முதல் பக்க செய்திகள் 

கிடப்பில் சசி தரூர் விவகாரம் : கருத்து தெரிவிக்காமல் காங்., மவுனம்
ஏப்ரல் 16,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : 'ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஏலம் தொடர்பான புகாரில், மத்திய அமைச்சர் சசி தரூருக்கு எதிராக ஆதாரம் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், அது பற்றி வேறு எதுவும் கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது.


ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பில், அடுத்த ஆண்டு முதல் கொச்சி அணியும் இடம் பெறுகிறது. இந்த கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை, மத்திய அமைச்சர் சசி தரூரின் தோழியான சுனந்தா புஷ்கர் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அமைச்சர் சசி தரூர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என புகார் கூறப்பட்டது. சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'நான் டில்லி திரும்பியதும், சசி தரூர் மீதான புகார்கள் குறித்த உண்மை நிலவரங்களை விசாரிப்பேன். அவற்றில் உண்மை இருந்தால், சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


இந்நிலையில், நேற்று பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''சசி தரூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதனால், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சசி தரூரும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் அளித்துள்ளார்; நாங்கள் எதையும் கூற முடியாது,'' என்றார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியை நேற்று சசி தரூர் சந்தித்துப் பேசினார். முப்பது நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சசி தரூர், ''கிரிக்கெட் அணி விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் கேட்டுக் கொண்டால், பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கும்படி யாரும் எனக்கு உத்தரவிடவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் நான் தெளிவாக உள்ளேன்,'' என்றார். நேற்று முன்தினம் இரவும் அந்தோணி மற்றும் பிரணாப் முகர்ஜியை சசி தரூர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மோடி மீது புகார்: 'ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்பந்தத் தின் பேரில், கொச்சி அணி மீது அடுக்கடுக்காக புகார்களை கூறி வருகிறார்' என, கொச்சி அணியின் தகவல் தொடர் பாளர் சத்தியஜித் கெய்க்வாட் கூறியுள் ளார். அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அணியின் பங்குதாரர்கள் பெயர்களை வெளியிட்டதைப் போல, மற்ற அணியின் பங்குதாரர்கள் பெயர்களையும் லலித் மோடி வெளியிட வேண்டும். கம்பெனி சட்டப்படி, இதர ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்கள் விவரங்களையும் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் தெளிவாக உள்ளோம். எதையும் மறைக்கவில்லை. எங்கள் அணியைப் பற்றி லலித் மோடி தொடர்ந்து புகார் தெரிவித்தால், அவரைப் பற்றிய பல விவரங்களை நாங்கள் வெளியிட நேரிடும்.


குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில், கொச்சி அணியின் உரிமையாளர்களை லலித் மோடி துன்புறுத்துகிறார். கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆதாரம் பற்றி விசாரணை நடத்தினால், மற்ற அணிகளின் நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆமதாபாத் ஐ.பி.எல்., அணிக்கு ஆதரவாக வெளியேற வேண்டும் என, குஜராத் முதல்வர் மோடியும், லலித் மோடியும் அடானி குரூப்புடன் இணைந்து எங்களை நிர்பந்தம் செய்தனர். போட்டியிலிருந்து விலக எங்களுக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு கெய்க்வாட் கூறினார்.


