முதல் பக்க செய்திகள் 

பொன்சேகா ஒரு முட்டாள் : ராஜபக்ஷே காட்டம்
மார்ச் 19,2010,00:00  IST

Front page news and headlines today

கோலாலம்பூர் : 'ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ள பொன்சேகாவுக்கு மன் னிப்பு கிடையாது. அவர் ஒரு முட்டாள் என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பத்திரிகைக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்த பேட்டி: ராணுவத்தில் இருந்து கொண்டே அரசியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் தளபதி பொன்சேகா மீது, ராணுவ கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. பொன்சேகா ஒரு முட்டாள். கடந்தாண்டு நவம்பரில் அதிபர் மாளிகைக்கு அவர் வந்திருந்தார். அப்போது, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா? என, அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், அது போன்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை என்றார். அரசியல் தொடர்பாக அவரது விருப்பத்தை கடைசி வரை என்னிடம் கூறவில்லை. அரசியல் என்பது ராணுவம் போன்றது இல்லை என, அவருக்கு அறிவுரை கூறினேன். அவருக்கு மன்னிப்பே கிடையாது. ராணுவ சட்டப்படி விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரை மன்னித்தால், ராணுவத்தில் ஒழுங்கீனம் அதிகரித்து விடும்.

விடுதலைப் புலிகள் ஒழிக் கப்பட்ட பின், என்னை சந்தித்த அவர், இந்தியாவிடமிருந்து நமக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, ராணுவத்தினரின் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என் றார். ஆனால், இந்திய ராணுவத் தின் பலம் என்ன என்பதை அவருக்கு தெரிவித்தேன். விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக ரகசியமாகச் செயல்படுவோர் இன்னும் உள்ளனர். குறிப் பாக, இலங்கைக்கு வெளியில், வெளிநாடுகளில் செயல்படுகின்றனர். சிலர், தங்களின் விருப்பத் துக்காக அவர்களை பயன் படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும், அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என நம்புகிறேன். தற்கொலைப் படையினரை உருவாக்கக் கூடியவர்கள் புலிகள். அவர்கள் தயாரிக்கும் தற் கொலைப் படை, 'ஜாக்கெட்டுகள்' வெளிநாடுகளில் விற் பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற காரணங்களுக்காகவே, இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் உதவியை நாங்கள் கேட்கிறோம்.

இலங்கையில் தமிழர் களுக்கு அரசு பணிகளில் முன் னுரிமை அளிக்கும் நடவடிக் கைகளை ஏற்கனவே துவக்கி விட்டோம். குறிப்பாக, போலீஸ் துறையில் அதிக தமிழர்கள் சேர்க் கப்பட்டு வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் மட்டுமல்லாமல், அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு, இந்தியா முழு அளவில் உதவியுள்ளது. ரயில் திட்டங்கள் நிறைவேறுவதற்கு இந்தியாவின் உதவி பாராட்டத்தக்கது. இந்தியா எங்கள் அண்டை நாடு. அதற்காக, இந்தியாவால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது. இரு நாடுகளுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது.

இந்தியா உதவி: இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள், இலங்கை மண்ணில் நடப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இலங்கையில் சீனா சார்பில் வளர்ச்சிப் பணிகள் மட்டுமே மேற் கொள்ளப்படுகிறது. ஹம்பன்தொடா துறைமுகம் விஷயத்தில், சீனா எங்களுக்கு கடன் அளித்துள்ளது. அதை திருப்பிச் செலுத்துவோம். முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, ஏராளமான ஆயுதங்களை கேட்டு, சீனாவிடம் ஆர்டர் செய்திருந்தார். அந்த ஆயுதக் கப்பல் வந்தபோது, திருப்பி அனுப்பி விட்டோம். இந்த நேரத்தில், இவ்வளவு அதிகமான ஆயுதங்கள் தேவையில்லை என்பதே என் கருத்து. இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

