முதல் பக்க செய்திகள் 

சோயப் பாஸ்போர்ட் முடக்கம்; கைது ஆவாரா? அதிரடி திருப்பங்கள்
ஏப்ரல் 06,2010,00:00  IST

Front page news and headlines today

ஐதராபாத் : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணக்க உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை, ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்து முடக்கினர். வரதட்சணை கொடுமை, மிரட்டல், திருமண மோசடி உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த நேரத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் சர்ச்சையை கிளப்பினார்.தனக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே, 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (506), திருமண மோசடி(420), வரதட்சணை கொடுமை (498, ஏ) உள் ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


'பாஸ்போர்ட்' பறிமுதல்: இதில் அதிரடித் திருப்பமாக, திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க, சானியா வீட்டுக்கு வந்த சோயப் மாலிக்கிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.


இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் கூறியதாவது: மாலிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. சானியா வீட்டில் உள்ள மாலிக், போலீசாருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அப்போது சானியாவும் உடனிருந்தார்.மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது 'பாஸ்போர்ட்' மற்றும் மொபைல்போன் தற்போது எங்கள் வசம் உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதை விமான நிலைய மற்றும் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளோம்.மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும். இப்பிரச்னைக்கு 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டியுள்ளது.இவ்வாறு திருமலா ராவ் கூறினார்.


அதே சமயம் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஆயிஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலிக்கை ஆயிஷா திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் உண்மை தானா என்பதை கண்டறிய இந்த சான்றிதழ், நாசிக்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. ஆயிஷா, 2000ம் ஆண்டு மாலிக்கை சந்தித்தது தொடர்பான, 'சிடி'க்கள் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.


ஆயிஷாவுக்கு கருச்சிதைவு: சோயப்புடன், ஆயிஷா உடலுறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கருவுற்று பின்னர் அபார்ஷன் செய்து கொண்டார். கர்ப்பம், கருச்சிதைவு செய்து கொண்டது இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் போலீசிடம் அளித்துள்ளோம் என, ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், 'சோயபும், ஆயிஷாவும் ஐதராபாத் ஓட்டலில் தங்கியிருந்த போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் அவரது மனைவி சங்கீதாவும், சோயப்புக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்' என்றார்.


ஆயிஷாவின் வக்கீல் டபிள்யு ரஹ்மான் குறிப்பிடுகையில், 'ஆயிஷாவை சந்தித்ததேயில்லை என்கிறார் மாலிக். ஆனால், இருவரும் 2002ம் ஆண்டு முதல் 12 முறை சந்தித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்துள்ளோம்' என்றார். ஆயிஷாவுடன் சோயப் இருக்கும் போட்டோ படங்களையும் நிருபர்களிடம் காட்டினார்.


ஆனால் சோயப் மாலிக் நிருபர்களிடம், ' நான் ஒன்றும் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் வயது 18, அப்போது ஆயிஷாவை 'ஆபா' (அக்காள் என்று அர்த்தம்) என்று தான் அழைப்பேன். அவர் ஏன் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார்' என்று கேட்டார்.


அருகில் இருந்த சானியா , எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எதிர்காலக் கணவர் பற்றி இப்படி எல்லாம் தகவல் வெளிவருவது பரபரப்பாக இருக்கிறது' என்றார்.


ஒத்துழைப்பு: சோயப் மாலிக் குறிப்பிடுகையில், 'போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அதுவரை இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன். நானும், சானியாவும் கவுரவமான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். ஆயிஷாவுடன் திருமணமானது தொடர்பான கேள் விக்கு பதில் சொல்வது, எங்களுக்கு கஷ்டமாக உள்ளது' என்றார்.


