முதல் பக்க செய்திகள் 

நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
மே 07,2010,00:00  IST

Front page news and headlines today

ஈரோடு: தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன்(35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி(28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி(10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள 'புது சிருஷ்டி சபை' என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். 'சபைக்கு வந்து 'ஜெபம்' செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்' என, கூறியுள்ளனர். சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார்.


ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, 'சிறிது நேரத்தில் சரியாகி விடும்' என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார்.


சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது: சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், 'சுமதிக்கு நோய் சரியாகி விடும்' என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், 'சுமதிக்கு 'பேய்' பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்' எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார்.


சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. 'மாத்திரை கொடுக்கலாம்' என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர்.


கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ''கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,'' என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 நமக்குள் ஜாதி சண்டைகள் தீர்ந்தபாடில்லை இதில் எங்கு மதச்சண்டை தீரபோகிறது??? கடவுள் ஒருவர் என்பதை அவரவர் தனது மதகோட்படின் மூலம் நம்புகிறார்கள், இதில் சிக்கல் ஆரம்பமாவது தூதுவன் என்னும் பெயரிலேதான். மத மடையர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கிறார்கள். யார் எதை சொன்னாலும் வேதாந்தம், எங்கு கூட்டினாலும் கூட்டம். அன்று மனிதர்களை முறைபடுத்த மதம் தேவைப்பட்டது, இன்று மத போதகர்களை முறை படுத்த எதை இயற்றுவது???? அவரவர் வசதிக்கு அவரவர் வாழ்கை....நாம் அனைவரும் வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகளே.... 
by Sr சமூகம்,Trichy,India    10-05-2010 15:27:45 IST
 Bible teaches sick person need physician, when Jesus did his ministry he cured many sick person by his power, his disciples too. These miracles can be done by a real preacher who follows the doctrines of Bible and its not suitable for hypocrites. We cannot deny miracle healing in may christian missions even now. Bible says during last days many hypocrites will raise but we should alert to assess them. Because of some individual's benefit its not fair blaming a religion. Shanthi  
by E Shanthinilla,Doha,,Qatar    10-05-2010 12:10:42 IST
 ஹாய் நீங்கள் எதை சொன்னாலும் ஒரு உண்மை. அன்று வியாபாரம் என்ற பெயரால் நம்மை அடிமை படித்தினான். இன்று மதம் பெயரால் அடிமை படுத்துகிறான்.  
by b sakthi,chennai,India    10-05-2010 11:14:11 IST
 If you peoples are really trusting and u want to sincerly follow the religion mean why u r keeping ur name and religion as hindu in govt gazt .... u need concession and other benefits frm govt If all christians all r really trusting jesus first go and change ur name and religion in govt gazt, If christianity is the religion helping to needy persons means u peoples r really grabbing the govt concession frm them and enjoying with lots and lots of luxury. Impose strictly மத மாற்ற தடை சட்டம்  
by S மது,Rajahmundry,India    08-05-2010 10:20:28 IST
 எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். மதம் மாறினீர்கள், இன்னும் எதற்கு உங்களுக்கு சலுகைகள் வேண்டும் என்று keeping your religion & name in govt gazette as Hindu and maintaining to govt also hindu If you peoples are really trusting with ur god let ur god will give all ur need WHY UR EXPECTING FRM GOVT BY CONCESSION 
by S மது ,Rajahmundry,India    08-05-2010 10:14:09 IST
 'jesus never said to change the people to christianity, He asked the people to become a christ. christ means who is in the path to reach the eternity and follows the heaven. He strictly told not to follow him. He always used the word 'ungal visuvasam ungalai kappatrum'. But not him the saviour. If you realy respect jesus dont do the stupid things and try to love the all the beings surround you without forcing them to follow you. jesus loved even the sheeps and they are not having any religionity. What the christions doing is blood politics using the name of jesus. Every body loves jesus but not the people who are doing politics in the name of god. 
by g ச,chennai,India    08-05-2010 01:37:51 IST
 திரு p .சுதாகரன் அவர்களே இந்துக்கள் தங்களை தாங்களே வருத்தீக்கொண்டு கடவுளை வணங்குவது மூடநம்பிக்கை என்றால் கர்த்தரை தொடர்ந்த்து ஐந்து முதல் பத்து வாரங்கள் ஜபீத்தால் போதும் உங்கள் குடும்பத்தில் குறைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்புவது , ஒரு கிறிஸ்துவன் என்ன பாவம் செய்து இரூந்த்தாலும் பாதிரியாரிடம் சென்று பாவ மண்னிப்பு கேட்டவுடன் பரிசுத்தனாகிவிடுவோம் என்று நம்புவது எல்லாம் மூடநம்பிக்கை இல்லையா , ஜெபம் செய்தால் போதும் நோய் தீரும் என்றால் முதலில் எல்லா மருத்துவமனைகக்குளும் சென்று ஜெபித்து அனைவரையும் குனமடையைச் செய்யுங்கள் நாங்கள் வருடத்தில் குறிப்பிட்ட சில தினங்கள் திருவிழா கொண்டாடுவது மதத்தை வளர்ப்பதற்க்கு அல்ல அருகில் வசிப்பவர்களிடம் ஓற்றுமையை வளர்ப்பதற்க்கு,உறவுகளை வளர்ப்பதற்க்கு,வருடம் முழுவதும் உழைப்பவர்கள் ஒரு சில நாட்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்க்கு அதை மூட நம்பிக்கை என்று கொச்சை படுத்த வேண்டாம்  
by P MUNEESWARAN,THENI-625531,India    08-05-2010 01:05:33 IST
 பெண்டகோச்தே / செவன்த் டே அட்வேந்திஸ்ட் இவனுங்க தொல்ல தாங்க முடியாது. உண்மையிலேயே சொல்றேன் நான் ஒரு செப கூடத்திற்கு பொய் மாட்டிகிட்டு பட்ட அவஸ்தை, காலையில் இருந்து மாலை வரை சாப்பாடு தண்ணி இல்லாமல், பல குழந்தைகள் வேறு, மற்ற மதங்களில் இந்து மதம் உள்பட மூட பழக்கங்கள் உள்ளன, ஆனால் பெந்தகோஸ்தே வில் மட்டும் தான் படித்தவர்கள் சிந்திக்க முடிந்தவர்களும் இதை செய்கிறார்கள். ஆங்கிலேயர்கள் ஒன்றும் மருத்துவத்தை கண்டு பிடிக்கவில்லை, அதை பற்றி தெரிந்து கொள்ள தான் அவர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள்  
by sk srini,chennai,India    08-05-2010 00:47:18 IST
 இந்திய கிறிஸ்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதில்லையாம்! அப்படி என்றால் இந்த மாபெரும் எழுப்புதல் கூட்டங்களும், வானளாவிய சுர்சுகளும், லட்சக்கணக்கான மிஷனரிகளும் உருவாக்க பணம் எங்கிருந்து வந்தது? சும்மா பினாத்தாதே கிறிஸ்தவனே! 
by tamil ஹிந்து,madurai,India    08-05-2010 00:32:31 IST
 இந்த கிறிஸ்தவ கூட்டத்துக்கு இந்தியான்னாலும் இந்து மதம்னாலும் ரொம்ப இளக்காரமா போச்சு! வெள்ளைக்கார கிறிஸ்தவன் தான் மருந்து மாத்திரை கண்டுபிடிசானாம்! இந்திய கிறிஸ்தவ கூட்டம் ஒன்ன மறந்துட்டானுங்க - நம்ம நாட்ட அடிமை படுத்தி, நம்ம ஜனங்கள அடிமைகளா வெளிநாட்டுக்கு அடி-மாடா அனுப்பின வெள்ளைக்கார கிறிஸ்தவன் இவங்களுக்கு ரொம்ப ஒசத்தி ஆகிட்டான்! சுஸ்ருதணும் சாரகனும் கண்டுபிடித்த சர்ஜெறியும் மருத்துவமும் இவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லையோ அல்லது தெரிந்து கொள்ள அடிப்படை அறிவு கூட இல்லையோ! 
by tamil ஹிந்து,madurai,India    08-05-2010 00:24:57 IST
 God was created by man to control humans.. but now it is uncontrollable.. basically religion is controlling humans now.. losing more lives also in war becaus of religions.. donno when all will wakeup.. 
