முதல் பக்க செய்திகள் 

மாயாவதி கழுத்தில் ரூபாய் நோட்டு மாலை: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு அசரவில்லை
மார்ச் 18,2010,00:00  IST

Front page news and headlines today

லக்னோ :ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப் பட்டது தொடர்பான எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு, உ.பி., முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி சற்றும் அசரவில்லை. நேற்று நடந்த கட்சிக் கூட்டத்தில், மீண்டும் அவருக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

'இனிமேல் மாயாவதிக்கு, பூமாலைக்கு பதில், ரூபாய் நோட்டு மாலை மட்டுமே அணிவிப்போம்' என, அக்கட்சியினர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.இரு நாட்களுக்கு முன், உ.பி., தலைநகர் லக்னோவில், பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்தன. ஐந்து லட்சம் தொண்டர்களை திரட்டி, பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்காக, 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.இந்த விழாவில், லக்னோவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தங்கள் தலைவியை கவுரவிக்கும் வகையில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு, ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மாலையை அணிவித்து, அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.இந்த மாலையில் இடம் பெற்றிருந்தவை அனைத்தும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். மாயாவதிக்கு ரூபாய் நோட்டு மாலை போட்ட காட்சிகள், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானதும், நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சமாஜ்வாடி, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த மாலையை உருவாக்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபாவிலும் இந்த பிரச்னை பெரிய அளவில் எதிரொலித்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்.மீண்டும் மாலை:இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, நேற்று காலை லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த விழாவில், முதல்வர் மாயாவதிக்கு மீண்டும் ஒரு பிரமாண்டமான ரூபாய் நோட்டு மாலை போடப்பட்டது. இந்த மாலையின் மதிப்பு 18 லட்சம் ரூபாய் என்றும், இதில் 1,000, 500, 100 என, பல்வேறு ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றுள்ளன என்றும், கட்சி நிர்வாகிகளே தெரிவித்தனர்.

இனி கரன்சி மாலை தான்:இதுகுறித்து உ.பி., மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் நசிமுதீன் சித்திக் கூறியதாவது:மாயாவதி, இனிமேல் எந்த விழாவில் கலந்து கொண்டாலும், எங்கள் கட்சியினர் அவருக்கு மலர்களால் உருவாக்கப்பட்ட மாலையை அணிவிக்க மாட்டர். ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலையைத் தான் அணிவிப்பர். கட்சித் தலைவியின் மீது தங்கள் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், இதுபோன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர். கட்சித் தொண்டர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு, அதை மாலையாக உருவாக்கி, அவரை கவுரவிக்கின்றனர். இதன் மூலம் கட்சி நிதிக்கு தொண்டர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பங்கு செலுத்துகின்றனர். அனைத்து கட்சிகளிலும் இந்த நடைமுறை உண்டு.இது முழுக்க முழுக்க கட்சித் தொண்டர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட நிதி. மற்ற கட்சிகளைப் போல், நாங்கள் தொழிலதிபர்களிடம் இருந்தோ, முதலீட்டாளர்களிடம் இருந்தோ மறைமுகமாக கட்சிக்கு நிதி திரட்டவில்லை.இவ்வாறு சித்திக் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறுகையில்,'ரூபாய் நோட்டு மாலை அரசியலுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதன் மூலம், மாயாவதி, தான் தலித்களின் புதல்வியல்ல, கரன்சிகளின் புதல்வி என்பதை நிரூபித்துள்ளார். இதுபோன்ற ஒரு நடவடிக்கையை, நாட்டின் எந்த பகுதியிலும் நான் பார்த்தது இல்லை' என்றார்.சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், 'ஏற்கனவே போட்ட மாலைக்காக, விசாரணை நடத்தப்படும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதை சற்றும் பொருட்படுத்தாமல், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு மாலை மாயாவதிக்கு அணிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு, மாயாவதி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்' என்றார்.

