முதல் பக்க செய்திகள் 

போலி பெண் அதிகாரிகள் நடமாட்டம் அதிகரிப்பு : காவல் துறைக்கு புது சிக்கல்
மார்ச் 16,2010,00:00  IST

Front page news and headlines today

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,யில் சப் - இன்ஸ் பெக்டர் போல் நடித்து, பலரிடம் போலீஸ் வேலை வாங்கி தருவதாக, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ.,க்கள் போல, போலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது, காவல் துறைக்குப் புது சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.விருதுநகர், கிருஷ்ணன் கோவில் அருகே ராமச் சந்திராபுரத்தை சேர்ந்தவர் சுபைதார்(58). இவரிடம், ராஜபாளையம் ஆவரம்பட்டி ஜோதி சுப்புலட்சுமி (24), தான் தூத்துக்குடியில் எஸ்.ஐ.,யாக வேலை பார்ப்பதாக அறிமுகமானார். அவரது மகன் ஜாபர்கானுக்கு தன்னால் போலீஸ் வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய சுபைதார், 80 ஆயிரம் ரூபாயை ஜோதி சுப்புலட்சுமியிடம் கொடுத்தார். இதேபோல் ஸ்ரீவி., அய்யம் பட்டி குருசாமி, ராமச்சந்திரா புரம் கோவிந்தராஜ், தங்கவேல் உட்பட பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி வேலை பெற்றுத்தராமல் மோசடி செய்தார். அவர் நேற்று முன்தினம் இன்டிகா காரில் வந்து ஸ்ரீவி., மங்காபுரத்தில் சிலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதையறிந்த மக்கள், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜோதி சுப்புலட்சுமியை கைது செய்த ஸ்ரீவி., போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில், சாருலதா என்ற பெண், தான் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறி, பலரையும் மிரட்டி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. உடுமலையில்,சி.பி.ஐ., அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சூர்யகலா என்பவரை, போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இது போல, போலி பெண் அதிகாரிகள் நடமாட்டம் அதிகரித்துள் ளதை அடுத்து, தமிழக காவல் துறைக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 காவல் துறை யாரிடம் இருக்கு ? தெரியாதா என்ன ? சிக்கல் வர தான் செய்யும்.எது தான் சரியாய் இருக்கு தமிழகத்தில்? எங்கும் போலிகள்,வன்முறை,கொலை,கொள்ளை, சட்டம் ஒழுங்கு என ஒன்று இருப்பதே கேள்விக்குறியாகி விட்டது? தவறுகளை சுட்டி காட்டினால் ஒரு ஊரில் ஒரு ராஜா என்ற பாணியில் முந்தைய ஆட்சியில்...என கதை சொல்வார்கள்..எல்லாத்துக்கும் செட்டிங் என்ற நிலை இருக்கும் போது இந்த டூப் போலீஸ் கூட செட்டிங் ஆக இருப்பதில் வியப்பு இல்லை இன்னும் சில இடங்களில் போலியாக போலீஸ் நிலையங்கள் இருக்கோ என்னமோ யார் கண்டா? படிக்காமலேயே ஒரு சிலர் டாக்டர் பட்டம் வாங்கி உள்ளார்கள். இங்கே,போலீஸ் என சொல்லி போலிகள் உலாவருவதில் ஆச்சரியம் என்ன ?  
by GB ரிஸ்வான் ,jeddah,SaudiArabia    16-03-2010 05:52:46 IST
 காவல் துறைக்கு புது சிக்கல் என்பதை மாமூலுக்கு சிக்கல் என திருத்தி படிக்கவும். இப்படி யார்யாரோ மாமூல் வாங்கி விட்டால் காவல்துறை எப்படி பிழைப்பது? இன்சூரன்சு கம்பெனிகள் மாமூல் கேரன்டீ பாலிசி ஆரம்பித்தால் நன்றாக ஓடும்  
by K ரகு ,Newjersey,UnitedStates    16-03-2010 03:04:19 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்