by j j,woodbridge,UnitedStates    08-05-2010 00:04:04 IST
 இந்த மாதரி ஒரு செய்தி வந்த பின்னும் ஏன் அரசாங்கம் விழித்து கொள்ள வில்லை???? பத்திரிக்கைகள் ஊடகங்கள் ஏன் இதை சுட்டி காட்டவில்லை???? இதே நிலையை ஒரு இந்து அமைப்பு செய்திருந்தால் ஒரு வாரம் பத்திரிக்கைகள் தொலைகாட்சி மற்றும் ஊடகங்களில் இதே செய்தி தான் மீண்டும் மீண்டும் ஒளி பரப்புவார்கள்... ஏன் இந்த பாரபட்ச நிலைமை?????? கருணாநிதி வீரமணி போன்ற வெத்து வெட்டுகள் அறிக்கை கொடுத்திருப்பார்கள் போராட்டம் நடத்தியிருப்பார்கள்.... ஹிந்து க்களே விழித்து கொள்ளுங்கள் இல்லையேல் ஒரு நாளைக்கு அவர்கள் பெரும்பான்மை மக்களாக மாறி விடுவார்கள்... நாம் சிறபான்மை மக்களாக இருக்கும் நிலை வந்து விட போகிறது...... நம் மதத்தில் எல்லாமே இருக்கிறது அமைதியான வாழ்க்கை முறை பண்பு ஒழுக்கம் நெறி அறம் அருமையான வழிபாட்டு முறை, இயல் இசை நாடகம் யோகா சித்த ஆயுர் மருத்துவம் ஏன எண்ணற்ற கண்டு பிடிப்புகளை அன்று நம் முன்னோர்கள் கண்டு பிடித்து இன்றைய விஞ்ஞானமே வியக்கும் அளவுக்கு வாழ்ந்தவர்கள்... இதை விடுத்து விட்டு நாம் இன்று கலாச்சார சீரழிவை நோக்கி செல்கிறோம்... சற்று யோசியுங்கள் உண்மையை உணருங்கள் வாழ்கை ஆனந்தமாக மாறும்... 
by G அரிகரன்,Tirunelveli,India    08-05-2010 00:00:56 IST
 hello friends,i see the commands i feel shame, we are all indians, all brothers and sisters no need to fight for god sake, pls command for what dinamalar has write, and pls dont command what others command, thank q 
by m lognath,perth,Australia    07-05-2010 23:56:49 IST
 ஹலோ mr. சுதாகர், மைன்ட் யுவர் வோர்ட்ஸ்....டோன்ட் செ தி ஸ்டுபிட்!!!!....மதம் என்ற பேய் பிடித்திருக்கும் கிருத்துவ கனவான்களே, தயவு செய்து இந்தியா இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்து விடாதீர்கள், பணத்திற்காக, இந்த நிர்வாகிகள் எடுக்கும் இவ்வளவு மோசமான முடிவுகள் , நாளை ஆயுதம் தூக்குவதற்கும் தூண்டுவார்களே ......so 
by S. Anand,Nagercoil,India    07-05-2010 23:32:04 IST
 பணம் கொடுத்து மதம் மாற்றுவது ஒரு கொடிய செயல்... பவம் ஏழை மக்கள் வறுமை யின் காரணமாக இந்த அவலத்திற்கு உட்படுகிறார்கள்... 'எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மருத்துவம் செய்வதுதான் கிறிஸ்டியன் பணி. ' இந்த வார்த்தை உண்மையெனில் ஏன் எங்கள் மதத்திற்கு வந்து விடுங்கள் நோய் குணமாகிவிடும் நிம்மதி கிடைத்து விடும் என்று சொல்கிறீர்கள்... முட்டாள்களே மதம் என்ற பெயரில் நீங்கள் ஏழைகளை ஏமாற்றுகிறீர்கள்... வெளி நாட்டினர் கொடுக்கும் பணத்திற்கு ஆசை பட்டு இங்குள்ளவர்களின் வாழ்க்கையை பழக்குகிறீர்கள். மதம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள அற்புதமான உறவு முறை... அதை உண்மையாக உணர்ந்து அனுபவிக்க வேண்டும்... அதை காசு கொடுத்து கட்டாயபடுத்தி ஏழ்மையை காட்டி வரவைக்க முடியாது....  
by G Ariharan,Tirunelveli,India    07-05-2010 23:27:44 IST
 those who r in usa they r writing wat u know abt Indian History we know little history but we know the present situation I KNOW OUR TRADITION MEDICINE HAVE SOME GOOD TREATMENT BUT NOT FOR MANY PRESENT DISEASES .We cant live with out english medicne accept truth how many of u taking oly siddha medicine pls dont take ur children for Vaccination.Without knowing the truth DINAMALAR SHD NOT WRITE PEOPLE R BEING CONVERTED BY FORCE WE R 3 % WE DIDNT GO WITH TRIDENT TO PRAY R PREACH 
by s edwin,abudhabi,UnitedArabEmirates    07-05-2010 23:25:52 IST
 காசுக்காக ஹாஸ்டலில் உள்ள மாணவர்களை போட்டோ எடுத்து மேலை நாடுகளுக்கு அனுப்பி பிச்சை எடுக்கும் கிருஸ்துவ கும்பல் இதுவும் செய்யும். எதற்காக மதம் மாறினாலும் அது தாயை/தந்தையை மாற்றுவதற்கு சமம்.  
by s ஆனந்தன்,toronto,Canada    07-05-2010 23:16:37 IST
 கட்டாய மத மாற்ற தடை சட்டம் மறுபடியும் தீவிரமாக கடை பிடிக்க வேண்டும் அனைத்து கிருத்துவர்களும் யோகியர்கள் போல் நடிக்கும் முழு அயோக்கியர்கள். Stop the Conversion Immediately.  
by s மது ,Rajahmundry,India    07-05-2010 23:11:30 IST
 முதல்ல தீர விசாரிங்கப்பா !இத்தனை நாள் என்ன பண்ணாங்கலாம் ? எங்கேயோ ஏதாவது இதைப்போல நடந்தால் அதற்காக ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களை,அல்லது கிறிஸ்தவ மதத்தை குறை சொல்வது மிகவும் தவறு! ஏன் நமது இந்து மதத்தில் இல்லாத மூட நம்பிக்கையா ? சுய லாபத்துக்காக நரபலி கொடுப்பது, பேய் ஓட்டுவதாக கூறி சாட்டையாலடிப்பது, பட்சிளம் குழந்தயை உயிரோடு புதைப்பது இப்படி எத்தனையோ இருக்க இப்படி மதக்கலவரத்தை தூண்டுகிற மாதிரி தயவு செய்து யாரும் எழுதாதீர்கள்! விசாரணையில் தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் !! நமது இந்திய திருநாடு எம்மதமும் சம்மதம் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பை முதல் குறிக்கோளாக கொண்டது என்பதை யாரும் மறக்க வேண்டாம்!!!  
by ஜி. முத்துக்குமாரசாமி ராஜப்பிரியர்,,Dubai,UAE.,India    07-05-2010 22:51:04 IST
 கிறிஸ்து செய்து காட்டிய மாய ஜாலங்கள் சித்து வேலைகள் மற்றும் பைபிலில் கூறப்பட்ட தத்துவங்கள் எல்லாமே அவர் இமய மலையில் ஹிந்து சுவாமிகளிடமும் சித்தர் களிடமும் கற்று கொண்டதது தான்... பைபிலில் இயேசு 13 வயதிலிருந்து 20 வயது வரை என்ன செய்தார் எங்கு சென்றார் என்று கூறபடவே இல்லை. காஸ்மீர் வரலாற்று நூலில் ஒரு வரி காஷ்மீர் அரசன் இயேசு வை பார்த்து நீ யார் என்று கேட்கிறார். இயேசு கூறிய பதில் 'ஒரு கன்னிக்கு பிறந்த மகன்' என்கிறார்.. இதிலிருந்து இது தெளிவாகிறது.... இதை கிறிஸ்டியன்ஸ் அக இருப்பவர்களால் மறுக்க முடியுமா??????????? எல்லாமே போலி. இதில் இவர்கள் தான் எல்லாவற்றையும் கண்டு பிடித்தார்கலாம்??? உங்களால் தான் கலாச்சார சீரழிவு... அதை பரப்பியவர்களே நீங்கள் தான்... முதலில் மதம் என்ற பெயரில் அப்பாவி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.......... 
