கோவை : கோவையில், 'அல் - உம்மா' பாஷாவின் மகன் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஆன் லைன் டிரேடிங்' நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி செய்த பெண்ணை கடத்தி, கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் அம்பலமானது.
கோவைப்புதூரைச் சேர்ந்தவர் கல்கி (52); இவரது மனைவி சசிரேகா(47). இவர், கோவை, காளப்பட்டி ரோடு, நேரு நகரில் 'கே.எஸ்., மெர்கன்டைல்' என்ற 'ஆன் லைன் டிரேடிங்' நிறுவனத்தை பல மாதங்களுக்கு முன் துவக்கினார். தமது நிறுவனம் வெளிநாட்டு கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதாக விளம்பரம் செய்த இவர், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 'கே.எஸ்.,மெர்கன்டைல்' நிறுவனம் மீது திருச்சியைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணி என்பவர், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார். அதில், 'நான், 21 லட்சம் ரூபாயை சசிரேகா நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். முதலீடு செய்யப்பட்ட பின், அடுத்த மாதத்தில் 40 சதவீத தொகை, அதற்கு அடுத்த மாதத்தில் 40 சதவீத தொகை, பின்னர் 20 சதவீத தொகையை திருப்பி வழங்குவதாக கூறியிருந்தார். தவிர, கடைசி மாதத்தில் முதலீடு தொகை முழுவதையும் வழங்குவதாக கூறிய அவர், 200 மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் கூறினார். ஆனால், அது போன்று எவ்வித தொகையையும் அளிக்காமல் ஏமாற்றிவிட்டார்' என, தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, 'கே.எஸ்.,மெர்கன்டைல்' நிறுவன அதிபர் சசிரேகா மீது மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சசிரேகாவும், அவரது கணவர் கல்கியும் தலைமறைவாகினர். போலீசார், இவர்களை தேடிவந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு எட்டியது. மோசடி நிறுவன அதிபர் சசிரேகாவை, கோவையைச் சேர்ந்த சித்திக்அலி மற்றும் அவரது நண்பர்கள் கடத்திச் சென்று, போத்தனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சிறைபிடித்து மிரட்டிவருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், சசிரேகாவை மீட்டனர். இது தொடர்பாக, கோவை தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த சித்திக்அலி(32), அவரது நண்பர், ஈரோடு மாவட்டம், வண்டிபாளையத்தைச் சேர்ந்த நிசார் (28) ஆகியோரை கைது செய்தனர். சசிரேகா அளித்த புகாரை தொடர்ந்து, இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 342 (குற்றத்தில் ஈடுபடும் நோக்கில் தடுத்து நிறுத்துதல்), 384 ( ஆள் கடத்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான சித்திக்அலி, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பின் விடுதலையானவர். இவர், தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கோவை சிறையிலுள்ள 'அல் - உம்மா' நிறுவனர் பாஷாவின் மகன். இவரது நண்பர் நிசார், தமது உறவினர்களிடம் பணம் பெற்று மோசடி நிறுவனத்தை நடத்திய சசிரேகாவிடம் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிசார், பாஷா மகன் சித்திக்அலியை சந்தித்து உதவி கோரியுள்ளார். இருவரும், வீட்டிலிருந்த சசிரேகாவை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியபோது தான், போலீசாரிடம் பிடிபட்டு கைதாகியுள்ளனர்.
போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது: 'கே.எஸ்.,மெர்கன்டைல்' என்ற மோசடி நிறுவனம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இரு விதமாக கையாள்கிறோம். ஒன்று, அந்நிறுவனம் மக்களிடம் முதலீடு பெற்று நிதி மோசடி செய்தது; மற்றொன்று, அந்நிறுவனத்தை நடத்திய சசிரேகாவை கடத்தி மூவர் பணம் கேட்டு மிரட்டியது. முதல் வழக்கை மாநகர மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கிறது. அடுத்த வழக்கை, போத்தனூர் போலீஸ் விசாரிக்கிறது. மோசடி பெண், முதலீட்டாளர்களுக்கு பதிலளிக்க முடியாமல் தலைமறைவாகியிருந்த வேளையில் மூவரால் கடத்தப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்பட்டார். அவ்வழக்கில், சித்திக்அலி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக உள்ள பாபு என்பவரை தேடி வருகிறோம். நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய சசிரேகாவிடம் விசாரணை நடக்கிறது. இது போன்ற மோசடி நிறுவனங்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு, சைலேந்திரபாபு தெரிவித்தார்.