பாக்., உதவ தயார் : சோயப் மாலிக்குக்கு எந்த உதவியையும் செய்ய அந்நாட்டு அரசு காத்திருக்கிறது என, பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரங்களை இந்திய ஹைகமிஷனிடம் அந்நாட்டு அரசு கோரியுள்ளது.இதற்கிடையே ஆயிஷாவின் தந்தையின் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டிலும் மாலிக் மீது திருமண மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மாலிக்குக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மாலிக் தான் செய்த ஊழல் பணம் ஒன்பது கோடி ரூபாயை சானியாவிடம் கொடுத்துள்ளதாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஜென்ம புத்தி செருப்பால் அடிச்சாலும் போகாது . சானியா நிருபிச்சிவிட்டார் ! 
by ka விஜயகுமார்,singapore,India    06-04-2010 21:55:36 IST
 இந்திய கலாச்சாரத்தை உலக நடுகளின் மத்தியில் சீரழித்த சானியாவை பத்திரிகைகள் புறகணிக்க வேண்டும்  
by R kalappaiya,singapore(jurong),India    06-04-2010 20:41:14 IST
 இங்க கமெண்ட்ஸ் எழுதுரவனுங்களுக்கு ...மனசே கிடையாதா.? ஏன்டா உங்களுக்கு காதல் ன்னா என்னன்னே தெரியாதடா..? ராஜீவ் காந்தி ஏன்டா இத்தாலி காரிய மணக்கணும் இந்தியாவுல பொண்ணுங்க இல்லேன்னா..? அதான்டா காதல்...இனிமேலாவது மரியதையா கமெண்ட்ஸ் பண்ணுங்க....சானிய மிர்சா ...மாலிக் பற்றி கமெண்ட்ஸ் அடிக்கிறதுக்கு முன்னாடி உன் குடும்பத்த பாருங்கடா ... 
by M ராஜா குவைத் ,kuwait,India    06-04-2010 20:14:33 IST
 ஒருவேளை இரண்டும் சொந்தக்கார பயபுள்ளைகளாக இருக்குமோ ?  
by R மனித குமரன் ,Madurai,India    06-04-2010 19:37:36 IST
 திருமண வாழ்த்துக்கள்  
by v விசு,luanda,angola,Angola    06-04-2010 18:40:16 IST
 Let''s all welcome this Love (Kaadhal will always be beyond all limits and boundries). Its for time India should get and receive brides from Pak for for young and talented cricketers, Yusuf and Irfan pathans and for all common people. Let''s build the good relationship between countries. Globalization is in effect and reduce the global warmming. 
by R manithan,MukuudalNagar,India    06-04-2010 18:27:57 IST
 Hello Ayesha, did ayesha not find a guy in india?? if she married, Till yesterday what was she doing. does she has selective amnesia to forget their marriage. You dont want money from (Malik)him, then you can go for divorce. Hence we feel- Ayesha want to screw Sania and Shohib''s happiness. God Bless Ayesha too 
by j பிரேம்,Bangalore,India    06-04-2010 17:01:48 IST
 This news is more important to India. Press grow up. Who care about those two idiot. 
by ks சிவா,Chennai,India    06-04-2010 16:11:04 IST
 ஏண்டி சானியா இப்படி அலையிரையே உனக்கு வெக்கமா இல்ல  
by N கண்ணன்,kovilpatti,India    06-04-2010 16:09:27 IST
 சானியா நீ சீட் பண்ணுறதுக்கு இந்தியா என்ன பாகிஸ்தான் நு நேனைச்சயா.. உன்ன நாடு கடத்த போரும் ........ 
by S சைதை சீனுவாசன் ,Chennai,India    06-04-2010 15:34:37 IST
 இது அவர்களுடைய சொந்த முடிவு, லீவ் தெம் அலோன்.  
by fahim,dubai,India    06-04-2010 15:21:31 IST
