முதல் பக்க செய்திகள் 

திருமணம் செய்ய மறுத்த காதலி மீது 'ஆசிட்' வீச்சு : காதலன் கைது
ஏப்ரல் 28,2010,00:00  IST

Front page news and headlines today

திருச்சி : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலி மீது, ஆத்திரம் கொண்டு, அவரை கோவிலுக்கு வரச் சொல்லி, அவர் மீது' ஆசிட்' வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.


சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (21). திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள இந்திரா காந்தி கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, இரண்டாம் ஆண்டு பி.காம்., படிக்கிறார். வார விடுமுறை நாட்களில், சரண்யா திருச்சி ரயில்வே ஜங்ஷன் பின்புறம் உள்ள கல்லுக்குழியில் உள்ள தன் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம்.சரண்யா,சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், மேல்நிலை பள்ளி படிப்பை படித்துள்ளார். அப் போது, அதேபள்ளியில் படித்த ஏழுமலை மகன் ராமு என்கிற ராமஜெயத்துடன் (24) நெருங்கி பழகியுள்ளார். ஐந்தாண்டாக இருவரும் காதலித்து வந்தனர்.பள்ளிப்படிப்பை முடித்த ராமஜெயம், கார் டிரைவராக பணியில் சேர்ந்தார். ஆறுமாதங்களுக்கு முன், சரண்யாவை திருமணம் செய்து கொள்ள, அவரது தாயாரிடம் பெண் கேட்டு ராமஜெயம் சென்றார்.அதற்கு, சரண்யாவின் தாயார் மறுத்துள்ளார்.


ருமணத்துக்கு அம்மா மறுப்பு தெரிவித்ததால், சில மாதங்களாக ராமஜெயத்துடன் மொபைல் போனில் பேசுவதைக் கூட, சரண்யா தவிர்த்துள் ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், நேற்று காலை எட்டு மணிக்கு, சரண்யாவை சந்திக்க, சென்னையில் இருந்து திருச்சி கல்லுக்குழியில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த சரண்யாவிடம் பேசவேண் டும் என்று கூறியுள்ளார். சரண்யா, தன் பெரியம்மாவுடன் அருகிலுள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்று ராமஜெயத்துடன் பேசினார். அப்போது, ராமஜெயம் தன்னை திருமணம் செய்து கொள் ளுமாறு வலியுறுத்தினார். அதற்கு சரண்யா, வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், தான் எடுத்து வந்த 'ஆசிட்' டை சரண்யாவின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ஆசிட் பட்டதில், சரண்யா முகத்தின் ஒரு பகுதி, கழுத்து ஆகியவை வெந்தது.அவர் எரிச்சல் தாங்க முடியாமல் அலறித்துடித்தார். சரண்யாவின் பெரியம்மா, உடனடியாக அங்கிருந்த டீக்கடையிலிருந்து இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வந்து சரண்யாவின் முகத்தில் ஊற்றினார். சரண்யா சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.திருச்சியில், கல்லூரி மாணவி சரண்யா முகத்தில் ஆசிட் வீசியது குறித்து, கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள், ஆசிட் வீசி விட்டு தப்பி யோடிய ராம ஜெயத்தை பஸ் ஸ்டாண்ட், ஐங் ஷன் ஆகிய இடங்களில் தேடி வந்தனர்.