ரூ.1,000 கோடி சுருட்டல்: கோவையில் சமீபகாலமாக அடுத்தடுத்து 'ஆன் லைன்' வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கோவை நகரில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 'விக்டரி பாரக்ஸ்' 'புரோ இந்தியா' 'யூரோ பே' 'கேவல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' 'கிரீன் லைப்' என்ற பெயரிலான 'ஆன் லைன்' வர்த்தக நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன; தற்போது, 'கே.எஸ்.,மெர்கன்டைல்' நிறுவனமும் சேர்ந்து கொண்டது. இந்நிறுவனங்களில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி மோசடி நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இந்நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படாதவை. முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றதற்கான ரசீது எதுவும் தராமல், பின் தேதியிட்ட 'செக்'குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளனர். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, மோசடி நபர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.
'கிரீன் லைப்' என்ற நிறுவனத்தை நடத்திய நபர்களின் பின்னணி, வியப்பாக உள்ளது. மெக்கானிக் தொழில் செய்து வந்த அம்ஜத்கோரியும், அவரது சகோதரர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அஸ்மத் கோரியும் 'ஆன் லைன்' நிறுவனத்தை துவக்கி, ஒன்றரை ஆண்டுகளில் 157 கோடி ரூபாயை முதலீடு பெற்று, மோசடி செய்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் இது எவ்வாறு சாத்தியம்? என்பது மர்மமாகவே உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by A இந்தியன்,chennai,India 21-04-2010 11:25:14 IST |
![]() ![]() |
by k kamini,kumbakonam,India 21-04-2010 00:39:12 IST |
![]() ![]() |
by m தேவன்,Chennai,India 21-04-2010 00:05:17 IST |
![]() ![]() |
by Mr வவ் Devan,chennai,India 20-04-2010 23:56:37 IST |
![]() ![]() |
by s ரகுமான்,chennai,India 20-04-2010 23:35:00 IST |
![]() ![]() |
by n jagadeeshkumar ,kaliyakkavilai,India 20-04-2010 23:06:05 IST |
![]() ![]() |
by VM Sivaramakrishnan,Mumbai,India 20-04-2010 22:41:43 IST |
![]() ![]() |
by R Selvan,Chennai,India 20-04-2010 22:12:14 IST |
![]() ![]() |
by vk vk,nyc,UnitedStates 20-04-2010 21:48:24 IST |
![]() ![]() |
by ஜான்,chennai,India 20-04-2010 21:31:19 IST |
![]() ![]() |
by s sun,mayuram,India 20-04-2010 21:22:17 IST |
![]() ![]() |
by நாஞ்சிலான்,dammam,SaudiArabia 20-04-2010 20:44:51 IST |
![]() ![]() |
by 24ம் புலிகேசி,madurai,India 20-04-2010 20:20:18 IST |
![]() ![]() |
by d d,uae,India 20-04-2010 20:07:03 IST |
![]() ![]() |
by Aarif Raj,Birmingham,UnitedKingdom 20-04-2010 19:59:11 IST |
![]() ![]() |
by s Senthil,Tirupur,India 20-04-2010 19:37:50 IST |
![]() ![]() |
by k. ramesh,sharjah,UnitedArabEmirates 20-04-2010 18:58:23 IST |
![]() ![]() |
by M Hameed,kuwait,India 20-04-2010 18:07:22 IST |
![]() ![]() |
by அர்விந்த்,chennai,India 20-04-2010 18:05:47 IST |
![]() ![]() |
by குமார்,Chennai,India 20-04-2010 17:30:09 IST |
![]() ![]() |
by k கணேஷ்,hyd,India 20-04-2010 16:28:20 IST |
![]() ![]() |