by G அரிகரன்,Tirunelveli,India    07-05-2010 22:49:14 IST
 யாராலும் அழிக்க முடியாத மதம், கலாச்சாரம் நம்முடையது. அவரவர்கள் மதத்தின் பெயரால் செய்யும் தவறுகள் கடவுளுக்கு தெரியாதா என்ன. கடவுள் ஒருவரே. மனிதன் அதை உணர்ந்து பிற மதத்தை மதிக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு. அதை மனிதர்கள் உணர வேண்டும்.  
by R உமா மகேஸ்வரி ,chennai,India    07-05-2010 22:48:04 IST
 என் சிறு வயது தோழி புற்று நோயால் அவதி பட்டாள். அவளது தாயும் தந்தையும் மருந்து எதுவும் கொடுக்காமல் அவளை சாக விட்டனர். பாவம் கொடும் வலியால் அவள் துடித்த போது கூட கர்த்தர் காப்பார் என்று வலி நிவாரணி எதுவும் கொடுக்கவில்லை. எல்லா கிறிஸ்துவ மதத்தினரும் இப்படி பண்ணுவதில்லை. ஆனால் பெந்தகொஸ்தே சபையில் உள்ளவர்கள் இப்படி இருக்கிறார்கள்.  
by P கலா,NewJersey,UnitedStates    07-05-2010 22:29:07 IST
 அந்நிய மதத்திற்கு மாறியவர்களும், மாற்ற நினைபவர்களும் தேச துரோகிகள்!!! இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள் ஒரு தேச துரோகிகள் !!!  
by கிருஷ்ணன்,coimbatore,India    07-05-2010 22:24:49 IST
 கிறிஸ்துவ மதத்தை தலையில் வைத்துக் கொண்டாடும் தான்தொன்றிகளே! மேலை நாடுகலில் கிறிஸ்துவர்கள் தன் மதத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். சர்சுகள் எல்லாம் பெரும்பாலும் காலியாகவே இருக்கின்றன. இதனாலேஎ மதவாதிகள் பணத்தை கொட்டி உதவி என்ற போர்வையில் மதம் மாற்றி வருகிறார்கள். உண்மையாகவே உதவும் மனம் படைத்தால் மதங்களுக்கு வேலையே இல்லை.  
by C ஜெர்மனி,Aachen,Germany    07-05-2010 22:22:49 IST
 unnai poll piranai nesi 
by d dhas,chennai,India    07-05-2010 22:11:32 IST
 உண்மையான மதம் யாரையும் தொந்தரவு செய்து மதம் மாற்றம் செய்யாது. உண்மயான மதம் இந்து மதம். யாரயும் இதுவரை யாரையும் இது வரை தொந்தரவு செய்து மதம் மாற்றியது இல்லை. எந்த ஒரு உண்மையான இந்து வையும் யாராலும் மதமாற்ற முடியாது  
by sampanthamoorthy,DUBAI,India    07-05-2010 22:08:19 IST
 உண்மைய விசாரிங்க ... 
by c karthikeyan,trichy,India    07-05-2010 21:59:55 IST
 திரு.சுதாகரன் அவர்களே, எங்களை குறை சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் பெரிய ஆட்கள் இல்லை, எங்கள் மதத்தில் ஒரு சில குறைகள் உள்ளன, இல்லை என்று சொல்லவில்லை, மக்களின் நம்பிக்கையின் வழிபாடு மட்டுமே இந்த செயல்களின் மூலமாக வெளிப்படுகிறது, எங்களை நாங்கள் திருத்தி கொள்கிறோம், நீங்கள் திருந்தினால் சரி, இந்தியாவையோ, இந்து மதத்தையோ துண்டாடும் அனைத்து சக்திகளும் வேரோடு அழிந்துகொண்டிருக்கிறது, நீங்களும் உங்கள் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அள்ளிவீசும் அருள்வாக்குகள் கிழிந்து கொண்டிருக்கிறது, கூடிய சீக்கிரம் உங்கள் முகமும் கிழியும், இரண்டு மீனும், இரண்டு அப்பமும் வைத்து 5000 பேருக்கு உணவு அளித்த கதையை நீங்கள் நம்புவதை விட இது ஒன்றும் கேவலமானது இல்லை. 
by v கார்தீசன்,jeddah,SaudiArabia    07-05-2010 21:54:52 IST
 நாட்டு மருத்துவ முறையிலோ ஆங்கில மருத்துவ முறையிலோ சிகிச்சை பலனளிக்காத நிலையில் மதப் போதகர்களோடு ஜெபித்து குணம் பெற்றவர்களின் சாட்சி செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அதே வேளையில் நோய் குணமாவதற்கு மதம் மாறுகிறார்கள் அல்லது மதம் மாற்றப்படுகிறார்கள் என்பது சரியாகத் தோன்றவில்லை. பொதுவாக எந்த மதமும் (கிறிஸ்தவம் உட்பட) மருத்துவச் சிகிச்சைக்கு எதிராகப் போதித்து மருந்து மாத்திரைகளைத் தடுக்கிறது என்பதும் சரியாகத் தோன்றவில்லை. மருத்துவத்தின் பெயரால் பிற மதமார்க்கங்களைப் பழிப்பது தவிர்க்கப்படவேண்டும்.  
by P Arul,PNGTamilNadu,India    07-05-2010 21:37:35 IST
 அலெக்சாண்டர் சொல்வது சரியே. கிறிஸ்துவ நிறுவனகள் நடத்தும் மருத்துவமனைகளே இதற்கு சாட்சி . அதில் நன்மை பெற்றவர்களில் நானும் ஒருவன் . மருத்துவ மனைகள் மருத்துவ கல்லூரிகள் செவிலியா பணி அன்னை தெரேச இதில் சில உதாரணங்கள் . 
by s இந்தியன்,London,India    07-05-2010 21:33:37 IST
 இது ஒரு கொடூரமான செயல்... இனியும் மக்களின் அறிவின்மையை பயன்படுத்தி மத மாற்ற முயற்சி நடப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க கூடாது . மக்களின் வறுமையை பயன் படுத்தி மத மாற்ற முயற்சி நடப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க கூடாது .  
by P Murugan,Chennai,India    07-05-2010 21:22:07 IST
 ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மக்கள் ஒன்றும் முட்டாள் கிடையாது. பணம் மற்றும் சலுகைகள் மூலம் கிருஸ்துவதிருக்கு மாறி இருந்தால் என்றைக்கோ இந்தியா கிருஸ்துவ நாடாகி இருக்கும். மோசேயின் காலத்தில் நடந்த உருவ வழிபாடுதான் தற்பொழுது இந்துக்களால் பலி கொடுக்கப் படுகிறது. கிறிஸ்து பாவத்திற்கு மரித்த பின் உருவ வழிபாடும் பலி கொடுத்தலும் நிறுத்தப்பட்டு அவரின் மூலமாக சொர்க்கம் கிடைக்க ஜெபித்துக்கொண்டு இருக்கிறேன். அபிஷேகம் என்ற பெயரில் கடவுளுக்கு வீணாக படைப்பதை ஏழைகளுக்கு கொடுத்து உதவலாம். இது நான் இந்துவாக இருந்து மனம் மாறியதை சொன்னேன். பணம், சலுகைக்காக மாறவில்லை. இதில் மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் நாம் அதை எதிர்க்க வேண்டும். 
by M.J ரெக்ஸ் ஜெயராஜ் ,Tema,Ghana    07-05-2010 20:55:15 IST
 Christianity doesn't contradict Science or Medicine. There's no verse in the Bible which says that and no preacher encourages it. There are so many Christian hospitals like CMC which serve the people. Has somebody verified if the preacher said not to take tablets or if lady's relatives are blaming him because they're not happy that she converted to Christianity. If the preacher had said that, then its definitely wrong and people should not encourage such preachers. The fact is people go to these meetings expecting miracles and get healed. I've seen people who are born deaf-n-dumb able to speak-n-hear, blind getting eyesight, Cancer getting healed etc.. Only the sick & the suffering know what pain is.. What's our problem if somebody who's suffering is relieved from it. We should stop complaining and try if we can help the needy.. If not, let's mind our own business and move on with our own lives.. 
by rps,Trichy,India    07-05-2010 20:51:29 IST
 I know a person (converted christain), who has rejected his Hindu Lover saying she has to convert or else leave him. This guy splits on Hindu Idols and say we Hindus are foolish people. When ever he meets some person , though he meets first time, he asks them to convert to Christain saying Jesus is the only God and Saviour. Very soon this Guy will know the truth.  
