முதல் பக்க செய்திகள் 

வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்? 10ம் வகுப்பு தேர்வு குளறுபடியை சரிசெய்ய திட்டம்
மார்ச் 25,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : ''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் கேள்வித்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். அப்பாடத்தில் அவர்கள் தோல்வி அடையாத வகையில், தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உறுதி அளித்துள்ளார். குளறுபடி நடந்த இடங்களில் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆசிரியர்களை, இனி தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்றும், அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு போர்டு மாணவர்களும் கலந்து ஒரு அறையில் தேர்வெழுத வைக்கப்பட்டனர். முதல் நாள், தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில், ஒரு அறையில் மெட்ரிக் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., கேள்வித்தாளும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மெட்ரிக் கேள்வித்தாளும் மாற்றி வழங்கப்பட்டன. இதேபோல், தென் மாவட்டங்களில் ஒரு சில மையங்களிலும் கேள்வித்தாள் மாற்றி வழங்கப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அழுது புலம்பினர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, உரிய மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.


இந்த விவகாரம் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பிரச்னைக்குரிய தேர்வு அறைகளில், மெட்ரிக் மாணவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் கேள்வித்தாள்கள் மாற்றி வழங்கப் பட்டுள்ளன. விசாரணை நடத்தியதில், 29 மாணவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 29 விடைத் தாள்களும், இன்று (நேற்று) தேர்வுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு ஆசிரியர்களைக் கொண்டு, இந்த 29 விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பிரச்னையில், 29 மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதபடி, விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்படும். இன்று நடந்த (நேற்று) தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், இந்த மாணவர்கள் பெறும் மதிப்பெண்களும், பள்ளிகளில் நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, தமிழ் முதல் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். சம்பந்தபட்ட 29 மாணவர்களும், தமிழ் முதல் தாள் தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள். அவர்களுக்கு சிறிய பாதிப்புகூட ஏற்படாது. இந்தப் பிரச்னையில், மாணவர்களும், பெற்றோரும் கவலைப்பட வேண்டாம்.


நடவடிக்கை என்ன? கேள்வித்தாள் மாற்றப்பட்ட அறைகளில் தேர்வுப் பணி பார்த்தவர்கள் மற்றும் மையத்தின் முதன்மை கண்காணிப் பாளர், தேர்வுப் பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தேர்வு அலுவலர் ஆகியோரை, இனி வரும் காலங்களில் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பிரச்னை நடந்த மூன்று பள்ளிகளுமே தனியார் பள்ளிகள். எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் நேற்றே தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். துறை அலுவலர்களாக செயல் பட்ட, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் கூறினார்.


பாதிக்கப்பட்ட மாணவர்கள், சம்பந்தபட்ட பாடத்தில் தோல்வி அடையாமல், தேர்ச்சிக்குரிய மதிப் பெண்கள் அளிக்கப்படும் என்பதை தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கேள்வித்தாளை சரியான முறையில் வழங்கியிருந்தால், நன்றாக தேர்வெழுதி அதிகபட்ச மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்க முடியும். எனவே, 29 மாணவர்களுக்கும் அதிகபட்ச மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தமிழ் பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை என்பதால், மதிப்பெண்களை அதிகமாக வழங்குவதால் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றனர்.


தண்டனையா... பரிசா...? கேள்வித்தாளை மாற்றி வழங்கிய விவகாரத்தில், 'சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அலுவலர்களை, இனிமேல் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்த மாட்டோம்' என, தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை, சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் ஏகமனதாக வரவேற்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தேர்வுப் பணிகளை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், 'ஆளை விட்டால் போதும்' என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். புதிதாக வேலையில் சேர்ந்த ஆசிரியர்கள் தான், உற்சாகத்தில் எந்தப் பணி கொடுத்தாலும் செய்கின்றனர். எனவே, ஏதாவது சிறிய பிரச்னை என்றாலும், 'இனிமேல் தேர்வுப் பணி கிடையாது' என, தேர்வுத்துறை முடிவெடுத்தால், ஆசிரியர்களை பொறுத்தவரை, அதை தண்டனையாக கருதாமல், 'பரிசாக'த்தான் கருதுவர்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சம்பந்தபட்ட ஆசிரியரை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது . அவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்க பட வில்லை.  
by K தேவா,Muscat,Oman    26-03-2010 00:32:34 IST
 நல்ல டீச்சர்ஸ்.. நல்ல கவர்மென்ட்... சம்பந்த பட்ட அணைவரையும் டிஸ்மிஸ் செய்யனும்... ஏய் முட்டாள் அரசாங்கமே .....அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை சம்பளம் கொடுக்க கூடாது ......ஏப்ரல் மே மாததங்களில் ஜாலியாக இருபதற்கு எதற்கு சம்பளம் ' பனிஷ்மென்ட் வாத்தியார்களுக்கு பத்தாது. இன்னும் அதிகமா குடுங்க. வினாத்தாளை கூட சரியாய் குடுக்க முடியல அவரெல்லாம் எதுக்கு வேலை. வெட்டி சம்பளம் பொறுப்பற்ற ஆசிரியர்களை வைத்து என்ன செய்ய முடியும். மண்ணைக் கூட அள்ள முடியாது அசிரியர்கள் இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியம். செய்யும் தொழிலை தெய்வமாக கருத வேண்டும். சாமியார், அரசியல்வாதி பொறுப்பில்லாத பெற்றோர், ரவுடி போல் இல்லாத ஆசிரியர் தர்மம் கடைபிடிக்கவேண்டும் ஆங்கிலத்தில் லீவ் லட்டர் கூட எழுத தெரியாத டீச்சருக்கு 25000 சம்பளம் கொடுத்ததா இது போன்ற தவறு நடப்பது சகஜமே இரு வேறு வண்ணங்களில் அச்சிட்டிருக்கலாம். தேர்வுத்துறையின் மேல்தான் தவறு.  