by S Jegaa,Ramnad,India 20-04-2010 16:09:00 IST |
![]() ![]() |
by s ராமலிங்கம்,mysore,India 20-04-2010 15:58:00 IST |
![]() ![]() |
by தமிழன்,Chennai,India 20-04-2010 15:29:43 IST |
![]() ![]() |
by A sakthi,Trichy,India 20-04-2010 14:43:09 IST |
![]() ![]() |
by குமார்,cHENNAI,India 20-04-2010 14:35:28 IST |
![]() ![]() |
by v christopher,sanaa,Yemen 20-04-2010 13:56:52 IST |
![]() ![]() |
by A சுல்தான்,Chennai,India 20-04-2010 13:22:56 IST |
![]() ![]() |
by n HABEEBTHEEN ,RIYATH,SaudiArabia 20-04-2010 13:14:57 IST |
![]() ![]() |
by A அன்சாரி ,AlAin,UAE,India 20-04-2010 13:00:02 IST |
![]() ![]() |
by A இந்தியன் ,abudhabi,India 20-04-2010 12:59:05 IST |
![]() ![]() |
by M ஜோதி,Dubai,UAE,India 20-04-2010 12:45:38 IST |
![]() ![]() |
by ராஜன் ,தமிழ்நாடு,India 20-04-2010 12:29:34 IST |
![]() ![]() |
by D Dubakoor,Dammam,SaudiArabia 20-04-2010 12:27:16 IST |
![]() ![]() |
by P Daya,Chennai,India 20-04-2010 12:25:12 IST |
![]() ![]() |
by செ செல்வகுமார் (வாயே வெல்லும்),ஜுறொங்வெஸ்ட்,Singapore 20-04-2010 12:24:02 IST |
![]() ![]() |
by I ஜாகிர் ஹுசைன் ,Kuwait,India 20-04-2010 11:49:37 IST |
![]() ![]() |
by S. சுப்பையா ராமமூர்த்தி ,Karaikudi,India 20-04-2010 11:38:15 IST |
![]() ![]() |
by s shahul hameed,K.Pallivasal,India 20-04-2010 11:30:54 IST |
![]() ![]() |
by n gopalsami,Auckland,NewZealand 20-04-2010 11:24:21 IST |
![]() ![]() |
by M SWAMINATHAN,CHENNAI,India 20-04-2010 11:07:46 IST |
![]() ![]() |
by k balesan,chennai,India 20-04-2010 10:57:36 IST |
![]() ![]() |
by j நசிர்,bahrain,India 20-04-2010 10:52:38 IST |
![]() ![]() |
by கிருஷ்ணன்,coimbatore,India 20-04-2010 10:29:44 IST |
![]() ![]() |
by m raja,dubai,UnitedArabEmirates 20-04-2010 09:41:07 IST |
![]() ![]() |
by k வேல்,chennai,India 20-04-2010 09:35:09 IST |
![]() ![]() |
by D மணிகண்டன்,Tamilnadu,India 20-04-2010 09:13:13 IST |
![]() ![]() |
by S Bhaskaran,Chennai,India 20-04-2010 09:10:30 IST |
![]() ![]() |
by MS Ghouse,KualaLumpur,Malaysia 20-04-2010 09:01:03 IST |
![]() ![]() |
by AKB தஞ்சை,singapore,Singapore 20-04-2010 08:15:45 IST |
![]() ![]() |
by s ரகுமான்,chennai,India 20-04-2010 08:06:12 IST |
![]() ![]() |
by skm faizal,kualalumpur,Malaysia 20-04-2010 07:56:48 IST |
![]() ![]() |
by manithaan,madaras,India 20-04-2010 07:49:02 IST |
![]() ![]() |
by GK SIVRAMKRISHNAN,DUBAI,UnitedArabEmirates 20-04-2010 07:38:05 IST |
![]() ![]() |
by A நிசார்,singapore,Singapore 20-04-2010 07:23:31 IST |
![]() ![]() |
by H Kugan,Kovai,India 20-04-2010 07:15:48 IST |
![]() ![]() |
by S பாலா ஸ்ரீனிவாசன் ,Chennai,India 20-04-2010 07:06:41 IST |
![]() ![]() |
by V மணி,Chennai,India 20-04-2010 06:40:51 IST |
![]() ![]() |
by p மோகன்,sansebastian,Spain 20-04-2010 02:41:57 IST |
![]() ![]() |
by k கைப்புள்ள,nj,India 20-04-2010 01:29:55 IST |
![]() ![]() |
by ரகுமான்,chennai,India 20-04-2010 00:08:56 IST |