by R பிரியா,bangalore,India    07-05-2010 20:39:22 IST
 ஏமாறவன் இருக்குறவரைக்கும் ஏமாத்துறவன் கண்டிப்பா இருப்பான். 
by g sudhaharan,madurai,India    07-05-2010 20:30:18 IST
 இதுக்கெல்லாம் காரணம் யாரு ? நம்ம அரசுதானுக ,ஏன் சொன்ன அவுங்க வந்த வேலை ஏதோ அத பாத்துவிட்டு வெறட்டிவிடனமுல ,அதான் இங்கே டேரா போட்டானுங்கப ! 
by G சுதாகரன் ,madurai,India    07-05-2010 20:19:41 IST
 ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை வெறட்டுதாம், Mr Sudhakar, பணத்துக்காகவும், இன்ன பிற சலுகைக்களுக்காகவும் உங்களுடய அடையளத்த இழந்து வாழற உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, அவங்கள பத்தி பேச?? மதம் மக்களை நல் வழி படுத்த மட்டுமே, பிரிவினை ஏற்படுத்த அல்ல, புரியாத சில முட்டாள்களினால் எல்லா மதமும் சீரழிகிறது. நான் உங்க மத்திற்க்கு எதிரனாவள் அல்ல, தவறான கருதுக்களை பரப்பி மக்களை மூட்டாள் ஆக்குபவர்களை எதிர்ப்பவள் 
by P உமா,PA,UnitedStates    07-05-2010 20:01:43 IST
 Mr Alexender, நீங்க எப்பாவது இந்திய வரலாறு படிச்சதுண்டா? do u know anything about Indian medicine's. Sidha, Ayur veda and yoga. If you don’t know anything please don’t write a comments. நீங்க கிறிஸ்டியன் என்பதற்காக கண்மூடி தனமாக கருத்து சொல்லாதீங்க. இயேசு யாரையும் கட்டாயபடுத்தி மதம் மாற்ற சொல்லலை, நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு, அதை எந்த வடிவில் வேண்டுமானாலும் வழிபடலாம். its basically choosing a path to reach the power, u can select any way. மக்களுடைய ஏழ்மையை பயன்படுத்தி மத மாற்றம் செய்யபவனை ஏசுவே மன்னிக்க மாட்டார். கிருத்துவ நண்பர்களே! உங்கள் கடவுளின் அதிசியங்களை பரப்புங்கள், அதில் மக்களை மாக்கள் ஆக்காதீர்கள்.  
by P உமா,PA,UnitedStates    07-05-2010 19:37:58 IST
 சுதாகரன், ஒரிசா பாதிரி எப்போ இந்தியா வந்தான், என்ன பண்ணானு உங்களுக்கு தெரியுமா?, சும்மா பேசகூடாது, இன்னும் எத்தனையோ பேர் இந்தியாவில் மதம் மாற்றுகின்றனர் தெரியுமா. முதல்ல உண்மைய தெரிஞ்சிகோங்க. 
by V அஜய்குமார்,Singapore,India    07-05-2010 19:24:03 IST
 இந்த நேரத்தில் எல்லோரும் மதத்தை விடுத்து, ஒரு மனிதனாக யோசித்திருந்தால் ஒரு உயிரை காத்திருக்க முடியும் என்பதை உணர வேண்டும் ... அதை விடுத்து ஏன் இப்படி மதத்தால் வேறுபட்டு இருக்கிறோம் என்பது கவலை அளிக்கிறது !  
by ரஞ்சித் ,chennai,India    07-05-2010 18:43:51 IST
 அன்பான இந்திய சஹோதரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.நடந்த சம்பவம் மிஹவும் வருத்தத்துக்குரியதே.அந்த பாஸ்டர் செய்தது தவறுதான். அனால் நீங்கள் நினைக்கிற அளவுக்கு நாங்கள் பணத்துக்காக யாரையும் மதம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நினைக்கிற மாத்ரி வெளிநாட்டிலிருந்து யாருக்கும் பணம் வருவதும் இல்லை. ஹிந்துக்களாகிய நீங்கள் ஏழைகளை அவர்களுடைய ஜாதியை காட்டி ஒதுக்கி விடுகிறீர்கள். நீங்கள்தான் நன்மை செய்ய வில்லை என்றால் ஏன் எங்களையும் செய்ய விட மாட்டேனென்கிறீர்கள்.நம்முடைய நாட்டில் மருத்துவம் இருந்தது உண்மைதான். ஆனல் எத்தனை பேர் அதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.சொன்னால் மருத்துவம் பலிக்காது என்றீர்கள்.இதுதான் இந்திய மருத்துவம்  
by Johna,coimbatore,India    07-05-2010 18:40:22 IST
 இங்கு இப்படி கட்டாய மதமாற்றம் செய்யும் நபர்கள் (முட்டாள்கள்) நம்ம அரசியல்வதிகள் மற்றும் ஊழல் பெருச்சாளிகள் போன்றவர்கள். முதலில் இவர்கள் மதம் மாறிய காரணம் நிச்சயமாக சுயநலமாகத்தான் இருக்கும். மேலும் இவர்கள் அப்பாவி மக்களை ஆசை காட்டி ஏமாற்றுகின்றனர். 
by sun நானும் ரௌடி நானும் ரௌடிதான்,India,India    07-05-2010 18:28:59 IST
 சென்னை திரு. அலெக்சாண்டர் அவர்களே! கிருத்துவன் இந்தியாவிற்கு வருவதற்கு முன் மருத்துவர்களும் மருந்தும் கிடைக்காமல் மக்கள் அனைவரும் அவதிப்பட்டர்களா என்ன? இதெல்லாம் மக்களின் அறியாமையையும் ஏழ்மையையும் பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகளின் செயல்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தமிழகத்தில் ஐயன் வள்ளுவன் மருத்துவம், மருந்து, மருத்துவன் அனைத்தையும் பற்றி எழுதியிருக்கிறான். 
by stm29,singapore,Singapore    07-05-2010 18:21:06 IST
 காசுக்காக மதம் மாறினால் இப்படிதான் நடக்கும். கர்த்தரை உண்மையாய் நம்பிருந்தால் கண்டிப்பாக உயிர் பிழைத்திருப்பார்.  
by A உண்மை ,Trichy,India    07-05-2010 18:16:28 IST
 தம்பி P Sudakaran அவர்கள் ஒரு கிறிஸ்தவர் என்பது விளங்கி கொள்ள முடிகிறது.....கோயில்கள் திருவிழா எடுப்பதை ஒரு பெரும் பிரச்சனையாக பேசி இருகிறிர்கள்..!! என்ன ஞானம் உங்கள்ளுக்கு!!...அமைதியாக கடற்கரை சென்று வரலாம் என்றால் உங்கள் திருச்சபைகள் அடிக்கும் லூட்டி தான் என்னென்ன? சீரணி அரங்கத்தை ஒரு மத மாற்றி தொழிற்சாலை என்று கருதி உங்கள் பாதிரியார்கள் அடிக்கும் லூட்டி என்ன எங்கலுக்கு தெரியாதா?? வெறும் ஜெபம் செய்தால் குணம் ஆகிவிடும் என்று நம்புவதும் மூட நம்பிக்கை தான்.!! இங்கே ஒருவரின் இயலாமையை பயன்படுத்தி மத மாற்றம் நடந்து இருக்கிறது. இதை விட பெரிய அவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. மானிட நேயம் உள்ள யாரும் இதை விளங்கிகொள்ளலாம. ஆனால் உங்களை கிறிஸ்துவராக மட்டுமே பாவிக்கும் பரந்த மனசு உங்கள்ளுக்கு அதனால் தான் இந்த சப்பை கட்டு...சீ...அருவருப்பாக இருக்கிறது...!! 
by Mr Caesar,NewJersey,UnitedStates    07-05-2010 17:50:04 IST
 God bless You all.. All comments written against christianity is very bad we dont know what happened exactly there,Oneday all will know the truth... Until then cross the finger in lips.  
by A Isarel,India,India    07-05-2010 17:46:05 IST
 Hindu is followd only in India. No other country except nepal is following that. Dont think u ஹிந்து people are very wise and others are idiot. 