கென்னடி, புஷ், காந்தி...: ராஜபக்ஷேயின் பேட்டியின் போது, 'இலங்கை அரசு நிர்வாகம், ஒன்றுக்கும் மேற்பட்ட ராஜபக்ஷேக்களால் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே' என, கேட்கப்பட்டது. ராஜபக்ஷேயின் சகோதரர்களான, பசில் ராஜபக்ஷே அதிபரின் ஆலோசகராகவும், கோத்தபையா ராஜபக்ஷே ராணுவ அமைச்சராகவும் முக்கிய பதவிகளில் இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ராஜபக்ஷே கூறுகையில், 'உண்மை தான். அதே நேரத்தில், அமெரிக்க நிர்வாகத்தில் எத்தனை கென்னடிகளும், புஷ்களும் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். இந்தியாவில் எத்தனை, 'காந்திகள்' முக்கிய பதவிகளை வகித்தனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இலங்கையில் என்னுடைய இரண்டு சகோதரர் கள் மட்டுமே அரசு பொறுப்பில் உள்ளனர்' என்றார். தங்கள் குடும்பம் 76 ஆண்டுகளாக அரசியலில் இருப்ப தாகவும், தங்களுக்கு வேறு ஏதும் பணி இல்லை என்றும் அவர் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 எப்ப இருந்துங்க . 
by A Sitpi,Duesseldorf,Germany    19-03-2010 23:48:16 IST
 பொன் சேகா முட்டாள் என்றால் அவரை ராணுவ தளபதியாக இத்தனை காலம் வைத்திருந்த ராஜ பக்ஷே புத்திசாலியா ? 
by K Raasekaran,chennai,India    19-03-2010 20:30:14 IST
 hi readers really you are all idiot.bcaz this bloody rajapaksha and bloody ponkasava they both singla dogs they want to hide what they made in srilanka with tamil people.so now they makking good maga serial for all over the world in future just you will see they will say this our contry we are brothers this also one type of military tricks then we will became no 1 idiot in the world ha ha ha ha ha ........ 
by m ravi,abudhabi,UnitedArabEmirates    19-03-2010 19:56:03 IST
 முட்டாள் என்றால் ஏன் அவரை கைது செய்யவேண்டும் .ஏனென்றால் ராஜபக்சேவும் ஒரு முட்டாள் . தமிழனை கொலை செய்தவர்கள்தானே அவர்கள்.  
by N. Murugan,Tiruvannamalai,India    19-03-2010 18:34:39 IST
 யார் முட்டால் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  
by D sathya,trichy,India    19-03-2010 15:31:51 IST
 இந்த நாயை கொல்ல ஒரு பிரபாகரன் இல்லை. இந்நேரம் நுற்றுக்கணக்கான தமிழ் புதல்வர்களை என் தமிழ் தாய் ஈழத்தில் பெற்று இருப்பாள் .. உன்னால் முடிந்தவரை ஆடுடா ராஜபக்சே  
by s ram,Bangalore,India    19-03-2010 14:25:08 IST
 பொன்சேகா முட்டாள் என்றால் நீ ஒரு மாங்காய் மடையன்.  
by J லியோ,paramakudi,India    19-03-2010 12:14:30 IST
 அமெரிக்கா என்றொரு நாடு இருக்கும்வரை பொன்சேகாவை ஒன்றும் செய்ய முடியாது. இது உறுதி. 
by K சோமன்,Doha,Qatar    19-03-2010 11:57:45 IST
 ராஜபக்சேவிற்கு இருக்கும் சாதுரியம் நம்ப தலைக்கு இல்லாமல் போனதே! எந்த முட்டாளாவது இலங்கையிடம் ஆயுதம் வாங்கி இந்திய ராணுவத்துடன் மோதுவானா?? அதுவும் எப்படி? இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் தமிழனுக்கு வழங்கப்பட்ட உரிமை போதாது என்று இலங்கைஅரசு புலிகளுக்கு உதவியதாம். இலங்கையில் பயங்கரவாதம் சிங்களவர்களாலும், தமிழர்களாலும் தோன்றியபோதெல்லாம் இந்தியா உதவியது! உதவுகின்றது! இனியும் உதவும்!. எனதருமை இந்திய தேசமே! இன்று எமது அழகிய தீவு, பயங்கரவாத நோயிலிருந்து விடுபட்டு மீண்டு வருகின்றது! உன்னால் எமது மக்களிற்குக் கிடைத்த விடுதலைக்கு கோடானகோடி வணக்கங்கள். எமக்குள் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை உன்னிடம் பயின்ற சாணக்கியத்தனத்தால் நாம் பார்த்துக்கொள்கின்றோம். நாங்களும் வாழ்வோம்! மற்றவர்களையும் வாழவைப்போம்! 
