முதல் பக்க செய்திகள் 

ஐ.பி.எல்., தலைமையகத்தில் 'ரெய்டு' : வருமான வரித்துறையினர் அதிரடி
ஏப்ரல் 16,2010,00:00  IST

Front page news and headlines today

மும்பை : கொச்சி அணியின் பங்குகள் தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பமாக, மும்பையில் உள்ள ஐ.பி.எல்., தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.


இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டது. மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் தற்போது நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 2011ல் கூடுதலாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட உள்ளன.


கொச்சி அணி சர்ச்சை: இந்தச் சூழலில் கொச்சி அணியின் உரிமையாளர்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்., அமைப்பில் ஏராளமான கருப்பு பணம் புழங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் ஐ.பி.எல்., அமைப்பின் வரவுகள் பற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப் பட்டது. இதன் ஒரு பகுதியாக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பி.சி.சி.சி.ஐ., அலுவலகத்தில் இருக்கும் ஐ.பி.எல்., தலைமையகத்தில் வருமான வரித் துறையின் 4 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது ஐ.பி.எல்., அமைப்பின் நிதி குளறுபடிகள் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. இதனை அதிகாரிகள் கைப் பற்றியதாக கூறப்படுகிறது.


மும்பை பிரிவு: ஐ.பி.எல்., அமைப்பின் நிதி தொடர்பான விபரங் களை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் தனிப்பிரிவு ஒன்று மும்பையில் உள்ளது. இதன் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' வருமான வரி சட்டம் 133(6)ன் கீழ் தகவல்களை பெறும் நோக்கில் தான் ஐ.பி.எல்., அலுவலகத்துக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். இதனை சோதனை என்று சொல்ல முடியாது. நிதி முறைகேடு நடந்துள்ளதா, கருப்பு பணம் புழங்குகிறதா, அன்னிய முதலீடு உள்ளதா என்று தான் ஆய்வு செய்தனர்,''என்றார்.


மோடி விளக்கம்: அதிகாரிகளின் சோதனை செய்தியை கேட்டதும் மும்பை அலுவலகத்துக்கு விரைந்த லலித் மோடி கூறுகையில்,''இது 'ரெய்டு' அல்ல. வெறும் விசாரணை தான். இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப் போம்,''என்றார்.


மோடியின் கடைசி இன்னிங்ஸ்: ஐ.பி.எல்., அமைப்பின் தலைவராக உள்ள லலித் மோடியின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. இவரது அதிகாரத்தை குறைக்கும் நோக்கில் பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர், விரைவில் ஐ.பி.எல்., அமைப்பின் துணை தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இதற்கு வரும் 23ம் தேதி நடக்க இருக்கும் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.