by c Ganapathy,Bangalore,India    07-05-2010 17:45:55 IST
 ஏமாறுபவர்கள் இருகும்வரை, இது போன்ற கருப்பாடுக்கள் ஏமாற்றதான் செய்யும். மக்களா கவனம் தேவை  
by reddy,chennai,India    07-05-2010 17:27:46 IST
 கிறிஸ்தவர்கள் மதத்தை வளர்பதற்கு செலவு செய்வது உண்மை. இது திராவிட கழகங்களுக்கு நன்றாக தெரியும், ஆனால் வெளியில் காட்டி குடுக்க மாட்டார்கள். இதே ஒரு ஹிந்து அமைப்பு செய்தி வெளியிட்டால் உடனே மறுப்பு செய்தி வெளியே வரும். அது ஏன் என்பது தான் என்னோட டவுட்.  
by கணேஷ் ,Maldives,Maldives    07-05-2010 17:08:26 IST
 தெருக்களையும், சாலைகளையும், மரங்களையும் ஆக்கிரமித்து கோயில் கட்டி, கூட்டம் கூடி மற்றவர்களுக்கு இடைஞ்சல் பண்ணும் உங்களுக்கு கிறிஸ்துவ மதத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? தலையில் தேங்காய் உடைப்பது, நாக்கில் அலகு குத்துவது, இன்னும் பல வழிகளில் உடலை காயப்படுத்திக்கொள்ளும் மூட நம்பிக்கைவாதிகளே! ஒரிசா-வில் பாதிரியார் குடும்பத்தை உயிரோடு எரித்து கொன்றவர்களே! நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்தவர்களே! உங்களுக்கு கிறிஸ்துவ மதத்தை பற்றி பேச யோக்கியதை இல்லை. 
by P Sudhakaran,Salem,India    07-05-2010 17:04:41 IST
 As a christian i had to admit that there are some black sheeps in our community who indulge in these sorts of cheap acts. Even sane Christians dont has the guts to stand against these people because they think that its blasphemy and talking against them is equated to talking agaisnt God. When i used to criticise them my mother tried to shut my mouth because she thinks that its blasphemy. This trend has to change, Since Christianity is the biggest religion in the world we should have Christian watchdog group to monitor rogue priest like him and alert the people about the scandal.  
by V மதன்ராஜ்,Pune,India    07-05-2010 17:02:48 IST
 Mr. C. ALEXANDER, உங்களோட மத பற்றை பாராட்டுகிறேன். ஆனால் சித்த மருத்தவம் எல்லா வகை நோய்க்கும் மருத்துவம் பண்ணார்கள். மேலை நாடினர் வந்த பின்னால தன எல்லா வகை நோய்களும் வந்தது. 
by km சுதாகரன்,Dharmapuri,India    07-05-2010 16:40:56 IST
 ஐயா அலெக்சாண்டர், கிறிஸ்து பிறபதற்கு முன்னால் மருத்துவத்தை கண்டவர்கள் ஹிந்துக்கள். உங்களுக்கு எங்கே வரலாறு தெரியப்போகுது. ஏதோ ஜெருசலத்தில் நேராக இந்திய வந்ததை போல சொல்லுகிறீர்கள். கிபி கிமு என்றல் என்ன தெரியுமா. இதற்கு முன்னால் சித்தர்கள் கண்டறிந்த மருத்துவ நூல்களை அங்கிலயர்கள் திருடிசென்று இன்று herbal medicine என்று சொல்கிறார்கள். எந்தவித நவீன வசதிகள் இல்லாத காலத்திலே எல்ல வித நோய்களுக்கும் பக்கவிளைவு இல்லாத மருந்து கண்டார்கள். இன்று ஆங்கில மருத்துவத்தில் பக்கவிளைவு இல்லாத மருந்து இல்லை. காலத்தின் கொடுமை நோயை குணபடுத்த வேறு நோய் தரகூடிய மருந்தை நாம் சாப்பிடுகிறோம். பேணிகாக்க வேண்டிய எல்லாத்தையும் விட்டுவிட்டு உங்களைபோல் வேறுமர்கதை நம்பி நடுவீதியில் நிற்கிறார்கள் மக்கள். மதம் எனபது மனம் நல்வழியல் செல்ல பயன்பட வேண்டும், பிறரை கட்டயபடுத்தவோ, பணம், வேலை, என்ன பிற கொடுத்து ஆசை காட்டி மாற்றகூடாது. இந்தியாவில் பிறந்த எல்லோரும் ஹிந்துக்கள். உங்கள் முனோர்கள் காலத்தின் கட்டாயத்தால் மாறிவிட்டார்கள். உங்கள் தாத்தா கூட ஹிந்துவாகதான் இருப்பார் சரித்திரத்தை புரட்டிபருங்கள். யாரும் எந்தமதத்தையும் பின்பற்றலாம், ஆனால் யாரையும் கட்டாய படுத்த கூடாது. சில மததினர்களுக்கு வேறு வேலை இல்லாமல் மதம் மாற்றுவதே ஒரு வேலையாக கொண்டு பிட் நோட்டீஸ், மற்றும் நேரடி பேச்சு மூலம் மாறவைக்க நினைகிறார்கள். நாட்டை ஆளும் அரசுக்கு இதை தடுக்க மனமில்லை(சோனியா) . நாட்டுமக்களை மதம் என்ற பேரால் துண்டாட நினைகிறார்கள் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மதம் மாறுவது குற்றம் என்ற சட்டம் வேண்டும், அப்போது தான் இதுபோன்ற அவலங்கள் நடக்காது.  
by S விஜய்,qatar,India    07-05-2010 15:01:02 IST
 Christianity is not a religion. It is a one of the way to live with good characters. Event most of the Christians also not follow the Christianity. In Christians also some of the duplicated preachers are there.(Like nithyandha and premanandha in hindus) .It’s a problem in all the religion. We can’t say every preacher is bad. But No one try to convert religion(Hindu to Christian (or) Islam to Christian). They try to convert Bad Person to good person that’s all (Not a mathamattam it is manamattum). Any one will say this activity is bad ?.....We have to take the good things from the preacher not all. Prayer is different and taking tablet is different. Here they have confused. So many diseases cured using the prayer that does not mean need to stop to taking tablet. 
by T sam,tisaiyanvillai,India    07-05-2010 14:22:43 IST
 எங்க ஹிந்துச விடுங்கபா... நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்கள டா...  
by jk mathiprakash,Bournemouth,UnitedKingdom    07-05-2010 14:20:14 IST
 இது ஒரு கொடூரமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களின் அறிவின்மையை பயன்படுத்தி மத மாற்ற முயற்சி  
by r சுரேஷ்,newdelhi,India    07-05-2010 13:48:53 IST
 கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஐயா, செத்தவங்களுக்கு ஜபம் பண்ணி உயிர்தெழுப்பினாலும் பண்ணுவார்கள், அவசர படவேண்டாம்  
by G சுப்ரமணியன்,dubai,UnitedArabEmirates    07-05-2010 13:46:39 IST
 திரு அலெக்ஸாண்டர்.சி அவர்களே தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளவும். மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. இதை திருவள்ளுவர் என்றைக்கோ சொல்லிவிட்டார். இதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ கிருத்துவர்கள் தான் மருந்து கண்டுபிடித்து எல்லோரையும் காப்பாற்றுவது போல கூறுகிறீர்கள். இந்திய ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் செய்யாத எதையும் ஆங்கில மருத்துவம் செய்ய முடியாது. ஆங்கில மருத்துவத்தால் நாம் படும் அவஸ்தைகள் எண்ணில் அடங்கா. நம் உடலையே சீரழிக்கும் மருத்துவத்தை கொடுத்த மகான்கள். ஆகவே தயவுசெய்து இப்பணியை தொடரவும். 
