முதல் பக்க செய்திகள் 

ப.சிதம்பரத்தை புறக்கணித்த மதுரை பத்திரிகையாளர்கள்
மே 10,2010,00:00  IST

Front page news and headlines today

மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 'கோயிலுக்குள் பத்திரிகையாளர்கள் வரக்கூடாது' என்று தடை போட்டதால், அவரை போட்டோ எடுக்காமல் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.


இக்கோயிலுக்கு நேற்று காலை 11.20 மணிக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் யியோ , மனைவி ஜெனிபர் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளை ப.சிதம்பரம், அழைத்து வந்தார். கலெக் டர் காமராஜ், கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி ராஜநாயகம் வரவேற்று, அம்மன் சன்னதி வழியே கோயிலுக்குள் அழைத்து சென்றனர். 'பத்திரிகையாளர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டாம்' என்று அதிகாரிகளிடம் கூறிய ப.சிதம்பரம், 'அவர்களை முதலில் வெளியே போகச் சொல்லுங்கள்' என்று ஆடி வீதி சந்திப்பில் நின்றுகொண்டார். போலீசார் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் தேடினர். அவர்களுடன் சிதம்பரமும் சேர்ந்துக் கொண்டார். 'யாரையும் விடக்கூடாது' என்று போலீசாரை எச்சரித்துவிட்டு, கோயிலுக்குள் சென்றார். அவருடன் வந்த கட்சியினரை 'மெட்டல் டோர் டிடெக்டர்' மூலம் பரிசோதிக்காமல் போலீசார் அனுமதித்தனர்.


கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பங்கள் குறித்து சிங்கப்பூர் அமைச்சரிடம் கருமுத்து கண்ணன், சிதம்பரம் விளக்கினர். அம்மன், சுவாமியை தரிசித்துவிட்டு, மதியம் 12.30 மணிக்கு வெளியேறினர். அப்போது அவர்களை வீடியோ, படம் எடுக்காமல் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், மத்திய உளவுப்பிரிவு அறிவுரைப்படி தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இப்பிரிவு,  ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சிதம்பரம் வெற்றி பெற்றதும், வைகோ தோற்க்கசெய்யப்பட்டதும் ,சென்ற ஆண்டின் ஜனநாயகத்திற்கான சிறந்த கேலிகூத்து. 
by r kumar,trichy,India    12-05-2010 19:03:10 IST
 சிதம்பரம் ஒன்றும் உத்தமர் கிடையாது 6000 ஓட்டில் தோற்றவர் இன்று அமைச்சர் . அரசியலில் இருந்து அப்புறபடுத்த வேண்டியவர் சிதம்பரம் . 
by g geetha,sivaganga,India    11-05-2010 16:49:33 IST
 இவர் மகனுக்கு (கார்த்திக்) அப்பனோட ஊழல் பணத்த வாங்கி வர்ரதுதான் வேலை. 
by P. Jagadiswaran,Pondicherry,India    11-05-2010 15:19:48 IST
 சிதம்பரம் 5 முறை எம்.பி. என்று கூறுவது சரியல்ல ராமசாமி. 4 முறை m .p . ஒரு முறை தில்லு முள்ளு m .p . இதிலேயே தெரியாதா அவருடைய நேர்மை. அவருடைய அரசியல் வாழ்க்கையில் எப்படி நேர்மை வரும். இனமும் இந்த மாதிரி அரசியல் வாதிகளை நம்பும் இந்த மக்களை போல முட்டாள் யார்? 
by s suresh,doha,qatar,India    10-05-2010 23:29:24 IST
 சிவகங்கையில் இருந்து ராம சாமி என்பவர் சிதம்பரத்தை ஆதரித்து கருத்து சொல்லியிருக்கிறார்.ஆனால் என்னுடைய சந்தேகம் இவர் சிவகங்கையில் இருந்து எழுதவில்லை, வேறு எ‌ங்கிருந்தோ எழுதியது போல் இருக்கிறது. 
