முதல் பக்க செய்திகள் 

நவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள்: இன்று உலக சிட்டுக்குருவி தினம்
மார்ச் 20,2010,00:00  IST

Front page news and headlines today

'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...' என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட மறக்கவில்லை.

 

உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால், 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன் சிதறிக் கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள் வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும். சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்கலாம்.

 

அழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், 'ஏசி' செய்யப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.

 

* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவு புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

 

* பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், ரோட்டில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.

 

* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

 

* இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல், மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை. விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும், வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.

 

திருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன் கூறியதாவது: ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற் கையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ரெல்டன் கூறினார்.

 

மதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது: மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இயலாதபடி, அதன் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த அளவில் வசிக்கின்றன. கிராமங்களிலும் மொபைல் போன் சேவைகள் அதிகரித்து வருவதால், சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. இவ்வாறு திலீப்குமார் கூறினார்.

 

குருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 செல் போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிகிறதா?அபத்தமான தகவலாகத் தெரிகிறது.காரணம் செல் போன் பயன் பாடுகளில் பழமையான நாடுகளான நார்வே, சுவீடன், போன்ற நாடுகளில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்தியில் படித்தது நினைவுக்கு வருகிறது! மனிதனுக்கு மட்டுமே குடிநீர் மற்றும் உணவை தேடிச்சென்று எடுத்து வரும் அவலநிலை உள்ளது. குருவிகள் சுதந்திரமாக பறந்து சென்று எங்கு வேண்டுமானாலும் உணவைத்தேடிக் கொள்ளும்!  
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates    20-03-2010 22:19:21 IST
 If Sparrows are affected by mobile phone rays....How about humans?????God only knows ! May God Protect us !!! 
by V christopher,sanaa,Yemen    20-03-2010 21:53:32 IST
  தேசிய நதிநீர் இணைப்பு என்பது செய்தித்தாள்களிலும் ,அறிக்கைகளிலுமே உள்ளதே தவிர உண்மையில் தமிழக அரசோ,மத்திய அரசோ கண்டுகொள்வதுபோல் தெரியவில்லை அதனால் வறச்சிதான் மிச்சமே தவிர வேறு பயனில்லை .இலவசத்தில் தமிழகம்தான் முதலிடம் மக்கள்தான் விழிக்கவேண்டும்  
by s selvakkumar,Qatar,Qatar    20-03-2010 21:28:49 IST
 போங்கப்பா. மனித இனம் வளரும்போது மற்ற இனம் எப்படியப்பா வாழும் வளரும்  
by g அழகுநம்பி,qatar,India    20-03-2010 20:18:28 IST
 dhubaiyil adhiga alavu vanna vannak kuruvigal ullana. Migavum siriya matrum alzhagaana kurivigal niraiya Dhubaiyil undu. 
by R. Ragothaman,Dubai,India    20-03-2010 19:51:47 IST
 அடி வயிற்றில் பாதியும் , இறக்கையில் பாதியும் வெள்ளையாக இருக்கும் , கருடனை தற்போது பார்க்க முடியவில்லை. சிறிது சிறிதான உயிரினங்களின் அழிவு , மனித இனத்தின் அழிவு ஆரம்பித்ததற்கான அறிகுறி. விழித்துக் கொள்ளவேண்டும் 
by T குணசேகர்.,mumbai,India    20-03-2010 19:18:46 IST
 இதில் எனக்கு ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் மாடி வீடான எங்கள் வீட்டின் ஹோம் தியேட்டரில் இரு ஜோடிகளும் கிணற்றில் ஒரு ஜோடியும் சந்தோசமாக வட்டமடிக்கின்றன  
by A Yasir,Ramanathapuram,India    20-03-2010 18:32:05 IST
 மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியால் கடைசியில் மிஞ்ச போவது மனிதன் மட்டுமே!. காடுகளை வளர்ப்போம் பூமியை பாதுகாப்போம் . 
