முதல் பக்க செய்திகள் 

சானியா-சோயப் மாலிக் திருமணம்?
மார்ச் 30,2010,00:00  IST

Front page news and headlines today

ஐதராபாத் : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் திடீரெனநிச்சயதார்த்தம் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.


இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், ''சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக்-சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும். வரும் ஏப்ரல் 16 அல்லது 17ம் தேதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2வது திருமணம்?பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக், கடந்த 2002ம் ஆண்டு தொலைபேசி மூலம் ஐதராபாத்தில் உள்ள ஆயிஷா சித்திக் என்பவருடன் நிச்சயம் மேற் கொண்டு, பின்னர் அதே ஆண்டு ஜூன் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சோயப் மாலிக் இதனை மறுத்திருந்தார்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 பொதுவாகவே ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் கிரிக்கட் போன்ற விளையாட்டு தொடர்ப்பு கொள்வது அதன் மூலம் இருநாட்டு கலாட்சாரத்தை பகிர்ந்து கொள்வது,இருநாட்டுக்கு மத்தியில் நல்லுறவு,வர்தகம் போன்ற வுறவுகளை பேணிக்கொல்வதே மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.அந்த வகையில் இங்கு சானியா மிர்ஸாவும், ஸுஐப் மாலிக்கும் விளையாட்டு வீரர்கள்.இங்கு இந்த இருவரின் திருமண வாழ்க்கை மூலம் இந்தியா,பாகிஸ்தான் நல்லுறவு நீடிக்கவும் ,இருநாட்டிலும் தீவிரவாதம் அடியோடு நீக்கப்பட்டு இருநாட்டு மக்களும் நிம்மதியாக வாழவும்,ஆசியாவில் இருநாடும் சிறந்த அன்டை நாடாக சிறக்கவும்,பொருளாதாரத்தில் இருநாடும் சிறந்தோங்கவும் இனிய மணமக்கள் எல்லா நலமும் ,வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இந்திய,பாகிஸ்தான் வுறவு சிறந்தோங்க எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.ஆமீன். 
by Ibnusalih.,Abudhabi,uae.,India    31-03-2010 03:07:34 IST
 கண்ணா அருள், ரொம்ப நடுநிலைவாதியா பேசுறதா நெனப்பு, நேத்து ஹைதராபாத்ல என்ன நடந்ததுன்னு செய்தி படிச்சீரா? old city அப்டின்ற இடம் முஸ்லிம்கள் ஏரியா. 3 ஹிந்துவ போட்டு தள்ளிட்டாங்க. சானியா மிர்சா ஒரு ஹிந்து பையன கல்யாணம் பண்ணிருந்தா நீங்க சொல்ற மாதிரி மத நல்லிணக்கம் உருவாகி இருக்கும். உள்ளூர்ல உள்ள பிரச்சனைய பாக்கலயாம் இந்த அம்மா, பாகிஸ்தான்ல மாப்ள பாத்து, இந்தியாவுக்கு நல்லுறவு வளர்க்க போராங்களோ??? அதுவும் ஏற்கனவே ஒரு பையன நிச்சயம் பண்ணி அவனுக்கு அல்வா குடுத்துட்டு.. சீ சீ.  
by R சிவா,hyderabad,India    30-03-2010 23:56:29 IST
 எப்படியோ கல்யாணம் நடந்தா சரி !  
by N krishnakumar,Anthiyur,India    30-03-2010 23:10:43 IST
 சானியா இனி எங்கும் விளையாட முடியாது. ஏனென்டால் பாகிஸ்தான் பர்தா போடாமல் விளையாட விடாது. அரசாங்கம் எல்லா சலுகைகளையும் உடனே நிறுத்த வேண்டும். 
by M ஆண்டோ டேவிட் ராஜ்,Kansascity,UnitedStates    30-03-2010 22:36:35 IST
 ஒரு வேளை ரெண்டு நாட்டையும் ஒண்ணு சேர்க்குற முயற்சியில இருக்கிறாரோ என்னவோ  
by sudhir,bangalore,India    30-03-2010 22:22:07 IST
 why this comments wait and see 
by ss bala,dubai,India    30-03-2010 20:50:18 IST
 த‌மிழ் நாடில் பிர‌ப‌ல‌மாக‌ இருக்கும் ஒருவ‌ர் சிங‌கள‌னை ம‌ண‌ந்தால் அர‌சிய‌ல்வாதிக‌ளும் ப‌த்திரிகைக‌ளும் சும்மா விடுமா ? இது ஒரு இந்திய‌ர் பாகிஸ்தானியை மணக்க‌வில்லை...ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை மண‌க்கிறார். இஙகு ம‌த‌ம் முக்கிய‌ம்...நாடு இல்லை.  