திருச்சி வக்கீல் ஒருவரின் உதவியோடு, ராமஜெயம் கன் டோன்மென்ட் போலீசில் சரணடைந்தார். ஆனால் கன்டோன்மென்ட் போலீ சாரோ ரயில்வே ஜங்ஷனில் பதுங்கியிருந்த ராமஜெயத்தை கஷ்டப்பட்டு பிடித்ததாக கூறினர். கைது செய்யப்பட்ட, ராமஜெயம் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்வேன்: காதலன் : ராமஜெயம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:சரண்யாவுக்கும், எனக்கும் கடந்த 2008ம் ஆண்டு, திருப்பதியில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் நடந்தது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே குடும்பமும் நடத்தினோம். இது யாருக்கும் தெரியாது. அதன்பின் சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்களுடன் அவர் மொபைலில் பேசியதை தெரிந்ததும் கேட்டேன். ஆனால், நான் அப்படியில்லை என்று மறுத்து விட்டார். அதன்பின் பல ஆண்களுடன் சரண்யா பழகிவருவதை தெரிந்து கொண்டேன். என்னையும் அவள் தவிர்த்து வந்தாள். அதனால் தான் எனக்கு கிடைக்காத காதலி, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசிட் வீசினேன். ஆசிட் வீசியதில் அழகை இழந்த சரண்யா எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு வாக்குமூலத்தில் ராமஜெயம் தெரிவித்துள்ளான்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 first both of them love the human feeling then u can do marriage or love or murder(request 4 all the lovers : pls u treat lover like friend it should slove all the problem)(bcoz urs only have the power to break the relgion in the world ) sorry 2 say ram & saranaya both r not a ture lovers  
by MR.BLACK(11warriors),CHENNAI,India    02-05-2010 12:33:30 IST
  நானும் இது இந்த பொண்ணு விசயத்துல ஆசிட் சரின்னுதான் நினைகேறேன் .[திருபதி கல்யாணம் நடந்திருந்தா,தயவுசெய்து ,அவர் மேல் தவறு சொல்லாதிர்கள் ..] அயிந்து வருடமாக காதலிப்பவள் குழந்தை இல்லை. 
by r raje,pondicherry,India    02-05-2010 08:06:55 IST
 சார் எல்லா பெண்களும் இதே மாதிரித்த. . ஜெயா ஆசிட் வேண்டாம் அருவா தான் ஓகே . . . . .  
by Baalaa,Boonlay,,Singapore    02-05-2010 07:12:01 IST
 முட்டாள்!! மடதணும்!! நாளை இவனுக்கு ஒரு பெண் பெரந்தால் அவளும் தப்பு செய்தால்..அவளுக்கும் இப்படி தான் அசிட் அடிப்பான..பேசாம ஒரு ஆண்டல அசிட் ஊதி இவன குளிக்க சொல்லணும்..அப்புறம் அந்த பொண்ணு நான் அண்டவே சுத்தம் செயேரியன் சொல்லணும்... 
by S நாராயணன்,trichy,India    02-05-2010 04:20:08 IST
 மச்சி உ திட் கிரேட் வொர்க் da 
by r மோகன்,chennai,India    30-04-2010 07:17:59 IST
 Very great love. we know only loves only. an how to love that a we know in our tamil nudu an our movies. in the world more more love have it different love . that we dont know because of we still poor . in the world we dont know more. 
by thil senthil,govindakudy..uae,India    29-04-2010 14:52:20 IST
 ஊத்துங்க ஏசம்மா ஊத்துங்க. இந்த பொண்ணுகளே இப்படித்தான் ,லவ் மட்டும் வீட்ல கேக்காம பன்னுவாளுவ ,கல்யாணத்துக்கு மட்டும் வீட்ல கேட்டுத்தான் பன்னுவாளுவோலா? 
by S raj,trichy,India    29-04-2010 10:47:36 IST
 என்ன கொடுமை டா இது. என்ன தான் பிரச்னை என்றாலும், அசிட் வீசி புண் படுத்துவது போன்ற செயல்களை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சினிமா மற்றும் சின்ன திரை சீரியல்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காதல் கை கூட வில்லை என்றால் தாடி வளர்ப்பது, பழி வாங்குவது போன்றது எல்லாம் வீண் வேலை. வாழ்வதற்கு தான் வாழ்கையே தவிர வீணடிக்க அல்ல. மக்களுக்கு சகிப்புதன்மை எவ்விடத்தில் வேண்டுமோ அவ்விடத்தில் இல்லை. நமது வரி பணத்தில் நமக்கு நல்லது பண்ண வேண்டிய அரசியல் வாதிகள் தவறு செய்தல் சகித்து கொண்டு போவதும், நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் தவிர்ப்பதை விடுத்தது பழி வாங்குவது எல்லாம் அழகல்ல. 
by s தீபக்,kovai,India    28-04-2010 23:18:08 IST
 எது எப்படியோ இருவர் வாழ்வும் வளமாகட்டும் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாகட்டும்...  