by Yoganath,Mumbai,India    26-03-2010 00:31:33 IST
 ஆசிரியர்கள் மட்டும் குறை சொல்ல முடியாது. ஒரு அறையில் உள்ள ஒரு மாணவனுக்கு கூட தன்னுடைய சிலபஸ் தெரிய வில்லை. தேர்வு பணி போடுகிறவர்களுக்கும் சரியான விளக்கங்கல் கொடுக்க பட வில்லை. ஆசிரியர்கள் மெட்ரிகுலேசன், ஸ்டேட் போர்டு தனியாக கேள்வி தாள் கவர் கொடுத்திருக்காது. எத்தனை மெட்ரிகுலேசன், எத்தனை ஸ்டேட் போர்டுன்னு கவரில் குறிபிடணும்.  
by K தேவா,Muscat,Oman    26-03-2010 00:22:42 IST
 First think abt the struggles the students might have undergone studying for the past 1 year with lots of special classes,tutions and weekend classes and sleepless nights..where will all this effort will go!!!Hardwork never fails,but that doesnt mean they all will only desire passmark...Careless Gov...Even 1 mark can value their future(from a true experience)...Answer the students!!! 
by N Nirmala,NJ,UnitedStates    26-03-2010 00:10:05 IST
 I feel sick of some people always unnecessarily linking CM & the Govt. in everything. It's really boring. Mistakes will happen anywhere anytime. Mr. Devan, I really feel sorry for you. You are far extending out of the subject.  
by Mohammed Ali,Trichy,India    25-03-2010 23:39:58 IST
 government will not take action on government officers as they are helping in getting victory in elections. First Vasundaradevi should be dismissed as she is very carelessly telling student will get pass marks, what about their total marks. Now parents should think why they vote for this govt.  
by s sankar,coimbatore,India    25-03-2010 23:16:51 IST
 என்னதாங்க செய்றாங்க. இதெல்லாம் அநியாயமா தெரியல அவங்களுக்கே  
by P சாமிநாதன்,Pudukkottai(Dist),India    25-03-2010 21:08:28 IST
  லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும் மாபெரும் பணியை தேர்வுத்துறை செய்து வரும்போது எங்காவது ஒரு இடத்தில் இதைப்போன்ற மனிதத்தவறுகள் நடைபெறுவது மன்னிக்கப்படவேண்டியதே! இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வித்துறை கண்டிப்பாக உதவும். கேள்வித்தாள் மாறியது கூடத்தெரியாமல் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இருந்தே மனப்பாடக்கல்விமுறையால் மாணவர்கள் சிந்திக்கும் திறனை இழந்து விட்டதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கம் என்பது ஒரு வகையில் பரிசு தான்! ஏனென்றால் மூன்று மணி நேரம் உட்காராமல் நடந்து கொண்டும்,பாத்ரூம் கூட போக வழியில்லாமல்,வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு தேர்வுப்பணி பார்ப்பது மிகவும் கடினம்! இதனால் தான் தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி அனுப்பப்படுகிறார்கள். மீடியாக்கள் இவ்விசயத்தை பெரிது படித்திவிடுகிறார்கள்! ஒரு சிறு தவறு கூட நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் பேசாமல் தேர்வே நடத்தாமல் அனைவரையும் பாஸ் செய்து விடலாம். தெரியாமல் தவறு செய்வது மனித குணம்! மன்னிப்பது தெய்வகுணம்!  
by A eswaran,TIRUPPUR,India    25-03-2010 21:04:12 IST
 இது மொத்தமாக ஒரு பள்ளியில், பரீட்சை ஹாலில் நடந்ததால் தெரிந்தது. ஆனாள் விடைத்தாள் திருத்தும் போது ஆசிரியர்கள் அவர்களின் வீட்டின், குடும்பத்தின் பிரதி பலிப்புளால் எத்தணை பாமர மாணவர்களின் வாழ்கையை முன்னேற விடாமல் தடுத்திருக்கிறார்கள் 
by S.S ஜகுபர் சாதிக்,jeddah,SaudiArabia    25-03-2010 20:37:50 IST
 தெருக்கு தெரு டாஸ்மாக் திறந்து ,அங்கு உள்ள மக்கள் என்ன பிராந்தி குடிப்பார்கள் என்று கணக்கு வைத்து வியாபாரம் பண்ண தெரிந்த இந்த அரசு ,மாணவ ,மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயக்கும் இந்த தேர்வில் இப்படித்தான் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளும்  
by d தேவன்,india,India    25-03-2010 19:53:15 IST
 தவறு செய்த ஆசிரியருக்கு அடுத்த வருடம் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்யலாம். மாணவர்கள் ஏதாவது சிறு தவறு செய்துவிட்டால் அவர்களை குனியவைத்து கும்மி அடிக்கிறீர்கள் உங்களை என்ன செய்வது பேப்பரையாவது ஒழுங்கா திருத்துங்க  
by c venkatesh,chennai,India    25-03-2010 19:40:30 IST
 SOLLAATHEY YAARUM KETTAAL YELLORUM THAANGA MAATTAAR  
by GN.BABAJI,chennai,India    25-03-2010 19:29:45 IST
 1. There is no point in conducting re-exam, considering the preparation for the exam again which will only add more mental pressure that too for the no mistake of the children. 2. Some wonders here how no childern found this mistake. If at all you have ever appeared to a final exam, you will know the mental trauma the childern go through and they would have only realised some ''out of sylabus'' questions being asked. 3. Some here says that awarding these childern with more mark would set bad example in future. My point is, why let this mistake(giving wrong question papares) happen again. Improve the system(such as have common paper, or write clearly if it is state board, matric etc). Even If it happens again, then too there should be no hestitaion to give them the mark they deserve. 4, Above all, the director should be punished more than the teachers for overlooking the simple fact that there is no identity diferentiation between these question papers(if that is the case). 
