முதல் பக்க செய்திகள் 

ஓடத் துவங்கியது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்
ஏப்ரல் 24,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதையில், நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது. இன்று முதல், சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலும், 26ம் தேதி முதல், சென்னை எழும்பூர் - திருச்சி இடையே தினசரி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட மூன்று பாசஞ்சர் ரயில்களும், 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இப்பாதை வழியாக இயக்கப்பட தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து, நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே முதல் ரயில் நேற்று மாலை இயக்கப்பட்டது. இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைந்தது.இன்று முதல் இப்பாதையில் தினசரி மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே மூன்று பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு பாசஞ்சர் ரயில் காலை 5.30, மாலை 6 மணிக்கு இயக்கப்படும். விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.10 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு மயிலாடுதுறை - தஞ்சை வழியாக இன்று முதல் தினசரி நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் (எண்.6175) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு நாகூர் சென்றடையும். நாகூரிலிருந்து நாளை (25ம் தேதி) முதல் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6176) இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.2794) இன்று மதுரையிலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இப்பாதை வழியாக மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.2793) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மதுரை சென்றடையும்.சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு வரும் 26ம் தேதியிலிருந்து தினசரி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.6853) எழும்பூரிலிருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.திருச்சியிலிருந்து (எண்.6854) காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.வாரணாசி - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.4620) வரும் மே 2ம் தேதியிலிருந்து சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.4259) ராமேஸ்வரத்தில் வரும் மே 5ம் தேதியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படுகிறது.தற்போது, சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே விருத்தாசலம் - திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (எண்.6101, எண்.6102) ரயில்கள், வரும் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து மயிலாடுதுறை - கும்பகோணம் - திருச்சி வழியாக இயக்கப்படும்.திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6736) வரும் ஜூலை 29ம் தேதியிலிருந்தும், சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6735) வரும் ஜூலை 30ம் தேதியிலிருந்தும் மயிலாடுதுறை - கும்பகோணம் - திருச்சி வழியாக இயக்கப்படும். விழுப்புரத்திலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்.114) நாளை முதல் அதிகாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ரயில் எண் 6101 , 6102 vridhachalam வழியாக சென்று வந்தால்தான் நேரம் மிச்சம். மாற்று வழியாக இருந்தால் இட் இஸ் டைம் கில்லிங்.  
by R.V தண்ணீர்மலை,chennai,India    25-04-2010 10:26:57 IST
 இந்த இனிமையான செய்திக்கு பின் கண்டிப்பாக தினமலரின் பங்கு மிக அதிகம் உண்டு. மிக்க நன்றி shnmugam 
by S.K. SHANMUGAM,riyadh,India    24-04-2010 19:18:14 IST
 வாழ்த்துக்கள். காட்பாடி ரயிலையும் சீக்கிரம் இயக்க வேண்டும். இந்த மார்கத்தில் நிறைய ரயில்களை இயக்கினால் மக்களும், மாவட்டமும் வளர்ச்சி அடையும்.  
by V சுப்ரமணியன்,Mylapore,India    24-04-2010 16:53:36 IST
 Thanks to Indian railways 
by karthi,chennai,India    24-04-2010 15:54:21 IST
 romba natkalaga aavaludan ethirpartha vilupuram mayiladuthurai agala railpathai panigal sirapaga mudivutru rail iyakithatharku mika nandri 
by H FEROZEDEEN,Mayiladuthurai,India    24-04-2010 15:38:53 IST
 கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக, கர்னாடக மாநில அரசு, 2500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும்' என்று அறிவித்துள்ளார். 10 திட்டங்களுக்கு நிலம் இலவசமாக வழங்கியும், மாநில அரசும் ரயில்வேயும் பாதிப்பாதி நிதி அளிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையிலும், ஐந்து திட்டங்கள் அரசு - தனியார் பங்களிப்பிலும் நிறைவேற்றுவதற்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டார். அனால் நம்ம தலையெழுத்தை பாருங்கள். மாதம் ஒரு ரெக்கார்டு டான்ஸ் பார்த்துக்கிட்டு ஒரு முதலமைச்சர். மிகவும் அவசியமான தமிழகத்தின் பல ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு கிடக்குது. ஆமாம் பணம், பாட்டில், பிரியாணி வாங்கிக்கிட்டு ஓட்டு போடும் நாம் அதுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாதுதான். 
