Dinamalar

அரையிறுதி...இந்தியாவுக்கு உறுதி: சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தல் ,  
 

அரையிறுதி...இந்தியாவுக்கு உறுதி: சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தல்

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்றைய முக்கிய லீக் போட்டியில் பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் பட்டையை கிளப்பிய நம்மவர்கள் சுலப வெற்றி தேடித் தந்தனர். சொதப்பலாக ஆடிய தென் ஆப்ரிக்கா, தொடரில் இருந்து வெளியேறியது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த காலிறுதி போன்ற முக்கிய லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, உலகின் 'நம்பர்-1' அணியான தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. இதில், வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

வந்தார் அஷ்வின்:

இந்திய அணியில் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, தமிழக 'சுழல்' நாயகன் அஷ்வின் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் பார்னலுக்கு பதில் அன்டிலி பேலுக்வாயோ வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி சாமர்த்தியமாக 'பவுலிங்' தேர்வு செய்தார்.

நிதான துவக்கம்:

தென் ஆப்ரிக்காவுக்கு ஆம்லா, குயின்டன் டி காக் சேர்ந்து மந்தமான துவக்கம் தந்தனர். இவர்கள் ஆமை வேகத்தில் ஆட, முதல் 10 ஓவரில் 35 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. பின் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஆம்லா ஒரு சி்க்சர், பவுண்டரி அடித்து 'ரன் ரேட்டை' மெல்ல உயர்த்தினார். இந்த நேரத்தில் அஷ்வின் திருப்புமுனை தந்தார். இவரது 'சுழலில்' தோனியின் கலக்கல் 'கேட்ச்சில்' ஆம்லா(35) அவுட்டானார். இதற்கு பின் தென் ஆப்ரிக்கா ஆட்டம் காண துவங்கியது. அரைசதம் கடந்த குயின்டன்(53), ரவிந்திர ஜடேஜா வலையில் வீழ்ந்தார்.

டிவிலியர்ஸ் காலி:

அடுத்து வந்த 'ஆபத்தான' டிவிலியர்ஸ், பாண்ட்யா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார். இவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் கங்கணம் கட்டி காத்திருந்த போது, அவரே 'வாலன்டியராக' வந்து சிக்கினார். ஜடேஜா பந்தை தட்டி விட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார் டுபிளசி. மறுமுனையில் இருந்து டிவிலியர்ஸ் வருவதற்குள் பாண்ட்யா பந்தை 'த்ரோ' செய்ய, அதை பெற்ற தோனி மின்னல் வேகத்தில் 'பெயில்சை' தகர்க்க, டிவிலியர்ஸ்(16) ரன் அவுட்டானார்.

'வில்லன்' டுபிளசி:

இந்த அதிர்ச்சியில் இருந்து தென் ஆப்ரிக்கா மீள்வதற்குள் இன்னொரு 'காமெடி' அரங்கேறியது.

இம்முறை அஷ்வின் பந்தை தட்டி விட்ட டுபிளசி ஓட துவங்கினார். பின் தயங்கிய இவர், தென் ஆப்ரிக்க அணிக்கு வில்லன் ஆனார். மறுமுனையில் இருந்து மில்லரும் ஓடி வர, ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே முனையில் நின்றனர். பின் 'டிவி' அம்பயர் உதவியுடன் மில்லர்(1) ரன் அவுட்டானது உறுதி செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் பாண்ட்யா 'வேகத்தில்' டுபிளசி(36) போல்டாக, தென் ஆப்ரிக்க அணி 33.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

மீண்டும் சொதப்பல்:

இதற்கு பின் இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, கடைசி வரை மீளவே முடியவில்லை. புவனேஷ்வர் வீசிய போட்டியின் 43வது ஓவரில் ரபாடா(5), மார்னே மார்கல்(0) வரிசையாக வெளியேறினார். அடுத்து வந்த இம்ரான் தாகிர் ஒரு ரன் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. தாகிரும் (1) ரன் அவுட்டானார். ஐ.சி.சி., தொடரில் வழக்கம் போல் சொதப்பிய தென் ஆப்ரிக்க அணி, 44.3 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டுமினி(20) அவுட்டாகாமல் இருந்தார்.

தவான் ரன் மழை:

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் சேர்ந்து நல்ல துவக்க தந்தனர். ரபாடா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த ரோகித், 12 ரன்களுக்கு வெளியேறினார். பின் கேப்டன் கோஹ்லி, தவான் சேர்ந்து தென் ஆப்ரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அரைசதம் கடந்த இவர்கள் இமாலய சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டு, இந்திய ரசிகர்களை பரவசப்படுத்தினர். தாகிர் 'சுழலி்ல்' தவான்(78) அவுட்டானார். டுமினி பந்தை சிக்சருக்கு அனுப்பிய யுவராஜ் சி்ங், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது. கோஹ்லி(76), யுவராஜ்(23) அவுட்டாகாமல் இருந்தனர்.

வங்கத்துடன் மோதல்

தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, 'பி' பிரிவு புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ( 1.370 'ரன்-ரேட்') முதலிடத்தை உறுதி செய்தது. இதன்மூலம் வரும் 15ல் பர்மிங்காமில் நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதியில் 'ஏ' பிரிவில் 2வது இடம் பிடித்த வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

இது தான் 'பெஸ்ட்'

இது குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில்,''ஒட்டுமொத்த வீரர்களும் முழு திறமை வெளிப்படுத்தினர். பந்துவீச்சிற்கு வலு சேர்க்கும் வகையில் 'பீல்டிங்' அபாரமாக இருந்தது. பேட்டிங்கில் தவான் மீண்டும் ஜொலித்தார். தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்சை விரைவாக அவுட்டாக்கியது நல்ல விஷயம். இத்தொடரின் சிறந்த போட்டியாக இது அமைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாக செயல்படுவோம்,''என்றார்.

டிவிலியர்ஸ் கூறுகையில்,''சிறப்பாக ஆட விரும்பினோம். ஆனால், இந்திய பவுலர்கள் 15 முதல் 20 ஓவர் வரை கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடரை மோசமாக முடித்தது சோகம் தான்,''என்றார்.Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...