by K Rajasekaran,chennai,India    10-05-2010 21:49:10 IST
 IN TEMPLE ONLY PRAYING.CHIDAMPARAM WAS CORRECT.BECAUSE IN TEMPLE FIRST GOD.SO REPORTERS SHOULD NOT OVERTAKE GOD BY GIVING IMPORTANCE CHIDAMBARAM.IN TEMPLE ANY POWERFUL PERSON IS ORDINARY.CHIDAMPARAM IS CULTURED MAN AND HE KNOWS THE FACT.DONT FOUL PLAY 
by C SHUNMUGANANDAM,THENTAMILNADU,India    10-05-2010 21:40:39 IST
 சிவகங்கய் சிங்கம் சிதம்பரம் இந்தியாவிற்கே உள்துறை அமைச்சர். அந்த பதவி என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்கிற பதவி இல்லை. பொறுப்பபான பதவி. எனவே ஒரு சில வேளைகளில் ஒரு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இதற்கெல்லாம் ஒரு காரணம் காட்டி அதுவும் தினமலர் கூட செய்தி வெளியிடுவது ஆரோக்கியமானதாக படவில்லை. தமிழனின் பெருமை உலகெங்கும் பேசப்பட வைத்ததில் சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம் நண்பர்களே  
by v தன்ராஜ்,singapore,India    10-05-2010 20:16:26 IST
 ஹிந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லை என்று இருக்கும்பொழுது இவர்களை உள்ளே அனுமதித்தது எந்த சட்டம் ? வி ஐ பிக்களுடன் வந்தால் தீவரவாதி கூட உள்ளே செல்லலாம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. முதுகெலும்பு உள்ள பத்திரிகைகள் வரும் நிகழ்ச்சிகளில் அவரை புறக்கணித்து துன்னுடைய வீரத்தை காட்டலாமே.  
by P Mohan,Chennai,India    10-05-2010 18:54:08 IST
 சில நேரங்களில் யாராக இருந்தாலும் கொஞ்சம் ப்ரைவசிய விரும்புவார்கள்தானே! அதை குறை சொல்வது அல்லது புறக்கணிப்பது என்பது அவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதைபோன்றது. கொஞ்சம் அவர்களை ப்ரீயாவிடுங்கள் இழுத்துபிடிக்கவேண்டிய நேரத்தில் இழுத்துபிடியுங்கள். 
by R பாலசுப்ரமணியம்,Madurai,India    10-05-2010 18:04:00 IST
 சிதம்பரம் செய்தது தவறு. அவர் எந்த நினைப்பில் செய்து இருந்தாலும். பத்திரிக்கையை எதிர்த்துகொள்வதால்... பெரிய மனிதன் ஆகிவிட முடியுமா....? சிங்கபூர் மந்திரி என்ன நினைத்திருப்பார்...? ம்ம்ம் ... அதைப்பற்றி சிதம்பரத்துக்கு என்ன கவலை....!!!  
by c சுப்பு,Lagos,Nigeria    10-05-2010 17:52:58 IST
 If george and her wife jennifer can go into a temple where its mentioned non-hindus not allowed inside.. why reporters not allowed.. i think yesterday all reporters are converted to non hindus and george and jennifer convered to hindu.. and also if we go with a security chief or guard like commedian chidambaram i think there is no law.. avana oru commedy piece evana vachu avan vanthanama ethuku local commedian company... enna ulagam sir ethu... 
by k kumar,chennai,India    10-05-2010 16:55:33 IST
 போறார் விடுங்க.சின்ன பய்யன் தானே. மீனாக்ஷி அம்மன் கோயில் அவங்க தாத்தா வீட்டு சொத்து.இப்படி வேறு நினைப்பு.எல்லாம் பதவி, பணம் கொடுக்கும் தைரியம். 
by K Sugavanam,Salem,India    10-05-2010 16:12:32 IST
 ஏண்டா.... தீவிரவாதி தான் கோயிலுக்குள்ள வரகூடாது... பத்திரிக்க காரனும் வரகூடாது நா ... நீ எங்கள என்ன சொல்லவர்ற நு புரியல.... உனக்கெல்லாம் மாவோயிஸ்ட்டும் நக்சலைட்டுகளும் தான் சரி... அவனுங்க கிட்ட உன் பருப்பு வேகலை நு இங்க வந்து ஷோ விடுறியா ராசா... இதெல்லாம் சகிக்கனும் நு எங்க தல எழுத்து... நாங்க எங்க போயி சொல்ல ? அட போங்கையா .. 
