முதல் பக்க செய்திகள் 

தலிபானுடன் பயங்கரவாதி ஷசாத் தொடர்பு: மிரள வைக்கும் தகவல்கள்
மே 07,2010,00:00  IST

Front page news and headlines today

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ் தானில் உள்ள பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எப்.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக் கத்தில் கடந்த 1ம் தேதி, கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இந்த காரில் இருந்து புகை வந்ததால் உஷாரடைந்த போலீசார், உள்ளே குண்டு இருப்பதை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த படங்களை போலீசார் பார்த்த போது, பைசல் ஷசாத் என்ற நபர் இங்கு காரை நிறுத்தியது தெரிந்தது. உடனடியாக அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்குள் ஷசாத், துபாய் விமானத்தில் தப்பிக்க விமான நிலையத்துக்கு அவசரமாகச் சென்றான். அவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


ஷசாத்(30) பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந் தவன். இவருடைய தந்தை பாகிஸ்தான் விமானப்படை துணைத் தளபதியாக இருந்தவர். பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றதையும், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்ததையும் எப்.பி.ஐ., அதிகாரிகளிடம் ஷசாத் ஒப்புக் கொண்டுள்ளான். அமெரிக்க மக்களை கொல்லும் நோக்கில் அவன் காரில் குண்டு வைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மன் ஹாட்டன் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஐந்து மாதங் களுக்கு மேல் ஷசாத் தங்கியிருந்துள்ளான். அந்த காலகட்டத்தில் அவன் என்ன செய் தான், யாரையெல்லாம் சந்தித் தான் என்பது குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


டைம் சதுக்கத்தில் வைக்கப் பட்ட குண்டுக்கு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு பொறுப் பேற்றது. ஆனால், அமெரிக்கா முதலில் இதை மறுத்தது. ஷசாத், பாகிஸ்தான் சென்ற போது தலிபான் அமைப்பின் முக்கிய தளபதி கோரி ஹூசைன் என்பவரை சந்தித்துப் பேசியுள்ளான். அதன் பிறகு, ஜெய்ஷ் -இ- முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ரெகான் என்பவரையும் ஷசாத் சந்தித்துள்ளான். இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்தே சென் றுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த பாகிஸ்தான் போலீசார், கராச்சியில் முகமது ரெகானை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். எனவே, இந்த நடவடிக்கைகளையெல்லாம் பார்க்கும் போது ஷசாத்துக்கும், பாகிஸ் தான் பயங்கரவாத அமைப் புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வருகிறது என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அமெரிக்க நெருக்கடியின் பேரில், ஷசாத்துடன் சம்பந்தப் பட்டதாகக் கருதப்பட்ட ஏழு பேர், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.