by S Dinakaran,Thanjavur,India    24-04-2010 15:18:50 IST
 Congrdulations to Railway Dept. Meanwhile please take more care to complete the job of Mayiladuthurai to Tiruvarur track completion. In this route very helpful to reach Tiruvarur directly via Peralam, Nannilam, Central university and other villages. 
by G GJKDXB,Dubai,India    24-04-2010 14:43:25 IST
 ரொம்ப ரொம்ப நன்றி தினமலர் & மக்கள் டிவி  
by kv வெங்கட்,Salem,India    24-04-2010 14:05:13 IST
 6101,6102 It will be very convenient for Karaikudi, Devakottai, Sivaganga passengers. After I st Aug.that train will be operate via.Tanjore. Another two hours will be spent in train. Please continue old time & old route. 
by MPRV Lakshmanan,Devakottai,India    24-04-2010 13:50:00 IST
 மயிலாடுதுறை to சென்னை தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா  
by K திருஞானம்,chennai,India    24-04-2010 13:48:03 IST
 The timing for the New Day express trains starting and arriving at Egmore station can be changed to suit the passengers coming and going to Hyderabad, Delhi and other places. The starting time can be changed to 9.30 AM and the arriving time can made to 4 to 4.30 PM. I hope the Railways can consider the request. Also the Kacheguda - Egmore train can be extended upto Trichy, via Thanjavur.  
by G.K Sabapathy,Hyderabad,India    24-04-2010 13:47:06 IST
 அய்யா கடலூர் டு கோயம்புத்தூர் ரயில் சேவை துவக்க வேண்டும். மற்றும் கடலூர் டு திருச்சி ரயிலை, திருபாதிரிபுலியூர் இருந்து பயணத்தை துவக்க வேண்டும். 
by N கனகசபை,Cuddalore,India    24-04-2010 13:33:12 IST
 கலைger சொன்னதை செய்வர் செய்வதை solvar 
by Tm ஷேய்க் uduman,saudiarabia,riyadh,India    24-04-2010 13:32:54 IST
 இந்த இனிமையான செய்திக்கு பின் கண்டிப்பாக தினமலரின் பங்கு மிக அதிகம் உண்டு. மிக்க நன்றி  
by R லக்ஷ்மிநாராயணன்,Pammal,Chennai,India    24-04-2010 13:20:05 IST
 Thanks a lot to Southern Railway for this operation. Kindly arrange for one day express from chennai to trichy thro' this line. 
by M Swaminathan,Nanganallur,chennai,India    24-04-2010 12:37:55 IST
 கம்பன் எக்ஸ்பிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு அகல ரயில் பாதையாக மற்றுவதக்காக நிறுத்தப்பட்டது. இன்று வரை பணிகள் தொடங்கப்படவில்லை(மாயவரம் முதல் காரைக்குடி வரை). இதனால் இப்பகுதி மக்கள் ரயில் மூலம் சென்னைக்கு நேரடி தொடர்பு இல்லாமல் சிரமப்படுகின்றோம். இப்பாதையில் நான்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சுயநலத்தை மட்டும் பாராமல் சிறிதளவேனும் இப்பாதையை முடிப்பதற்கு முயற்சி எடுக்க பட்டுக்கோட்டை மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 
by R Murugesan,Dubai,UnitedArabEmirates    24-04-2010 12:32:43 IST
 Cuddalore, Villupuram, Sirkali, Mayiladudurai Students studying in Annamalai University will get a big relief due to this commencement. But I think we should check the timings one more whether its appropriate or not. Thanks for the Southern Railway n Dinamalar, since they highlighted this news last week. On behalf of all Annamalai university students, Prakash, Ex. Railway Engg. Students Association Chairman.2000 -2004 batch.  
