிஞ்சு குழந்தை...... அவள் மனது என்ன கஷ்டப்பட்டிருக்கும். கோடானு கோடி பணம் க........... வின் நல்(?)ஆட்சியில் விரயமாகிறது. இந்த குழந்தையிடம் பிடுங்கிய பணம் தான் அரசு கஜானாவை நிறைக்கப் போகிறது. வாழ்க ........ மஞ்ச துண்டார் ஆட்சி.......... 
by S Subramanian,NGO'B"Colony,Tirunelveli7,India    16-03-2010 06:05:18 IST
 நடப்பது திமுக கொடுங்கோல் ஆட்சி அரசு அதிகாரிகளின் ஆதரவு இந்த கலைஞர் ஆட்சிக்கு தேவை அரசு அதிகாரிகள் வாழ்ந்தால் மட்டும் போதும் இவர்க்கு.அரசு அதிகாரி என்ன அநியாயம் செய்தலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காது அந்த தைரியம் தான் இது போல செய்ய வைக்கிறது இந்த மனசாட்சியற்ற அதிகாரிகள் மனிதர்களா? இந்த அதிகாரிகளை தண்டிக்க வேணும்.நம்ம சனிதாங்கி காரை நிறுத்தி சோதனை போட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றல்,என்றால் இந்த அதிகாரிக்கு எங்கே போடலாம் ?ரொம்ப கேவலமான நிலைக்கு இந்த அரசு அதிகாரிகள் நடந்துள்ளனர்.இவர்கள் மேல் ஆத்திரமாக வருகிறது. 
by GB ரிஸ்வான் ,jeddah,SaudiArabia    16-03-2010 05:38:30 IST
 இந்த சோம்பேறி அரசு ஊழியர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. இவர்களின் ஊழலையும், முரட்டுத்தனத்தையும் பாது காக்க தொழில் சங்கங்கள் , மற்றும் அரசியல்வாதிகள் உள்ளனர். 
by S Balan,Seremban,Malaysia    16-03-2010 05:32:15 IST
 ஒரு பள்ளி குழந்தையிடம் தன் அதிகாரத்தை காட்டும் மதி இழந்த , மனிதாபிமானம் இல்லாத அரசு ஊழியர்கள் ஊழல் மற்றும் முறை கேடுகளில் ஈடுபடுவது ஆச்சரியம் அல்ல.  
by S Balan,Seremban,Malaysia    16-03-2010 05:11:41 IST
 அட ச்சி, என்ன மனுசங்க ப்பா எந்த அரசு அதிகாரிங்க ...மக்களால் உருவாக பட்ட இந்த அரசு , மக்களை இந்த பாடு படுத்துது .. 
by d thilakkumsar,vellore,India    16-03-2010 03:51:41 IST
 இவனுங்கள செருப்பால அடிக்கணும். தினமலர் நிருபரே அந்த பரிசோதகர்கள் விலாசம் கிடைக்குமானால்............ கிடைக்குமா? 
by m kandasami,Kumbakonam,India    16-03-2010 03:29:59 IST
 இந்த அதிகாரிகள் இப்படிப்பட்ட குழந்தைகள்,அப்பாவி சிறார்கள் வசம் தான் கண்டிப்பு காட்டுவார்கள். பள்ளி சீருடையியில் இருந்தாலே இலவச பஸ் பாஸ் இருக்கும் என்பது தெரியாத? பிள்ளைகளின் அவசரத்தால் ஏற்படும் மறதி ஒரு பெரிய குற்றமா? யாரிடம் பணம் வசூலிப்பது என வரை முறை இல்லையா உங்களுக்கு? கேட்டால் கடமையைத்தான் செய்தோம் என்பீர்கள் இதே கடமை உணர்ச்சியை எல்லாவற்றிலும் காட்ட முடியுமா? தமிழகத்தில் நடத்துனர் ஓட்டுனர் இவர்களை தவிர இவர்களின் உறவினர்கள் கூட பஸ்சில் இலவசமாக தான் பயணம் செய்கிறார்கள்.அவர்களை பிடிக்க முடியுமா உங்களால்?  
by GB ரிஸ்வான் ,jeddah,SaudiArabia    16-03-2010 02:58:22 IST
 this is rediculous, govrnment have to do something for this like if the school childres forget to take bus pass, they have to allow, because they are children, they may get some type of tension with their subject, homework, school principles, we should accept all things, any way tamilnadu checking (bus) person always are doing like this, we too face many of them like this.. god only punish them in any other ways in their life..  