by A B Raj,Bangalore,India    25-03-2010 19:24:13 IST
 They have to give full mark to that students and Vasundhara told that they would give mark which does not makes the students fail. That means, they will give just pass. But this mark will affect their total and among this students anyone could come as a state first or something. This is the firs exam, how can they write the remaining exams peacefully. Please try to give full marks to the students 
by Mrs. Raninewton,Kuwait,Kuwait    25-03-2010 19:12:53 IST
 நல்ல டீச்சர்ஸ்.. நல்ல கவர்மென்ட்... சம்பந்த பட்ட அணைவரையும் டிஸ்மிஸ் செய்யனும்... 
by m கார்த்திக், பந்திங் சிலாங்கூர்,Banting,Selangor,Malaysia    25-03-2010 19:07:17 IST
 question paperla 1st enna exam & யாருக்குன்னு cleara type pannugaappa.......... 
by G RIYA,delhi,India    25-03-2010 18:37:19 IST
 ஏய் முட்டாள் அரசாங்கமே .....அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை சம்பளம் கொடுக்க கூடாது ......ஏப்ரல் மே மாததங்களில் ஜாலியாக இருபதற்கு எதற்கு சம்பளம் ? 
by V நிரூபன் ,chennao,India    25-03-2010 17:43:44 IST
 முதலில் மெட்ரிக் அல்லது ஸ்டேட் போர்டு என்று இல்லை. இரண்டாவது வருடம் மதம் இல்லை. நண்பர்களே பாருங்கள் என்றாவது ஒருநாள் சென்ற ஆண்டு கேள்வித்தாளை இந்த ஆண்டு கொடுக்கப் போகிறார்கள். நடவடிக்கை அசிரியர்கள் மீது அல்ல. வசுந்திரதேவி மீது தான் வேண்டும். 
by s வேல்ஸ்,tamilnadu,India    25-03-2010 17:41:04 IST
 pls dismiss teachers. salery totaly waste,students very effect. 
by M THIRUMURTHY,tirupur,India    25-03-2010 17:39:59 IST
 Sir, these are due to slackness among the controlling authorities, they must have some diferenciation by colour for each division/state board /matrict/private candidate, such colour difference will help and there should be a announce before starting the exam saying this colour for this candidate then automatically students will take care. So apply your mind scientifically and modern- alagiriswami 
by A alagiriswami,chennai,India    25-03-2010 17:28:23 IST
 எப்படி ஒரு ஸ்டுடென்ட் கூட question பேப்பர் மாறியிருக்கரத கண்டுபிடிக்கலைன்னு நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு !!!  
by K Kalaivani,hubli,India    25-03-2010 17:21:13 IST
 Plaease post able and eligible hand for teaching profession. Dont entertain PAWN BROKERS to be a teachers. Now a days most of teahers are doing service, just they are doing as part time / time passing. Please do not hurt the students. Pshycologicaly they would have not been ready to veryfy or check their question papers since they are trusting their Masters. Please give full marks as possible.  
by P Parthiban,Muscat,Oman    25-03-2010 16:49:49 IST
 first step for students kindly do it carefully 
by S stalin,chennai,India    25-03-2010 16:40:45 IST
 SUPER. BUT FULL MARK PODAVADIA AVACHIYAM EILAI. 
by ARUNA ARUNACHALAM,BOMBAY,India    25-03-2010 16:15:24 IST
 ' பனிஷ்மென்ட் வாத்தியார்களுக்கு பத்தாது. இன்னும் அதிகமா குடுங்க. வினாத்தாளை கூட சரியாய் குடுக்க முடியல அவரெல்லாம் எதுக்கு வேலை. வெட்டி சம்பளம். மாணவர்கள் இதை மறந்துவிட்டு அடுத்த தேர்வுகளுக்கு கவனம் செலுத்த முடியாம?....இவர்களை எல்லாம் டிஸ்மிஸ் பண்ணனும். அப்ப தான் வேலையோட அருமை தெரியும். எதனை பேரு படிச்சுட்டு வேலை இல்லாம இருக்காங்க. வேலை ஒழுங்க செய்ய முடியலன்ன வீட்டுக்கு போங்க சார்.. ....  
by n periyasamy,fintas,Kuwait    25-03-2010 16:12:59 IST
 இதில் ஆசிரியர்களைக் குறை சொல்லுவதில் அர்த்தம் இல்லை. வினாத்தாள்களில் எந்தத் தேர்வுக்கென்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஒரே அறையில் இரு விதமான மாணவர்களை வைத்திருக்கவேண்டாம். இரு வேறு வண்ணங்களில் அச்சிட்டிருக்கலாம். தேர்வுத்துறையின் மேல்தான் தவறு. 
by D Devakumar,Kadatchapuram,India    25-03-2010 15:49:16 IST
 thervuthurai ithil mukkiya kavanam selutha vendum. varum kaalangalil ithu Pol thavaru nadakkamal paarthuk kollavathu thalaiyaya kadamai. 