by P ARUL,chennai,India    28-04-2010 22:08:43 IST
 தம்பி ஏன் இந்த வேலை இதுக்கு பேசாம லவ் பண்ணாம இருக்கலாமே. please parants உங்க குழந்தைகளை அந்த அந்த பருவத்தில என்ன பண்றாங்க என்னக போறாங்க என்பத தெருஞ்சுகாங்க. என்ன சொல்ல எல்லா குழந்தைய சுத்திஉம் இதுதான் நடக்குது. பொது மக்களே நல்ல படங்களை மட்டும் பக்கசொல்லுங்க please....please 
by c Renganathan,Thirumayam,India    28-04-2010 22:02:41 IST
 Acid should be poured on this guy also. He should also suffer the pain.. 
by S Rathna kumar,chennai,India    28-04-2010 21:29:15 IST
 பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஏவலாவு கஷ்ட படுகிறார்கள் அதை நினைத்து பாருங்கள் இப்போ இந்த ரெண்டு பசங்களோட பெற்றோர்கள் நிலமைய யோசிச்சி பாருங்கள்  
by s அருண்,Male',Maldives    28-04-2010 21:00:45 IST
 Antha pennin seyalukku sariyana thandanai. Most of the gilrs doing the same thing for boys to take this kind of decision. but finally both got punished here..  
by im tamilan,Chennai,India    28-04-2010 19:59:33 IST
 see Ram telling like that. is it true or not how you are all giving comments.I thing he is planned and did every thing, after that he telling negligency statement. 
by p dass,trichy,India    28-04-2010 19:57:21 IST
 see Ram telling like that. is it true or not how you are all giving comments.I thing he is planned and did every thing, after that he telling negligency statement. 
by p dass,trichy,India    28-04-2010 19:57:22 IST
 ஏன்டா இப்படி! சும்மா படிக்குற வயசுல எல்லா பொது இடத்திலயெல்லாம் ஜோடி ஜோடியா கூட்டிகிட்டு எதோ மாதிரி அலைவிங்க....உங்க மாதிரி ஆட்களால நாங்க அக்கா, தங்கசிகூட எங்கயாவது போனா எல்லாம் உங்கள பார்க்கிற மாதிரியே பார்குரானுங்க...கடைசில உன்னால அவ கெட்டா.. அவளால நீ கெட்ட....இதுக்கு பெயரு காதலு...  
by M பச்சை, வெள்ளை, பிங்கு தமிழன் ,Doha,Qatar    28-04-2010 19:45:14 IST
 All you idiots,noone is ready to think about the girl's future.what did she do? Its her right to choose her life partner.she's a graduate how can one expect her to marry a driver?and these idiots should be executed publicly or should be beaten up to death.but the pathetic thing is the idiots commented here have invariably supported ramajayam.will you do the same if your sister or relative is affected? 
by K Raju vaidhi,Trichy,India    28-04-2010 19:37:25 IST
 bledy cheet no heart, true love no value 
by s ramesh,doha,Qatar    28-04-2010 19:17:40 IST
 ராமஜயம், உண்னுடைய வேதனை புரிகிறது உன்னை திருமணம் செய்ய மறுத்த சரண்யாவுக்கு உண்மையான லவ் சொல்லி உண் அப்பா அம்மா விடம் சென்று அவங்க விட்டுல பெண் கேக்க சொல்லிருக்கலாம் அதை விட்டுவிட்டு உணர்ச்சிவசப்பட்டு அசெட் உதிட்டிங்க இநிமற்பட்டு அம்மா அப்பா பேச்சை கேள்ளுங்க சார்  
by murthy,chennai,India    28-04-2010 19:08:12 IST
 தம்பி நீங நல்லவந்தான் அந்த பெண்ணுக்கு உன்ங்கள் கூட வாழகொடுத்துவைக்கவில்லை சரி எங்கிருந்தாலும் நன்றாக இரு என்று வாழ்த்திவிட்டு அன்று திருப்பத்தில் இருந்த நான்கு நாள் சந்திசத்தோடு இருக்கவேண்டியதுதனே ஏநிந்தகாரியத்தில போனாய்,  
by engli raj,chennai,India    28-04-2010 18:31:47 IST
 wrong 
by M குமார்,chennai,India    28-04-2010 18:30:22 IST
 இப்ப கூட அந்த பொண்ணு தப்பு பண்ணி இருக்கா இல்லையான்னு தெரியல .. அது வெளில தெரிய மாட்டேங்குது ..ஆம்பள அசிட் உத்தஊனா மட்டும் திட்டுவீங்க .அவன் இப்பகூட கல்யாணம் பண்ணிக்கறத சொன்னது அவன் பண்ண கெட்ட செயளால பெருசா தெரிய மாட்டேங்குது ...பெத்தவங்க அந்த பொண்ண சரியா வளர்க்கள .இந்த மாதிரி பல பேரோட பழகுற பெண்கள் நிறையா இருக்காங்க ...ஊசி இடம் குடுத்தால் தான் நூலுக்கு இடம் .. 