by SP பிரவீன்,kongu,India    10-05-2010 15:46:54 IST
 பத்திரிகையளர்கள் செய்தது ௧௦௦% சரி. 
by v suresh,chennai,India    10-05-2010 15:32:54 IST
 கெட்டிக்காரர் ஆனால் மிகுந்த கர்வம் உடையவர்.திரு திக்விஜய் சிங்க் மூத்த தலைவர் அவரே சிதம்பரத்தை பற்றி இதே கருத்தை கூறியிருக்கிறார். 
by S karuna,namakkal,India    10-05-2010 14:53:51 IST
 டேய் ராம சாமீ நீயா அவன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
by t suresh,chennai,India    10-05-2010 14:17:27 IST
  இங்கு சில அருவருடிகள் சிதம்பரத்துக்கு ஆதரவா கருது எழுதி இருக்கு. இதுங்கல்லாம் நாட்டுக்கு தேவையே இல்லை. என்னது திறமையா? அவருக்கா? அப்படி என்ன திறமைய கண்டுபிடிச்சிங்க அவருகிட்ட? இந்தியாவோட பொருளாதாரம் நல்ல இருக்குன்னா அதுக்கு அதிக மக்கள் தொகைதான் காரணம். மலிவான மனித உழைப்பில் அதிக லாபம் கிடைப்பதால் வெளிநாட்டுகாரன் அதிக முதலீடு செய்கிறான். சிதம்பரதுக்காகவோ இல்ல மன்மோகன் சிங்குக்காக அல்ல. இவர்கள் இல்லை என்றாலும் இந்திய பொருளாதாரம் நிலைக்கும். நீங்கள் உழைக்கிறீர்கள். வெளி நாட்டு காரன் லாபம் அடைகிறான். நீங்கள் தலையில் வைத்து கொண்டாடும் அரசியல்வாதி உங்கள் உழைப்பை சுரண்டுகிறான். உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓந்ஜிருவேன் போலிருக்கே?  
by M இந்தியன் ,Dubai,UnitedArabEmirates    10-05-2010 14:10:12 IST
 நமக்கு சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளை பிடிக்காது ரவுடி, பிராடு படிப்பறிவு இல்லாத அரசியல்வதிகளைத்தன் வோட்டு போடுவோம்  
by tamilan,chennai,India    10-05-2010 14:02:07 IST
 தமிழ் பத்திரிக்கைகள் புறக்கணித்தtல் சிதம்பரம் ஒன்றும் குறைந்து விட மாட்டார். அவர் அறிவுக்கு, திறமைக்கு, இந்த நாடு அவரை மடிக்கும். அவர் 5 முறை M P . அவர் வெற்றிய பற்றி பேச ஒன்றும் இல்லை. அவரின் நேர்மையை இந்த நாடு டெல்லிக்கு தெரியும். படித்த படிப்பை மதிக்க தெரிந்த நேர்மையானவர்களுக்கு சிதம்பரம் பற்றி நன்றாக தெரியும். சிலருடைய வயித்து எரிச்சலுக்கு சிதம்பரம் போன்ற பெரிய மனிதன் பலி ஆவது தவறு.  
by S ராம சாமீ,SivaGangai,India    10-05-2010 13:09:31 IST
 அதிகம் பொருட்படுத்தாதீர் 'JUST IGNORE ' 
by k வெங்கட்ரமணா ,dubai,UnitedArabEmirates    10-05-2010 11:38:34 IST
 ஆனா தினமலரே இந்த செய்தியை சிதம்பரம் அவர்களளின் புகைப்படத்துடன் வெள்ளியிட்டு உள்ளதை என்ன சொல்வது?  