by M ரமேஷ் குமார்,Mayiladuthurai,Tamilnadu,India    20-03-2010 17:00:02 IST
 முன்பெல்லாம் வீட்டில் குருவிகளின் அழகிய இனிமையான கீச் கீச் சத்தம், இவைகளை அனுபவிச்சவர்களுக்கு , இந்த ஹாரன் சத்தங்கள் சரியான தண்டனை . செல்போன் டவர் வந்தபின்னால் சிட்டு குருவிகள் . மைனா , அனில் புறா, தேன் சிட்டு ம்ம்ம் இதல்லாம் அனுபவிச்சா புரியும்  
by s esspee,trichi,India    20-03-2010 16:06:53 IST
 நம்நாட்டில் செல் போன் வைத்திருபோர் எண்ணிக்கை அறுபது கோடி பேர்!!!இன்னும் பத்து ஆண்டுகளில் முப்பது கோடி பேருக்கு கான்சர் வர வாய்ப்பு இருக்கிறது. இதை படித்து ஒரு பத்து பேர் மனம் மாறினால் தினமலருக்கு வெற்றி தான். 
by s இபு/பாரிஸ் ,sarcelles,France    20-03-2010 12:48:56 IST
 மனதில் கவலைவரும் போது, இயற்கையை பார்த்தால் மனதிற்கு சந்தோசம் கிடைக்கும். ஆனால் இன்று அதற்கு அழியும் காலம் வந்து கொண்டிருகிறது. ஆணடவர் ஒருவர் மட்டுமே காப்பாற்ற முடியும். .  
by d எஸ்தர் தேவகுமார் ,chennai,India    20-03-2010 12:16:42 IST
 Ithu unmaiyileye varuthapadakoodiya visahayam. Unmaiyeleya ulagil santhosamana surusuruppana KURUVI iname alivatharkku name karama???? Ithai thadukka government la ethavathu action kandippa edukkanum? ippo irukkum alavai kootta vittalum pathukakavendum. 
by V ஜோதி,Madurai,India    20-03-2010 11:57:24 IST
 2 years back , we saw sparrow trying to build a nest at our broken window. we kept a cup of rice to attract them. Then they buit a nest there and started living with us. initially they feared for the sounds like mixi and cooker, later used to it and became fearless now. we regularly keep rice for them. three , four times they laid eggs and got young ones. It is very pleasant to hear their chirping in the morning. i have wondered about their parenting. Even today they are with us though we are in flat.  
by s suja,chennai,India    20-03-2010 11:39:08 IST
 மனது மிகவும் கஷ்டமாக உள்ளது. ஆனால் இது உண்மைதான். சிறு வயதில் நாம் பார்த்ததுண்டு. வயல் வெளியில் மின்சார கம்பியில் அத்துணை அழகாய் வருசையில் அமர்ந்து இருக்கும். இன்று கிடையாது. மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் மிகவும் சுயநலவாதிகள் ஆகி விட்டோம். இனியாவது முடிந்தவரை சிட்டு குருவியை பாதுகாப்போம். 
by K. காசி விஸ்வநாதன் ,dammam.saudi,India    20-03-2010 11:28:10 IST
 நல்ல கட்டுரை. நன்றி  
by m. kannan,tirunelveli6,India    20-03-2010 11:16:43 IST
  manithan mari vitan  
by M. Annandurai,TirunelveliTown,India    20-03-2010 11:11:24 IST
 தினமலரில் சிட்டு குருவி குறித்த இரண்டாவது கட்டுரை இது. இன்னும் எத்தனை உயிரினங்கள் இருக்கிறதோ இதைபோல  
by K Arul,Singapore,India    20-03-2010 10:48:12 IST
 தினமலர் வாசகர்கள் மற்றும் தமிழினம் சிட்டுக்குருவிக்கொரு வாழ்வு கொடுக்க வேண்டும். வீட்டுக்கொரு தண்ணீர் கிண்ணம் வைப்போம். நான் இன்று வைத்துவிட்டேன். நீங்கள்? 
by v நாராயணன்,bangalore,India    20-03-2010 10:25:22 IST
 மனதை நெகிழ வைக்கும் செய்தி. நாம் பயன்படுத்தும் செல்போன் ஒரு பறவை இனப்பெருக்கத்தை பாதிக்கும் போது, செல் போன் அவசியம் தானா என நினைக்க தோன்றுகிறது. நாமும் அறிவியல் வளர்ச்சி பெற வேண்டும். மற்ற இனங்களுக்கு பாதிப்பு இல்லாமல் .. 
by yasmin,kuching,Malaysia    20-03-2010 09:56:07 IST
 குருவி இனம் அழிய இதெல்லாம் மட்டும் காரணம் இல்லீங்க. தமிழ்நாட்டுல உள்ள கிராமமெல்லாம் குவாரியா மாருரதுனால இருந்து வெடி சத்தம் தாங்க முடியாம அழிஞ்சு போச்சுங்க. இருபத்தியெட்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்த குருவி கூட்டம் இன்னிக்கு ஒரு குருவி கூட எங்க கிராமத்துல இல்லீங்க  
by M Kabilan,C,India    20-03-2010 09:37:58 IST
 இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லாருக்கும் சொந்தம். சிட்டுக்குருவி அன்பிற்கும் சுதந்திரத்துக்கும் எடுத்துக்காட்டு. எப்படியாவது சிட்டுக் குருவிகளை வாழ வைக்கவேண்டும். 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    20-03-2010 09:21:01 IST
  You have done a wonderful job of creating awareness about our Chittukuruvi among public. we are responsible for the dwindling population of this friendly creature once nesting in our house and roaming freely in the urban areas. we should monitor the population still thriving in various laces and safe guard their existence. 