by தமிழன் ,chn,India    28-04-2010 18:23:25 IST
 அந்த பொண்ணு மேல தான் தப்பு  
by p வரதராஜ் கத்தார் ,doha,Qatar    28-04-2010 17:43:50 IST
 அவனையும் குற்றம் சொல்ல முடியாது . அவன் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் அந்த கஷ்டம் தெரியும்  
by v nathan,singapore,India    28-04-2010 17:30:38 IST
 இங்கே COMMENTS பண்ண எல்லாரும் ராமஜெயத்தின் காதலை புரிந்துகொள்ளவில்லை , அவன் காதல் உண்மையானது. ஆனால் அவன் செய்த செயல் தவறுதான். 
by M அனந்தன் ,chennai,PURASAWALKAM,India    28-04-2010 17:30:29 IST
 ப்ளீஸ் பெண்களே ஆண்களை இந்த மன நிலைக்கு கொண்டு செல்வதே நீங்கள்தான்  
by S Jayasubra,Bonlay,Singapore    28-04-2010 17:25:08 IST
 என்ன கொடுமை சார் இது ?  
by a கூல்,India,India    28-04-2010 17:23:11 IST
  அவன் கூட ஏற்கனவே குடும்பம் நடத்திய இவளுக்கு இது சரியான பாடம். எப்படி இருந்தாலும் அவளை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறானே அதுவே பெரிய விஷயம்  
by D DUBAI NEWS,dubai,India    28-04-2010 17:19:04 IST
 ஹாய், ராம் ஏன் இப்படி, சில பெண்கள் முதல்ல ஒருத்தன லவ் பண்ணுவாங்க பின்னாடி அவனைவிட பெஸ்ட் ஒருத்தன் கெடைச்ச அவனை லவ் பண்ணுவாங்க, அப்பறம் அவன கழட்டிவிட்டு பெஸ்ட் ஒருத்தன பாத்து கல்யாணம் பண்ணிடுவாங்க, இதுதான் இன்றைய காதல்(சிலர் மட்டும்) அந்த பெண்ணை துன்பபடுத்த நினச்சு உன் அற்புதமான எதிர்காலத்தை வேஸ்ட் பண்னிட்ட. வாழ்க்கைல முன்னேற வா, உனக்கு நல்ல எதிர்கலாம் இருக்கு.  
by s sugam,singapore,India    28-04-2010 16:15:28 IST
 just see his statement...he has told that he already married her in 2008 and now he is telling that he will marry her even with this face... 
by s geetha,chennai,India    28-04-2010 16:11:45 IST
 அவனை காதலிக்கும்போது உங்க அம்மாகிட்ட அனுமதி வாங்கினியா? திருப்பதியில் குடும்பம் நடத்துனது உங்க அம்மாவுக்கு தெரியுமா? அப்புறம் என்ன? வேற எவனாவது புடிச்சிருக்குன்னு சொல்லி இருப்பான்யா  
by v இந்தியன் ,Trichy,India    28-04-2010 16:00:24 IST
 eva ellana veru oruthi ennada eppadfi panna.. 
by குப்புசாமி,chennai,Singapore    28-04-2010 15:50:41 IST
 love makes man perfect, but at first you cant accept your failure friends.think about your love you did it truely,true love will not hurt any one.before doing any thing in this situation please make your mind clearly and think about parnter my friend.please stop such activities. 
