Dinamalar

ஆஸி., கனவு தகர்ந்தது: ‘வேட்டு’ வைத்தது இங்கிலாந்து ,  
 

ஆஸி., கனவு தகர்ந்தது: ‘வேட்டு’ வைத்தது இங்கிலாந்து

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி, 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறைப்படி 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய அணி, தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

இங்கிலாந்தில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று, பார்மிங்காமில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பின்ச் அரைசதம்:

ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (21) சுமாரான துவக்கம் தந்தார். பின்ச் (68) அரைசதம் கடந்தார். ஹென்ரிக்ஸ் (17) நிலைக்கவில்லை. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள் போட்டியில் தனது 17வது அரைசதத்தை பதிவு செய்தார். மார்க் உட் 'வேகத்தில்' ஸ்மித் (56), மேக்ஸ்வெல் (20) வெளியேறினர். அடில் ரஷித் 'சுழலில்' மாத்யூ வேட் (2), மிட்சல் ஸ்டார்க் (0), பட் கம்மின்ஸ் (4) சிக்கினர்.

டிராவிஸ் ஹெட், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். . ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. ஹெட் (71), ஹேசல்வுட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ரஷித், மார்க் உட் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

ஸ்டோக்ஸ் சதம்:

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (4) ஏமாற்றினார். ஹேசல்வுட் 'வேகத்தில்' அலெக்ஸ் ஹேல்ஸ் (0), ஜோ ரூட் (15) வெளியேறினர். இங்கிலாந்து அணி 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. பின், மீண்டும் போட்டி துவங்கியதும் அபாரமாக ஆடிய மார்கன் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்த போது மார்கன் (87) 'ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்டோக்ஸ், ஒருநாள் போட்டியில் தனது 3வது சதமடித்தார்.

இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் தெரிவித்தனர். பின், 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறைப்படி 40.2 ஓவரில் 200 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி எனக் கணக்கிடப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 40 ரன்களில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டோக்ஸ் (102), பட்லர் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.

'லக்கி' வங்கதேசம்

ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததால், 'ஏ' பிரிவில் 3 புள்ளிகளுடன் 2வது இடத்தை உறுதி செய்த வங்கதேச அணி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

'வில்லன்' மழை

இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு மழை, வில்லனாக அமைந்தது. நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கான எதிரான போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி பெற்றது. பின் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில், ஒருகட்டத்தில் வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோனது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ராசியான '159'

இங்கிலாந்தின் இயான் மார்கன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. இதேபோல, இம்முறை இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் (2வது விக்கெட், எதிர்- வங்கதேசம்) மற்றும் இலங்கையின் தனுஷ்கா குணதிலகா - குசால் மெண்டிஸ் (2வது விக்கெட், எதிர்-இந்தியா) ஜோடிகள் 159 ரன்கள் சேர்த்தன. இம்மூன்று போட்டியிலும், இவர்கள் சார்ந்த அணிகள் வெற்றி பெற்றன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...