 hay sani unaku ipo சனி.......... April 15 th ur marriage.இது நெலைகது ......... அடுத்து சானியா C.D தான்........நித்யானந்தா......... r u redy......... 
by Indian,portsaid,Egypt    06-04-2010 14:33:14 IST
 யார் யாரோடு திருமணம் செய்தால் இந்தய மக்களுக்கு என்ன? இந்த விபகாரத்தில் மீடியாக்கள்தான் குழப்புகின்றன. இதைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பதால் பருப்பு அரிசி கோதுமை போன்ற உணவு தானிய விலைகள் குறையப் போகிறதா? இந்தயாவில் விளையும் கோதுமைகளில் இருபத்தைந்து சதவிகிதம் பஞ்சாப் மாநிலத்தில் விளைகிறது. இந்த வருடம் மார்ச்மாத வெய்யலால் உற்பத்தி குறையும் என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன வழி அதை சிந்த்யுங்கள். இவர்கள் திருமணத்தால் இந்தய பாகிஸ்தான் உறவு பலம் போகிறதா? ஒன்றும் இல்லை. சானியாவிடம் அதிக வெற்றியை இந்தய மக்கள் எதிர்பர்த்தர்கள். அதுவே முதல் தவறு. டென்னிசில் வெற்றி பெற்றால் அவர்கள் பணம் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் அவர்களை சார்ந்த நாட்டுக்கு என்ன லாபம்? இவர் இந்த்யர் என்ற முத்திரையில் உலமெல்லாம் பயணம் செய்தார். அவர் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளட்டும் அது அவர் சொந்த விபகாரம். மீடியாக்களில் இருப்பவர்களே இதை விட்டுவிட்டு வாருங்கள் நம் சொந்த வேலையைப் பார்ப்போம்.  
by R. கோதண்டபாணி ,Chennai,India    06-04-2010 13:56:19 IST
 சானியான்னு ஒருத்தி இந்தியாவில் இருந்தாள் என்பதை மறந்து சனியன் ஒழிந்தது என்று தலை முழுகிவிட்டு இனிமேல் தயவுசெய்து அந்த தேச த்ரோஹியின் செய்தியை வெளியிடாதிர்கள்  
by RSN ராஜு,india,India    06-04-2010 13:37:47 IST
 யாம் இருக்க பயம் ஏன்? நான் உன்னை கல்யாணம் பண்ணி கொள்கிறேன்  
by g vinoth,dindigul,India    06-04-2010 12:59:01 IST
 நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் 
by mr அன்பன்,jeddah,SaudiArabia    06-04-2010 12:36:38 IST
 An additional information about saniya mirza. She has another case for not respecting our national anthem in a government function. maybe she like pakistan than india. 
by r ganesh,chennai,India    06-04-2010 12:31:55 IST
 அணைத்து இந்தியர்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயல் இது  
by m gunasekar,cuddalore,India    06-04-2010 12:29:14 IST
 வாட் இஸ் தி ப்ரோபெல்ம் இப் ஷி இஸ் கோயிங் டு மேரி வித் மாலிக்.  
by n na,ma,India    06-04-2010 12:25:26 IST
 ராஜீவ் காந்தி கூட இத்தாலிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு என்ன 60 கோடி பெண்களில் ஒருத்தர் கூட கிடைக்க வில்லையா? இப்பொழுது இன்டர்நெட் வந்த பிறகு தெருவுக்கு ஒரு ஆணும் பெண்ணும் மற்ற மாநிலத்தவரையும், நாட்டவரையும் திருமணம் செய்யும் நேரம். இது எல்லாம் அவர் அவர் விருப்பம். இதில் தலையிட வேண்டாம்.  
by N Thameez,Pondicherry,India    06-04-2010 12:14:21 IST
 தயவு செய்து அவங்க சொந்த வாழ்க்கையில் மீடியா தலையிடுவதை நிறுத்துங்கள்.. 
by yaaro,engeyo,India    06-04-2010 12:02:31 IST
 உனக்கு நல்லா தேவை தாண்டி. சாவு. நீ இந்திய பெண்ணே இல்ல . போயி தொலையட்டும் சனியன் பாகிஸ்தானுக்கு. இந்தியா நல்லா இருக்கட்டும்  
by HBK,Chennai,India    06-04-2010 11:26:23 IST