by p பிரவீன்,abudhabi,India    28-04-2010 15:05:40 IST
 இவருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவர் இப்படி செய்தது தவறு  
by v chandrasekaran,Bangalore,India    28-04-2010 14:59:57 IST
 பொண்ணுகளுக்கு என் வேண்டுகோள் ..... தயவு செஞ்சி லவ் பண்றமாதிரி நடிச்சு வாழ்க்கைய நாசம் பண்ணாதிங்க ..... பெற்றோர் தயவு செஞ்சு பிள்ளைகள கவனிங்க ....அவங்க என்ன பண்றங்கனு பாருங்க .... தயவு செஞ்சு உர மேய விடாதிங்க  
by s gobinath,dindigul,India    28-04-2010 14:46:23 IST
 வாழ்வை தொலைத்து விட்டு தவிக்கும் ராமஜெயம். உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பல பெண்கள் தான் காதலிக்கும் ஆண்களை இந்த மாதிரி நிலைக்கு கொண்டு செல்லுகிறகள். பாவம ஆண்கள்  
by p muruganandam,paris,france,France    28-04-2010 14:40:16 IST
 instead of arresting him, ஒரு வாளி நிறைய ஆசிட் அவன் மேல ஊத்திருக்கலாம்.... we should have to follow hamuraabi's rule for these kind of stupids... 
by பாலாஜி,chennai,India    28-04-2010 14:34:03 IST
 இந்த மடையனுக்கு வந்தது காதல் அல்ல, காம வெறி.. வெறி பிடித்தவனால் மட்டும் தான் இந்த பாவத்தை செய்ய முடியும்.. இந்த பாவம் அவனை ஏழு ஜென்மத்திற்கும் சுட்டெரிக்கும்...... இவனை எல்லாம் நாயை சுடுற மாதிரி சுட்டு கொல்ல வேண்டும்  
by பள்ளி மாணவன் ,Chennai,India    28-04-2010 14:08:30 IST
 இந்த பொண்ணுங்கள இப்படித்தான். நம்பள மாதிறி நல்ல பசங்க அழகா இல்லைன்னா love பண்ண மாட்டான்ங்க.  
by r ravikumar,tirunelveli,India    28-04-2010 14:04:08 IST
 very simple take 1 bottle acid reply to him ,he also fell it how about it , 
by v kumar,Tamilnadu,India    28-04-2010 13:18:54 IST
 பொழுது போக்கிற்காக காதலித்து ஏமாற்றும் பெண்களுக்கெல்லாம் இந்த சம்பவம் ஒரு 'பாடமாக' இருக்கட்டும்  
by p bala,trichy,India    28-04-2010 12:35:05 IST
 காதலிகிறது ஒருத்தன. கை பிடிக்கிறது வேறொருத்தன. அப்ப உண்மையில் காதலித்தவன் கதி ? இவன் மேல் தப்பு இருக்கிர மாதிரி தெரியல. உணர்ச்சி வசப்பட்டு தான் இதை செய்திருக்கிறான்  
by petoc thajudheen,trichy,India    28-04-2010 12:32:37 IST
 in his statement he says they both lived together for 5 days. the girl is not a human being at all what RAMAJAYAM did was a correct punishment.HE taught a good lesson for all the girls.her parents threatened i think so so he starting catching up some other guys what a character she is . According to her she cannot live with out LOVE.She rejacted RamaJAYAM may be he is not up to her mark in status as he was a car driver. Saranya you might have told and convinced your parents. Everybody should think that ' LIFE of a GIRL alone important' THE LIFE OF A BOY IS ALSO IMPORTANT as he has to take care of his parents and his famly members. I FEEL sorry for the BOY. MAY god bless Mr.RAMAJAYAM !!!!!!! 
by RASU Padayachi,chennai,India    28-04-2010 12:18:36 IST
 இது உண்மையான காதல் இல்லை. பாவம் பெத்தவங்களுக்கு ரொம்ப நல்ல செய்தி. இரண்டு வருடம் முன்பே திருமணம் செய்து, மீண்டும் திருமணத்திற்கு கட்டாயம் செய்து ஆசிட் விசியது, எல்லாமே தப்பு தப்பாவே இருக்கு. இதுக்கு பெயர் தான் காதலா????????? இரண்டு பேரும் தண்டிக்க பட வேண்டும் . இவர்களுக்கு காதலர்கள் என்ற பெயர் வேண்டாமே !!! please. 
by S. NOOR,kuwait,India    28-04-2010 12:18:33 IST
 சரண்யா உனக்கு இதுவும் வேணும் இனமும் வேணும். உனக்கு மட்டும் இல்லை உன்னை போன்ற நெறைய பெண்களுக்கு இது போல் செய்ய வேண்டும் .  