பா.ஜ., உ.பி., மாநில தலைவர் ராம்பாதி திரிபாதி கூறுகையில்,'இது ஜனநாயகத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயல்' என்றார்.ஏற்கனவே போட்ட மாலை குறித்த சர்ச்சை ஓய்வதற்கு முன், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு மாலை அங்கீகாரத்தை மாயாவதி ஏற்றுக் கொண்டது, இந்திய அரசியல் களத்தின் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது.

போராட்டம்: இதுகுறித்து முதல்வர் மாயாவதி கூறுகையில்,'பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. குறிப்பாக, காங்கிரஸ் இதில் தீவிரமாக உள்ளது. எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து, வரும் 25 முதல் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.இதனிடையே, அரசு பணத்தில் யானைச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்கள் அமைத்ததாக மாயாவதி மீது புகார் கூறிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 People will teach lesson like to jayalalitha when she was ruling TN and did same kind of activities... now little bit she has realised(hope)... same thing will happen ms mayavathi...also.... 
by L Kumar,chennai,India    18-03-2010 23:53:00 IST
 என்ன கொடும சார் இது.. ஒரு மாலைக்கு 18 லச்சமா... மாலையே தேவையில்ல.. அதுலே வேற லட்ச கணக்கில் ரூபா மாலை.. சோற்றுக்கு வழி இல்லாமல் கிணற்றில் விழுந்து குடும்பமே தற்கொலைன்னு 2 நாள் முந்தி தான் செய்தி படிச்சோம். இவனுங்க அநியாயத்திற்கு தலைலே நடக்கிறானுங்கப்பா.. மக்களே இவங்களை கூண்டோடு அழிங்க...அல்லது, எங்கே போனாய் நிலநடுக்கமே..?  
by M Samy,Washington,UnitedStates    18-03-2010 23:42:05 IST
 உச்ச நீதி மன்றம் இதற்கெல்லாம் தடை விதிக்க கூடாதா அல்லது முடியாதா? இந்திய நாட்டின் பணத்தின் மரியாதை சீர் அழிவதை எப்படி தடுப்பது? 
by Janani,Virginia,UnitedStates    18-03-2010 22:55:32 IST
 அடுத்த எலெக்சன் நம்ம அம்மாவுக்கு கிடச்ச ஆப்பு இந்த அம்மாவுக்கும் கிடைக்கும்  
by m ravisankar,chinnasalem,India    18-03-2010 22:15:22 IST
 1972 - 1977 ஆண்டின் தி மு க ஆட்சியை நினைவு படுத்துகிறது  
by K Rajasekaran,chennai,India    18-03-2010 21:04:47 IST
 The innocent and ignorant people of our country should be blamed and there is no point of blaming these third rate politicians as we know very well that these politicians are not for people. There is an urge to do something. 
by kodur vijay,Rameswaram,India    18-03-2010 20:46:55 IST
 நல்ல வேளை இவர் பிரதமர் ஆகவில்லை  
by K Rajasekaran,chennai,India    18-03-2010 20:31:43 IST
 பாகிஸ்தானில் அச்சிட்ட கள்ள பணம் எப்படி புழக்கத்துக்கு வருகிறது என மண்ணடையை போட்டு உடைத்து கொண்டிருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது . சந்தோசம். 
by k ப. Rajan,Chennai,India    18-03-2010 20:18:12 IST
 தமிழா கொதித்தெழு ! நம் தலைவர்கள் என்ன மட்டமா. கொண்டுவா பலகோடி ரூபைக்கான மாலையை. மலர் கிரீடம் கண்ட தமிழகம் , ஆளுயர மாலையால் முன்னுதாரணம் படைத்த பின்தன்குவதா! எடைக்கு எடை தந்தை பெரியார் காலம் முதல் இன்றுவரை நம்மை எவரும் மிஞ்சவில்லை. யார் இந்த மாயாவதி, எங்களிடம் போட்டிபோட. 
