முதல் பக்க செய்திகள் 

முதலிடம் பின்லாடன், மூன்றாமிடம் தாவூத் இப்ராகிம்
மே 18,2010,00:00  IST

Front page news and headlines today

நியூயார்க் :  உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக  'போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


'போர்ப்ஸ்' பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், 'டாப்-10'ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது.இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.


'கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது' என்று தாவூத்தின் பின்புலம் குறித்து 'போர்ப்ஸ்'  பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.


அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,'இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது' என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று 'போர்ப்ஸ்' பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்த பட்டியலை யார் சார் தப்பு தப்பா தயாரித்தது. தீவிரவாதம் என்றால் புஷ். புஷ் என்றால் தீவிரவாதம் என்று இருக்கும் போது, அவரை பட்டியலில் விட்டால் என்ன அர்த்தம் அவர் செய்யாத தப்பு எதாவுது இந்த உலகத்தில் இருக்கா? புஷ்-ம் டோனி ப்ளேயரும் சேர்ந்து எவ்வளவு தப்பு பண்ணி இருக்காங்க தெரியுமா? 1. நாட்டை பிடிச்சது 2. அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது 3. நாட்டின் வளங்களை கொள்ளை அடிச்சது 4. பெண்களின் கர்ப்பை சூறையாடியது. 5. குண்டுகளை வீசி இயற்கையேயும், இயற்கை வளங்களையும் சேதப்படுத்தியது 6. உள்நாட்டு கலவரங்களை ஏற்படுத்தி அணு ஆயுதங்களை விற்றது. இது போல் கணக்கில் அடங்காத பல குற்றங்களை செய்த இவர்களை பட்டியலில் விட்டால் என்ன அர்த்தம். தயவுசெய்து புஷ்- க்கு முதல் இடமும், டோனி ப்ளேயரும் இரண்டாவது இடமும் கொடுத்து கௌவ்ரவிக்குமாறு மிகவும் பணியுடன் கேட்டுக்கொள்கிறேன். 
by J. udhuman,Mirqab,Kuwait    18-05-2010 21:24:26 IST
 P.மோகன் ஸ்பெயின் , உண்மையை எழுதி இருக்கீங்க ... நன்றி.  
by J Vinoj,Woodlands,Singapore    18-05-2010 20:48:02 IST
 பின்லாட்டின் மற்றும் தாவூத் இப்ராகிம் முதல் மற்றும் இரண்டாம் என்றால் மோடி மற்றும் தாக்ரே முதலாவது என்று சொல்லலாம் அமெரிக்க மற்றும இஸ்ரேல் ஒழிந்தால் தேர்ரோரிசம் ஒழியும்  
by T TAMILAN,DXB,India    18-05-2010 19:27:40 IST
 According to my opinion Gujarat CM Modi should be most wanted man in world. He is the real terrorist.  
by INDIAN,london,UnitedKingdom    18-05-2010 19:12:21 IST
 தவறு யார் செய்தாலும் அதை ஏற்று கொள்கிற மனப்பான்மை வேண்டும். இங்கு சிலர் சின்ன குழைந்தையை போல கருத்து சொல்கின்றனர். கருத்து சொல்லும் அனைவரும் ஓரளவு படித்தவர்கள் தான். ஆனால் கருத்து கூறும் போது ஏன் அந்த முதிர்ச்சி மற்றும் பக்குவம் தெரிவதில்லை. ஒசாமா என்று சொன்னால் மோடி என்று சொல்வது. மோடி மோடி என்று கூறும் நண்பர்களே, ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அவர் முதல் முறையாக 2001 ல் முதல்வராக பதவி ஏற்றார். 