by P.K. Sabapathy,Chennai,India    10-05-2010 10:55:42 IST
 சிவகங்க தொகுதியில் எப்படி வெற்றி பெற்றார் என்று எல்லோருக்கும் தெரியும். இவரெல்லாம் அந்த ‌தொகுதிக்கு இதுவரைக்கும் ஒன்னும் செய்யவில்லை என்று அவருக்கேத் தெரியும். 
by g அழகுநம்பி,qatar,India    10-05-2010 10:47:20 IST
 பத்திரிகை என்றால் அவர்கள் எவருக்கும் அடங்காதவர்களா? அல்லது அவர்களுக்கு எல்லாம் தெரிந்தாகவேண்டிய கட்டாயமா? நமது அரசியல் போல, ஆட்சி அதிகாரம் போல, வக்கீல்கள் போல பத்திரிக்கையும் மிகுந்த குறைபாடுகள் கொண்டதே. கும்பகோணம் பள்ளி தீ விபத்து பற்றிய கோரக்காட்சிகளை மீண்டும் மீண்டும் அப்படியே காட்டிய நம் தொலைகாட்சிகளுக்கும் BBC காட்டிய கண்ணியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுதான் நமது பத்திரிக்கைக்கும் முதிர்ச்சியடைந்த வெளிநாட்டு press க்கும் உள்ள வித்தியாசம். பல நேரங்களில் 'harassing' என்று சொல்லும் அளவிற்கு பத்திரிகைகள் நடந்து கொள்வதை செய்திகளிலும் தொலைகாட்சியிலும் பார்த்திருக்கிறோம். சிதம்பரத்தின் மீது செருப்பை வீசியவனும் ஒரு பத்திரிகை நிருபரே. ஒரு வெளிநாட்டு மந்திரி சொந்த பயணம் மேற்கொண்டு வந்திருக்கிறார். அவரை நண்பர் என்ற முறையில் சிதம்பரம் அங்கு அழைத்து சென்றிருக்கிறார். ஊடகத்திற்கு, என்னை பொறுத்தவரையில் அங்கு வேலை இல்லை என்றே நினைக்கிறேன். அதனால் சிதம்பரம் செய்ததில் தவறிருப்பதாக நான் கருதவில்லை. 
by Michael,Singapore,Singapore    10-05-2010 10:46:34 IST
 அவர் சாமி கும்பிட்டா என்ன, கும்பிடலைனா என்ன. அவரை புறக்கனிகறது உங்களுக்கு அழகா? தமிழனை தமிழனே புறக்கனிக்கிறது, மல்லாக்க படுத்து எச்சி துப்புறது மாதிரி. அவர்க்கு சப்போர்ட் செய்யவில்லை. ஆனால் என் மனதில் பட்டதை சொன்னேன்.  
by G கில்மனந்தா ,Amman,Jordan    10-05-2010 10:33:07 IST
 He is a curse for sivagana constituency . He is so selfish and nothing he did for this area. Just before last lok sabha election , he laid foundation for BHEL extension unit near Thirumayam . Now we can see only a board. Today Rameshwaram express running because of our loved People’s president Dr Abdul kalam. He never cared about Karaikudi Thiruvarur broad-gauge conversion.There are many more to say Now he is very keen to bring his son Yuvaraj Karithk to support National level yuvaraj Rahul .SRm Ambalam  
by S. Ramamurthy,Karaikudi,India    10-05-2010 10:07:57 IST
 பத்திரிக்கை நண்பர்களுக்கு கோவிலில் படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் எத்தனையோ ஊழல் பேர்வழிகள் ,,,ரவுடிகள் தவறுசெய்யும் அதிகாரிகள் அவர்களை படம்பிடித்து காட்டுங்கள். வேறு வாலில்லை என்றால் இருக்கவே இருக்கு நடிகர் நடிகைகள் ,,? 
by sasi balkarasu,karaikudi,India    10-05-2010 10:05:12 IST
 அடுத்த தேர்தலில் என்ன மக்கள் புறக்கணிப்பது. ஏற்கனவே புறக்கணிக்கப் பட்டவர் தானே.தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இவர் தோற்றதை அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்ட பிறகும் மீண்டும் மறு கூட்டல் என்ற பெயரில் தில்லு முல்லுகளை செய்து பதவி பெற்றவர்தானே. எப்படித்தான் கூசாமல் இப்படியெல்லாம் செய்து விட்டு அமைச்சராக மக்களின் முன் சிரித்து கொண்டு நிற்க முடிகிறதோ...எல்லாம் பணம் படுத்தும் பாடு.. 