by M. Prakash,Doha,Qatar    24-04-2010 12:29:29 IST
 குட் நியூஸ், வாழ்த்துக்கள்....ரயில்வேக்கும் குறிப்பாக தினமலருக்கும்,  
by g srini,chennai,India    24-04-2010 12:00:51 IST
 CONGRAUTATION TO RAILWAY FOR YOUR BEST & QUICK RESPONSE TO OPEN MAYAVARM-VILUPURAM ROAD, AND REQUESTED TO YOU TO BE FINISH THIRUVARUR - MAYAVARM ROAD VERY SOON 
by N ஹைதர் ALI,THITTACHERY,NAGAPATTINAM,India    24-04-2010 11:58:09 IST
 வணக்கம்.மிக்க நன்றி.இனி சாலை விபத்துக்கள் குறையும். இதுபோல் கும்பகோணம் விருதாச்சலம் பாதை விரைந்து நடக்க தினமலர் செய்தியில் வெளியிட வேண்டும். ஜெய்ஹிந்த். ஐ லவ் மை இந்தியா.  
by S Balaji,Daha,Qatar    24-04-2010 11:47:14 IST
 good good. atlast a FULL STOP for the Private Bus Rascals who make a big money. 
by S.M ராஜ்,TANZANIA,Tanzania    24-04-2010 11:46:23 IST
 According to latest update as பேர் www s .railway site the formation for 6853 and 6854 day expresses which runs during day time 5 sleeper coaches are attached .instead these coaches can be replaced by coaches 108 seats coaches .more number of passengers can be accommadated .As a gesture ,railways can run a train with a new rake for the people for waited for 4 years  
by k venkatramanaRao,dubai,UnitedArabEmirates    24-04-2010 11:41:47 IST
 appada 
by k silambarasa,doha,qatar,India    24-04-2010 11:00:16 IST
 தினமலருக்கு மிக்க மிக்க நன்றி.  
by R Muthuswami,newDelhi,India    24-04-2010 10:50:38 IST
 கேஸ் போட்ட புண்ணியவானுக்கு ரொம்ப நன்றி. அப்படியே திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பகல் நேர பயணிகள் வண்டி விட்டா மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் திருச்சி-காரைக்குடி-மானாமதுரை ஸ்பெஷல் மினி ரயிலில் இன்னும் சில பெட்டிகள் இணைத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 
by s மணிகண்டன்,karaikudi,India    24-04-2010 10:44:26 IST
 Very good....every one waiting such event... now almost every one happy who ever travel this region... once agian thanks dinamalar... to keep on publish this news and update it... keep it up.. 
by s நாகராஜன்,BoonLay,Singapore    24-04-2010 09:45:34 IST
 it is a very good happy news for many of the southern district people. The happiness came after three years. Why the inaguration was done so simply and without much publicity?  
by G Srinivasan,Kalpakkam/Chengleput,India    24-04-2010 09:38:18 IST
 வாழ்த்துக்கள் .நெல் களஞ்சியமான தஞ்சை டெல்டா மாவட்டத்தில் மயிலாடுதுறை,கடலூர் வழியாக இயக்க்கும் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் இந்த பாதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் .அத்துடன் இப்பகுதியில் நிலுவையில் உள்ள அணைத்து திட்டங்களும் இன்னும் மூன்றண்டுகளுக்குள் முடிய டெல்ட்டா மாவட்ட மாவட்ட மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் .அதே போல் இத்தடத்தில் இரட்டை பாதையும்,மின்ம்யமாக்குவதில் கோரிக்கை நிறைவேற முயற்சி செய்ய வேண்டும்.அதனால் மற்ற தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள் . 
by B.k. adhimoolam,tiruchchirapalli,India    24-04-2010 09:29:33 IST
 எப்போ மைசூர் சாம்ராஜ்நகர் வழியாக கோயம்புத்தூருக்கு ரயில் விடுங்கப்பா பெங்களூர் சென்னை இருவழிப்பாதையாக மாற்றுங்கள்  
by s ராமலிங்கம்,mysore,India    24-04-2010 09:28:25 IST
 இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மயிலாடுதுறை திருவாரூர் ரயில் பாதை வேலை எப்போ முடியும்? அதையும் சீக்கிரம் முடிச்சிங்கன்னா ரொம்ப சந்தோசம். 
by S Muthuvel,Tiruvarur,India    24-04-2010 09:23:25 IST
 what about pregauge conversion trains like thanjavur-egmore fast passenger and mayiladuthurai-egmore fast passenger.Nothing has been mentioned.The railways seem to be interested only in earnig/revenue that is why only express trains are announced.We request that the southern railway should operate those erstwhile fast passengers train for the travelling public of Tanjor beltat the earliest. 
