Dinamalar

சபாஷ் கேப்டன் ,  
 

சபாஷ் கேப்டன்

அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் முன்னிலை வகிக்கிறார். இவர், 16 போட்டியில் 12 வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் லாரா உள்ளார்.

மில்ஸ் மிரட்டல்

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மில்ஸ் முன்னிலை வகிக்கிறார். இவர், 15 போட்டியில் 28 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த இடத்தை இலங்கையின் முரளிதரன் வகிக்கிறார். இந்தியா சார்பில் ஜாகிர் கான், அதிகபட்சமாக 15 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

ஜடேஜா அசத்தல்

ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் இலங்கையின் மகரூப், முதலிடத்தில் உள்ளார். கடந்த 2006ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 ஓவரில் 14 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட் கைப்பற்றினார். இவரை அடுத்து, பாகிஸ்தானின் அப்ரிதி (எதிர்-கென்யா, 2004), தென் ஆப்ரிக்காவின் நிடினி (எதிர்-பாக்., 2006), காலிஸ் (எதிர்-வெ.இ., 1998), பர்னல் (எதிர்-நியூசி., 2009), வெஸ்ட் இண்டீசின் திலான் (எதிர்-வங்கம், 2004), நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம் (எதிர்-யு.எஸ்.ஏ., 2004), ஓ'கானர் (எதிர்-பாக்., 2000), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (எதிர்-வெ.இ., 2013), ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (எதிர்-நியூசி., 2002) தலா 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

விக்கெட் வேட்டை

ஒரு சீசனில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜெரோம் டெய்லர், முன்னிலை வகிக்கிறார். இவர், 2006-07 சீசனில் 7 போட்டியில் 13 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் ஜடேஜா உள்ளார்.

சூப்பர் கீப்பர்

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் வரிசையில் இலங்கையின் சங்ககரா, முன்னிலை வகிக்கிறார். இவர், 22 போட்டியில் 33 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். அடுத்த இடத்தை ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் வகிக்கிறார்.

அசத்தல் பீல்டர்

அதிக 'கேட்ச்' செய்த பீல்டர்கள் பட்டியலில் இலங்கையின் மகிளா ஜெயவர்தனா முதலிடத்தில் உள்ளார். இவர், 22 போட்டியில் 15 'கேட்ச்' செய்துள்ளார். இவரை அடுத்து, இந்தியாவின் கங்குலி (12 'கேட்ச்'), வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (12), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (10) பீல்டிங்கில் அசத்தியுள்ளனர்.

வெற்றிக் கூட்டணி

எந்த ஒரு விக்கெட்டுக்கும், அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் ஆஸ்திரேலியாவின் வாட்சன், பாண்டிங் ஜோடி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2009ல் செஞ்சுரியனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 252 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தது.

அனுபவம் அதிகம்

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை இலங்கையின் சங்ககரா, மகிளா ஜெயவர்தனா பெற்றனர். இவர்கள் இருவரும் தலா 22 போட்டியில் விளையாடியுள்ளனர். இவர்களை அடுத்து இலங்கையின் ஜெயசூர்யா (20 போட்டி), இந்தியாவின் டிராவிட் (19), வெஸ்ட் இண்டீசின் லாரா (18), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (18) அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.





Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
கங்குலியை முந்தினார் தவான்

கங்குலியை முந்தினார் தவான்

ஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...