by K Sri,Chennai,India    18-03-2010 20:10:17 IST
 ரூபாய் நோட்டுகளை சேதபடுதியதற்காக முதலில் அவர்களுக்கு தண்டனை கொடுங்கள் . 
by R ரூபக முருகதாஸ் ,Malakka,Malaysia    18-03-2010 19:09:23 IST
 இந்த கருமதுகுதன் போட்டசிங்க எவளுக்கு உரிமை கொடுக்ககூடாது.  
by only பாய்,indiatha,India    18-03-2010 18:39:04 IST
 What congress is doing when DMK had done corruption on Spectrum for crores of ruppees. Why they are raising the voice against DMK when they have majority on their own. So all politicians are blaming each other and making people fool. What abt the price hike issue after budget . Is it dropped or making people to forget 
by u suresh,us,India    18-03-2010 17:45:02 IST
 ஆட்சிக்கு வந்துட்டாங்க இல்ல ஆடும் வரை ஆடட்டும் எத்தன நாளைக்கு அஞ்சு வருடம் அப்புறம் ஓட்டம். 
by S. பாலகிருஷ்ணன்,Coimbatore,Saibabacolony,India    18-03-2010 17:30:04 IST
 ஒரு வேல சாப்பாட்டுக்கு வழி இல்லாம எத்தனையோ பேர் இருக்காங்க .. ஐயோ கடவுளே நீ தன் ஒரு வழி சொல்லணும் .. மன்மோகன் சிங்க் சார் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்க இல்லன உங்க பட்ஜெட் காலி  
by S cheliyan,drancy,France    18-03-2010 17:28:58 IST
 Without women reservation women politicians are indulging in these kind of extravaganza, So if we give 33% reservation to women in politics then think what are the foolish things will be going to happening in India. 
by s vijay,Delhi,India    18-03-2010 17:28:10 IST
 ''அற்ப பயலுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்ரியில் கொடை புடிப்பான் ''இப்படி சொல்றதுக்காக வன்கொடுமை சட்டத்துல ஒன்னும் போட்டிட மாட்டாங்க இல்ல என்னை??? 
by m உமாபதி ,Tirupur,India    18-03-2010 17:24:33 IST
 ஏன் அடிமையா இருந்து பெரிய ஆளா வந்தா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கனும்னு யாரும் சொல்லிருக்காங்களா.......  
by p வருண் பிரகாஷ்,madurai,India    18-03-2010 17:04:02 IST
 இந்தியா உருபிட்ட mathirithane 
by kk indian,chennai,India    18-03-2010 16:44:38 IST
 were are going in this country 
by g. deepa,chennai,India    18-03-2010 16:44:13 IST
 VERY BAD IN INDIA FUTURE 
by G. DEEPA,CHENNAI,India    18-03-2010 16:41:39 IST
 ஒன்னும் தப்பில்ல . நம்ப ஆளுக அடிக்கறத விடவா . இருக்கிற வரைக்கும் என்ஜாய் பண்ணுவோம். நாம அரசியல்வாதியா இருந்திருந்தா நாமும் அதை தான் பன்னிருபோம்  
by P HARIVIGNESH,coimbatore,India    18-03-2010 16:33:40 IST
 EVALLUKKU (மாயாவதி) பண மாலை போட கூடாது செறுப்பு மாலை தான் PADANUM 
by R ARUL,CHENNAI,India    18-03-2010 16:27:10 IST
 E.Elangovan pondra paditha madayargalum irukkumpothu இது மாதிரி எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கும். if you are fond of a leader spend your money to poor people on behalf of your leader. There are plenty of people who look for money for saving thier life. One simple thing, mayavathi is a CM and she is supposed to serve people of UP and she should not expect anything in return for doing her duty. The same thing matches to our CM Karunanidhi also. But his name itself says he will look at NIDHI. 
by K ராஜன்,Chennai,India    18-03-2010 16:23:29 IST
 Reserve Bank of India should arrest the people involved who deface the currency notes. Unless some action by Govt of India, this will spread all over India. 