 கல்யாணம்கறது அவங்க அவங்களோட தனிப்பட்ட உரிமை அதுலே இவ்ளோ விமர்சனம் வேண்டாமே. ?! நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கிறப்ப யாரு யாரே கல்யாணம் பண்ணினா என்ன? பாகிஸ்தானுக்கு ஒரு டென்னிஸ் பிளேயர் இந்தியவின் அன்பு பரிசு. வேற நல்ல ஒரு டென்னிஸ் ப்ளேயர உருவாக்குங்கப்பா. தட்ஸ் ஆல். இப்பயே அந்த பொண்ணு சரியாய் விளையாடுறது இல்ல. கல்யாணத்துக்கப்பரம் எப்படி நல்லா விளையாடும். லூஸ்ல விடுங்கப்பா  
by G பிரேம்GI,BANGALORE,India    06-04-2010 11:20:56 IST
 அது என்னமோ தெரிலைங்க நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு வெளி நாடு பசங்கல ரொம்ப பிடிக்குது. அவன் அமெரிக்கால toilet கழுவுனா கூட இவுங்களுக்கு ஓகே ... ஏன் அப்படீன்னு யாருகாவது தெரிஞ்ச சொல்லுங்க ,, கலரா...??? பணமா...??? நம்ப ஊரு பசங்க எல்லாம் fair அண்ட் lovely use பண்ணுங்க. அப்போவாவது இவுங்களுக்கு புடிகுதா பாப்போம்  
by j wisher,india,India    06-04-2010 11:10:35 IST
 சானியா, ஒருநாள் இந்திய திருநாற்ற்க்கு பதில் சொல்ல வேண்டும் . உன் முடிவை மாற்றிகொள் இல்லையேல் சந்தி சிரித்துவிடும். நீ ஒன்றும் டென்னிஸ்ல பெரிய ஆளாய் வரலை. குட்டை பாவாடை போட்டு பெரிய ஆளாய் வந்தவள். உடம்பை காட்டி வந்தவளுக்கு இப்படித்தானே புத்தி போகும். மற்றிக்கொள் உன் எண்ணத்தை  
by k purushothaman,jurongwest,Singapore    06-04-2010 11:07:01 IST
 adiye சானியா, நான் உனக்கு ஒரு கோடி தரேன், என்னை கல்யாணம் பண்ணிகிரியா ?  
by er muruganandam,baharain,Bahrain    06-04-2010 10:31:11 IST
 இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருத்தரை கூட சானியா மிர்சா விற்கு பிடிக்க வில்லைய? போயும் போயும் எதிரி நாட்டு கிரிக்கெட் வீரரை தான் கல்யாணம் செய்து கொள்வதா?. இல்லை!. இல்லை.!! இந்திய அரசு சானியா இனிமேல் இந்தியாவிற்காக விளையாடுவதை அனுமதிக்க கூடாது. இந்திய உணர்வு கொஞ்சம் கூட இல்லாத சானியா & shoaib பத்தி செய்தியை பத்திரிகைகள் புறகணிக்க வேண்டும்.  
by N Dhanabalan,Chennai,India    06-04-2010 10:21:08 IST
 இந்திய கலாச்சாரத்தை உலக நடுகளின் மத்தியில் சீரழித்த சானியாவை நாடு கடத்த வேண்டும்.  
by jana,turban,India    06-04-2010 09:55:30 IST
 மொதல்ல பாகிஸ்தானிய கல்யாணம் பண்ண நட்ட விட்டு வெளியில அனுப்புங்க அப்பதான் சாணி நாத்தம் அடிக்காது .......... !!! 
by S ராஜ்,abudhabui,India    06-04-2010 09:36:12 IST
 அடி சானியா உனக்கு என்ன பைத்தியமா? என்ன இல்லை இந்த திருநாட்டில். ஏன் ஏந்த வேண்டும் கொலை நாட்டில். எங்க ஊருல வீட்டை விட்டெ ஓடிப்போன பெண்ணையே ஊரில் சேர்ப்பது கிடையாது. நீயோ நாட்டையே விட்டு ஓடுகிறாய் ஏன். இந்தியாவை விட அப்படி என்ன சுகம் கண்டாய் பாகிஸ்தானிடம் (மாலிக்), கருமண்டா, நாட்டையே துண்டாட நினைக்கும் தீவிரவாத நாட்டுடன் நீ மட்டும் உறவாட நினைக்கிறாய், நமது ஊரில் மனபென்னை எல்லோரும் வாழ்த்துவார்கள். ஆனால் உன்னை.....................  
by m sivamathi,dubai,India    06-04-2010 09:27:33 IST
 Hai Saniya We all are Indians.So dont Cheat our Country.Soon after birth we are telling the first word Ammaa.Why u r having the thought to Leave our country.Be Bold as an Indian.Be proud of our Country.Because India is a Nice Country.U r not a Small Child.U know very well about our Country.So Be with India.Marry a Good Person From India.Allthe Best.Bye.  