by T Jennifer,Tirunelveli,India    16-03-2010 02:38:08 IST
 this checking inspectors are real JOKERS . They dont bother about anything . Simply they stop the bus when we ned to go to office and do some Jimiks .Idiots 
by t thiru,USA,India    16-03-2010 02:10:23 IST
 tell these people to go wand work like this in northen india. they never buy ticket even in private buses.even a 3rd std boy wont take. only in tamil nadu u can see like these. especially they dont show any humanity to school kids: they dont stop the bus at bus stop and harase the kids etc so poor 
by R Angus,Tamilnadu,India    16-03-2010 02:00:14 IST
 அங்கு இருந்த அதிகாரிகளை எல்லோரயும் ஆறு மாதம் suspend செய்ய வேண்டும். பாச தலைவர், தமிழினத் தலைவர், கலைஞரே, உங்கள் பாசத்தை சிறுது மக்களிடமும் காட்டுங்கள்.  
by K சுந்தர்ராஜ்,Coimbatore,India    16-03-2010 01:26:52 IST
 இவங்கலாம் மனுசங்கள் தானா??இந்த மாறி ஆளுகல நிக்க வச்சு சுடனும்..... பெரிய கடமை கன்னியரிகள். இவுங்கல பத்தி தெரியாதா??? இப்ப இந்த செய்திய பார்த்து இந்த ஆள்கள் மேல ரெம்ப கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... வயதானவர் இறங்கும் முன் பஸ்சை எடுப்பது...50பைசா 75 பைசா சில்லரை கொடுக்காம அப்புடியே இருப்பது....முறையான நிறூத்ததில் நிருத்தாமல் செல்வது....சில்லரை திரும்ப கேட்டா லா பாயின்ட் பேசுரது.... இதலாம் இவுங்க சரியா பண்ணுராங்கப்பா மன்னாங்கட்டிக. ஒரு சின்னபிள்ளை இந்த மாறி மறந்துட்டு வந்தலாம் ஒரு பெரிய விசியமா எடுத்து இந்த மாறி செய்தில வாற அளவுக்கு பெரிய விசியமாக்கி இந்த ஆளுகல என்னா பன்ன தெரியல...  
by A சரவணன் ( யாமிருக்க பயமென் ),DUBAI(MADURAI),India    16-03-2010 01:21:40 IST
 if this happened to on of their ( the ticket checker ) children , will they accept if the same treatment is given to their child. People and ofcourse media must not leave this kind of sincere officers ( who is interested to get 50 INR from a child ) 
by K SENTHILKUMAR,Cotonou,Benin    16-03-2010 01:13:42 IST
 THEY CAN INCRASE THE TOWN BUS, WHEREVER THE STUDENT ARE HIGH. 
by r munees,dubai,UnitedArabEmirates    16-03-2010 01:06:25 IST
 அய்யா செக்கரு முழு பரீட்சை வரும்போது இப்படியெல்லாம் செய்யலாமா ? 
by A Vinayagam,Karaikudi,India    16-03-2010 01:03:34 IST
 அந்த அரசு அதிகாரிக்கு இரக்கமே இல்லையா?ஒரு பிஞ்சு மனசை இப்படி நோகடிக்கலாமா?இவர்களின் கடமை உணர்வை சென்னை மாநகர பேருந்துகளில் பார்க்கலாம் ...இருக்கிற இடத்தை விட்டு எழும்ப மாட்டானுக... பயணிகளுக்கு அர்ச்சனைகள் வேறு,காசு வாங்கி விட்டு சீட்டு கொடுக்காமல் பொதிகளுக்கு அனுமதி,கடத்தலுக்கு உடந்தை ...அஞ்சு காசு பத்து காசு பிச்சை வேறு ....இன்னும் பல ....இந்த லட்சணத்தில் அந்த குழந்தையிடம் ..இப்படி நடக்கலாமா....பாவம். அந்த குழந்தை ...கொஞ்சம் திருந்துங்க அதிகாரிகளே ..... 
by D விஜில் சாலோமன் ,MANAMA,Bahrain    16-03-2010 00:57:44 IST
 இது போன்ற அதிகாரிகளுக்கு அந்த பணிமனை மேனேஜர் தண்டனை தரவேண்டும். இந்த ரசீதை வைத்து எந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். போக்குவரத்து மந்திரியும் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த குழந்தையின் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும். இனி ஒவ்வொரு முறையும் அந்த பேருந்தை பார்க்கும் போது என்ன நினைக்கும்.  
by A விநாயகம்,Chennai,India    16-03-2010 00:56:31 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்