குண்டு பீதி: நியூயார்க்கில் ராபர்ட் கென்னடி பாலம் அருகே லாரி ஒன்று நேற்று தனியாக நின்றிருந்தது. இதனால் உஷாரடைந்த போலீசார், பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து விட்டு, வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று அந்த லாரியை பரிசோதித்தனர். ஆனால், அந்த லாரியில் வெடிகுண்டு ஏதும் இல்லையென பின்னர் தெரிய வந்தது. அதேபோல, நியூயார்க்கை நடுங்க வைத்த ஷசாத் எப்படி விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டான் என்ற கேள்விக்கும் விடை கிடைத் திருக்கிறது. ஷசாத் பெயரில் பயணம் செய்யும் எவரையும் விமானங் களில் அனுமதிக்கக்கூடாது; அப்படியிருந்தால், அதை சரி பார்த்து அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், எமிரேட்ஸ் விமானத்தில் புதிதாக டிக்கெட் வாங்கி சாமர்த்தியமாக நியூயார்க்கில் அவன் நுழைந்தான். ஆகவே, இனி 'விமானத்தில் பறக்க தடை' உத்தரவு பிறப் பிக்கப்பட்டால், அதை அதிக கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விமான அதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட் டிருக்கிறது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ராணுவ அதிகாரியின் மகன் ஷசாத் என்று தெரிய வந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் மக்களின் எண்ணம் எப்படி உள்ளது என்பது புலனாகிறது. பாகிஸ்தானை துண்டாடும் நடவடிக்கையில் இந்தியா,அமெரிக்கா, ரஷியா இறங்க வேண்டும். 
by S SEKAR,Dubai,India    10-05-2010 05:36:25 IST
 thiru பன்னாடை பாண்டியன் சரியாக சொல்லி இருக்கிறார். 
by PP MUTHU,srinagar,India    07-05-2010 18:05:58 IST
 we must put war on pakistan 
by k சத்தியநாதன்,tirupur,India    07-05-2010 14:05:08 IST
 அமெரிக்காவில் பிடித்தவுடன் பாகிஸ்தானிலும் உடனே பிடித்தார்கள் என்றல் அங்கே குற்றவாளிகள் என்று தெரிந்தும் சும்மா விட்டுவிட்டு அமெரிக்கால பிரச்சனை என்ற உடன் கைது செய்கிறார்கள் என்றல் பாகிஸ்தான் ல தீவிரவாதிகள் மக்களைவிட சுதந்திரமாக ஜாலியாக இருகிறார்கள் என்றே தோன்றுகிறது. எப்போது தான் திருந்துவார்களோ.  
by s விஜய்,qatar,India    07-05-2010 13:41:36 IST
 தொடை நடுங்கி பாகிஸ்தான் பசங்க அமெரிக்காவுக்கு பயந்து அர்ரெஸ்ட் பண்ணுரானுங்க இந்தியா என்றால் சரியான ஆதாரம் தரவில்லை என்று பொய் சொல்லுவானுங்க. பாகிஸ்தானியர்கள் முட்டாள்கள். 
by M.A. ANSARI,DAMMAM,India    07-05-2010 12:48:03 IST
 இதுல மிரள வைக்கும் தகவல்கள் எங்க இருக்கு...  
by A Mufy,chennai,India    07-05-2010 11:38:45 IST
 J Lakshman, They Act As per their Scripture says. Check this site .faithfreedom.org  
by S Arp,Chennai,India    07-05-2010 08:35:26 IST
 முன்பு படிக்காத பாமரர்கள் கொலை வெறி கொண்டு அலைந்தனர். இன்று படித்தவர்கள் மூளை சலவை செய்யா பட்டு மிகப் பெரிய பேரழிவு செயல்களில் ஈடுபடுகின்றனர். மூளை சலவை செய்ய பயன்படும் சித்தாந்தங்களை முதலில் ஒழிக்க வேண்டும். உலகம் நிம்மதி பெரும்.  
by k Kanavaan,Kovai,India    07-05-2010 07:47:50 IST
 பாகிஸ்தானை துண்டாடும் நடவடிக்கையில் இந்தியா இறங்க வேண்டும். பாகிஸ்தானின் நடவடிக்கையால் அந்த நாட்டின் மதத்திற்கும் அந்த நாடு தோன்ற காரணமாய் சொல்லப்பட்ட கொள்கைகளுக்கும் மீள முடியாத அடி விழுந்து விட்டது. 
by J லக்ஷ்மணன் ,COIMBATORE,India    07-05-2010 06:46:30 IST
 இவன் ஒரு மாஜி ராணுவ அதிகாரியின் மகன். இதன் மூலம் பாகிஸ்தானிய உயர் அதிகாரிகளின் 'mind set' எப்படி உள்ளது என்பது புலனாகிறது. இஸ்லாத்தை குறை சொல்லி ஒன்னும் புண்ணியம் இல்லை; பயங்கர வாதம் ஒரு நாட்டில் வளர அந்த நாட்டின் நேரடி, மறைமுக ஆதரவே காரணம். இது மக்களின் செயல் பாட்டில் நன்றாக புலப்படுகிறது. பாகிஸ்தான் உள்ளபடியே பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடாக இருந்தால், பாகிஸ்தானியரிடம் இருந்து இந்த விதமான அபரிகரமான ஆதரவு கண்டிப்பாக இருக்காது. இன்று உலகளவில் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானால் இன்று பாதிக்க பட்ட நாடுகள் இந்தியா, ரஷியா, ஆப்கானிஸ்தான், இராக், தென் தாய்லாந்த், phillipines சில பகுதிகள். இது உலகளவும் பரவும் அபாயம் உள்ளது. இந்த கருப்பு குதிரைக்கு யார் கடிவாளம் பூட்டுவார்கள் ??? 
by G பன்னாடை பாண்டியன் ,chennai,India    07-05-2010 04:57:52 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்