Dinamalar

தெறிக்க விடுவாரா கோஹ்லி: மைக்கேல் ஹசி எதிர்பார்ப்பு ,  
 

தெறிக்க விடுவாரா கோஹ்லி: மைக்கேல் ஹசி எதிர்பார்ப்பு

புதுடில்லி: ''ஐ.பி.எல்., தொடரை அடிப்படையாக வைத்து கோஹ்லியை மதிப்பிடுவது தவறு. சாம்பியன்ஸ் டிராபியில் நிச்சயமாக விளாசுவார்,'' என, மைக்கேல் ஹசி தெரிவித்தார்.

தரவரிசையில் 'டாப்-8' இடத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜூன் 1ல் இங்கிலாந்தில் துவங்குகிறது. இதில், இந்திய அணி கோஹ்லி தலைமையில் களமிறங்குகிறது. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் இவரது பெங்களூரு அணி ஏமாற்றியது. 'பேட்டிங்கில்' தடுமாறிய இவர் 10 போட்டிகளில் 308 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதிலிருந்து மீண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்த காத்திருக்கிறார். தனது 'பேட்டிங்' மூலம் ஏதிரணிகளை தெறித்து ஓடச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கூறியது: கேப்டன் விராத் கோஹ்லி வியத்தகு வீரராக திகழ்கிறார். ஐ.பி.எல்., தொடரை அடிப்படையாக வைத்து இவரை மதிப்பிடக்கூடாது. அப்படி கணிப்பது தவறானது. இங்கிலாந்து மண்ணில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபியில் இவர் நிச்சயமாக மீண்டு வருவார். எழுச்சி பெற்று சிறந்த வீரர் என்பதை நிரூபிப்பார்.

ஆடுகளம் எப்படி:

இதைப்போல, சில இந்திய பேட்ஸ்மேன்களின் 'பார்ம்' இல்லாமல் இருப்பது, சாம்பியன்ஸ் டிராபியில் பாதிப்பை ஏற்படுத்தாது. பல அணிகள் பங்கேற்பதால் சவால் அதிகமாக இருக்கும். இதனால், சிறப்பான துவக்கம் தருவது அவசியம். தொடர் இன்னும் துவங்காத நேரத்தில், ஆடுகளத்தின் தன்மையை தற்போதே கணிப்பது கடினம். ஆனால், ஆடுகளம் நன்று காய்ந்து காணப்பட்டால் 'சுழல்' வீரர்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.

ஆஸி., சம பலம்:

ஆஸ்திரேலிய அணியில் பவுலிங், பேட்டிங் சம பலத்தில் காணப்படுகிறது. சமீபத்திய, ஐ.பி.எல்., தொடரில் ஸ்மித் (புனே), வார்னர் (ஐதராபாத்) இருவரும் அசத்தினர். இது, அணிக்கு சாதகமானது. ஆபத்தான அணியாக இருப்பதால் ஆஸ்திரேலியா சாதிக்கலாம். அதே நேரம், பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மைக்கேல் ஹசி கூறினார்.

மிரட்டும் இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறியது: ஐ.சி.சி., நடத்தும் மிகப்பெரிய தொடரில் முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்த உள்ளேன். இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கடந்த சாம்பியன்ஸ் டிராபியுடன் (2013) ஒப்பிடும்போது, வீரர்கள் முதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறப்பான அனுபவமும் கிடைத்ததுள்ளது. இத்தொடரில் சவாலை எதிர் கொள்ள தயார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் 9வது இடத்தில் வரும் வீரர் கூட விளாசுகிறார். 6 வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஜொலிக்கின்றனர். பீல்டிங்கிலும் பிரமாதமாக செயல்படுகின்றனர்.

தற்போதைய நிலையில், இங்கிலாந்து அணி ஒவ்வொரு ஒரு நாள் போட்டியிலும் 330 ரன்களை குவித்துவிடுகின்றது. சமீபத்தில், இந்திய மண்ணில் இவர்களின் பேட்டிங் வியப்பாக இருந்தது. இதில் 3 ஒரு நாள் போட்டியிலும் 300 ரன்களை கடந்தனர். இவர்களிடம் குறைகள் என எதுவுமே இல்லை. சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு அணிக்கும் சவால் தருவர் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கோஹ்லி கூறினார்.Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

ஜூன் 14,2017 பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார். இங்கிலாந்து மற்றும் ...
 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

ஜூன் 13,2017 லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி ...
புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

ஜூன் 12,2017 லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, ...