by r ஆனந்த்,mumbai,India    28-04-2010 12:12:27 IST
 மொக்க பிகருக்காக ஏன் இந்த வேலை.  
by R அசோக்,chennai,India    28-04-2010 12:04:19 IST
 காதலிக்கலாம் அதுக்காக ஓவரா பாசம் வைக்க கூடாது மிஸ்டர் ராம ஜெயம் , அடுத்த தடவ லவ் பண்ணும்போது அளவோட லவ் பண்ணுங்க . ஜஸ்ட் லவ் தான பா. 
by S சதீஷ் குமார்,Madurai,India    28-04-2010 11:23:21 IST
 இந்த மாதிரி பெண்களுக்கு இது ஒரு பாடம்.  
by A முபாரக்,saudiarabia,India    28-04-2010 10:53:08 IST
 Stupid girl !!! Why she continued from the past 5 years?? why she did't think of her feature?? Is Boys are toys for time pass / roaming?? Yes he is good man that's why he asked her once again to get permission from her parents. Now She is telling 'NO' with out her parents permission she wont married Why she didn't tell the same answer past 5 year before?? Because now both of them are students now she became an B.com Student, He is an Taxi Driver that's why. Stupid Girls... காதல் ஒரு மனிதனை மிருகமாக்குகிறது..ஒரு மிருகத்தை அதே காதல், மனிதனாக்குகிறது. ஆனால் இவர் காதலை பொழுது போக்ககா கொண்ட பெண்ணை தெரியாமல் நல்லவள் என்று நம்பி காதலித்ததால் இங்கு மிருகமானன்!!!!!!!! 
by S MOHAN,Pondy,India    28-04-2010 10:43:21 IST
 ஏன்டா இன்னும் இப்படியிருக்கீங்க. இந்த சரண்யா இல்லன்னா ஆயுரம் சரண்யா இருக்கு இந்த உர்ல. அதைவிட்டு உன் வாழக்கையையும் போயு அந்த பொண்ணு வாழ்கையும் போயி.........???????? 
by a ravi,Chennai,India    28-04-2010 10:25:36 IST
 இது மாத்ரி செய்கிறவங்களுக்கு மக்கள் மத்தியில் தூக்கு தண்டன கொடுக்க வேண்டும். 
by G. GANESH,chennai,India    28-04-2010 10:19:02 IST
 அவன் கூட ஏற்கனவே குடும்பம் நடத்திய இவளுக்கு இது சரியான பாடம். எப்படி இருந்தாலும் அவளை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறானே அதுவே பெரிய விஷயம்  
by super suppu,france,FrenchPolynesia    28-04-2010 08:57:22 IST
 நீயும் வாழாமல் அவளும் வாழாமல் உங்கள் வாழ்வை தொலைத்து விட்டு தவிக்கும் ராமஜெயம். உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பல பெண்கள் தான் காதலிக்கும் ஆண்களை இந்த மாதிரி நிலைக்கு கொண்டு செல்லுகிறகள். பாவம ஆண்கள் 
by nila mdu,madurai,India    28-04-2010 08:54:32 IST
 நண்பன் செய்தது சரியே. சரணியா நீ காதலிக்கையில் உன் அம்மாவிடம் சொல்லியே நண்பனை காதலித்திருக்க வேண்டும். நல்ல அழகான ஆண்களையும் உயர்ந்த கல்வியும் உள்ள வேறு ஆணைதான் உனக்கு புடிக்கும். அதனால தான் உனக்கு இந்த நிலை. கே.அன்பரசன்  
by Anbu அன்புவாசுகி,Ramanathapuram,India    28-04-2010 08:48:39 IST
 What he did is absolutely correct, why girls are cheating boys?? Girls are doing everything with their lover during love even sex also, after that why they are changing mind...girls doesnt have common sense??? 
by S சிவா,Chennai,India    28-04-2010 08:37:34 IST
 In Andra pradesh police has an unofficial code of action for acid attack on young girls. The culprits are encountered. AP people support encounter of acid attackers who spoil the life of young girls. This type of police encounter is unofficialy supported by all political parties too. 
by K Kumar,Chennai,India    28-04-2010 08:30:43 IST
 good, if we do like this, then only the girls will be become a proper manner. 