by v.r ganeshun,chennai=117,India    24-04-2010 09:11:34 IST
 it is very important route to connect more religious places like temple town kumbakonam,sirkalzhi,viatheeswaran koil etc., particularly covering navagraha sthalas.people from all over india would like to visit navagraha stalas they can visit navagraha stalas through train instead of motor transport. the nearest railways station is either kumbakonam or sirkalzhi or vaitheeswaran koil to cover all navagraha stalas in a day or two either by public or private transportation.the route is more commercial value throughout the year. people from all religions can ustilise this route for visiting their holy places like kumbakonam (hindu) velankani (christian) and nagore (muslims) railway authorities request to double this line as soon as possible. 
by A SIVAKUMAR,CHENNAI,India    24-04-2010 08:09:16 IST
 Better late than never. The line could have been completed long back; Tamil Nadu's economy, more particularly the interior areas could have reaped the benefits much earlier. At least, now let us hope that both T N Govt and S.Rly, will use their clout with Central Govt, to hasten up doubling of the arterial Chennai Egmore-Tiruchi-Madurai-Kanyakumari line and electrification of the rest of that line. Unless doubling is completed, additional capacities can not be created. Trust S.Rly will look into other related issues like these more seriously. 
by S Krithivasan,Hyderabad,India    24-04-2010 07:41:04 IST
 Dear Sir, Iam having one good suggestion.that suggestion is worth of about 10 crore turnover valuable circulation .I want to send that suggestion to one of the leading person in DINAMALAR.So, kindly send the correct e-mail id to me. 
by C SELVAM,HALDIA-WESTBENGAL,India    24-04-2010 06:12:07 IST
 எப்படியோ விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் ஆரம்பித்துவிட்டது. இப்போ சென்னை திருச்சி வழி மயிலாடுதுறை மாதிரி எப்போ காட்பாடி மயிலாடுதுறை ரயில் விடுறது? திருப்தி மதுரை மீனாக்ஷி எக்ஸ்பிரஸ் தான் அது. வேலூர் விழுப்புரம் அகல ரயில் பாதை எப்போ முடியும்? சிக்கிரம் முடித்து ரயில் விடுங்கப்பா! 
by S. Imtiyaz,Visharam(Dubai),India    24-04-2010 04:48:45 IST
 தினமலருக்கு மிக்க நன்றி. 
by B Krishnamurthy,HillsboroughNJ,Gabon    24-04-2010 02:46:10 IST
  It is really a good news for everyone of South Arcot as well as Tanjore district residents that the train service has been resumed with so much of hurdles after a period of almost 4 years in this busy revenue yielding route. The days of running the Famous Cholan Express between Egmore & Trichy [ Ever first day time chair car service started after B'van Express in M'gauge in those days] may please be resumed from now on as everything has been cleared by the railway authorities. Also it is pity to note that the route which was announced during the regime of Morarji Desai as PM & Madhu Dantavadhe as railway Minister who only 1st shown surplus railway budget in Indian railway history told East coast Express will will run through from Gauhati to Kanyakumari daily from Gauhati--Calcutta-Bhuvaneswar--Vizak-Madras- Villupuram -Mailaduthurai-Karaikkudi-Virudhunagar--Kanyakumari.But as on date none of the railway ministers have take any initiative in this matter as it is the profitable route not only for passengers but also for freight movement.It needs more gauge conversions yet. What I feel, if this route be given due importance, railway authorities will surely ripe the fruit from the 1st day itself by every means. 
by V Rama krishnan,Dubai,UnitedArabEmirates    24-04-2010 02:22:58 IST
 வாழ்த்துக்கள்....ரயில்வேக்கும், குறிப்பாக தென்னக ரயில்வேக்கும் இந்த அகல ரயில் பாதை மாற்றத்துக்கு. அனைவரும், இம்மாற்றத்தினால் பயனடைவர். பொருளாதாரமும் வளர்ச்சி பெற இந்த மாற்றம் பெரிதும் உதவும். Again Hats off to Railways.  
by G. Mani,Chennai,India    24-04-2010 00:36:29 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்