by G Vaithiyanathan,Alain,,UnitedArabEmirates    25-03-2010 15:26:49 IST
 அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள். இது வெறும் தொடக்கமே தவிர முடிவு அல்ல !!! (இன்னும் தமிழ் தமிழ் என்று எத்தனை நாள் இருக்க போறோம். என் மக்கள் என்னை கடந்து மறந்து விட போறார்கள், மாற்றங்களை ஆதரிப்பூம். நன்றி  
by d ரமேஷ்,chennai,India    25-03-2010 15:15:13 IST
 ஏன்டா அறிவுகெட்ட கூமுட்டைகளா, தாய்மொழி பாடத்தை ஏன்டா ஒவ்வொரு கல்வி முறைக்கும் மாத்தி வட்சிருக்கீங்க. ஏற்கனவே கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமுக அறிவியல் எல்லாத்தையும் ஒரே சீரா கொண்டு வரனும்மு சொல்லுறாங்க. அது இந்தய முழுக்க. ஆனா ஒரே மாநிலத்துல தாய்மொழி பாடத்த ஒவ்வொரு கல்வி பாட முறையில ஏன் மாத்தி வச்சிருக்கீங்க. இந்த மாதிரி படித்த முட்டாள்களின் கையில இளைஞர்களின் எதிர்காலம் சிக்கிருப்பது மிகவும் கொடுமை.  
by mr கோபி,chennai,India    25-03-2010 15:01:37 IST
 இதை கூட சரியாக கவனிக்க mudiyatha ஆபிசர் , அரசு , அரசாங்கம் , இதெல்லாம் இந்திய மக்களுக்கு கேவலம் . muthal பரிச்சை அன்னைக்கே மாணவர்களுக்கு குழப்பம். எப்படி மற்ற பரீச்சை எப்படி ? எல்லாம் என்ன சொல்றதுன்னு தெரியல ................. போங்க ?  
by K deen,singapore,Singapore    25-03-2010 15:01:02 IST
 First impression is the best impression. If the first paper is not doing good, it will affect the remaining papers. So, take care about the students emotions and feelings. Students: please don't get upset do the best in the remaining papers. 
by Ms. ஜூலி,Thirunelveli,India    25-03-2010 14:41:14 IST
 இந்த குழந்தைகளுக்கு நூறு சதவிதம் மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் நீதி  
by P Kumaran,Avadi,India    25-03-2010 14:34:34 IST
 I have seen the photo of both the question papers in Dinamalar. It is clearly visible that the question patten is different in both the papers. Also in the matric borad paper, the subject name is printed both in English & Tamil. With this the students could have identified that they have recieved different question paper and could have informed to the examiners. But this has not happened. The fault is also in the side of students also. If the examination committee decides to give full mark / extra marks for these students, it may set a bad example for future students, that even if they are aware that the question paper is wrong, they will not inform for getting full / extra marks. The only solution is to conduct re-exam for these students. Please think in this matter before finalizing any decision. Anyhow the teachers who have done the mistake should be punished invariablly. Thank You. 
by Deepan,Gujarat,India    25-03-2010 14:26:23 IST
 முதல் பரிட்சையிலேயே இதுபோல் நடந்தது மிக வருத்தமாயுள்ளது. மாணவர்கள் மனம் தளராமல் எதிர்வரும் பாடங்களுக்கு தயார் செய்து கொண்டு நல்ல மதிப்பெண்களை எடுக்க முயற்சி செய்ய எனது வேண்டுகோள்.  
by G Venkataramani,Madurai,India    25-03-2010 14:11:01 IST
 'அரசு ஊழியர்கள் என்றாலே அலட்சியபடுத்துபவர்கள் தானே', அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலட்சிய போக்குதான், இதை அனையவரும் அறிவர்  
by C Saravanapriyan,Tamilnadu,India    25-03-2010 14:07:02 IST
 முதலில் இந்த பசங்களுக்கு இதுதான் வாழ்க்கை யின் முதல் பரீட்சை. முதலே இப்படி பண்ணிட்டீங்களே. தயவு செய்து 70 மார்க் போடுங்க ப்ளீஸ்....... தினமலர் நீங்க கொஞ்சம் சொல்லுங்க  
by N saravanan,coimbatore,India    25-03-2010 13:49:39 IST
 ஆங்கிலத்தில் லீவ் லட்டர் கூட எழுத தெரியாத டீச்சருக்கு 25000 சம்பளம் கொடுத்ததா இது போன்ற தவறு நடப்பது சகஜமே  
by M SRINIVASAN,vellore,India    25-03-2010 13:41:08 IST
 ஹலோ வசுந்தரா தேவி மேடம்! இந்த வினா தாளில் மேலே எந்த பிரிவு என்று அச்சிடாதது உங்கள் தப்பு! பாவம், அந்த ஆசிரியர்கள், நீங்க செஞ்ச தப்புக்கு அவர்கள் பலி கடா!  
by K குமார்,Bangalore,India    25-03-2010 13:30:04 IST
 We need to take correct action for this officers. so next time they will take care. otherwise they repeat again 
by T Vijayan,Ramanathapuram,India    25-03-2010 13:24:16 IST
 இந்த மாதிரியான தவறுகள் அந்த நேரத்தில் அவசரத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தான் தர்ம சங்கடமாகத் தெரியும் . என்ன மாணவர்கள் சொன்ன உடன் கேள்வித் தாளை உடனேயே பார்த்திருந்தால் இந்த தவறை திருத்தி இருக்கலாம். எனினும் ஒருவருடைய தவறு மற்றவருக்கு பாடமாய் அமைவது மறுக்க முடியாதது.  
by pv chakrapani,madurai,India    25-03-2010 13:21:45 IST
 எப்பவுமே இவங்களுக்கு மொக்கைடா . ஒடனே சீக்கிரம் முடிவு எடுத்தால் நல்லது .இது போன்ற பிரச்சனை வரக்கூடாது . 