by அர‌விந்தன்,Coimbatore,India    30-03-2010 20:50:06 IST
 Dear Arul, Prabhu - 100 % correct, good we are try to change the status one by one  
by mr பக்ரௌடினே,india,India    30-03-2010 19:22:55 IST
 வாழ்க! வளமுடன்! 
by M Karthik,Kerala,India    30-03-2010 19:20:03 IST
 சானியா மிர்சாவை ஒரு முகமதிய பெண்ணாக நாம் பார்க்க வில்லை . அவர் நமது இந்தியாவின் விளையாட்டு வீரங்கனையாக நாம் பார்த்து வந்தோம் . அவரின் வெற்றி இந்தியாவின் வெற்றி அவரின் தோல்வி இந்தியாவின் தோல்வி என நாம் பார்த்து வந்தோம். அவர் ஒரு பாகிஸ்தான் வீரரை மனம் செய்தால், நமது மனம் புண்ணாகி விடுகிறது .அவருக்கு நாம் செய்த சலுகைகள் கொடுத்த உரிமைகள் வீண். மேலும் அவர் திருமணத்துக்கு பின் அரேபியா வாசி ஆகி விட்டால் , இந்தியராக நீடிக்க முடியாது.  
by s esspee,trichi,India    30-03-2010 18:56:14 IST
 Mr. Mohd.Ali, சானியா மிர்சா வரன் எடுப்பது சொந்த விஷயமே. அனால், அதை நமது எதிரி நாட்டுடன் செய்துகொள்வது நமக்கு இழிவே. உலகில் இந்தியா தான் அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடக உள்ளது. இங்கு இல்லாத படித்த நாகரீகம் அறிந்த இஸ்லாமியர்கள் உலகில் எங்கும் இல்லை. இரண்டாவது, பாகிஸ்தானியர்கள் நம் சினிமாவையும் கலாச்சாரத்தையும் போற்ற காரணம் அங்கு அது இல்லை என்ற ஏக்கமே. சானியா ஒரு (பாகிஸ்தான் மட்டும் அல்ல) எதிரி ஒரு நாட்டு ஆண்மகனை திருமணம் செய்தால் அதை எதிர்க்க வேண்டும். இதனால் நல்லுறவு வளரும் என்று கனவு காண வேண்டாம். நல்லுறவு அரசியல் வாதிகளின் கைகளில் மட்டுமே உள்ளது. மூன்றாவது, சானியாவின் டென்னிஸ் கனவு இந்த திருமணத்துடன் முடிந்து விடும். ஏன் என்றால் மேலே சொன்னது போல பரந்த மற்றும் படித்த மக்கள் இந்தியா வில் தான் உள்ளனர்,. 
by v srinivasen,uk,UnitedKingdom    30-03-2010 18:29:33 IST
 பாகிஸ்தான் ஒரு தீவிரவாதிகள் குடியிருக்கும் நாடாக இருக்கலாம். அதற்காக பகிஸ்தானியர் அனைவரயும் தீவிரவாதிகள் என சொல்ல முடியாது. சானியா மிர்சா, சோயப் மாலிக் திருமணம் அவர்களின் சொந்த விஷயம். இதில் இரு நாட்டு உறவுகள் பற்றி பேசுவது....தேவையில்லாதது. என்னை பொறுத்தவரையில் நமது இரு நாட்டு பிரச்சினைக்கும், இவர்களின் திருமணதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை....சானியா மிர்சா, சோயப் மாலிக் வாழ்க பல்லாண்டு 
by S.J Prabhu,Madurai(Dubai),India    30-03-2010 18:18:59 IST
 There is no Musilim Boys in India,Very, very shame to Musilim boys in India. 
by v ram,UAE,UnitedArabEmirates    30-03-2010 18:13:44 IST
 இனி அவள் இந்தியாவுக்கு ஆடுவாளா? இல்லை பாகிஸ்தானுக்கா? 
by hari hari,ulundurpet,India    30-03-2010 18:09:36 IST
 சகோதரர் அருள் அவர்களுடைய கருத்து உண்மையானது. எல்லா வற்றிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர்  
by Nowshath,Chennai,India    30-03-2010 18:03:59 IST
 Best wishes for the marriage. Pakistan people are good its all because of selfish பொலிடிசியன்ஸ் we hate pakistan .. வீடு( இந்தியா & பாகிஸ்தான் ) ரெண்டு பட்டா குதடிக்கு( அரசியல் வியாதிகள் ) கொண்டாட்டம் . 
by p Asokh,sydney,Australia    30-03-2010 17:49:53 IST
 we wish them for their great future as its their personal,but sure condemn incase of any future problem between countries because of their personal. And sure we will ask you ,not find any correct person for you in india. 