by N EzhilRajan,Singapore,India    06-04-2010 08:28:40 IST
 'சானியா இப்போ நீ நாசமா போனியா'. 
by v.x. செபாஸ்டின் ,abudhabi,India    06-04-2010 08:00:33 IST
 ஐயா தயவு செய்து இருவரையும் கல்யாணம் செய்ய விடுங்கையா. டேய் நித்தியானந்தா சிக்கிரம் அடுத்த cd விடுயா அதற்குள் கல்யாணம் முடுந்து விடும்.  
by s சிவசங்கர்,trichy-4,India    06-04-2010 07:50:06 IST
 டெலிபோன் திருமணம், ஒருவன் பல பெண்களை மணப்பது அதற்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம். பூசி மொழுகும் இன்னொரு கூட்டம். எல்லாமே நாறுது போங்கள். சீய்... தூ... 
by J குப்பன்,Kovai,India    06-04-2010 07:26:13 IST
 அப்படி போடு அருவாளை. மீடியாக்களுக்கு நல்லதீனி. நான் முன்னாடியே சொன்னேன். இது வெறும் திருமண பிரச்சினை மாதிரி தெரியவில்லை என்று. இதில் பல திருப்பங்கள் வர காத்திருக்கின்றன. மாலிக்கிற்கு எந்த துன்பமும் இந்தியாவில் இது வரையில் இல்லை. இருந்தாலும் பாகிஸ்தான் அரசாங்கம் நேரடியாக தலையிடுவதோடு மிகவும் உன்னிப்பாக பார்த்து கொண்டு இருக்கிறது. அவர்களை பொறுத்த வரையில் இந்தியாவிலிருந்து எதை பிரித்து கொண்டு வந்தாலும் கொண்டாடுவார்கள். அது காஷ்மீராக இருந்தாலும், பஞ்சாபாக இருந்தாலும், சானியாவாக இருந்தாலும் ஒன்றுதான்.  
by c சாமி ,bangkok,Thailand    06-04-2010 06:43:46 IST
 நானும் கொஞ்ச நாளா பாத்துகிட்டு தான் வரேன். இந்த 'சானியா மிர்சா' பொண்ணு 'சாணிய மிதிச்சா' பொண்ணு மாறி நாத்தம் பண்ணிக்கிட்டு இருக்கு. இவளுக்கும் இவ அப்பன் ஆத்தாளுக்கும் எப்போ பாத்தாலும் மீடியா கவனம் நம்ம மேல இருக்கனும்ன்னு போதை போல இருக்கு. இதுங்கல எல்லாம் மீடியா போதை ஆட்டுவிக்கிறது போல இருக்கு. ஒழுங்கா அமைதியா குடும்ப தலைவியா வாழனும் நினைகிறவள் இந்த மாறி சந்தைய கூடி வியாபாரம் பண்ண மாட்டாள். கௌரவமா ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகி இருப்பா. டென்னிஸ் கோச்சிங் சென்ட்டர் ஆரம்பிச்சு இருப்பாள். புகழின் உச்சியில் இருந்த பி.டி உஷா, சைனி வில்சன் இவங்க எல்லாம் இவ மாறியா ஊரை கூட்டி சினிமா காட்டினாங்க. ஏன் அவங்க எல்லாம் கௌரவமா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகல. நம்ம ஆளுங்க தான் இவள ஓவர்-ஆ தூக்கி விட்டு வேடிக்கை பாத்துகிட்டு இருக்காங்க. வெத்து வேட்டு சாணி மிதிச்சா.  
by k கைப்புள்ள,nj,India    06-04-2010 01:52:30 IST
 ஆஹா..இது வினோதமான கேசாவுள்ள இருக்கிறது..தொலைபேசிமூலம் திருமணம்!!திருமணத்திற்கு பின் கடந்த எழு வருடத்தில் 12 முறைமட்டுமே சந்தித்துள்ளனர்..இந்த வினோத தம்பதிகள்!!!விசாரணையை இன்னும் முடுக்கி விட்டால்..பல அற்ப்புத தகவல் கிடைக்கும் போல இருக்கிறதே.இவர்களுக்கு பின் நிறைய மர்ம பின்னணி இருக்கும்,நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.அதுவரை இவர்கள் கூறும் அதிசய தகவல்களை நாம் ரசிப்புடன் சகித்துகொள்வோம். 
by A ஜீவா ,Maldives,Maldives    06-04-2010 00:31:40 IST
 சானியா மிர்சா சாணிய மிதிச்சுட்டா  
by JSD CHRISTOPHER,Dubai,UnitedArabEmirates    06-04-2010 00:25:05 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்