by r விஜய்,ramanadapuram,India    25-03-2010 13:16:13 IST
 ஏங்க, கேள்வித்தாளில் எந்த பிரிவிற்குரிய தாள் என்று எழுத வேண்டும் என்ற அறிவு கூட தேர்வுத்துறைக்கு இருக்காதா? என்ன கொடுமை சரவணா இது? 
by s sham,uae,UnitedArabEmirates    25-03-2010 12:44:03 IST
 This decision is wrong. They have to conduct re-exam for that particular group. 
by v christopher,sanaa,Yemen    25-03-2010 12:30:37 IST
 கல்வி தகுதி உள்ள ஆசிரியர்களை கல்வி துறையில் நியமிக்க வேண்டும். அசிரியர்களுக்கென்று தனி கல்வி தகுதி இருக்கிறது. அவர்களை தான் நியமிக்க வேண்டும். அதாவது பி எட் படித்தவர்கள் தான் அவர்கள். 
by V Vaithianathan,chennai,India    25-03-2010 12:30:14 IST
 அசிரியர்கள் இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியம். செய்யும் தொழிலை தெய்வமாக கருத வேண்டும். சாமியார், அரசியல்வாதி பொறுப்பில்லாத பெற்றோர், ரவுடி போல் இல்லாத ஆசிரியர் தர்மம் கடைபிடிக்கவேண்டும்  
by m muralish,cheennai,India    25-03-2010 12:19:35 IST
 சிலபஸ் ஒன்றாக இருந்தால் இந்த பில்ட் அப் தேவை இல்லை. அதிலும் ஒரு மாணவரின் பெற்றோர் இந்த தவறினால் மாணவன் கடுமையான மண உளைச்சலுக்கு உள்ளாகி இருபதாகவும் அதனால் அவருக்கு 100/100 தமிழில் (சாத்யமா இது ??) முதல் தாளில் போட வேண்டுமாம். இரண்டாம் தாளில் கூடுதல் மதிப்பெண் போடணுமாம் ?? என்ன கொடுமை சரவணன் இது ?? விட்டா 500/500 போட சொல்லுவாங்க போல ?? இந்த மாதிரி உதார் விடும் பெற்றோர்கள் தங்களது தவ புதல்வன் முந்தய பரிச்சைகளில் எடுத்த மார்க் ஐ தெரிவிக்க வேண்டும் பேசாமல் இப்படி தவறு நேரும் பட்சத்தில் முந்தய பரிச்சைகளில் எடுத்த மதிப்பெண்களின் சராசரி விகிதத்தை மதிபென்னாக அறிவிக்கலாம்  
by M உமாபதி,tirupur,India    25-03-2010 11:54:27 IST
 சுந்தர் அவர்கள் சொன்னது மிகவும் சரி., இந்த குழப்பம் எப்படி வரும்., கேள்வித்தாள் அச்சிட்டது தவறு., இந்த தேர்வுத்துறை இயக்குனரை தண்டிக்க வேண்டும்.,  
by BE எழில்,Abudhabi,India    25-03-2010 11:11:12 IST
 நல்ல முடிவு. பாவம் அந்த குழந்தைகள். இனியாவதும் முதலில் கேள்விதாள் சரியா என்று பார்த்து ஆசிரியர்கள் வழங்க வேண்டும். கவனமாக அடுத்து வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.  
by K. காசி விஸ்வநாதன் ,dammam.saudi,India    25-03-2010 11:09:00 IST
 தமிழ் பாடத்திட்டம் எல்லோருக்கும் ஒன்றாகவே அமைத்தால் இனிவரும் காலங்களில் இந்த பிரச்சினை தீரலாம். தலைமை ஆசிரியர், மேற் பார்வையாளர் முழு பொறுப்பேற்க வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் மன நிலையில் இருந்து கேள்விதாள்களை படித்திருந்தால் சிலருக்கு பைத்தியம் பிடித்திருக்கும். இனியாவது வரும் காலங்களில் தவறை திருத்திக்கொள்வது அவசியம், மற்றவர்களும் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு செயல்பட இறைவனை வேண்டுகின்றேன்.  
by s மணிவண்ணன்,dubai,UnitedArabEmirates    25-03-2010 11:02:21 IST
 First and formost mistakes is from Dirctor of education and CEO.Before giving punisment to Examiner and supervisor they have to review the question papers whether it is for MATRIC OR SSLC.Totally its printing mistakes.  
by K Muhyideen,Dubai,India    25-03-2010 10:54:15 IST
 pls use different colour question papers and inform the question paper colours earlier to the students. This will avoid mistakes in the future.  
by Mr Kershoem,Pandhalgudi,India    25-03-2010 10:44:11 IST
 there is no mistake on students side. let them examiners get punised. let them get suspended for 3 months atleast. playing with students life??? 