2002 ல் நடந்த தேர்தலிலும் ஜெயித்து பதவி ஏற்றார். 2002 ல் தான் கலவரம் நடந்தது. அப்படி இருக்கும் பொது ஏன் மீண்டும் அவரை அந்த மாநில மக்கள் மூன்றாவது முறையாக 2007 ல் தேர்ந்தெடுக்க வேண்டும். 2002 -2007 வரை உள்ள கால கட்டத்தில் அவர் செய்த நல்ல செயல்களுக்காக மக்கள் அவரை மீண்டும் அரியணையில் அமர்த்தி உள்ளனர். கலவரம் நடந்த போது மோடியே கத்தியை எடுத்து குத்திய மாதிரி பேசாதீர்கள். கலவரத்தை தூண்டி விட்டு சிலர் வேடிக்கை பார்த்தனர். அப்போது மோடி முதல்வராக இருந்தார். அவ்வளவு தான். கொஞ்சமாவது பக்குவப்படுங்கள், மீண்டும் ஒரு கலவரம் வராமல் பாதுகாப்பாக இருப்போம்.  
by p மோகன்,Sansebastian,Spain    18-05-2010 17:04:10 IST
 மோடி, நமது காவலர் அவரை குறை சொல்ல வேண்டாம்  
by k govind,chennai,India    18-05-2010 15:31:40 IST
 உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அமெரிக்கா-வை ஒழித்தால் கண்டிப்பா சொல்றேன். நாட்ல தீவரவாதம், சண்டை எதுமே இருக்காது, அனைத்து நாட்டு மக்களும் நிம்மதியுடனும் சந்தோசமாகவும், செல்வ செழிப்போடும் இருப்பார்கள், அமெரிக்கா=VAIRUS , கம்ப்யூட்டர்-ல VAIRUS VANTHRUCHUNA என்ன ஆஹும்  
by M உண்மையான ஒரு MUSLIM,TAMILNADU,,India    18-05-2010 13:31:50 IST
 அட நம்ம அண்ணாச்சி ஜார்ஜ் புஷ் மிஸ்ஸிங் டோய், அவரு பண்ணாத தீவிரவாதமா? அரபு நாடுகள்ள புகுந்து அம்புட்டு பேரையும் கொன்னு இருக்கிற எண்ணெய் வளத்த கொள்ளை அடிச்ச கண்ணுக்கு தெரிந்த தீவிரவாதி அவருக்கு என்ன அருகதை இருக்கு மற்றவங்களை தீவிரவாதின்னு சொல்ல? சொல்லப் போனா ஒசாமாவை வளர்த்து விட்டவரே அவர் தானே இப்ப வளர்த்த கடா மார்புல பாயுது,  
by இந்தியன்,delhi,India    18-05-2010 12:57:45 IST
 இந்தி,Chicago,India , யோவ் நீ ஒரு ஆண்மகன் தானே!!!! உன்னுடைய சொந்த கருத்தை எழுத ஏன் புனை பெயர். மோடி என்ன 5000 நபர்களை பணியில் அமர்த்தி கொலைகூடாமா நடத்தி வருகிறார். இந்தியாவில் பிறந்து ஓசாமாவுக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து தெரிகிறது, உன்னுடைய மத வெறி. முதலில் நீ மனிதனாக இருக்க பழகி கொள். அப்புறம் மோடி இன்னும் மற்றவர்களை பற்றி பேசலாம். 
by p மோகன்,sansebastian,Spain    18-05-2010 12:06:55 IST
 நல்ல ஜோக்கு இவர்களை ஆண்டு ஆதரித்து அடைக்கலம் கொடுத்ததே இந்த அமெரிக்காதான் இன்று தேடுகிறார்கள்.. இவங்க இப்ப அமெரிக்காவிலேயே safe ஆ இருப்பாங்க.. உங்க எல்லோருக்கும் ஒரு உண்மையா இந்த நேரத்தில் சொல்லணும்.. இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியதே அமெரிக்க FBI தான். 4 விமானங்கள் மோதியதே ஒவ்வொரு விமானமும் மோதும்போது எடுத்கொண்ட நேரம் 30 நிமிடம் இடைவெளி இந்த நேரத்தில் அமெரிக்காவின் அறிவாளிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்.. ?? உண்மை வெளியே வந்துவிட்டது..  
by A ஷிஹா,Kuwait,Kuwait    18-05-2010 11:47:40 IST
 முதலாம் இடத்தில் அமெரிக்க புஷ் இரண்டாம் இடத்தில் குஜராத் மோடி, அத்வானி, நரசிம்மராவ், பால் தாக்கரே ராமகோபாலன் போன்றவர்களையும் சேர்க்க வேண்டும்  