by B Sankar,London,UnitedKingdom    18-03-2010 15:53:37 IST
 Now I know why still poor people in India there my suggestion please don’t misuse our currency  
by s sarif,kota,India    18-03-2010 15:08:15 IST
 பண மாலை போட்டால் என்ன ? ஏன் போடக்கூடாது இத்தனை காலம் அடிமையாய் இருந்தவங்களோட பிரதிநிதி மாயாவதி அம்மா. கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து கொழுத்து கொண்டிருக்கும் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக இப்படி பல கட்சிகள் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் குடும்ப அரசியல் புள்ள, பொண்டாட்டி, மாமன், மச்சான், மச்சினிச்சி இப்படித்தானே குடும்பத்துக்கு சம்பாதிக்குறாங்க. தனக்கொன்று ஒரு குடும்பமில்லாம இந்த மக்களை தன் குடும்பமாக பார்க்கும் தகுதி அம்மா மாயாவதிக்கு தான் உண்டு. அதனால் அவர்களுக்கு இப்படி சின்ன மாலை போட்டது கௌரவ குரைச்சல் தான். இன்னும் பெரிய மாலை போட்டிருக்கலாம் நன்றி  
by E Elangovan,Chennai,India    18-03-2010 14:57:27 IST
 I feel Shame to say that Iam an Indian like this kind of Political leaders activities.Somany Peoples died in a recent Temple function in UP. The Govt saying that there is no money to give the victims. But crores of rupees spending like publicities statues and Currency garlands. Our CBI what they are doing.Criminal action has to be taken.  
by w James,sharjah,India    18-03-2010 14:29:10 IST
 NAMMA NALLA COUNTRY LA THANA ERUKOM.TAKE IT EASY. C M A P M THANA CONTROL PANNA MUTIUM APRO AVURA ONNUM SOLLALA NAMA ENNA SOLLA  
by KK MARIMUTHU,Tirupur,India    18-03-2010 14:08:41 IST
 idhu gananayagama allathu pananayagama. nattu makkalin nalanil akkarai seluthia thalivargal maddhil ippadium cilar irukkirargilae!???? 
by S Dinesh,coimbatore,India    18-03-2010 13:51:19 IST
 THIS IS TOOOO MUCH. THIS WILL HAPPEN ONLY IN INDIA. HOW MANY PEOPLE ARE SUFFERING FOR THE FOOD AND MONEY, ATLEAST THAY CAN HELP THOSE PEOPLE. PLEASE AWAKE !!!!!!  
by RADHA SUDHA,uae,UnitedArabEmirates    18-03-2010 13:43:33 IST
 புது ஐடியா கொடுத்து விட்டார்கள். இனி தமிழகத்திலும் இந்த காட்சிகளை பார்க்கலாம்.  
by l subramanian,JAIPUR,India    18-03-2010 13:35:05 IST
 what happened for our politicions .  
by k venkatesan,kakianada-andhra,India    18-03-2010 13:28:21 IST
 பெற்ற தாய்க்கு செலவிட முடியாத இந்த சமூகத்தினர், மாயவதிக்கு செய்கிறார்கள்..இவர்களாகவே இப்பணத்தை கொடுத்தார்களா இல்லை ரௌடி வைத்து மிரட்டி வாங்கினார்களா தெரியவில்லை..அப்துல் கலாமின் கனவு கனவாகத்தான் போகும்...இந்நாடு முன்னேறுவதற்கான அறிகுறிகளே இல்லை ....வளராத இந்தியா  
by Mr indian,Ariyalur,India    18-03-2010 12:57:34 IST
 அன்பானவர்களே..நம் ஊரில் நடந்தது என்னவென்றல் உடன்பிறப்புகள் அணிவிக்கும் சால்வைகள் பொன் ஆடைகள். கசங்காமல் கடைக்கு அனுப்பப்படும்... மகாத்மாக்கு ஜே 
by m mannan,madurai,India    18-03-2010 12:54:25 IST
 விஷயம் தெரியாத பசங்க. பென்னாகரம் தேர்தல் இரண்டு லக்ஷம் வோட்டுங்க.  