by SD செந்தில் குமார்,Chennai,India    25-03-2010 10:40:48 IST
 கேள்விதாள் மாறியதற்கு பதில் சொல்லும் இவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. இவர்களின் பிள்ளைகள் எழுதியிருந்தால் சும்மா விட்டுருப்பார்களா. அரசாங்க வேலையில் தகுதி இல்லதவர்களைஎல்லாம் பணம் கொடுத்து சேர்த்ததன் விளைவு. சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகளின் எதிகாலத்தை பற்றி  
by m gurumoorthy,coimbatore,India    25-03-2010 10:29:34 IST
 வாழ்கையிலே இதெல்லாம் சகஜமப்பா. இன்னைக்கு தமிழ் நாட்டுலே மருத்துவ மனைக்கு போனா பொழச்சி வரதும், அரசு அலுவலகம் போனா சரியா காரியம் முடிஞ்சு வரதும், தேர்வுலே இது மதிரி குழப்பம் வராமே தப்பிக்கிறதும் யாரோட தப்பும் இல்லை. நமக்கு நல்ல நெரம், அதிஷ்டம் இருந்தால் எல்லாம் சரியா நடக்கும். நம்ம காலம் சரியா இல்லேனா நம்ம விதிய நாமலே நொந்துக்கிட்டு போக வெண்டியதுதான். இன்னைக்கு தமிழ் மக்கள் இப்படித்தான் வாழனும்னு நினச்சா பொழைக்க முடியாது. எப்படியும் வாழலாம்னு முடிவு பண்ணிட்டா அப்பறம் அவன் வளர்ச்சிய நிறுத்த முடியாது. கண்கூடான சாட்சிகள் பல இருக்குது. யாராவது மறுத்து பாருங்களேன் பார்ப்போம்  
by A Asok,Chennai,India    25-03-2010 10:24:09 IST
 தேர்வை மறுமுறை வைத்தால் மிகவும் நன்று. சில பேர் இரவு ,பகலும் படித்து இருப்பார்கள். அதை சற்றும் நினைக்காமல் பேசக்கூடாது .வினாதாள் முறைபடி அச்சிடவில்லை .வசுந்தராதேவி மேடம் நீங்கள் நன்றாக யோசிங்க .உங்கள் மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தால் உங்களுக்கு அந்த கஷ்டம் புரியும் ,தெரியும் . 
by s Nagarajan,madurai,India    25-03-2010 10:24:03 IST
 Dear Students god is with your self,be happy all the best for next exams  
by v uma,Coimbatore,India    25-03-2010 10:07:59 IST
 புல் மார்க் வழங்க வேண்டும் ................. 
by A SHANKAR,MALE,Maldives    25-03-2010 09:43:01 IST
 சரி.போன வருஷம் மாத்ரி இந்த வருஷமும் மெட்ரிக் தமிழை முதலில் ஆரம்பித்து ரெண்டு நாள் கழித்து டென்த் தமிழ் ஆரம்பித்து இருந்தால் இந்த குளறுபடி வந்திருக்காது பாடம் மாறி இருந்தால் சரியான வினாத்தாளை ஹாலில் பையனே கேட்டு வாங்கிக்குவான் ஹால் வாத்தியார் தப்பு தப்பா வினாதல் கொடுத்தாலும் பையன் தனக்கு உள்ளதை கேட்டு வாங்கி சரியாய் எழுதிடுவான்  
by s swaminathan,chennai,India    25-03-2010 09:42:06 IST
 ஒரே ரூமில் இரு பிரிவினரையும் உட்கார வைக்க வேண்டாமே ............... இதெல்லாம் எங்க யோசிக்குறாங்க................... 
by பாலாஜி.S,kanchipuram,India    25-03-2010 09:35:41 IST
 நம் கல்வி முறைய்யிய சரியானது அல்ல, இதில் குளறுபடிகள் வேறு.....  
by M கோபால்,chennai,India    25-03-2010 09:32:21 IST
 பொறுப்பற்ற ஆசிரியர்களை வைத்து என்ன செய்ய முடியும். மண்ணைக் கூட அள்ள முடியாது.  
by g அழகுநம்பி,qatar,India    25-03-2010 09:15:16 IST
 engalukku inta vaipu kidaikala atanaltan nakal irandu attempet elutinum........ 
by R Diwansha,dubai,UnitedArabEmirates    25-03-2010 09:14:24 IST
 பேசாம தேர்வே நடத்தாமல் இருந்தால் என்ன ?? மாணவர்களுக்கு மதிப்பெண் இலவசம் என்று அறிவித்து விட்டால் போயிற்று. இலவசத்துக்கு பேர் போனவர்கள் தானே.முதல்வர் கவனிப்பாராக.  
by kilavansethu,c,India    25-03-2010 09:01:58 IST
 சுந்தர் சொன்னது மிக அருமையான யோசனை. இத இனி வரும் எக்ஸாம்ல் பயன் படுத்தினால் எந்த விதமான குளறு படியும் நடக்காது  
by M ரேணுகா தேவி,coimbatore,India    25-03-2010 08:56:58 IST
 ஒக்காந்து யோசிச்சி ஊழல் பண்றவங்க நாம்ப. எனக்கென்னவோ ஏதோ ஒரு பெரிய இடத்துல ஏதோவொரு ஒப்பேறாத புள்ளையாண்டான் இருக்கணும். அவன எப்படியாவது பாஸ் பண்ணவைக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சிருப்பய்ங்க. எத்தன கேள்வில தப்பு விட்டா எத்தன இலவச மார்க் கொடுத்து எப்புடி சரிகட்டலாம்னு 'பிளான்' பண்ணி செய்ஞ்சிருக்காய்ங்க போல. எதயும் 'பிளான்' பண்ணி தான செய்யணும் 
by MANNANDHAI,India,India    25-03-2010 08:48:38 IST
 மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்  
by r razin,malaysia,India    25-03-2010 08:31:36 IST
 Request to all Teachers, They are preapraing the exam day and night , such like this confusion happen it will affect their future exams. Treat this childeres are your infant babies. 
by K.V Kumar,Doha,Qatar    25-03-2010 08:21:20 IST
 This situation student may need strong confidence to face against them and don't loose your concentration on coming exams. it is fully made wrong by Education department. Government need to check throughly all the question paper before disseminate to the respected School. 