by R Rameshbabu,salem,India    10-05-2010 09:01:08 IST
 Actually He does not win in the election. When he is an finance minister killed lot of small investor by playing in share market with his son . Now killing the CPF police with out planing . He is utter waste fellow . I person having the good heart will not like like him .  
by k.p. anand,boonlay,Singapore    10-05-2010 08:56:15 IST
 நிஜமாகவே இவர் மீது கோபம் இருந்தால் இந்த செய்தி கூட வர கூடாது. தினமலரும் பத்திரிகை தான். 
by மணிகண்டன்,Tokyo,Japan    10-05-2010 08:19:43 IST
 திரு அண்ணன்மலை இந்த தடவை சிதம்பரம் MP ஆக வெற்றி பெற்றார. கண்ணப்பன் தான் அங்கு உண்மையான MP 
by s mani,chennai,India    10-05-2010 07:43:31 IST
 Home minister is the long term MP of Sivaganga. But what development work he has done for Sivaganga except visiting the consituency on week ends and organising functions. No tangible results 
by a அண்ணாமலை,Coimbatore,India    10-05-2010 06:11:06 IST
 இந்த சிதம்பரத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புறகணிக்க உள்ளனர், கடந்த 2௦ ஆண்டுக்கு மேலாக தொகுதி ஒன்றும் வளர்ச்சி இல்லை, இவர் மகனை முன்னுக்கு கொண்டுவரும் வேகம் தொகுதிக்கு இல்லை, இவர் போன்று போலி தேர்தல் வெற்றி வெகு நாள் நீடிக்காது.  
by K Rajasekaran,singapore,India    10-05-2010 05:27:23 IST
 சிதம்பரம் ன்னு ஒரு ஆளு இருக்காரா? நாங்க கூட சிதம்பரத்தோட ஆவியை பத்திதான் நியூஸ் போடுறீங்கலோன்னு பயந்தே போயிட்டோம்.. வடிவேலு ஸ்டைல்ல சொல்லனும்னா.. நாங்க அப்பிடியே ஷாக் ஆயிட்டோம்..வெறும் வாய் சவடாலை மட்டும் வச்சு ஒன்னுக்குமே லாயக்கில்லாத ஒரு ஆளு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதுல மந்திரியா போய் அட்டை போல ஒட்டிக்கிறார்னா அது நம்ம சிதம்பரந்தேன்...நிதித்துறைன்னாலும் சமாளிக்கிராப்ல...உள்துறைன்னாலும் சமாளிக்கிராப்ல..நக்சலைட்டுக கூட சாட் பூட் த்ரீ விளையாடுராப்ல.. என்னமோ போங்க..நெல்லுக்கு பாயிறது கொஞ்சம் புல்லுக்கும் பாயட்டும்.. 
by 24ம் புலிகேசி,madurai,India    10-05-2010 03:28:45 IST
 ஏன் இதுக்கு முன்னாடி பத்திரிகையாளர்கள் சிதம்பரத்த படம் புடிச்சதில்லையா? அவர படம் புடிகாட்டி அவருகென்ன நஷ்டம்? பத்திரிகையாளர்கள் எப்பவுமே ரொம்ப ஓவராதான் நடந்துகறாங்க.  
by S செந்தில் ,India,India    10-05-2010 02:12:14 IST
 பத்திரிக்கை நண்பர்களை ஏன் மீனாக்ஷி அம்மன் கோயில் உள்ளே வரகூடாதுன்னு சொன்னீர்கள்? ஒன்றும் புரியவில்லை... ஓஹோ அவர்கள் கையில் பேனா வைத்திருப்பது உங்களுக்கு ஆயுதம் போல தெரிந்து விட்டதா? 
by mk திவானா சாரதி ,madurai,India    10-05-2010 02:08:35 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்