சோனியாவுடன் ஆலோசனை: ஐ.பி.எல்., கொச்சி அணி ஊழல் புகாரில் சிக்கிய, மத்திய இணையமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நடந்த சம்பவங்களை விவரித்தார். அதனால், அவரின் பதவி இப்போதைக்கு பறிக்கப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்க மறுத்து விட்டாலும், தன் தரப்பு நியாயங்களை சசி தரூர் எடுத்துக் கூறியிருக்கலாம் என, நம்பப்படுகிறது. சசி தரூர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி இடையே உடன்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து தரூருக்கு எதிராக செயல்படுவதாகவும் சில தரப்பில் கூறப்படுவதால், இப்போதைக்கு தரூரின் பதவிக்கு ஆபத்தில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் கூறின.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்த IPL ஒரு பிராடுதணம், அத பார்பது பயித்தியகாரதணம்.... 
by S Sabarinair,cbe,India    16-04-2010 23:44:43 IST
 கிரிக்கெட்டை மக்கள் மேல் திணித்து ஒளி பரப்பி சூதாட்டம் செய்கிறார்கள் .அரசியல் சினிமா திருடர்கள் பணம் சம்பாதிக்க போட்டி .மக்களே எப்ப கிரிக்கெட் மோகத்திலிருந்து வெளியில் வருகிரிரகளோ அப்பத்தான் உங்கள் பாக்கெட்க்கு நல்லது .இல்லைனா இப்படிதான் சசி தருரும் லலித் மோடியும் அடிசிக்கரத்தை வாயிலே விரல் வச்சி கொண்டு பார்க்க வேண்டியதுதான்  
by sumba sumban,chennai,India    16-04-2010 16:29:37 IST
 யோவ் சசி, நீ பெரிய கில்லாடி யா. நான் அவன் இல்லை மாதிரி ஆகுது. 3 மனைவிகள், I P L காசு, மந்திரி பதவி, வாழ்க்கைய அனுபவி மாமே. 
by P பேச்சு சிங்கம்,Sharjah,UnitedArabEmirates    16-04-2010 15:55:16 IST
 while mr SASI appears to be tainted in the whole affair because of his friend -connection, media is making a mountain out of mole!there are v. big case like spectrum, bofors etc,, where no final action appears to have been taken place,mr sasi is learning his lessons , since he left the country 30years before!! natarajan 
by s natarajan,chennai,India    16-04-2010 11:23:22 IST
 என்னது கோபாலபுரத்துக்கு வந்து சசிதரூர் பயிற்சி எடுக்க வேண்டுமா?. நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. அப்படி ஒன்று நடந்தால் நமக்கெல்லாம் கோவணம் கூட மிஞ்சாது ரிஸ்வான் பாய்.  
by M Amanullah,Dubai,UnitedArabEmirates    16-04-2010 11:06:12 IST
 நல்ல வேலை சசி தரூர் ஐநா சபை தேர்தலில் தோற்றான். சசி தரூரை ஐநா பொது செயலாளராக நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது  
by D Selvam,Dubai,India    16-04-2010 10:06:28 IST
 எல்லாருமே திருடர்கள். பின் எப்படி காட்டி கொடுபர்கள் . 
by s sundar,nammakkal,India    16-04-2010 09:04:51 IST
 மல்லுக்களிடம் உள்ள ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை. தரூரை காப்பாற்றுவது யாரு ? 
by km சொர்ணாக்க ,Chennai,India    16-04-2010 08:10:39 IST
 அடுத்த 5 ஆண்டுகள் தேடுவார்கள் ஆதாரத்தை. என்ன கொடுமை சார் இது  
by T KASIRAJAN,angmokio,Singapore    16-04-2010 07:08:59 IST
 நம் அனைவருக்கும் தெரிந்த குட்டரோசி என்ற ஒரு அந்நியன் நமது பாதுகாப்பு துறையில் செய்த ஊழலும், அவனை இன்றுவரை சட்டத்தின் முன் நிறுத்துவதாக கூறி காங்கிரஸ் நடத்தும் நாடகமும் நாம் அறிந்ததே. சசி தரூர் என்ற அந்நிய உளவாளியை காங்கிரஸ் வெட்டி விடாமல் விட்டு வைத்தல் மந்திரி பதவியில் இருக்கும் இவன் குடோரோசியை விட கோடி கணக்கான பணத்தை சுருட்டி கொண்டு தன மனைவிகளுடன் வெளிநாட்டில் தலை மறைவு ஆவதற்கு வாய்புகள் அதிகம். இதற்கான புகழ் சோனியாவிற்கே சேரும்.ஜெய் ஹிந்த்.  
by S Balan,Seremban,Malaysia    16-04-2010 06:53:06 IST
 திரு சனி(சசி)தரூர் உமக்கு பொழைக்க தெரியலை. அடிகடி சர்ச்சையில் சிக்கி கொள்கிறிர்கள்,இப்போ ஐபிஎல் மூலம் உங்கள் பெயர் பிரபலம் ,உங்கள் பெயர் கெட கூடாது. ஆனால் பணமும் கொட்டனும். அதுக்கு ஒரு வழி இருக்கு. உங்கள் கட்சி கூட்டணியில் இருக்கும் கலைஞர் வசம் ஒரு மாதம் வந்து எப்படி பெயர் கெடாமல் ஊழல் செய்து பணம் சேர்க்கலாம் எப்படி வியாபாரத்தில் பினாமி மூலம் முதலீடு செய்யலாம். பல வித்தைகளை கலைஞர் வசம் வந்து பயிற்சி எடுத்தால் நீங்கள் இன்னும் நல்லா வராலாம்,ஆனால் ஒரு கண்டிசன் அவரிடம் வித்தையை கற்றுகொள்ளும் முன்பு அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கனும். நமீதா நடனம் இருக்கணும் .வாருங்கள் கோபாலபுரத்துக்கு. வந்தாரை வாழவைப்பர் கலைஞர்,தமிழக மக்களை தவிர.  
by GB ரிஸ்வான் ,jeddah,SaudiArabia    16-04-2010 05:55:23 IST
 முதலில் இந்த சசி தரூரை பதவியில் இருந்து மட்டும் அல்ல கட்சியில் இருந்தே வெளியேற்ற வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே இவரின் நடவடிக்கைகள் சரிஇல்லை! இவரால் மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லை. கட்சிக்கும் கெட்ட பெயர்! சோனியா அவர்களே உடனடியாக நடவடிக்கை எடுத்து நாட்டின் மானத்தை காத்திடுங்கள்.  
by p sekar,dammam,SaudiArabia    16-04-2010 01:51:16 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்