முதல் பக்க செய்திகள் 

உயிர் பிழைக்க மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லி திட்டம்
மார்ச் 18,2010,00:00  IST

Front page news and headlines today

சிகாகோ, மார்ச் 18-மும்பைத் தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டிக் கொடுத்த, அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியர் டேவிட் கோல்மென் ஹெட்லி(49), சிகாகோ கோர்ட்டில் இன்று தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். மரண தண்டனையை தவிர்க்க இம் மாதிரி ஹெட்லி சாமர்த்தியமாக செயல்படுகிறானா அல்லது அமெரிக்க அரசுடன் ஏதாவது பேசி முடிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று இன்று தெரியும்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 164 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினர். ஜமாத் - உத்- தாவா என்ற பெயரில் தற்போது இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது உத்தரவின் பேரில் பயங்கரவாதிகள் தாக்குதல்நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டிக் கொடுத்தவன் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் டேவிட் கோல்மென் ஹெட்லி. கடந்த 98ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு ஹெராயின் போதை மருந்தை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டான். பின், கடத்தல் கும்பலை பிடிக்க இவன் உதவியதால் இவனது சிறை தண்டனைக் காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹெட்லியையும், கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தகாவுர் ஹுசைன் ராணாவையும் எப்.பி.ஐ.,கைது செய்தது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மும்பைத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தவன் ஹெட்லி என்பது தெரிய வந்தது.

சுற்றுலாப் பயணி போர்வையில் அடிக்கடி இந்தியா வந்த ஹெட்லி, 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற இடங்களை ஆய்வு செய்தான். மும்பையில் 'கேட் வே ஆப் இந்தியா' பகுதியில் படகை வாடகைக்கு எடுத்து பாபா அணுசக்தி நிலையம், தாஜ் ஓட்டல், விக்டோரியா ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை படம் பிடித்தான். இவனுடைய திட்டபடி, 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர், என்பது எப்.பி.ஐ., விசாரணையின் மூலம் தெரிய வந்தது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் ஹெட்லி பயிற்சி பெற்றிருக்கிறான். லஷ்கர் -இ-தொய்பாவின் சதியில் சம்பந்தப் பட்டவன். நபிகள் நாயகம் படம் டானிஷ் பத்திரிகையில் தவறாக வெளியிட்டு சர்ச்சை கிளப்ப சதி செய்தவன் என்ற பல குற்றச்சாட்டுககள் இவன் மீது உள்ளன.

கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஹெட்லி மீது கடந்த ஜனவரி மாதம் சிகாகோ கோர்ட்டில் 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டு வைத்தது, குண்டு வெடிப்பின் மூலம் பலரை கொன்றது மற்றும் ஊனமாக்கியது, வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு பொருள் உதவி செய்தது, தாஜ் ஓட்டல் குண்டு வெடிப்பில் அமெரிக்கர் பலியாவதற்கு காரணமாக இருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் ஹெட்லி மீது சுமத்தப் பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் தீர்ப்பு கூறப்பட்டால் ஹெட்லிக்கு மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைக்கும்.

வக்கீல் தகவல்: இதுநாள் வரை மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஹெட்லி ஒப்புக்கொள்ளாமல் இருந்தான். ஆனால், இந்த குற்றச்சாட்டை ஹெட்லி ஒப்பு கொள்வதாக அவனது வக்கீல் ஜான் தீசிஸ் தெரிவித்துள்ளார்.சிகாகோ கோர்ட்டில் ஹெட்லி இன்று ஆஜராகி தன் குற்றத்தை ஒப்புக் கொள்ள இருக்கிறான். எப்.பி.ஐ., குற்றம்சாட்டிய 12 குற்றங்களையும் ஒப்புக் கொள்வானா அல்லது சில குற்றங்களை மட்டும் ஒப்புக் கொள்வானா, என்பது பற்றி அவன் வக்கீல் பதிலளிக்க மறுத்து விட்டார். இன்றைய விசாரணையின் போது இதன் விவரம் தெரியும்.இதன் காரணமாக இவனுக்கு மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற கருத்து எழுந்திருக்கிறது.

அமெரிக்க சட்டப்படி குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை குறைய வாய்ப்புள்ளது.ஏனெனில் அவன் மீதான 12 குற்றச்சாட்டுகளும் மரண தண்டனைப் பிடியில் இருந்து தப்ப வாய்ப்பில்லாத குற்றச்சாட்டுகள்.

அமெரிக்க அட்டர்னி அலுவலக தகவல் தொடர்பாளர் ராண்டால் சம்பார்ன் கூறுகையில், 'குற்றவாளி அல்ல என்பதை மாற்றி கருத்து கூற ஹெட்லி முடிவு எடுத்திருக்கிறானா அல்லது ஹெட்லிக்கும், அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதா என்று நான் கருத்து கூற முடியாது' என்றார்.ஹெட்லியின் கூட்டாளி ராணா மீதான வழக்கு விசாரணை வரும் 29ம் தேதி நடக்கிறது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Pakistan is not concentrating in its developing its nation, it wants the india to be down in economic,so its supporting terrorison against us.Soon pakistan will be a under USA like afgan and Iraq. But nobody can stop our develpments.  
by PS ABDUL MALIK-PAPANASAM,DUBAI,India    18-03-2010 14:40:15 IST
 அமெரிக்கா ஹிட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்  
by k. palanisamy,salem,India    18-03-2010 13:55:46 IST
 இந்தியாவிற்கு எதிராக யாரும் சதி செய்ய வேண்டாம். நம் அரசியல் வாதிகளே போதும். இந்தியாவில் சுதந்திரமாக திரிந்த இந்த தீவிரவாதியை பிடித்ததே அமெரிக்கா தான். இப்பொழுது தீவிரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதும் இழப்புக்களை சந்திப்பதும் அமெரிக்கா தான். தூங்கிய நாம் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.  
by H Jagan,Pudugai,India    18-03-2010 08:00:37 IST
 ராண்டால் சம்பார்ன் கூறுவது போல் அமெரிக்க அரசுக்கும் டேவிட் கோல்மென் ஹெட்லிக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்ப்பட்டு இந்தியாவிற்கு எதிராக சதிசெய்கிரார்களோ? அமெரிக்காவை நம்பமுடியாது. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும். 
by S Nagarajan,Chennai,India    18-03-2010 06:03:34 IST
 பிரதிப் ஒரு ......... மவன்  
by p பிரதிப்,madurai,India    18-03-2010 01:23:25 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்