by R பரத்,chennai,India    07-05-2010 13:05:01 IST
 பணத்தை காட்டி ஏழைகளை இழுக்கும் மிசினரி களும் பணத்துக்காக எதை வேணுமானாலும் திங்க தயாராக இருக்கும் பொது மக்களும் இனியாவது திருந்தட்டும் கல்வி மருத்துவம் என பல நல்ல விசயங்களால் நற் பெயர் பெற்றிருத்த கிருஸ்துவ சகோதரர்களின் நற்பெயரை கெடுக்கும் இது போன்ற ஏமாற்று வேலைகளை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் செய்யும் நற்காரியங்களை பார்த்து தான் வர்ணாசிரம கொள்கையால் பாதிக்க பட்டவர்கள் உங்கள் மதத்திற்கு வர வேண்டுமே ஒழிய பணத்திற்காக மதம் மாறினால் அது உங்களுக்கும் உங்கள் மதத்திற்கும் அவமானமே அன்றி வேறில்லை  
by a ஹெம்லாக் விஷம் ,chennai,India    07-05-2010 13:04:36 IST
 அய்யா C. ALEXANDER,chennai,India அவர்க‌ளே, என் பள்ளி பருவத்தில் தலைமை ஆசிரியர் குழதைககும் இந்த கதி தான் ஆனது. அவர் ஜபம் மட்டும் தான் செயதார். its happened on chirst the king matric school in kumbakonam 1989 for john headmaster children collect detail from the school.............. in india ஆயுர்வேதம் தொன்றுதொட்டு உள்ளது C. ALEXANDER அய்யா, ஏதோ கிறிஸ்தவர்கள் india வந்த பின்னர் தான் இங்கு மருத்துவம் உள்ளது போல முட்டாள் தனமாக அந்த பாதிரியார் போல பேசாதீர் அலெக்சாண்டர்.  
by r sheik,chennai,India    07-05-2010 12:49:54 IST
 இந்த சபை பிரச்சனை எங்கும் உள்ளது. மூளை சலவை செய்கிறர்கள். சில மூடர்கள் இந்த சபையை நம்பி வாழ்கையை வீணடிக்கிறார்கள். இந்த மூடப் பயித்தியங்களை என்னவென சொல்வது?  
by N Shankar,Abudhabi,UnitedArabEmirates    07-05-2010 12:30:43 IST
 ஏப்பா ! இன்பா அப்ப கெட்டதையும் வாழ்த்தனுமா ? முதலில் மருத்துவம் அப்புறம் இது போன்ற நம்பிக்கைகள் உலகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. இதில் வெளிநாட்டுப்பணம் கிடைக்கிறது என்பதற்காக மதம் மாற்றம் செய்யும் ஈனத்தனமான வேலை ஒரு கேடா. ஏண்டா அலையிறீங்க. அப்புறம் அலெக்சாண்டர் சம்பவ இடத்திற்கு போய் வன்மையாக கண்டி, உன்ன மாதிரியான ஆளுகளை வரவேற்கத்தான் தயாராக உள்ளார்கள்  
by r ரவீந்திரன்,karur,India    07-05-2010 11:41:28 IST
 C. ALEXANDER,chennai,India ஐயா, நான் உங்கள் கருத்தை மிக மிக மிக வன்மையாக மறுக்கிறேன். நீங்கள் சொல்லுவதை பார்த்தால் நம்முடிய நாட்டில் 200 வருடங்களுக்கு முன்னாள் வைத்தியம் இல்லாத மாதிரியும் உங்களால் தான் நாங்கள் இன்று உயிரோடு இருப்பது மாதிரியும் உள்ளது. உலகத்தின் பழம் பெரும் வைத்திய முறை எங்கள் சித்தாவும், ஆயுர்வேதமும்... பக்க விளைவுகள் இல்லாத ஒரே மருத்துவ முறை... மருத்துவம் இங்கு தர்மமாக இருந்தது.. நீங்கள் உள்ளே நுழைந்த பின்பு தான் சீர் கெட்டு குட்டி சுவராய் போனது.. மருத்துவம் 'தொழில்' aanadhu.. மருத்துவமனை கொள்ளை கூடங்களாக மாறின... நோயாளி பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்பட்டான். இலவச மருத்துவம் வேண்டும் என்றால் மதம் மாற வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டான். பள்ளி, மருத்துவமனை ஆகியவற்றை மக்களுக்கு சேவை செய்ய கட்டினீர்களா இல்லை கொள்ளை அடிக்க கட்டினீர்களா என்பதை உலகறியும்... நாங்கள் இங்கு கலாசாரத்துடன் வாழும் பொது, காட்டில் திரிந்தவன் வெள்ளைகாரன். இன்று நகரத்தில் அவன் வாழ்தாலும் பழக்க வழக்கத்தில் பண்பாட்டில் இன்னும் அவன் பின் தங்கியவனே...  
by M சதீஷ்,coimbatore,India    07-05-2010 11:41:26 IST
 எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. நித்யன், கல்கி, அடுத்து இப்போது இந்த பாதிரியார். அடுத்து யாரோ?  
by s செந்தில் ,chennai,India    07-05-2010 11:32:35 IST
 With out realizing what is Christianity ,blaming is immaterial. Holy Bible doesn't teach disease can cure only by prayer rather it says Doctor is required for the patient. So try to understand what holy bible says before abusing.  
by sam samuel,Doha,Qatar    07-05-2010 11:30:58 IST
 மதமாற்றம் கிறித்துவ கைகூலிகளால் செய்யபடுகிறது , மதமாற்றம் தடை சட்டம் தேவை இந்தியாவில் . இல்லைஎன்றால் ஹிந்து மதம் கிறிஸ்துவ வெளிநாட்டு கைகூலிகளால் அழியும் .  
by R Rajith,coimbatore,India    07-05-2010 11:27:10 IST
 ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்ததால் முடியாது, போடா வெள்ளையனே என்று சொல்லி அமைதி ஆகி விட்டோம். அதுவே இங்கு கிறிஸ்தவர் அதிகமாக இருந்திருந்தால் உணர்ச்சி ரீதியாக அமெரிக்காகாரனுக்கு அடிமை ஆகி அவன் சொன்னதை எல்லாம் கேட்டு இருப்போமே இல்லையா? அதற்கு ஏதுவாகவே ஜெஷுவ ப்ராஜெக்ட் என்ற பெயரில் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்ப அதிக நிதி ஒதுக்கிடு செய்து உள்ளது என்பது நம் அப்பாவி கிறிஸ்தவ மத மாற்ற பிரியர்களுக்கு தெரியாது என்பது தான் கொடுமையிலும் கொடுமை.// 
by hj sudarmba,chennai,India    07-05-2010 11:24:30 IST
 எல்லா மதங்களும் மனிதன் தரிகெட்டுப் போய் விடாமல் நேர் வழியில் செல்வதற்கான ஒரு பாதையை வகுத்துக் கொடுக்க உருவானது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞான உலகில் பேய் பிசாசு என்ற கற்கால மூடநம்பிக்கையை கலைய வேண்டுமானால், கல்வியறிவு மிக முக்கியம்.கிராமங்கள் கல்வி அறிவில் முன்னேறி விட்டால் கட்டாயஸ்திரிகள் பின்னேறி விடுவார்கள்.  
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates    07-05-2010 11:22:27 IST
 Hi Friends, My wife is from Converted Christians Family. Her Parents got job when they were Hindus. My wife & her brother got Engineering Seats using Hindu Quota. But every time they say Jesus Christ has given everything. And they do not like to change their religion in their certificates. Not only her family most of the Converted Christians getting the benefits using Hindu Quota. In church also the Pastors teaching them that Jesus Christ only Created the God and he only saves all and non- believers are the children of Satan. Any Christian friend here please show me the Name India in Bible. Don't say India is the Part of the World. In Bible they clearly mentioned that Jesus Christ born to save the People of Israel not India/ Pakistan/ Africa/ US/UK/Japan. The fact is that in Israel only 2% People are Christians and majority are following Judaism (Wikipedia). I don't like to hurt any ones beliefs. But what I'm requesting is India has very rich History & Tradition please don't demolish using Name of the God. Dear Mr. Jasper & Mr. Alexander can u ask Christian Miniseries to demolish all their Hospitals becaz according to u God Heals anything.  
by M Muthuvel,Chennai,India    07-05-2010 11:16:39 IST
 This is 100% true. Church people target economically poor and pull them into their religion. I met one blind girl who came out of New Assembly church,saidapet, she said that she was muslim by birth and she was forced to become christianity to get benefit from church. If church wants to help poor, why do they force them to become christian. Let them help them as human beings. Helpless Hindus convert to Christianity blindly. We should never capitalize others' poverty by our religion. GOD BLESS INDIA. Jai Hind. 