by s murali,bangalore,India    20-03-2010 08:55:21 IST
 நாம் வாழும் மோசடித்தனமான/ போலித்தனமான வாழ்க்கையால் சிட்டுகுருவி மட்டும் அல்ல தட்டான் போன்ற poochikalum kaanaamal போய்விட்டன.. திதி தரும் போது காகம் வருவதில்லை. நாய்களும், பன்றிகளும் தான் வருகின்றன. இந்த மனித வாழ்க்கை விரைவில் முடிவுக்கோ அல்லது பேரிடருக்கோ வரும் காலம் தொலைவில் இல்லை....... 
by K Kannan,Trichy,India    20-03-2010 08:45:30 IST
 செல் போன் ammaa அம்மா, அய்யா டவர் லயன் மட்டுமில்லைங்க்கோ, உயர் அழுத்த மின் கம்பி பாதையின் அருகில் வாழும் மக்களுக்கு காச நோய் உண்டாகும் என்று உலக அளவில் பல வழக்குகள் உள்ளன. நமது மின்சார வாரியம் இது சம்பந்தமான விஷயங்களை வெளியிடுவார்களா?  
by G Loganathan,Coimbatore,India    20-03-2010 07:58:47 IST
 It is impossible to live without the modern gadgets like Mobile phones. Unfortunately, these sparrows (Chittukurivi) have become known and visible victims of the modern technologies. The idea of having a small garden and keeping a bowl of water is a wonderful idea. In fact, my wife is practicing with a change. She has placed a plates on a raising place around our small garden. To raise, she has used unused pipes of 2 - 3 feet height and has placed the plates on top of it. The purpose is to attract them. We do not use bowl, since there is a possibility of them drowning. We feel Plate is safe. Initially, as birds are not aware of the availability of water, you may not see many/any bird(s). Do not be discouraged. But later, you will see lots of birds coming drinking and bathing there. Of course, not only sparrows, but also other birds, even crows used to come. This will make you, and your family happy. You will create healthy environment in your family and you can create awareness about environment with your children.  
by Dr லெட்சுமி நா. Pillai,Nagercoil,India    20-03-2010 07:14:09 IST
 உலக சிட்டுக்குருவிகள் தினத்தன்று சிட்டுக்குருவி பற்றி வாசகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தினமலருக்கு வாழ்த்துக்கள். சென்ற மாதம் தூத்துக்குடி சென்ற நான் அங்கு நிறைய சிட்டுக்குருவிகளைப்பார்க்க முடிந்தது. பறவை நிபுணர்கள் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.  
by A. ESWARAN,TIRUPPUR,India    20-03-2010 06:51:01 IST
 செல் போன் டவர் தான் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். சில வருடங்கள் முன்னால் என்னுடைய வீட்டில் (கன்னியாகுமரி மாவட்டம்) நிறைய சிட்டு குருவிகள் உண்டு. ஆனால் தற்பொழுது ஒரு குருவிகளையும் பார்க்க முடிவதில்லை. காளான்கள் போல் முளைத்திருக்கும் இந்த செல் போன் டவரை எப்படி மாற்ற முடியும்?  
by M சொக்கலிங்கம்,London,UnitedKingdom    20-03-2010 03:39:57 IST
 நல்ல கட்டுரை.நன்றி தினமலர். 
by Daran,Chennai,India    20-03-2010 03:23:48 IST
 மானிடகூட்டம் தான் எந்த உயிரினத்தையும் விடாமல், கிடைத்த சிட்டுக்குருவிகளை கூட சுட்டு சாப்பிட்டுவிடுகிறதே!! இன்னும் கொஞ்ச நாளில், காகம், கழுகு... இவைகளும் காலிதான்!!!!!! 
by D சரஸ்வதி,Manalai,India    20-03-2010 02:35:44 IST
 எதை தேடி இப்படி இருப்பதையெல்லாம் தொலைக்கிறோம் ? மனிதன் இயற்கையை மீறி சாதித்ததாக தம்பட்டம் அடிக்கும் போதெல்லாம்,அதற்காக அவன் கொடுக்கும் விலையை தெரிந்தோ தெரியாமலோ மறந்தோ மறைத்தோ விடுகிறான். சிட்டு குருவியை அதன் வாழ்க்கை முறையை அனுபவித்து ரசித்தால் குடித்தனத்தின் ரகசியம் புரியும்.ஆனால் இது இயற்கையின் இலவசம். சிட்டு குருவியோ ஒன்றாம் வகுப்பு கூட படிக்கவில்லை. அதனால்தான் மனிதன் குடும்ப நல கோர்ட்டு,கவுன்சிலிங் என்று மெத்த படித்த மேதாவிகளின் பின்னே ஏதோ ஒரு நப்பாசையுடன் அலைகிறான். படைத்தவன் தூரத்திலிருந்து ரசித்து சிரிக்கிறான்.  
by தி.பா.ரமணி ,திருநெல்வேலி,India    20-03-2010 02:21:22 IST
 ALUTHU KONDU THAN PADITEN.... CITTU KURUVI ENDRAL ROMBA PIDIKKUM... MANITA INAM ALINTHAL POTHUM... INTHA ULAGAM PILAITHU KOLLUM VERA VALI ILLAI ITHARKKU... EVALU KEDUTAL PANRAN... INTHA ARIVU KETTA JENMANGAL....  
by MK sarathy,madurai,India    20-03-2010 01:33:52 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்