by B Aslam,Karnataka,India    18-03-2010 12:31:25 IST
 திஸ் டூ மச். நாட் குட் பார் இந்தியன் பீபிள்.  
by A shaikakbar,doha,India    18-03-2010 11:58:32 IST
 The garland of notes by mayavati, is peanut compared to the loot by DMK ministers. Mayavati does it openly whereas the DMK does it silently. People of India have not forgotten the accusations by Dayanidhi Maran and Raja against other over the spectrum payoffs. 
by ss iyer,mumbai,India    18-03-2010 11:57:58 IST
 You have a competition. JJ will be back and she will put 225 crores mala. Wait & Watch. She will make a Guiness record.. 
by P குமார்,Chennai,India    18-03-2010 11:51:46 IST
 நம் இந்தியாவுக்கு இராணுவ ஆட்சி தான் இப்போதைய உடனடி தேவை. அதுவரை இப்படிப்பட்ட கூத்துக்கள் இந்திய அரசியலில் அரங்கேறிக்கொண்டே இருக்கும். உபி மக்கள் சோறு தான் தின்கிறார்களா ?  
by JR தமிழன்பன் ,Manama,Bahrain    18-03-2010 11:19:53 IST
 உங்கள எல்லாம் திருத்தவா முடியும். உங்கள மாதிரி ஆளு இருக்குற வரைக்கும் நம்ம நாடு உருப்படவே முடியாது. 
by sathya,cheenai,India    18-03-2010 10:37:00 IST
 கடவுளே !என்ன கொடுமை இது? 
by unknown,madurai,India    18-03-2010 10:22:26 IST
 உன்ன மாதிரி ஆள போட்டு தள்ள ரமணா தான் வரணும்  
by M மன்னன்,chennai,India    18-03-2010 09:34:15 IST
 எந்த தொண்டன்யா ஆயிரம் ரூபாய் நோட்ட சம்பாதிக்கிறான்!!! எதோ தேர்தல் வரும்போது மட்டும்தான் ரூபாயா பாக்கிறோம். அப்படியே ஆயிரம் ரூபாய் கிடைத்தால் குடும்பத்த கவனிப்போமா இல்ல இந்தமாதிரி அதிக பிரசங்கிக்கு மாலை போடுவோமா?? தமிழக அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல்!  
by வினோத் குமார் ,Ooty,India    18-03-2010 09:21:11 IST
 உங்கள எல்லாம் yar vanthalum திருத்த முடியாதுடா உங்கள மாதுரி இருக்குற வரைக்கும் மாயா மாதுரி ஆளுகளுக்கு என்ன...  
by t thambirajan,chennai,India    18-03-2010 08:55:04 IST
 மாயாவதியின் திமிருக்கு ஒரு முடிவு விரைவில் வரும் .ஜெயலலிதாவின் திமிருக்கு ஒரு முடிவு வந்தது போல். 
by m செந்தில்,tirupur,India    18-03-2010 08:21:41 IST
 Reserve bank wont allow this nonsense ( We have to respect our currency notes ) .  
by Mr Dinesh,Klang,malaysia,India    18-03-2010 08:20:53 IST
 ஜெய் மாயா 
by s vijayan,salalah,Oman    18-03-2010 08:17:41 IST
 பெண் புத்தி பின் புத்தி  
by g kulothungan,mumbai,India    18-03-2010 08:14:33 IST
 கலைஞைருக்கு இதை பார்த்ததும் பாராட்டுவிழா நடத்துவதை விட்டு பணமாலை அணிவிதுக்கொள்ள மட்டுமே தோன்றும். பாவம் பாராட்டுவிழாவை கண்ட தமிழ் மக்கள் இனி பண மாலை அணிவிப்பு விழாவையும் காணவேண்டும்  
by B Sooryaprakash,Chennai,India    18-03-2010 07:47:55 IST
 ஏ.. சாயம் போன சுடிதாரு.. நான் எவ்வளோ சொல்லியும் நீ கேக்காம மடத்தனமா இப்டி பப்ளிக்ல மாட்டிகிநெகீறியே.. இந்த மாதிரி விசயங்கள்ல உங்களா மாதிரி கத்துக்குட்டிங்களுக்காக தான் எங்கம்மா ஒரு பயிற்சி குடுக்க போறாங்கோ.  