by R Kanthan,Dubai,India    30-03-2010 17:43:28 IST
 அருள் உங்கள் கமென்ட் படிkfபதற்கே சந்தோசமாக உள்ளது. அனைவரும் நல்லவரே, யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரயும் தவறாக நினைக்க வேண்டாம் 
by s சுஜா,karur,India    30-03-2010 17:30:49 IST
 ஏன் சானியா இந்தியரை திருமணம் செய்யவில்லை சிந்திக்க ............ 
by s ganapathi,chennai,India    30-03-2010 16:48:06 IST
 இது ஒரு ஆரோகியமான விஷயம், இருவருமே அவரவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். வாழ்த்துக்கள். 
by m shajuas,Coimbatore,India    30-03-2010 15:43:59 IST
 நடுநிலையோடு கருத்து தெரிவித்த சகோதரர் அருள் அவர்களுக்கு நன்றி.... இது நம்பகமான செய்தி அல்ல....... அதற்க்கு முன் வார்த்தைகளை விடாதீர்கள் நண்பர்களே...... 
by a.s. ஆயங்குடி முஹ்சின் ali ,alkharj,SaudiArabia    30-03-2010 15:21:29 IST
 கொஞ்சம் கூட தேசப் பற்று இல்லாமல், ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றிய பாகிஸ்தானியை திருமணம் செய்ய சானியா மிர்சாவுக்கு இப்போது என்ன அவசியம் வந்தது? இனி அவள் இந்தியாவுக்கு ஆடுவாளா? இல்லை பாகிஸ்தானுக்கா?  
by JS நிர்மலா,Muscat,Oman    30-03-2010 15:02:02 IST
 So she or her parents doesn't found any guys in India all this time. What happened to her old boy friend?  
by j bnard,dubai,UnitedArabEmirates    30-03-2010 14:29:46 IST
 சாதாரண குப்பனுக்கு பெண் கொடுபதற்கே பெற்றவர்கள் யோசிக்கும் பொது, சோயாப் மாலிக் போன்ற, டீம் எ சீர்குழைக்கும் வீரர்கள் எப்படி நம் ஊர் பொன்னை காப்பாற்ற போறனோ..கடவுளே சானியாவை காப்பாற்று.Shoiab is not a good person at all..definitely he will play with sania's life. 
by s பாலசுப்ரமணியன்,Bangalore,India    30-03-2010 13:09:14 IST
 பிறந்த வீட்டில் இருந்து, பிரிந்த வீட்டுக்கு சானியா போகிறார். அது புகுந்த வீடாயினும், உண்மையில் அது பிறந்த வீடுதான். வாழ்த்துக்கள். முந்தைய இந்திய/ பிந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்போல, ஷோயப் மாலிக் நடக்காமல், இந்திய ரத்தம் இந்திய ரத்தத்துடன் கலக்கட்டும். ஒற்றுமையாக வாழட்டும்.  
by RK வாசன்,Muscat,Oman    30-03-2010 13:06:22 IST
 பெரிய ஆளாக வருவதற்கு நமது நாடு குடிபோவதற்கு வேறு நாடு இது நம் நாட்டின் பண்பாடு அய்யா பெரியோர்களே இவர்கள் கல்யாணம் நடப்பதக்கு வாழ்த்துக்கள்  
by SUBBU SUBRAMANIAN,uruvampatti,India    30-03-2010 11:53:35 IST
 பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதி. ஆனால் எதிரி நாடு என்றளவிற்கு அரசியலும், மீடியாக்களும் உருவாக்கிவிட்டது. இது போன்ற திருமணங்களின் மூலம் நல்லுறவை வளர்ப்போம்.  
by R VIMALA,JURONG,Singapore    30-03-2010 11:01:48 IST
 Biggest Indian Topper Comes Home - Pak 
by S Sham,India,India    30-03-2010 10:20:30 IST
 சானியாவிற்கு வாழ்த்துக்கள்  
by Mr Ashiq,Chennai,India    30-03-2010 10:13:35 IST
 WELL SAID Mr.ARUL(UK)... ONLY THE POLITICIANS MAKE FUN OF THIS FELLOW PEOPLE.... DON KNOW WHEN LL THEY ARISE.. 
by citizen of india,tamilnadu,India    30-03-2010 10:07:09 IST
 இங்கு பிரிவினை வாதம் பேசும் அன்பர்களே . ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். saniya mirza வரனை தேர்ந்தெடுப்பது அவரது சொந்த விஷயம். இதனால் இந்திய பாகிஸ்தான் உறவில் எந்த மாற்றமும் வரபோவதில்லை, கவலை வெண்டாம். Mr. Arul அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவையும் இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தையும் மிக உயர்வாக மதிக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இது தெரியும். மனித நேயம் என்பது மதத்திற்கும் நாட்டிற்கும் அரசியலுக்கும் அப்பாற்ப்பட்டது. 