by n ரவி,chennai,India    07-05-2010 11:16:19 IST
 இந்து ம‌த‌த்தில் வெறுப்பு க‌ருத்துக்கு இட‌மில்லை. ஆனால் சில இந்துக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். அதற்கு காரணம் சுவிசேஷ பிர‌ச்சார‌க‌ர்களின் சித்து விளையாட்டுகள் தான்! உங்க‌ள் பிர‌ச்சார‌க‌ர்க‌ள் ஆதி வாசிகளின் இடங்களுக்கு சென்று, காரிலே கீ குடுக்காம‌லேயே ”கிருஷ்ண‌ர் பேரை சொல்லி வ‌ண்டியைத் த‌ள்ளு” என்கிறார்க‌ள். வ‌ண்டி‌ ஸ்டார்ட் ஆகாது! பிறகு ”இயேசு சாமி பேரை சொல்லி வ‌ண்டியைத் த‌ள்ளு” என்று கூறி, அப்போது கீ குடுத்து வ‌ண்டிய‌ ஸ்டார்ட் செய்கிறார்கள். ”பார்த்தியா, இயேசு தான் உண்மையான‌ க‌ட‌வுள்” என்று கூறுகின்ற‌ன‌ர். முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா எழுதியதைப் படியுங்கள்  
by hj sudarmba,chennai,India    07-05-2010 11:10:15 IST
 the main aim of christian missionary is to convert hindu to christian ,stop it i say 
by r parthiban,cuddalore,India    07-05-2010 11:08:39 IST
 Why the goverment is keeping on hartred to Hindus . Indian churches are used as shelters for religious conversions under the blanket . voting to candidate are also decided there . 
by R reghu,Dubai,UnitedArabEmirates    07-05-2010 11:03:00 IST
 அய்யா அலெக்சாண்டர் அவர்களே, பெண்ட கோஸ்ட் என்று ஒரு ஜாதி இருக்கிறது அது பத்தி உங்களுக்கு தெரியுமா? அவர்கள் படம் பார்க்க மாட்டார்கள் மருத்துவர் இடமும் செல்ல மாட்டார்கள். 
by g சுஷாந்த்,chennai,India    07-05-2010 10:57:37 IST
 Don't comment on christians . Most of comments mentioned by you all are surviving in Western countries & the countries prime religion is Christian. Due to Christianity in India in early stages we got English Medicine,Education,Modern skills etc. The incident what happened is no where rekated to Christianity.  
by a christian beliver,Dubai,UnitedArabEmirates    07-05-2010 10:51:15 IST
 intha mathiri aniyayamellam christian entra peyaril bala oorkalil nadakku..  
by k ragavan,tirunelveli,India    07-05-2010 10:51:01 IST
 சென்னை அலெக்சாண்டர் கூறியிருப்பது மிகவும் தவறு. கிறிஸ்தவ மதம் மட்டுமே நம் நாட்டில் மருத்துவத்தைக் கொடுத்தது என்று சொல்லி இருக்கிறார். ஏன் சித்தா,, யுனானி, ஆயுர்வேத முறைகள் மருத்துவம் இல்லையா? கிறித்தவர்கள் 400 வருடங்கள் முன்பு இங்கு வரும் முன் இங்கே வைத்திய வசதியே கிடையாதா? இவர் சொல்வதுபோல் சொல்லி ஏமாற்றி தான் மதமாற்றம் செய்கிறார்கள்.  
by R ramesh,salem,India    07-05-2010 10:49:53 IST
 இந்த தருணத்தில் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் http://groups.google.com/group/soc.culture.indian/browse_thread/thread/0776865eedab473b/1252ce4d35e2565a?lnk=raot எல்லாம் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டியது .ஒரு கோணத்தில் தான் மீடியா மற்றும் செய்தி தாள் இருக்கிறது வெளி நாட்டின் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை குறைவதால் இந்த மத மாற்றம் .!நெறைய பேர்கள் சொன்னது போன்று பணத்திற்காக இந்த வேலை !!! மக்களே சிந்தியு ங்கள் இந்து மதத்தின் நம்பிக்கை கெடுக்கவும் மக்களின் மத உணர்வை வேறு வழியில் திசை திருப்பவே ! எல்லா சாமியார்களும் கெட்டவர்கள் இல்லை !!! வாழ்க இந்திய மக்கள் !!! 
by Mr இந்தியன்,india,India    07-05-2010 10:49:14 IST
 உட்டா. இந்தியாவை கண்டுபிடிச்சதே கிரிஸ்தவர்கள்தான்னு சொல்லுவீங்க. நீங்க மருத்துவம் பண்றது உண்மைதான். அதுக்காக மதம் மாத்தறதும் அதைவிட உண்மைதான். நீங்க பைபிள் சொன்னத மட்டும் தான் பண்றீங்கள? இதை தடுக்கப் போன ஹிந்து மற்றும் சங்க அமைப்புகள் வன்முறைன்னு சொல்வாங்க. சீக்கிரம் பீ ஜே பி ஆட்சிக்கு வரட்டும்  
by s கார்த்திகேயன்,tirupur,India    07-05-2010 10:43:41 IST
 திரு, அலெக்சாண்டர், அவர்கள் சொல்வதை நானும் ஏற்றுகொள்கிறேன், மதத்தின் பெயரால் நாம் பிளவு படவேண்டும். அதன் முலம் தங்களுடைய வருமானத்தையும், பெயரையும் உயர்த்தவேண்டும் என்பதற்காகவே இது போன்றே சிலர் இருக்கின்றர்கள். இவர்கள் பல மாதங்களாகவே குடும்பத்துடன் சர்ச்சுக்கு செல்வதாகவும் சொல்லி உள்ளார்கள். அப்போதெல்லாம் அவர்கள் நல்லவர்களாகவே தெரிந்து உள்ளனர்? மருந்து சாப்பிடாதிர்கள் என்று எப்படி சொல்ல முடியும் ? அதையும் இவர்கள் எப்படி கேட்டு விட்டுருப்பர்கள். டாக்டர்களை உண்டாக்கியதும் கடவுள் தான். இந்த நிகழ்ச்சியை மறுபடியும் விசாரித்து அதாவது டாக்டர்களின் உடற்பரிசோதனை (போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட்) கேட்டு மறு பதிவு செய்யுமாறு தினமலர் ஆசிரியரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசகர்களின் விமர்சனத்தை கொஞ்சமும் மாற்றாமல் பிரசுரிக்கிற ஆசிரியருக்கு நன்றி  
by t இன்பா,chennai,India    07-05-2010 10:41:47 IST
 நாட்டுல என்னவெல்லாமோ நடக்குது இது எங்க போய் முடியும்னு தெரியல  
by sc subash,chennai,India    07-05-2010 10:21:43 IST
 இப்படி நாம் பேசி ஒரு USE ம் இல்ல, மதம் என்பது அவர் அவர்களின் நம்பிக்கையை பொருத்தது. மசூதி, கோவில் ,சர்ச், என்று சென்றால் வியாதிகள், கஷ்டங்கள் இன்னும் எராளமான அறிவுக்கு எட்டாத மருத்துவர்களால் கூட குணமாக்காத வியாதிகள் எல்லாம் கடவுள் கருணையால் குணப்படுகிரத்தை எல்லா மதத்தினராலும் கேள்விபடுகிறோம். ஆனால் எந்த மதத்திலும் கடவுள் நேராக வந்து குணப்படுதுவதில்லை, மனிதர்கள் (பாதிரிமார்கள், குருக்கள், ) தான் அவர்களும் மனிதர்கள் தான். நல்லது நடந்தால் கடவுளை போற்றுவதும் கெட்டது நடந்தால் பழிப்பதும் நம் இயல்பாகி விட்டது,  
by t இன்பா ,chennai,India    07-05-2010 10:19:30 IST
 for this incident, what is action from Mr.Karunanidhi (CM) side. Nowadays lot of peoples are converting from HINDU to CHRISTIANITY why bcz TamilNadu give full rights and full freedom to church and sabai to convert the people. Did the VIJAY T.V and SUN T.V publish this incident in NADANTHATHU YANNA AND NIJAM programs. Hindus wants the MADHAMATTRA THADAI CHATTAM again then only this stupid converting and like this incident will stop in TamilNadu. 
by I hindu,mumbai,India    07-05-2010 10:16:31 IST
 If the pastor refused to give medicine, then it is wrong. Bible does not teach that. At the same time, no one can deny the fact that Prayer can heal a person. If it is God's will, He can heal anyone whatever be disease. Dinamalar publishes report from one side only. You have to see the other side of the coin.  
