முதல் பக்க செய்திகள் 

மோடி அல்லது காங்கிரசுக்கு சொந்தமல்ல குஜராத்: அமிதாப்
மார்ச் 27,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : 'குஜராத் மாநிலம், நரேந்திர மோடிக்கோ அல்லது காங்கிரசுக்கோ சொந்தமானது அல்ல. அது, இந்தியாவின் ஒரு அங்கம்' என, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


மும்பையில், கடல் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்கும்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு, மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டது. இதையேற்று, அமிதாப் அந்த விழாவில் கலந்து கொண்டார்.இதற்கு, காங்கிரசில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத் மாநில பா.ஜ., அரசின் சுற்றுலா பிரதிநிதி பொறுப்பில் உள்ள அமிதாப் பச்சனை, காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடக்கும் விழாவுக்கு எப்படி அழைக்கலாம் என, அவர்கள் குறை கூறினர். இதற்கு அமிதாப் காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது:நான் விழாவில் கலந்து கொண்டதற்காக சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது என் மீதான வெறுப்பின் காரணமாக நடக்கவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மீதுள்ள வெறுப்பு காரணமாக, சிலர் இதுபோல் கூறியுள்ளனர். நரேந்திர மோடியை அவர்களுக்கு பிடிக்காதது தான் இதற்கு காரணம். குஜராத் சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக, அம்மாநில அரசு சார்பில் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள் ளேன். அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தான் இந்த பொறுப்பை ஏற்றேன். நரேந்திர மோடிக்காக அல்ல.


மேலும், குஜராத் மாநிலம் நரேந்திர மோடிக்கோ, காங்கிரசில் உள்ள தனிப்பட்ட சில நபர்களுக்கோ சொந்தமானது அல்ல. அம்மாநிலம் இந்தியாவின் ஒரு அங்கம். நரேந்திர மோடியை பிடிக்கவில்லை என்பதற்காக, என்னை விமர்சிப்பது சரியல்ல.குஜராத்தில் தொழில் நிறுவனங்கள் அமைத் துள்ள அம்பானி போன்றவர்களை, அங்கு தொழில் செய்ய வேண்டாம் என கூற முடியுமா?இவ்வாறு அமிதாப் கூறியுள்ளார்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஒரு பிரபலமானவரை தூதுவராக போட்டால் சுற்றுலாதுறை வளரும் என்ற முறையில் மோடி எடுத்த நடவடிக்கை அரசின் கடமை. அமிதாப் அதை ஏற்றுகொண்டது குஜராத்தின் முன்னேற்றத்திற்காக என்பதைவிட பணம் கிடைப்பதால் என்பதுதான் சரி. இதை எதிர்ப்பது போலி மதசர்ப்பின்மை மட்டுமல்ல, வைற்றேரிசெலும் கூடத்தான். 
by t vinoth,Hyderabad,India    27-03-2010 20:21:36 IST
 well said. Big B is only one celibrity who can talk sensibly even in Live shows. 
by V கார்த்திக்,Muscat,Oman    27-03-2010 19:14:51 IST
 ஆட்சியாளர்களை மக்கள் தெரிவு செய்து ஆளும் உரிமையை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்,அவ்வளவு தான்,அமிதாப்பச்சனை அழைத்த அந்த அமைச்சரின் பெருந்தன்மையை கண்டிப்பாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பாராட்டியே ஆக வேண்டும்,இதில் இந்த மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே இந்தியன் என்பதை தவிர வேறொன்றும் தர பிரிப்பு கூடாது,இந்திய மண்ணில் பிறந்த அனைவரும் அழைக்க படவேண்டியவர்கள்,யாரும் வேண்டாதவர்கள் இல்லை இதை அனைவரும் உணர வேண்டும்,...  
by k thiru,chennai,India    27-03-2010 15:56:52 IST
 nonsense சினிமா காரர் - becz you are not talk about Mumbai. very bad character.  
by suresh,Dubai,India    27-03-2010 14:09:46 IST
 I AGREE WITH THE COMMENTS OF MR.H.RAM/LONDON. ONCE AGAIN AND AGAIN I REQUEST DINAMALAR DO NOT PRINT THE VIEWS OF CINEMA PEOPLE. EVERY COMMENT IS THEIR DRAMA ONLY 
by G. SUNDARARAMAN,T,India    27-03-2010 10:25:27 IST
 மிக சரியாக சொன்னிர்கள். நல்லது செய்ஞ்ச யாருக்கு பிடிக்கும். குஜராத் டூரிசம் எப்படி முன்னேறலாம் நு எல்லாருக்கும் போராமை.  
by A அந்தோனி Joseph,Chennai,India    27-03-2010 10:09:11 IST
 உப்பு விற்ற காசு கரிப்பது இல்லையே? என்பது போல் உள்ளது. சினிமா காரர் சொல்லுவது ஒரு கருத்தே இல்லை. ஏன் இன்னும் சினிமா காரர் பேட்டிக்கு முக்கியத்துவம் கொடுகிறோம் என்று தெரிய வில்லை ? 
by h ram,london,UnitedKingdom    27-03-2010 02:24:30 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்