Dinamalar

ரபாடா 30 விக்கெட் ,  
 

ரபாடா 30 விக்கெட்

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லியின் ரபாடா முதலிடம் பிடித்தார்.

எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லி வேகப்பந்துவீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இவர், 17 போட்டியில் 30 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து அதிக விக்கெட் கைப்பற்றியவருக்கான 'பர்பிள்' நிற தொப்பியை கைப்பற்றினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பையின் பும்ரா 27 விக்கெட் வீழ்த்தி 2வது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை மற்றொரு மும்பை வீரர் டிரன்ட் பவுல்ட் (25 விக்கெட்) தன்வசப்படுத்தினார். அடுத்த இரு இடங்களை முறையே டில்லியின் நார்ட்ஜே (22 விக்கெட்), பெங்களூருவின் யுவேந்திர சகால் (20) கைப்பற்றினர்.

668 விக்கெட்

ஐ.பி.எல்., தொடரில் இம்முறை மொத்தம் 668 விக்கெட் வீழ்த்தப்பட்டன. அதிகபட்சமாக டில்லியின் ராபாடா, 30 விக்கெட் சாய்த்தார். எந்த ஒரு பவுலரும் 'ஹாட்ரிக்' சாதனை படைக்கவில்லை. மொத்தம் 4,868 'டாட் பால்' வீசப்பட்டன.



நான்கு சூப்பர் ஓவர்

நான்கு போட்டிகள் 'சூப்பர் ஓவர்' வரை சென்றன.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஐ.பி.எல்., சாதனை துளிகள்

ஐ.பி.எல்., சாதனை துளிகள்

மார்ச் 25,2022 ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணி அதிகபட்சமாக 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) கோப்பை வென்றுள்ளது. சென்னை 4 (2010, 2011, 2018, 2021), கோல்கட்டா 2 (2012, 2014), ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) அணிகள் தலா ஒரு ...
 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...