2 மணி நேரம் விசாரணை: மும்பை வோர்லி பகுதியில் உள்ள லலித் மோடியின் அலுவலகத்துக்கு சென்று வருமான வரித் துறை அதிகாரிகள், சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ஐ.பி.எல்., தொடரின் கணக்குகள், கொச்சி அணியின் விவகாரம் பற்றி சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மோடி திணறிப் போனாராம்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Cricket has become a moneyspinner and cricketting world has become a vicious circle of moneymongers - whether small or big. All the properties, cash, etc. etc. of the BCCI/IPL/Local Cricket Assns. should be confiscated and added to the National Exchequer to make good the budget deficit. 
by V Somasundaram,Dubai,UAE,India    18-04-2010 17:38:27 IST
 Hi Rasu , DONT TELL anything without knowing fully.... IPL MODI IS LALIT MODI... He is different from Narendra Modi... There is no relation between the two.... Stop Spoiling the name of Narendra Modi...... He is the gem of the person... there is not even a single charge on him for corruption.... 
by karthik,Chennai,India    16-04-2010 21:55:55 IST
  WE NEED GOOD GOVD OFFICERS,AND GOOD POLITICIAN, OTHERWISE,THEY ALL ARE LOOTING OUR POOR [CRICKET CRAZY]PEOPLE MONEY LIKE THIS WAY.  
by E GURUSAMY,NIGERIA,India    16-04-2010 21:46:32 IST
 பொழப்புல மண்ண வாரி போடாதிங்கடா...(!)  
by GN. BABAJI,nagercoil,India    16-04-2010 20:02:50 IST
 20 , 30 வருடங்கள் வெளிநாட்டில் உழைத்தும் சில லட்சங்கள் மட்டும்தான் சேமிக்கமுடிகிறது.இவர்களால் மட்டுமே ஆயிரம்கோடிகளை அள்ளமுடிகிறது.வாழ்க பணநாயகம்  
by N பாண்டியன் ,PortHarCourt,Nigeria    16-04-2010 18:46:25 IST
 Exactly said seetha raman.Heavy tax should be levied to this IPL board and Govt should get the revenue and spend on Poor people life style development,hospitals and schools. 
by S Siva,Barcelona,India    16-04-2010 14:46:02 IST
 இப்ல் கிரிக்கெட் ஒரு பொழுது போக்கு அதில் போயே கோடி கோடி கொடாராணுக கிறுக்கு PAYALUGA 
by G MARICHAMY,SANKARANKOVIL,India    16-04-2010 14:30:53 IST
 IPL = Idudhada Pranap leelai 
by bm venki,dubai,UnitedArabEmirates    16-04-2010 12:49:32 IST
 L ராசு,Bangalore,India அவர்களே, இந்தியவின் சாபக்கேடு சோனியா தான் புரியாமல் பேசாதீர்...  
by r ganesh,chennai,India    16-04-2010 12:40:29 IST
 டேய் ராசு, டாபிக் லலித் மோடிய பத்தி. ஆனா நீ நரேந்திர மோடி பத்தி பேசுற. அரைவேக்காட்டு பயலே  
by d kudiyanavan,udumalpet,India    16-04-2010 12:33:36 IST
 புடிங்க புடிங்க அங்கதான் இருக்கு இந்திய மக்களின் அணைத்து பணமும். அதோடு சேர்த்து ப்ரீதி ஜிந்தவயும் மற்ற அணியின் உரிமையாளர்களையும் புடிங்கப்பா இந்தியாவுக்கு பட்ஜெட் போடவாவது பயன்படும்  
by M Balakrishnan,madurai,India    16-04-2010 12:17:56 IST
 Hello Mr. L. Rasu, Bangalore அவர்களே ! இவர் நரேந்திர மோடி அல்ல. லலித் மோடி. IPL தலைவர்.  
by P சந்தோஷ்,Panyu,China    16-04-2010 11:46:47 IST
 ஒரு பிரச்சணை விசுரூபம் எடுக்கும் பொழுது அதனை திசை திருப்பும் ஒரு கருவியாகத்தான் இது போன்ற ரெய்டு நாடகங்களை நம் அரசுகள் காலகாலமாக அரங்கேற்றி வருகின்றது. அன்று திமுகவை மிரட்ட ராசா அலுவலகத்திலும் இன்று சசிதரூர் பிரச்சணையினை திசை திருப்ப ஐபிஎல் அலுவலகத்திலும் இந்த ரெய்டு நாடகங்களை மத்திய அரசு நடத்தி காட்டியுள்ளது 
by M Amanullah,Dubai,UnitedArabEmirates    16-04-2010 10:54:23 IST
 நரேந்திர மோடி செய்யும் அட்டுழியங்களுக்கு அளவே இல்லாமல் பொய் விட்டது. அவருக்கு குஜராத் அணி வேண்டுமாம். அதற்காக இவர் செய்யும் அராஜகங்கள் தாங்க முடியாதவை. இந்தியாவில் சாப கேடு 'நரேந்திர மோடி'  
by L ராசு,Bangalore,India    16-04-2010 09:35:18 IST
 very well done, kudos to the income tax dept.. i ve been waiting long for this to happen... lalit modi is exploiting indian fans' cricket interest for running his business. Govt should impose 50 percent tax for IPL and i m sure this will contribute much to the nation's income & economy which in turn should be utilised for the welfare of the poor and in developing infrastructure of our country.  
by s seetharam,melbourne,Australia    16-04-2010 09:12:42 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்