Dinamalar

‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம் ,  
 

 ‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம்

பர்மிங்காம்: ''பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரன் மழை பொழிந்த யுவராஜ் சிங், ஆட்டத்தின் போக்கை மாற்றினார்,'' என, கேப்டன் விராத் கோஹ்லி பாராட்டினார்.

இங்கிலாந்தில், 8வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி (319/3, 48 ஓவர்), 124 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை (164/10, 33.4 ஓவர்) வென்றது.

இப்போட்டியில் 29 பந்தில் அரைசதம் கடந்த யுவராஜ், ஆட்டநாயகனாக ஜொலித்தார். பொதுவாக இவர் அரைசதம் எட்டினால், இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உண்டு. இது, மீண்டும் உண்மையானது.

சோதனைகளை கடந்து:

'கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ், சோதனைகளை கடந்து சாதிப்பதில் வல்லவர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இங்கிலாந்து சென்ற இவர், வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் 2 பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. லெவன் அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. பின் முழு உடற்தகுதி பெற்ற இவர், பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார்.

இதுகுறித்து கோஹ்லி கூறியது:

சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி. இப்போட்டியில் மழை அடிக்கடி குறுக்கிட்டதால், அரைசதம் அடித்த பின்னும், என்னால் இயல்பாக 'பேட்டிங்' செய்ய முடியவில்லை. அப்போது களமிறங்கிய யுவராஜ் சிங், துவக்கத்தில் இருந்து அதிரடியாக ரன் சேர்த்தார். தாழ்வாக வந்த 'புல்டாஸ்' பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டிய இவர், 'யார்க்கர்' பந்துகளையும் விட்டுவைக்கவில்லை.

'கிளப் பேட்ஸ்மேன்':

ஆட்டத்தின் போக்கை அதிரடிக்கு மாற்றிய பெருமை யுவராஜ் சிங்கை சேரும். இவரது ஆட்டத்துக்கு முன் நான் எல்லாம் ரொம்ப சாதாரணம். ஏதோ கிளப் அளவில் விளையாடும் பேட்ஸ்மேனை போல என்னை உணர்ந்தேன்.

தோனி ஏன்:

முதல் பந்தில் இருந்து விளாசும் திறன் பெற்றவர் ஹர்திக் பாண்ட்யா. இதனால் தான் தோனிக்கு முன்னதாக களமிறக்கினோம். இந்த முடிவை அனைவரும் சேர்ந்து தான் எடுத்தோம். பாண்ட்யாவும் வந்த வேகத்தில் மூன்று சிக்சர் அடித்து நம்பிக்கை அளித்தார்.

இந்திய அணியின் 'பேட்டிங்', 'பவுலிங்' சிறப்பாக உள்ளது. ஆனால் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தினர். காயத்தில் இருந்து மீண்டு, நீண்ட நாட்களுக்கு பின் சர்வதேச போட்டியில் விளையாடிய ரோகித், தனது 'பார்மை' தக்கவைத்துக் கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து விடுவர் என்பதால், இப்போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் போது, அவர்களின் பலம், பலவீனத்தின் அடிப்படையில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே, விளையாட்டு உணர்வை தாண்டி வேறுவிதமாக பார்க்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இதனை ஒரு போட்டியாக மட்டுமே கருதுகிறேன். இது முடிந்து விட்டதால், அடுத்துவரும் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.அர்ப்பணம்

கடந்த 2011ல் யுவராஜ் சிங், நுரையீரல்' கேன்சர்' கட்டியால் பாதிக்கப்பட்டார். 2012ல் பூரண குணமடைந்து, போட்டிக்கு திரும்பினார். பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதை, கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், 'பாகிஸ்தானுக்கு எதிரான எனது இன்னிங்சை, கேன்சரில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தவிர, லண்டனில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்,'' என தெரிவித்திருந்தார்.தோல்விக்கு காரணம்: அப்ரிதி

முன்னாள் பாகிஸ்தான் 'ஆல்-ரவுண்டர்' அப்ரிதி கூறுகையில், ''இந்தியாவுக்கு எதிராக 'டாஸ்' வென்றும் பயனில்லாமல் போனது வருத்தம். மழையால் ஆடுகளத்தின் தன்மை மாறக் கூடும் என்பதால், 2வது பேட்டிங் செய்வது எளிது. ஆனால் பாகிஸ்தான் அணியினர் சரியாக திட்டமிடாமல், தவறாக 'ஷாட்' அடித்து சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தவிர, 'பீல்டிங்' படுமோசமாக இருந்தது. சுலப 'கேட்ச்' வாய்ப்புகளை நழுவவிட்டது தோல்விக்கு வித்திட்டது. முதல் ஓவரை வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், 'மெய்டனாக' வீசினார். இந்நிலையில் 2வது ஓவரை சுழற்பந்துவீச்சாளருக்கு (இமாத் வாசிம்) வழங்கியது தவறான முடிவு. ஏனெனில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்க்கும் தகுதி படைத்தவர்கள். இந்திய அணியினர் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர்,'' என்றார்.அதிவேக அரைசதம்

இந்தியாவின் யுவராஜ் சிங், 29 பந்தில் அரைசதமடித்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், குறைந்த பந்தில் 50 ரன்களை எட்டிய இந்திய வீரரானார். இதற்கு முன், 2009ல் செஞ்சுரியனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் காம்பிர், 36 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தது சாதனையாக இருந்தது.

* தவிர, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிவேகமாக அரைசதமடித்த சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார் யுவராஜ். இதற்கு முன், இந்தியாவின் காம்பிர் (36 பந்து) இருந்தார்.தொடரும் ஆதிக்கம்

கடந்த 2000ம் ஆண்டு நைரோபியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி (அப்போது ஐ.சி.சி., 'நாக்-அவுட்') காலிறுதியில் முதன்முறையாக களமிறங்கிய 17 வயது யுவராஜ் சிங், 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். 17 ஆண்டுகளுக்கு பின், பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய 35 வயது யுவராஜ் சிங், 32 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

ஜூன் 14,2017 பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார். இங்கிலாந்து மற்றும் ...
 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

ஜூன் 13,2017 லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி ...
புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

ஜூன் 12,2017 லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, ...