by t malarvizhi,Coimbatore,India    28-04-2010 08:25:31 IST
 இந்த மாதிரி ஆட்களால்தான் காதலின் புனிதம் கெடுகிறது. சில உண்மையான காதலும் தோல்வியில் முடிகிறது. காதலில் முக்கியமானது நம்பிக்கை. நம்பிக்கை இல்லாத காதலோ, கல்யாணமோ கண்டிப்பாக வெற்றியடையாது. இருந்தாலும் ஆசிட் ஊற்றிய பின்பும் அவளின் முகம் எவ்வளவு கோரமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்ற ராமஜெயத்தின் வாக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆனாலும் தன் காதலியாகிய மனைவி நிறைய ஆண்களுடன் பேசுவது அவளின் முகத்தில் ஆசிட் ஊற்றுவதால் மட்டுமே தீர்வாகாது. அதற்கும் நிறைய சுமுகமான வழிகள் உள்ளன. ஆகையால் இது ஒரு கொலை முயற்சிக்குச் சமம். இதற்காக ராமஜெயம் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.  
by selva தெ.செல்வக் குமார் ,pulikuthi,theni,India    28-04-2010 08:22:09 IST
 ஹலோ இனி ஜெயிலுல களி தான்டா  
by n சாமீ,neyveli,India    28-04-2010 06:43:42 IST
 இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க இவனுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கணும். பெண்கள்ளுக்கான சுதந்திரம் காக்கப்பட வேண்டும். காதலர்களில் இருவருள் ஒருவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால், இருவரும் பேசி பிரச்னை தீர்த்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட கூடாது. 
by Mr madhu,Chennai,India    28-04-2010 05:31:33 IST
 MUST OVER IN LOVE THE GIRLS ARE LIKE THIS ONLY. BEFORE LOVING THE GIRLS MUST KNOW ONE THING THAT FOR LOVE MARRIAGE MOSTOVER PARENTS WILL NOT GIVE THE PERMISSION. THEN WHY THEY ARE LOVING AND AFTER 2 OR 3 YEAR TELLING NEED PARENTS HOPES. FOR THE BOYS ONE MESSSAGE. PLS DONT BELIVE THE GIRLS THERE ARE MORE CHIT(NOT ALL GIRLS).THANK U D.SENTHILKUMAR(DUBAI)  
by D.SENTHILKUMAR,VELLORE,India    28-04-2010 04:27:06 IST
 ஏன் இந்த கோண புத்தி..பொம்பளைக்கு புடிக்கலேன்னா அதை விட்டுட்டு வேற வேலையை பாப்பியா..அதை விட்டுப்புட்டு ஆசிடை ஊத்தி அந்த புள்ள மூஞ்சியை கெடுத்து நீயும் போலீஸ்ல மாட்டி..நீங்கல்லாம் சினிமாவ பாத்து ரொம்ப கெட்டுப்போயிட்டீங்க..பேசாம டிவில சீரியல் பாக்க ஆரம்பிங்க..அதுலதேன் வாய வச்சே எப்பிடி குடும்பத்த கெடுக்குறதுன்னு நல்லா சொல்லி தராங்க..ஆசிடுக்கேல்லாம் வேலையே இல்லை.. 
by 24ம் புலிகேசி,madurai,India    28-04-2010 02:16:55 IST
 காதல் ஒரு மனிதனை மிருகமாக்குகிறது..ஒரு மிருகத்தை அதே காதல், மனிதனாக்குகிறது.. 
by அம்முகுட்டி ,malaysia,India    28-04-2010 01:16:09 IST
 பெண்ணின் விருப்பம் இல்லாமல் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய கூடாது. வலுக்கட்டாயமாக திருமணம் செய்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்காது. சந்தேகம் தான் நாளுக்கு நாள் வளரும். திருமணத்திற்கு முன் அந்த பெண்ணின் மீது உனக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதுவும் அந்த பெண்ணுக்கு தெரிந்து விட்டது. இதுதான் உன் சுய ரூபம் என்று தெரிந்த பிறகு எப்படி உன்னை திருமணம் செய்து கொள்வாள். இனி அவள் உன்னோடு வாழ்ந்தால் அது அவளுக்கு நரக வாழ்க்கை தான். அந்த பாவம் உன்னை சும்மா விடாது. பாவத்தை தேடிக் கொள்ளாதே 
by தாஹாமுஹம்மது ,dammamsaudiarabia,India    28-04-2010 01:10:00 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்