by T.K செய்யது சுபையர் ,Ras-Al-Khaimah,UnitedArabEmirates    18-05-2010 10:50:17 IST
 இந்த விசயத்தை படிக்கும் அரசியல்வாதிகள் கண்டிப்பாக தினமலர் மீது கேஸ் போட வாய்ப்பிருக்கிறது. அவர்களை பற்றி ஏன் தினமலர் கண்டு கொள்ளவில்லை, ஏன் இவ்வளவு கோபம்? 
by ப சங்கர்,தேனி,India    18-05-2010 10:20:52 IST
 'நம்ம அரசியல் வாதிகளை விட இவர்கள் எவ்வளவோ மேல் ' என்ன வித்தியாசம் நம்மா ஆளுக உள்ளயே கொள்ளை அடிப்பாக ? இவர்கள் வெளியில் அடிக்குராக .. அவளவுதான் . இவன் சுட்ட நியூஸ். நம்மசுட்ட கேஸ் அவ்வளவு தான் சார் . 
by v Ganapathi,Dubai,India    18-05-2010 09:46:19 IST
 Can everybody understand this.....world knows that Pakistan is giving support to all the terrorists and terrorism....why to search for osama and daud and blame them? No nation has the guts to shake Pakistan. Next world war will start because of Pakistan...This will happen.....believe it..... 
by R ramesh,chennai,India    18-05-2010 09:30:58 IST
 இவர்களால் இறந்தவர்கள் மிகக்குறைவு, குஜராத் சீப் மினிஸ்டர் மோடியுடன் ஒப்பிடுகையில்.  
by a தமிழ்,chennai,India    18-05-2010 09:28:35 IST
 குஜராத் சீப் மினிஸ்டர் மோடியின் பெயர் மிஸ்ஸிங். 
by a தமிழ்,chennai,India    18-05-2010 09:22:58 IST
 அமெரிக்கவின் அளபுக்கு அளவு இல்லாமல் பொய் விட்டது. அவன் கிட்ட இல்லாத டெக்னாலஜி யா.தானே flight விட்டு இரட்டை கோபுரம் தகர்த்து. அந்நிய நாடுகளை ஸ்வாக செய்தவன் தானே இந்த அமெரிக்கன் டாக்ஸ்.மாப்பு ஒனக்கு இருக்கு ஒரு நல அப்பு . 
by S ஜானகிராமன்,chennai,India    18-05-2010 08:00:02 IST
 எனக்கு தெரிந்தே தமிழகத்தில் கூட சில கண்ணுக்கு தெரியாத மூளை சலவை செய்ய பட்ட சில தீவிரவாதிகளும் உள்ளனர். இவர்கள் முழு நேர திவிரவாதியாக மாறும் தருணம் வராமல் மாநில மத்திய அரசுகள் செயல்பட வேண்டும்.  
by J Suman,Nellai,India    18-05-2010 07:42:56 IST
 குஜராத் சீப் மினிஸ்டர் மோடி மிஸ்ஸிங். 
by இந்தி,Chicago,India    18-05-2010 06:12:43 IST
 டாப் டென்ல இடத்தை தக்க வச்சாச்சு..அடுத்து என்ன செய்றதா உத்தேசம்..நம்ம கசாப் கேசெல்லாம் வெற்றிகரமா முடிச்சி குடுத்துட்டு ப்ரீயாத்தான் இருக்காப்ல...உங்க டி-கம்பெனியில எம்டி போஸ்ட்டு காலியா இருந்தா சொல்லுங்க..வந்து ஜாயின் பண்ணிக்குவாரு...ஒரே ஒரு விஷயம் மட்டும் புரிய மாட்டேங்குது..நீங்க ரெண்டு பெரும் நிறைய தற்கொலைப்படை தீவிரவாதிகளை உருவாக்கி அவுங்களையும் அப்பாவி மக்களையும் சாகடிக்கிறீங்க..ஆனா நீங்க மட்டும் எப்பவுமே உயிரோட இருக்கீங்களே..அது எப்படி?..உங்க கிட்ட தீவிரவாத கோர்ஸ் படிக்க வர்ற அப்ரெண்டிஸ் தீவிரவாதிங்க இந்த கேள்வியை உங்க கிட்ட கேட்டதே இல்லையா? 
by 24ம் புலிகேசி,madurai,India    18-05-2010 01:27:35 IST
 IF PAKISTAN SUPPORT DAWOOD, HE WILL PUT NUCLEAR WEAPON INTO PAKISTAN .THIS WILL HAPPEN SHORTLY 
by C SHUNMUGANANDAM,thentamiladu,India    18-05-2010 00:46:36 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்