by P ravi,Edminton,Canada    19-03-2010 10:12:29 IST
 அட ஆயிரம் அந்த வார்த்தை கொண்ட மகனுகலெய் நீர் இருவரும் என் தமிழ் ரத்தம் குடித்த காட்டேரிகள். உங்கள் இருவரையும் என் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்காது. அப்படி ஒரு தமிழன் மன்னித்தால் அவன் ஒரு உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவன் அல்ல. நீங்கள் இருவரும் முட்டாள்கள் தாண்டா அந்த மகனே  
by K. காசி விஸ்வநாதன் ,dammam.saudi,India    19-03-2010 09:40:38 IST
 கிருஷ்ண மூர்த்தி அவர்களே,முட்டாள்கள் எல்லா கட்சியிலும் உண்டு. அதற்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சியும் விலக்கல்ல.பொன்சேகா ஒரு முட்டாள்தான். இத்தனை நடந்த பின் அவர் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நடந்த உண்மையை உலகு அறிவித்து அவர் ஒரு முட்டாள் இல்லை என்பதை அறிவிக்க வேண்டும்.அப்பொழுது ராஜபக்ஷே பற்றி ஊருக்கு அறியும்.கடவுள் இந்த இரு முட்டாள்களுக்கும் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்.  
by N குமார்,Thoothukudi,India    19-03-2010 09:17:05 IST
 இந்த ரத்த வெறி பிடித்த ராஜபக்சே நாய் என்று சாவனோ , அன்று தான் எல்லா ஈழ தமிழ்மக்களுக்கும் விடுதலை.... தமிழரின் தாகம் தமிழீழம்../ 
by தமிழன்,Trichy,India    19-03-2010 08:59:41 IST
 நேற்று பிரபாகரன் !!! இன்று பொன்சேகா !!! நாளை ராஜபக்சே !!!  
by L ராசு,Bangalore,India    19-03-2010 07:53:34 IST
 உண்மைதான். பொன்சேகா முதல் முட்டாள். அவருக்கு அரசியல் ஆசை இருந்ததே தவிர, அதில் உள்ள பழி வாங்கும் நடவடிக்கை பற்றியும், எதிரி எந்தவிதமாக செயல்படுவான் என்பதை பற்றி படிப்பதற்கு முன்னாலே அவர் பலி ஆடு ஆக்க பட்டு கொண்டு இருக்கிறார். எண்ணற்ற தமிழர்களை கொன்ற முதல் முட்டாள். இரண்டாவது முட்டாள் தற்போதைய இந்திய அரசு. மொத்த தமிழர்களையும் கொள்வதற்கு அளவற்ற உதவிகள் செய்து தற்போது விழி பிதுங்கி கொண்டிருக்கிறது . இலங்கை சீனாவின் பக்கத்தில் சாய தொடங்கியதிலிருந்து நமது அரசு இக்கட்டான நிலையில் இருக்கிறது. போட்டிபோட்டுக்கொண்டு உதவிகளை அள்ளிவிடுகிறது. ஏனெனில் சிறிலங்காவை மிரட்டி பணிய வைக்க இன்றைய நிலையில் முடியாது. ராஜபக்சே பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உதவியை எந்த வகையிலும் பெற முடியும் . அதற்காகவே அவர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். எனவே மன்மோகன் அரசு தாஜா செய்யும் வேளையில் இருக்கிறது. இவ்வளவு உதவிகளும், பரிசுகளும் நமது தமிழ்நாட்டு மீனவர்களை கொன்று குவித்து நிர்வானபடுத்தியதர்கா அல்லது இலங்கை வாழ் தமிழர்களை படுகொலை செய்து, நிர்வானபடுத்தியதர்கா என்று நமது மன்மோகன் அரசுக்கு மட்டுமே தெரியும். இதில் எந்த வகையில் அவர்கள் சந்தோஷ படுகிறார்கள் என்று வாசகர்கள் எவரேனும் தெரிந்தால் எழுதுங்கள். ராஜபக்சே மிக சிறப்பாக பலன் அடைகிறார். இலங்கையின் முக அவர்.  
by c சாமி ,bangkok,Thailand    19-03-2010 07:19:44 IST
 ... அதிகாரம் ஒருவரை சிந்திக்க விடாது .அளவற்ற அதிகாரம் ஒருவரை முற்றிலும் முட்டாள் ஆக்கும் .இது கருணாநிதிக்கும் பொருந்தும் .[ ராஜபக்சேக்கு மட்டும் அல்ல ] 
by R Krrishnamurthy,Hosur,India    19-03-2010 06:38:33 IST
 பொன்சேகா முட்டாள்தான். கொலைகாரக் கூட்டணியின் மூளையான வஞ்சக இந்தியாவின் உதவியால் பெற்ற வெற்றியைத் தன் வெற்றி என எண்ணியதும் பேரினப் படுகொலை முதலான வஞ்சகச் செயல் திட்டங்கள் வெளிவராமல் இருக்க இராசபக்சேவே வெற்றி பெற்றதுபோல் காட்ட இந்தியம் உதவும் என எண்ணாமலும் தான் வெற்றி வாகை சூடுவோம் எனக் கனவு கண்டதால் சேகா முட்டாள்தான்.  
by I. Thiruvalluvan,chennai,India    19-03-2010 04:42:54 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்