by J Jasper,Thiruthangal,India    07-05-2010 10:13:17 IST
 ஐயா, நான் இந்த செய்தியை வன்மையாக மறுக்கிறேன். காரணம் நம்முடிய நாட்டில் மருத்துவம் என்பதை கொடுத்ததே கிறிஸ்டியன் தான். அவர்களே எப்படி மாத்திரை சாப்பிட வேண்டாம் என்று சொல்லுவார்கள். உண்மை என்ன என்று உங்கள் செய்தி யாளர் விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்ல சொல்லும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மருத்துவம் செய்வதுதான் கிறிஸ்டியன் பணி. நிறைய குக் கிராமம் ஆதிவாசிகள் க்கு இவர்கள் பணி யை போய் பார்க்க சொல்லும். சில விசமிகள் குறிப்பாக சில அமைப்பை சார்ந்தவர்கள் எப்படி கெட்ட பெயர் உண்டாக்கலாம் என்று அதர்காகவே இப்படி கூறி வருவது உண்மை. சுமதி யின் பழைய மெடிக்கல் ரிபோர்ட்டை வெரிபை பண்ண வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். தவறான எண்ணத்தை மக்கள் மனதில் பதிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். 
by C. ALEXANDER,chennai,India    07-05-2010 09:35:42 IST
 சுய புத்தி இல்லாத மக்கள்! எதை சொன்னாலும் நம்பி, இலவசதுகாகவும், கசுக்காவும், சுலபமான, ஆடம்பரமான வாழ்க்கை அப்படியே வானிலிருந்து வீட்டின் கூரையை உடைத்க்கொண்டு விழும் என்ற மூடத்தனமான நம்பிக்கையில் இந்தமாதிரி சிக்கி சீரழந்து விடுகிரர்கள்... சிலர் உயிரையும் விடுகிறார்கள்... என்ன எளவோ... திருந்தவே திருந்தாதோ இந்தமாதிரி புத்தி இல்லாத மக்கள்... 
by im ராகுல்,TN,India    07-05-2010 09:28:56 IST
 நம் மக்கள் என்றும் திருந்த மாட்டார்கள். நம் நாடும் திருந்தது. வாழ்க நம் நாடு. வழர்க நம் அடிமை மக்கள். 
by KR ஷங்கர்,Madurai,India    07-05-2010 09:26:06 IST
 இவனுங்க தொல்ல தாங்க முடியலடா சாமி  
by p ஹரி,cochin,India    07-05-2010 09:00:06 IST
 மதிப்பு மிக்க தலைவர் கலைஞர் கருணாநிதி கவனத்திற்கு இந்த விஷயம கொண்டு செல்லப்படுமா? இல்லை கே வீரமணி இதற்காக போராட்டம் நடத்துவாரா ? இந்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு  
by T அயபன்,chennai,India    07-05-2010 08:49:25 IST
 கல்வி அறிவு இல்லாத கிராம மக்களை மயக்கி முறையான வைத்திய சிகிச்சைக்கு அனுமதிக்காமல் ஜெபம் செய்தே கொன்று விட்ட முடிவு எடுத்து விட்டார்கள். வருத்தத்துக்குரிய மோசமான நிகழ்வு. 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    07-05-2010 08:48:04 IST
 k சஞ்சீவ்,bangalore,India '''நாளை ஆயுதம் தூக்குவதற்கும் தூண்டுவார்களே''' நாளை என்ன நாளை???? நாகலாந்த் முழுவதும் மத மாற்றம் பண்ணிய பிறகு, அதை தனி நாடாக பிரித்து குடுக்க வேண்டும் என கலவரத்தை தூண்டி விட்டு, ஐ.நா சபையில் இரண்டு முறை கடிதம் குடுத்தது எத்துனை பேர்க்கு தெரியும்???  
by M சதீஷ்,coimbatore,India    07-05-2010 08:39:41 IST
 நம் விரோதி நாட்டு மக்களாகிய பாகிஸ்தான் நாட்டு மக்களே இந்தியா வந்து நோயை குனப்படுதிக் கொண்டு போகிறார்கள். ஏன் நம்ம இந்தியா சகோதர சகோதரிகள் இப்படி இருக்கிறார்கள்? 
by wd charles,perambalur,India    07-05-2010 08:00:45 IST
 உலகமே இந்தியா வந்து நமது யோகம், ஆன்மீகம், தியானம், கலை, பண்பாடுகளை பார்த்து வியந்து அவகளை கற்க முற்படுகின்றனர். நாமோ நம்மிடம் உள்ளவைகளை மறந்து வெளியே தேடுகிறோம் சுய கலாசார, மத சீரழிவை நோக்கி போகிறோம்.  
by k Karuppiah ,Kovai,India    07-05-2010 07:42:48 IST
 This is a lesson to all the people who believed these charismatic preachers and got converted to christanity. Believe in god, but dont be stupid. 
by R ஷங்கர்,singapore,Singapore    07-05-2010 05:13:10 IST
 இவனையெல்லாம் கசாப் உடன் சேர்த்து ....................... என்ன ? .கிருத்துவ மதமாற்றத்தின் உச்சகட்டம் .ஹிந்துக்களே யெப்போது திருந்த போகிறீர்கள்  
by p கமலூடின்,toronto,Canada    07-05-2010 04:06:32 IST
 இதுல்லாம் நம்ம 'நிஜம்' நிகழ்ச்சியில் வராதா?? 
by s பாலா,chennai,India    07-05-2010 03:28:11 IST
 Holy Bible doesnt teach not to take medicines when we have problem. Really it is pity the christian preachers dont read Bible carefully Jesus said ' Only a sick need a physician' Paul advised Timothy to take medicine for his stomach problem Christians - Please read Bible carefully and pray for God's grace 
by n அமர்,toronto,Canada    07-05-2010 03:21:45 IST
 மதம் என்ற பேய் பிடித்திருக்கும் கிருத்துவ கனவான்களே, தயவு செய்து இந்தியா இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்து விடாதீர்கள், பணத்திற்காக, இந்த நிர்வாகிகள் எடுக்கும் இவ்வளவு மோசமான முடிவுகள் , நாளை ஆயுதம் தூக்குவதற்கும் தூண்டுவார்களே  
by k சஞ்சீவ்,bangalore,India    07-05-2010 02:33:23 IST
 வெட்டி பசங்க திருந்தவே mattanga 
by S Deepa,bletchley,UnitedKingdom    07-05-2010 01:13:32 IST
 மேலை நாட்டிலுள்ள கிறிஸ்டியன் அமைப்புகள் கொடுக்கும் பொருள் உதவிக்கு ஆசை பட்டு இங்குள்ள சில ........கள் அதன் கடமையை செய்கின்றன. அட முட்டாள்களே கடவுள் என்பவர் ஒருவரே,  
by p மோகன்,sansebastian,Spain    07-05-2010 01:08:38 IST
 இந்த சபை பிரச்சனை எங்கும் உள்ளது. இங்கேயும்,நாலு பிள்ளைகளின் தந்தையான ஒருவரை .......டாக்டர்களின் உதவியை செய்யவிடாமல்.........ஜெபம் செய்தே கொன்று விட்டார்கள்.என்னும் சில மூடர்கள் இந்த சபையை நம்பி வாழ்கையை வீணடிக்கிறார்கள்.இந்த மூடப் பயித்தியங்களை என்னவென சொல்வது? 
by G AMMIYA,DenHelder,Netherlands    07-05-2010 00:39:14 IST
 These christian missionaries activities are going out of hand especially during congress tenure.Their main aim is to decimate the Hindus and create christian majority India.It is time Hindus realised the true colour of these christian converts bcoz most of them convert for financial gains only. 
by e manimaran,chennai,India    07-05-2010 00:37:48 IST
 மதமாற்றம் என்ற பெயரில் இப்படி ஊரை ஏமாற்றும் கூட்டத்தையெல்லாம் விட்டு வைத்தால் இந்தியாவையே ஒரு வழி பண்ணி விடுவார்கள். நோயை முறைப்படி குணப்படுத்தாமல் இப்படி மத வெறியர்களை நம்பினால் இந்த கதிதான்!! இந்தியாவை (மக்களை), இன்னும் எத்தனை பெரியார், அண்ணா தோன்றினாலும் திருத்தவே முடியாது!! தவிர இது கொலைகுற்ற்த்துக்கு சமம்; எனவே சம்பந்தப்பட்டவர்களை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும்!!! 
by G மாதவன்,Chennai,India    07-05-2010 00:35:38 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்