முதல் பக்க செய்திகள் 

சென்னையில் குண்டு வைக்கப்போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல்! இ-மெயில் அனுப்பி கொக்கரிப்பு
மே 16,2008,00:00  IST

Front page news and headlines today

காசியாபாத்: "ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு நாங்களே காரணம்' என, "இந்தியன் முஜாகிதீன்' என்ற பயங்கரவாத அமைப்பு, "டிவி' சேனல்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது. அத்துடன், ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு எப்படி வைக்கப்பட்டது என்பது தொடர்பான வீடியோ காட்சியையும் அனுப்பி வைத்துள்ளது. சென்னையில் குண்டு வைக்கப் போவதாகவும் அந்த பயங்கரவாத அமைப்பு எச்சரித்துள்ளது.இ-மெயில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள "சைபர் கபே' ஒன்றில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதால், அதன் உரிமையாளரும், அங்கு வேலை பார்த்தவரும் உ.பி., போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்."ஹூஜி' பயங்கரவாத அமைப்பு : ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த செவ்வாயன்று இரவு பயங்கர குண்டுகள் வெடித்ததில், 63க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர குண்டு வெடிப்புக்கு, வங்க தேசத்திலிருந்து செயல்படும் "ஹூஜி' பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.குண்டு வெடிப்பிற்கு சைக்கிள்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதால், ஒன்பது சைக்கிள்களை ஒரே நபருக்கு விற்ற சைக்கிள் கடைக்காரரிடமும், மற்றொரு ரிக்ஷா தொழிலாளியிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது.எங்கிருந்து இ-மெயில் : அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில், சைக்கிள்களை வாங்கிய பயங்கரவாதியின் வரைபடம் வெளியிடப்பட்டது.இந்நிலையில், உ.பி., மாநிலம் காசியாபாத் மாவட்டம் சாகிபாபாத்தில் இருந்து, சில தொலைக்காட்சி சேனல்களுக்கு நேற்று முன்தினம் இரவு இ-மெயில் வந்தது. அதில், "தாங்களே ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு காரணம்' என, "இந்தியன் முஜாகிதீன்' என்ற அமைப்பினர் தெரிவித்திருந்தனர். அந்த இ-மெயிலை போலீசாரின் பார்வைக்கு, "டிவி' சேனல்கள் அனுப்பி வைத்தன. உடன் சுதாரித்த போலீசார், அந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தனர்.இ-மெயில் உ.பி., மாநிலம் சாகிபாபாத்தில் உள்ள, "சைபர் கபே' ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது. உடன், அந்த "சைபர் கபே'யின் உரிமையாளரையும், அங்கு வேலை பார்த்தவரையும் கைது செய்த உ.பி., போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்."டிவி' சேனல்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், ஜெய்ப்பூரில் சோட்டி சவுபாட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள்களின் பிரேம் நம்பரும் (129489) குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பிரேம் நம்பரும், ராஜஸ்தான் போலீசார் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றிய சைக்கிள் பிரேம் நம்பரும் ஒன்றாக உள்ளது.அந்த இ-மெயிலின் "ஐடி' gurualhindijaipur@yahoo.co.ukஎன குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தான் அந்த "ஐடி' துவக்கப்பட்டுள்ளது. யாகூவின் பிரிட்டன் டொமைனை பயன்படுத்தி, இந்த, "ஐடி' ஆரம்பிக்கப்பட்டுள்ளது."ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்கு தாங்களே காரணம்' என தெரிவிக்கப்பட்டுள்ள அந்த இ-மெயிலில், "அமெரிக்காவிற்கு ஆதரவு தருவதை இந்தியா நிறுத்த வேண்டும். ஆதரவு தருவதை தொடர்ந்தால், இது போன்ற தாக்குதல்கள் தொடரும். குறிப்பாக சுற்றுலா தலங்களை குறிவைத்து, இந்தியாவிற்கு வரும் மேலை நாட்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம். டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னையில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டால், அங்கும் பயங்கர தாக்குதல்களை நடத்துவோம்.மூன்று சிவில் கோர்ட்டுகளில் : தெருக்களில் ரத்த ஆறு ஓடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இ-மெயிலுடன் வீடியோ கிளிப்பிங் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், சைக்கிள்கள் ஒன்று, கேரியரில் பையுடன் மார்க்கெட்டில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த பையில்தான் குண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த "இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினர் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்பது இது இரண்டாவது முறை. கடந்த நவம்பர் மாதத்தில், உ.பி., மாநிலத்தில் மூன்று சிவில் கோர்ட்டுகளில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் தாங்களே காரணம் என இந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இருந்தாலும், அப்போது அனுப்பப்பட்ட இ-மெயில், டில்லி சகார்பூர் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது.அந்த இ-மெயில் "ஐடி'யும், தற்போதைய "ஐடி'யும் மாறுபட்டதாக உள்ளன.இதற்கிடையில், ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷமீம் என்பவரின் வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஷமீமின் வீடு, உ.பி., மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ளது. இருந்தாலும், சோதனையின் போது எந்த தடயமும் சிக்கவில்லை. வாரணாசியில் 2006ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், ஷமீமிற்கு தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.அதேநேரத்தில், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள்களில் ஒன்றை வாங்கிய பெண் யார் என்பதை ராஜஸ்தான் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சைக்கிளை குண்டு வெடிப்பு நிகழ்ந்த அன்று, மதியம் 2.30 மணிக்கு அந்த பெண் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, வங்க தேசத்தை சேர்ந்த 40 பேரையும் ராஜஸ்தான் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்