by P தனகோபால்,Singapore,India    25-03-2010 08:10:37 IST
  pls punish the examiners that's the rt decision and they should not repeat it again 
by J Nishamohan,AngMoKio,Singapore    25-03-2010 08:07:12 IST
 getting passmark in tamil subject is not a big task for students.Assuring to give passmark from the official side is such a funny and non sense thing...they,officers concerned must be punished not only that also students must be given marks as the best of they got in school irrespective of portions in exam...because in many schools tamil will be taught very early and not revised regularly..so many will study only before public exams...no compensation can be given to the students..only solution can be re test for the concerned exam...and the incident can affect the mentality of students to face the coming exams and create un necessary fears and reduces their confidence level chance is there for average students like this may happen  
by S சத்திய Seelan,Salem,India    25-03-2010 07:52:07 IST
 வினா தாளின் மேல் பகுதியில் எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் மெட்ரிக் என்றும் அச்சிடவில்லை, மற்றும் இரண்டு பாட திட்டங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் , மாணவர்களாலும் எளிதில் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே ஆசிரியர்களே தவறுதலாக மாற்றி கொடுத்திருந்தாலும் மாணவர்கள் கண்டுபிடிதிருந்திருப்பர். எனவே, கேள்வி தாளில் வருடம், மாதம், எந்த பிரிவு மாணவர்களுக்கு உரியது என்று இனி வரும் காலங்களில் மறக்காமல் அச்சிட வேண்டும். பாதிக்க பட்ட மாணவர்களுக்கு , உரிய மதிப்பெண்கள் அவசியம் அளிக்கப்பட வேண்டும். அதற்கு உறுதி அளிக்க வேண்டும். அப்போதுதான் இனி வரும் தேர்வுகளில் அந்த மாணவர்கள் கவலை படாமல் எழுத முடியும்.  
by V. Sundar,chidambaram,India    25-03-2010 07:45:41 IST
 There are more than 4 lakh students writing 10th exam. There are 20 thousand teachers are alloted for supervising work. Human error may happen in some places. We should know why it happen. Many of the private schools having both matric and state board students. They want their student should write in their own campus. So Matric and stateboard students are mingled in a same room. There is nothing writen in the top of the question paper about the Matric or State board. So the teacher get confused. Before the commencement of exam the Chief Supervisor and the Departmental officers should instruct the supervisors about the difference in question paper and answer sheet. The Examination department should think about the seperate Exam center for matric students. Think about these things. Don't blame everyone without knowing the reason. Each and every field some mistakes happen. It was not lightened to the society.  
by P Elangovan,villupuram,India    25-03-2010 07:38:48 IST
 இந்த விஷயத்தை இவ்வளவு பெரிய விஷயமாக மாணவர்கள் ஆக்கி இருக்க வேண்டாம். வினா தாள் மாறி இருப்பதை பார்த்த உடனேயே தெரிந்து இருக்குமே அறை கண்காணிப்பாளரிடம் சொல்லி இருந்தால் மாற்றி தந்து இருப்பார்கள். சினிமாவ நம் மாணவர்கள் சரியாய் பார்பார்கள். வினா தாளை சரியாக பார்க்க மாட்டார்கள்.  
by H SYLVESTERRAJ,trichy,India    25-03-2010 07:19:33 IST
 கேள்விதாள் அச்சிட்டதில் தவறு உள்ளது, கேள்வித்தாளின் மேல் பகுதியில் எஸ்.எஸ். எல். சி, என்றும் , மெட்ரிகுலேசன் என்றும் அச்சிடவில்லை. அச்சிட்டிருந்தல் இந்த குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் .எனவே இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் .  
by V.. Sundar ,Chidambaram,India    25-03-2010 06:45:53 IST
 all the edu ministry can do is stop them from failing. There is no second thought that the teachers and who ever responsible for this to be punished. The Palayankottai school is one of state rank school. But asking for 100 marks is not accepatable. Its the same book and qns all come from the same book. For the students, its going to be the same and they hadn't find no problem. All the reports say they found that only after discuss with other friends. It will be better to add a bonus mark of 20-25 would be enough as the students were able to answer all the questions. Also the schools should provide training to students to check the qn papers, as I am sure govt now giving 5 extra minutes for this. So settle the issues soon and let the kids continue other exams 
by ani,Trichy,India    25-03-2010 06:37:25 IST
 கண்கள் கலங்கி கனவுகள் தவிடு பொடியாகி போன நிலையில் நிற்கும் அந்த இரண்டு மாணவ செல்வங்களை பாருங்கள்.தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அம்மா அவர்களே 'மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு ஆசிரியர்களைக் கொண்டு, இந்த 29 விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்.' அப்படின்னு சொல்லி இருக்கிங்களே அது என்ன நியாயம் ?அப்படி திருத்தப்படும் முறை நல்ல முறையா?உங்களை நீங்களே மனசாட்சியுடன் கேட்டு பாருங்கள் ( ஒரு வேலை மனசாட்சி இருந்தால் )பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன நிலையை யோசித்து பார்த்தீர்களா?இனிவரும் தேர்வுகளை சரிவர அவர்களால் எழுத முடியுமா? அவர்களுக்கு ஏற்பட்ட மனவுளைச்சல் மற்ற பாடங்களையும் பாதிக்குமே?( மாணவர்களின் நிலை பற்றி யோசிக்க உங்களுக்கு ஏது நேரம் ?).மாணவர்களை மையப்படுத்தி கல்வி போதிக்கவே உங்களால் முடியாத போது இதை எல்லாம் எங்கே யோசிக்க போகின்றீர்கள்? உங்களை பொறுத்த மட்டில் எப்படியாவது ஒரு முடிவை எடுத்து இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்தால் போதும் என்பது தானே?மானசெல்வங்களுக்கு  
by Dr.R. ரவீந்திரநாத் நேரு Ph.D.,VilathikulamPUDUR,India    25-03-2010 06:27:22 IST
 பாதிக்கப்பட்ட மாணவர்கள், சம்பந்தபட்ட பாடத்தில் தோல்வி அடையாமல், தேர்ச்சிக்குரிய மதிப் பெண்கள் அளிக்கப்படும் என்பதை விட வேறு தேர்வு வைப்பதே நல்லது. மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
by Ajith அஜித்,Singapore,Singapore    25-03-2010 04:35:48 IST
 மாணவர்கள் இதை மறந்துவிட்டு அடுத்த தேர்வுகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.  
