முதல் பக்க செய்திகள் 

அணு உலை விபத்து மசோதா: இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி
ஏப்ரல் 03,2010,00:00  IST

Front page news and headlines today

வாஷிங்டன் : அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதாவை இந்தியா நிறைவேற்றியாக வேண்டும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அமெரிக்காவும், இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, அணு உலை விபத்து காப்பீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த மாதம் இந்த மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய முயன்ற போது, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேறவில்லை. இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் குறிப்பிடுகையில், 'அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது, அணு உலை விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவதாக இந்தியா எங்களுக்கு உறுதியளித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை எந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசு தான். இருப்பினும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக இந்திய அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது' என்றார்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 NOTHING TO WORRY, AMERICA HAVE SEVERAL MINISTERS IN OUR CABINET THEY WILL LOOK AFTER THEIR MASTERS'' VOICE 
by RASHI ruskeen,muscat,Oman    04-04-2010 00:07:26 IST
 we have misunderstood. This law passing by our parliament is very important, otherwise, American Companies can not supply the lastest technology equipments in Nuclear energy to India. It is something, we have to decide by our parliament, that In case of Nuclear accident in the supply, how the compensation responsiblity will be shared. This is pure economics. It is up to us to decide whether we need latest technology at what cost. However, Suppliers will not supply equipment with out this law in place. All countries have enacted this law prior to supply of equipments from USA and other western nations. Regards S.Murugesan.  
by S MURUGESAN,Lagos,Nigeria,Nigeria    03-04-2010 21:53:51 IST
 well done Manmohan.....Singh .. India can Never Forget you ...  
by B கண்ணன்,chennai,India    03-04-2010 21:27:07 IST
 அணு உலை விபத்துக்காப்பீடு என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக சொல்லியிருக்கலாம். விபத்து நடந்தால் பாதிக்கப் பட்டமக்களுக்கு நஷ்டஈடு கொடுப்பது சம்பந்தமாக என்றால் இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது. இது நல்ல விஷயம் தானே.? 
by R பாலா,singapore,Singapore    03-04-2010 20:43:31 IST
 எல்லாவற்றையும் கொடுங்கள் எங்களையும் சேர்த்துதான். மிகவும் கேவலமாக இருக்கிறது, எவனோ போடுகிற பிச்சைக்கு ஒரு நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் கை ஏந்த வைக்கிறார்கள். அய்யா சாமி உங்கள் வேலையை சரியாக செய்யங்கள் அது போதும் எங்களுக்கு.  
by g அழகுநம்பி,qatar,India    03-04-2010 19:39:16 IST
 well said daran..முதலாளித்துவத்தின் புத்தியே அது தான். 
by s stalin,manchester,UnitedKingdom    03-04-2010 12:06:50 IST
 இந்த மாதிரி அமெரிக்காவின் மிரட்டல்களை இந்தியா பொருட்படுத்தக் கூடாது. அணுகுண்டு சோதனையின் போது அமெரிக்கா வி்டுத்த மிரட்டல்களை இந்தியா திறமையாக சமாளித்தது இன்றும் பெருமைப்பட வைக்கிறது. அரசே இந்தியாவின் கௌரவத்தை காப்பாற்று. கோழைத்தனமாக நடந்து இந்தியாவை தலைகுனிய வைக்காதே. ஒரு வல்லரசுவை போன்று செயல்படு. 
by R ராஜா ராமன்,tuticorin,India    03-04-2010 09:01:51 IST
 இன்னும் போக போக நிறைய ஆச்சரியங்களா? அதிர்ச்சிகளா? இன்னும் என்ன என்ன கொடுமைகளுக்கு நம்மை ஆளாக்கி வைத்திருக்கிறார்களோ?  
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    03-04-2010 08:42:29 IST
 நாங்க தான் காட்டு கத்தல் கத்த வேண்டியது இருக்கு. ஆனால் தலைப்பாகை அமைச்சருக்கு காதை பொத்தியதால் கொஞ்சம் மந்தமாக தான் புரிய வரும். அமெரிக்கா எல்லாவற்றிலும் பல மடங்கு லாபம் இல்லாமல் எந்த உதவியும் செய்யாது. நீங்கள் முக்கியமான ஒப்பந்தம் போடும் முன் எல்லாவற்றையும் தெளிவாக பேசி அறிந்து ஒப்பந்தம் போட வேண்டும். இவர்கள் அமெரிக்கா உடன் போடும் ஒப்பந்தங்களையே எதிர் கட்சிகள் சட்ட சபையில் ரகளை செய்து தான் அதன் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அமெரிக்கா உடன் நட்பு என்று சொல்லி தரையில் கால் படாத அளவுக்கு காங்கிரஸ் காரர்கள் துள்ளி குதிக்கிறார்கள். அவர்களுடன் நட்பு என்பது தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், விஞ்சான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், கல்வி, உள் கட்டமைப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி இறக்குமதி என்ற அளவில் இருப்பது நல்லது. நீங்கள் ஆயுத தளவாடம், அணு உலை என்ற அளவில் போனால் நிச்சயமாக அவர்கள் பல பிரதி பலன்களை நம்மிடம் எதிர் பார்ப்பார்கள். அணு உலை ஆய்வு, ராணுவ தளவாடங்கள் ஆய்வு, அமெரிக்க ராணுவ தளம் அமைத்தல் என்ற அளவில் போய் அது முடியும்.  
by c சாமி ,bangkok,Thailand    03-04-2010 05:49:28 IST
 உன் வீட்ட நான் கொளுத்துவேன் அதக்கு நீ ஆதரவு கொடுக்கணும்.- அமெரிக்கா. ???????- இந்தியா 
by siraj,jubail,SaudiArabia    03-04-2010 02:02:31 IST
 இது சும்மா ஆரம்பம்தான் .இன்னும் போக போக நிறைய ஆச்சரியங்கள் தெரிய வரும். ஒட்டு மொத்த இந்தியாவை பிச்சைக்காரர்களாகவும்,அடிமைகளாகவும் ஆக்குவதுதான் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.வல்லரசு நாடான ரஷியாவையே கூறு போட்டவர்கள் அமெரிக்கர்கள். 
by Daran,Chennai,India    03-04-2010 01:32:14 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்