by P பீ சேகர்,Singapore,Singapore    18-03-2010 07:35:27 IST
 இந்த புகைபடத்தை வெளியீட்டு தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மனதில் ஆசையை தூண்டிவிட்டிர்கள். ஐயோ பாவம் எவ்வளவு தலைவர்கள் தூக்கமில்லாமல் போனார்களோ தெரியவில்லை. மலர் கிரிடம் கண்ட தமிழகம் பிந்தள்ளபட்டுவிட்டது.  
by K Pathy,Chennai,India    18-03-2010 07:12:00 IST
 முதலில் பணமாலை,அப்புறம் எதிர்கட்ச்சிகளின் வசைமாலை,இதற்குபதில் சொல்ல நாளைக்கி தங்கத்தாலும் ,வைரத்தாலும் மாலை.முடிந்தால் உங்கள் எடைக்கு (!!!!!) எடை பணமும் கொடுக்கச் சொல்லி உத்தரவிடுங்கள் மாயாவதி அவர்களே. மா பெரும் சபைதனில் மாயாவதி நடந்தால் அவருக்கு மாலைகள் (பண ) விழ வேண்டும். இதைத்தான் விநாசகாலே விபரீத புத்தி என்பது. சேதுபதி.  
by a KILAVANSETHUPATHI,Chennai,India    18-03-2010 07:00:34 IST
 This is against the law. Currency should not be misused. Currency cannot be teared or burnt or used like this, even if it is your money. This is contempt act. 
by v செந்தில் குமார்,malaysia,India    18-03-2010 06:57:04 IST
 அனுபவிக்கட்டும் உ.பி. மக்கள்!!!! 
by M Palani,Chennai,India    18-03-2010 06:56:26 IST
 contempt.It shows unawareness of people 
by vk balakrishnan,coimbatore,India    18-03-2010 06:28:42 IST
 இதை பார்த்தால் ஏதோ பாடைல போறப்போ மாலை போட்டமாறி இருக்கு. நீங்க எல்லாம் பாடைல போறப்போவும் மாலை போடுவாங்க.  
by k கைப்புள்ள,nj,India    18-03-2010 04:23:23 IST
 Contempt Contempt Contempt. Government should bring strict rules to protect the Indian currency as we have now National Flag. The Nation should take some steps to protect the Father of Nation on the Money.  
by K prem,USA,India    18-03-2010 04:06:05 IST
 இவர்களெல்லாம் எப்போது திருந்த போகிறார்களோ? நம் இந்தியா எப்போது முன்னேருமோ? இப்பொழுதே கண்ணை கட்டுதே ... 
by அம்முகுட்டி ,malaysia,India    18-03-2010 03:51:09 IST
 மாயாவதி வாழ்க!!!!! 
by R Rameshbabu,salem,India    18-03-2010 01:53:31 IST
 இது ஒன்றும் பெரிய தவறில்லை, பதினெட்டு லக்ஷம் பண மாலை ஒரு ஜு ஜு பி பென்னகரத்தில் எவ்வளவு பணம் விளையாடுது தெரியுமா? நாம் அவர்கலுக்கு சளைத்தவர்கள் இல்லை, மன்னர் ஆட்சி போல் ஒரு ஜனநாயகம் இந்திய முழுவதும் இதில் ஒன்றும் வியப்பில்லை வாழ்க ஜனநாயகம்! வளர்க இந்தியா!  
by k kகண்ணன்,aruppukkottai,India    18-03-2010 01:32:45 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்