by mohammed ali,mali.2702@gmail.com,India    30-03-2010 10:01:08 IST
 இது நல்ல ஜோடி தான். ஆனால் இந்தியாவில் சானியாவுக்கு பிடித்த ஆண்கள் இல்லையா. என்ன கொடும சார் இது....... 
by r ragu,coimbatore,India    30-03-2010 09:55:49 IST
 யாரோ சம்பாதிக்கும் நோக்கத்தோடு வெளியிட்ட தவறான செய்தியாக கூட இது இருக்கலாம். அதனால் உண்மையான தகவலை அறிந்த பிறகே இதைப்பற்றி கருத்து கூறமுடியும். 
by s மகாதேவன்,villupuram,India    30-03-2010 09:30:33 IST
 வேஸ்ட் சானியா, வேற ஆம்பளைங்களே கிடைக்கலையா ,கல்யாணத்துக்கு அப்புறம் பாகிஸ்தானில் இருக்கட்டும். அப்போ தான் புரியும் இந்தியாவின் பெருமைகள். 
by gs ram,bangalore,India    30-03-2010 08:53:45 IST
 அடி பாவி, பாகிஸ்தானை விட பல கோடி இஸ்லாமியர்கள் வாழும் இந்தியா திருநாட்டில் ஆண்மகன்கள் கிடைக்கவில்லையா?  
by இந்தியன் ,கீழக்கரை,India    30-03-2010 08:37:16 IST
 மேற்கு வங்கத்திலே சில மத வாத அமைப்புகள் சானியாவின் உடைகளை விமரிசித்து வீட்டுக்குள் அடைக்க முற்பட்டன. பாகிஸ்தானில் தாலிபான்களாலும் மற்றைய மத சக்திகளாலும் உயிருக்கு ஆபத்தில்லாமல் இருந்தால் சரி.  
by J குப்பன்,Theni,India    30-03-2010 07:13:05 IST
 சானியா மிர்சா பாகிஸ்தானில் குடியேற வாழ்த்துக்கள். வளர்த்து விட்ட நாட்டுக்கு அவர் செய்யும் நன்றி அவர் புகுந்த வீட்டாரை இந்திய நாட்டுக்கு எந்த காரணத்தை கொண்டும் தன்னுடன் கொண்டு வராமல் இருப்பதுதான்.  
by R ரவி,Chennai,India    30-03-2010 06:40:28 IST
 முதலில் இது வெட்ககேடான விசயம். அவருக்கு இனியாவது அரசாங்க உதவியை நிறுத்த வேண்டும் . 
by வீர் ,coimbatore,India    30-03-2010 06:35:05 IST
 பாகிஸ்தானியரும் ஒரு காலத்தில் இந்தியரே... பிரிந்து சென்றாலும் சகோதர உறவு மாறாது... நான் இந்தியாவில் இருந்தவரை பாகிஸ்தானியர் என்றால் எதிரியாக தான் நினைத்தேன். இன்று இங்கிலாந்தில் உள்ளேன். எனது நெருங்கிய நண்பர்கள் யார் என்றால் பாகிஷ்தானியரும், பங்களாதேஷியரும் தான். பேசி பார்க்கும் போது தான் தெரியுது... அவர்கள் இந்தியாவை எவ்வளவு விரும்புகிறார்கள் என்று. நல்லவர், கெட்டவர் எல்லா இடத்திலும் உள்ளனர்.. என்னை பொறுத்தவரை மக்கள் அமைதியை தான் விரும்புகிறார்கள்.. அரசியல்வாதிகள் தான் மக்களை மாக்கள் என்று நினைகிறார்கள். மனிதன் இடத்தால், மதத்தால், கலாச்சாரத்தால் வேறுபடுகிறானே தவிர மனத்தால் ஓரளவிற்கு ஒரே மாதிரி தான் உள்ளான்.  
by Arul Tamilkudimagan,Birmingham,UnitedKingdom    30-03-2010 05:26:11 IST
 சானியாவுகு இந்திய ஆண்மகன் தகுதி இல்லையா. வாழ்க பாரதம்  
by s Anwar,chennai,India    30-03-2010 04:52:46 IST
 பாகிஸ்தானில் சானியா கால் சட்டையுடன் விளையாண்டால், தலிபான்கள் சானியா காலை ஒடித்துவிடுவார்கள். பாவம் அந்த பொண்ணு...ஜாக்கிரதை. இந்தியாவில் வேறு ஒரு முஸ்லிமே கிடைக்கவில்லையா?சானியா பாகிஸ்தானுக்காக விளையாண்டு ஜெயிச்சாலும், எங்களுக்கு பெருமையே.  
by ravi,toronto,Canada    30-03-2010 04:09:14 IST
 nalla jodi valtthukkal 
by a nazeebkhan,tamilnadu,Iraq    30-03-2010 02:13:26 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்