by b கிருஷ்ண மூர்த்தி,england,India    25-03-2010 04:16:27 IST
 ''குளறுபடி'' என்று மிகவும் சுலபமாக சொல்லிவிடல்லாம் ,ஆனால்,அங்கே பாதிக்கப்படுவது மாணவர்களே.அவர்களின் எதிர்கால கனவுகள் அனைத்தையும் தீர்மானிப்பது முதல் தேர்வுதான்.அதி காரிகளின் மெத்தனப்போக்கை தயவு செய்து மாணவர்களிடம் காட்ட .வேண்டம்.இது என் பணிவான வேண்டுகோள்.நன்றி. 
by n easwaran,subangjaya,Malaysia    25-03-2010 03:48:11 IST
 தேர்வு மையங்களில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். தனியார்பள்ளி அசிரியர்களையும் நேரடியாக தண்டிக்க அரசுக்கு உரிமை அளிக்க சட்டம் கொண்டுவரவேண்டும் .முதலில் அசிரியர்களுக்கு கடமை உணர்வு வேண்டும் .  
by S KADHIRESAN,SANKARI,India    25-03-2010 03:38:20 IST
 எஸ்.எஸ் எல் சி மற்றும் மெட்ரிக் தேர்வுகளை காலையில் ஒரு பிரிவிற்கும் மதியம் ஒரு பிரிவிற்கும் நடத்தினால் இந்த குழப்பத்தை தவிர்க்கலாமே  
by S KADHIRESAN,SANKARI,India    25-03-2010 03:22:34 IST
 இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு ஒரு கட்சி போராட்டம் நடத்துகிறது என்று வைத்து கொள்வோம் உடனே யாருக்காவது ஓசியில் பிரியாணி சாப்பிட விருப்பாம் என்றால் உடனே அவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டால் ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பிரியாணி கொடுப்பது காவல் துறை வழக்கம் அது போல யாராவது ஆசிரியருக்கு விடைத்தாள் திருத்தம் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படவேண்டும் என்று விரும்பினால் இப்படி (வினாத்தாள் குளறுபடி) செய்யலாம் ஒரு சினிமாவில் கூட ஒருவரை காவல் அரெஸ்ட் பண்ண வரும் போது 'நானே வர்கேறேன் அங்கு இலவச உணவு கிடைக்கும் என்று சொல்வது போன்று பள்ளி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வது கடைந்து எடுத்த கையால் ஆகாதனம் ஏன் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து சய்யாகூடாது?  
by B Jagannathan,NewYork,UnitedStates    25-03-2010 02:48:49 IST
 கல்வி கற்று தரும் ஆசிரியர்களே! இனியாவது பொறுப்போடு செயல்படுங்கள். நீங்கள் செய்யும் இதுபோன்ற தவுறுகளால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறி ஆகிவிடுகிறது. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.... கல்வி கற்பித்தல் ஒரு சேவை , தயவு கூர்ந்து அதை ஒரு தொழில் ஆக நினைக்காதீர்கள்.... 
by Sathish,Chennai,India    25-03-2010 02:37:47 IST
 This is not correct decision. In that 29 students anyone can win the first place. so please make big issue for this. Dinamalar please use your voice & send big quote to government for this issue. Because may be one or more young person life is included in this issue. Please do something for this i am begging to dinamalar. thanks senthil. 
by k senthil kumar,sharjah,UnitedArabEmirates    25-03-2010 01:45:09 IST
 Dear All, Why are you punish these innocent students. Kindly provide 100/100 for those subjects. These students were preparing for the examination for the whole year and if you change the questions will it make any sense. Punish the examiners and those who are involved in this issue. Please do not punish students. Kindly give 100/100 for the subject. Regards Paulraj, Mexico 
by P பால்ராஜ்,Guadalajara,Mexico,Mexico    25-03-2010 01:34:22 IST
 ஆமான்யா.... சாமி. குடுங்க ப்ளீஸ். பாவம் சின்னபசங்க. ரொம்ப பயந்து போச்சுங்க. ஏதோ நாலு வளந்து கெட்டவனுக பண்ணின பாவம் அந்த சின்னசிறிசுங்க மேல விடிய வேண்டாம். அந்த இண்டர்வல்-ல போண்டா திங்குற ஆசிரியர்களுக்கு வேணா தகுந்த தண்டணைய கொடுங்க.  
by k கைப்புள்ள,nj,India    25-03-2010 01:23:13 IST
 நான் கூட இப்படித்தான் பத்தாம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டேன் (பத்து வருடத்துக்கு முன்பு ) எனக்கும் பாஸ் மார்க் போடுங்க மேடம் . கேள்வித்தாளை தவறாக கொடுத்த அந்த வாத்தி களை ஒரு பத்து நாள் சம்பளம் இல்லாமல் வேலை செய சொல்றத விட்டு விட்டு ......................இதல்லாம் வெட்டி வேலை  
by s இம்சைஅரசன்,madurai,India    25-03-2010 00:32:09 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்