சதங்களின் நாயகன் ,

அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர், 28 போட்டியில் 6 சதமடித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், இந்தியாவின் சச்சின் தலா 5 சதமடித்துள்ளனர்.
76சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் இதுவரை 76 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 28, தென் ஆப்ரிக்கா 45ல் வென்றன. மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை.
438
கடந்த 2015ல் மும்பையில் நடந்த போட்டியில் முதலில் 'பேட்டிங்' செய்த தென் ஆப்ரிக்கா 438 ரன்கள் குவித்தது. இதன்மூலம், ஒருநாள் போட்டி அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
கடந்த 2010ல் குவாலியரில் நடந்த போட்டியில் 401 ரன்கள் எடுத்த இந்திய அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தனது சிறந்த ஸ்கோரை பெற்றது.
91
டர்பனில், 2006ல் நடந்த போட்டியில் 91 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, ஒருநாள் போட்டி வரலாற்றில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
நைரோபியில், 1999ல் நடந்த போட்டியில் 117 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டான' தென் ஆப்ரிக்கா, இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது.
சச்சின் முதல்வன்
சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 57 போட்டியில் 5 சதம், 8 அரைசதம் என 2001 ரன்கள் குவித்துள்ளார்.
* தற்போதுள்ள வீரர்களின் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (1279 ரன்), ஆம்லா (743), குயின்டன் டி காக் (667), இந்தியாவின் தோனி (727), கோஹ்லி (635) அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.
200
இவ்விரு அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் சச்சின் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2010ல் குவாலியரில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின் 200 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம், ஒருநாள் அரங்கில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.
தென் ஆப்ரிக்கா சார்பில் குயின்டன் டி காக் (135 ரன், 2013, இடம்: ஜோகனஸ்பர்க்) இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்துள்ளார்.
'டக்-அவுட்' சோகம்
அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் அனில் கும்ளே, முன்னிலை வகிக்கிறார். இவர், 40 போட்டியில் 5 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். மற்றொரு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் 4 முறை 'டக்-அவுட்' ஆனார். தென் ஆப்ரிக்கா சார்பில் டேவிட் மில்லர், டுமினி, குளூஸ்னர் தலா 3 முறை 'டக்-அவுட்' ஆனார்கள்.
48
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் போலக் முன்னிலை வகிக்கிறார். இவர், 33 போட்டியில் 48 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
5
ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களுக்கான வரிசையில் இந்தியாவின் ஜோஷி (1999), தென் ஆப்ரிக்காவின் டொனால்டு (1991), குரோன்யே (1992), போலக் (2001), குளூஸ்னர் (1997), ஸ்டைன் (2011) ஆகியோர் தலா 5 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிக்கின்றனர்.
சூப்பர் கீப்பர்
அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் முன்னிலையில் உள்ளார். இவர், 33 போட்டியில் 40 'கேட்ச்', 2 'ஸ்டெம்பிங்' என 42 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் தோனி (32 விக்கெட் வீழ்ச்சி), தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்ட்சன் (31), குயின்டன் டி காக் (14), டிவிலியர்ஸ் (9) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.
அசத்தல் பீல்டர்
அதிக 'கேட்ச்' செய்த பீல்டர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இவர், 18 போட்டியில் 19 'கேட்ச்' செய்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் டிராவிட் (17 'கேட்ச்'), ஜான்டி ரோட்ஸ் (14), இந்தியாவின் அஜய் ஜடேஜா (13), தென் ஆப்ரிக்காவின் குரோன்யே (13) ஆகியோர் அதிக 'கேட்ச்' செய்துள்ளனர்.
சூப்பர் ஜோடி
எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன், கிப்ஸ் ஜோடி முதலிடத்தில் உள்ளது. கொச்சியில், 2000ம் ஆண்டு நடந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு கிறிஸ்டன், கிப்ஸ் ஜோடி 235 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து இந்தியாவின் சச்சின், தினேஷ் கார்த்திக் (2வது விக்கெட்) மற்றும் தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ஆம்லா (முதல் விக்கெட்) ஜோடிகள் தலா 194 ரன்கள் சேர்த்தன.
வெற்றிக் கேப்டன்
அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் குரோன்யே முன்னிலை வகிக்கிறார். இவர், 24 போட்டியில் 17 வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.
மூன்று முறை
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மூன்று முறை மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதன் விவரம்:
* நைரோபியில், 2000ம் நடந்த அரையிறுதியில் முதலில் 'பேட்டிங்' செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 295 ரன்கள் (கங்குலி- 141) எடுத்தது. பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 41 ஓவரில் 200 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
* கொழும்புவில், 2002ல் நடந்த அரையிறுதியில் முதலில் 'பேட்டிங்' செய்த இந்தியா, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 261 ரன்கள் (சேவக்-59, யுவராஜ்-62) எடுத்தது. பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் மட்டும் எடுத்து, 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
* கடந்த 2013ல் கார்டிப் நகரில் நடந்த லீக் போட்டியில், முதலில் 'பேட்டிங்' செய்த இந்தியா, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் (தவான்- 114, ரோகித்-65) எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்கா, 50 ஓவரில் 305 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' 26 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
'சூப்பர் பார்மில்' உள்ள இந்தியா, இம்முறை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் 4வது வெற்றியை பதிவு செய்யலாம்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!