முதல் பக்க செய்திகள் 

பிரதிநிதிகள் நியமிக்க அவகாசம் கேட்கிறது மத்திய அரசு
மார்ச் 19,2010,00:00  IST

Front page news and headlines today

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் கமிட்டியில், தங்களது சார்பில் பிரதிநிதிகளை நியமனம் செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரளா எதிர்ப்பு தெரிவித்தது. தவிர, சுப்ரீம் கோர்ட் உத்தரவை வலுவிழக்கச் செய்யும் விதமாக கேரள சட்டசபையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோட்டில் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் புதிய அணை கட்டப்போவதாக கேரளா அறிவித்தது. இதற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டியை அமைத்தது சுப்ரீம் கோர்ட். அந்த கமிட்டியில் ஐந்துபேர் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

கேரளா சார்பில் உறுப்பினராக நீதிபதி கே.வி.தாமஸ் இருப்பார் என்று அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், இந்த கமிட்டி அமைக்கும் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டுமென்று தமிழக அரசு தரப்பில் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டியை வாபஸ் பெற வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்கிறார் நீதிபதி டி.கே.ஜெயின். ஆனால், நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் பராசரனிடம், 'நீங்கள் ஒப்புக்கொண்டதன் பேரில்தானே கமிட்டி அமைக்கப்பட்டது' என்றும் இதை தற்போது எதிர்ப்பது ஏன் என்றும் நீதிபதி கேட்டார். மேலும் இதுகுறித்து பிற நீதிபதிகளுடன் பேசிவிட்டு விசாரணை குறித்து முடிவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

 

இந்நிலையில், நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டியில் மத்திய அரசின் சார்பில் இரண்டு பேர் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்படவுள்ளனர். இந்த இரண்டு பேர் யார் யார் என்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்கு கால அவகாசம் வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறுமாத காலத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென்று ஏற்கனவே ஆனந்த் தலைமையிலான கமிட்டியிடம் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நிலையில், இந்த கமிட்டியில் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு இன்னும் மூன்று மாதங்கள் வேண்டுமென மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது திருப்பமாக அமைந்திருக்கிறது. அப்படியானால் இந்த குழு முறைப்படி செயல்பட இன்னும் நான்கு மாதங்களாவது ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த கமிட்டியை அமைப்பதற்கு தமிழக அரசு திடீரென எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் தான் மத்திய அரசு தனது பிரதிநிதிகளை நியமனம் செய்வதற்கு கால அவகாசம் கேட்டு பிரச்னையை சற்று ஆறப்போடும் விதமாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

                                                                                                 - நமது டில்லி நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருக்கும் வரை,பக்கத்துக்கு மாநிலங்களில் கலைஞர் குடும்ப தொலைகாட்சிகள்,மற்றும் தொழிற்சாலைகள்,வியாபாரங்கள் இருக்கும் வரை தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காது, திமுக அரசு துணிந்து எதுவும் செய்யாது அப்படியே இவர் தமிழகத்துக்கு உரிமை,கேட்க்க நினைத்தாலும்,அந்தந்த மாநிலங்களில் இவர் குடும்பம் வியாபாரம் செய்ய முடியாது.இதுவும் ஒரு காவேரி போல தான் வரும்..வராது..குடும்பமா?தமிழக மக்கள் நலமா? என கேள்வி கேட்டால் குடும்பம்தான் சொல்வாரு இவரு.. ஆட்சி மோசம் அநியாயம்.கடிதம் எழதுங்கள் சொக்க தங்கத்திற்கு தண்ணி வரும்..வரும்..வந்துகிட்டே இருக்கு விவசாயம் செழிக்க போகிறது..யாருப்பா அங்கே ஒரு விழாக்கு ஏற்பாடு செய்யுங்கள்  
by GB ரிஸ்வான் ,jeddah,SaudiArabia    19-03-2010 06:16:40 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்