Dinamalar

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன ,  
 

 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேச அணிகள் நாளை மோதவுள்ளன.

இதற்கு முன், இந்தியா, பிரிட்டன் கலாசார ஆண்டினை குறிக்கும் வகையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தோனி உள்ளிட்ட சக வீரர்களுடன் பங்கேற்ற கோஹ்லி கூறியது:

பொதுவாக லீக் போட்டிகள் தான் கடினமானது. மற்றபடி அரையிறுதியில் யார் மோதுகின்றனர் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. ஏனெனில், இந்த ஒன்றில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்து விட்டால், அப்புறம் பைனல் தான்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தான் மோத வேண்டும் என, எல்லோரும் விரும்புகின்றனர். இதில், இரு அணிகளும் சிறப்பாக விளையாடினால், அது இரு நாட்டு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையும்.

அதேபோல, இந்திய அணி உலகின் எந்த இடத்துக்கு சென்று விளையாடினாலும், ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது.

இங்கிலாந்து மண்ணில் சூரிய வௌிச்சம் நன்றாக இருந்தால் போதும், கிரிக்கெட் விளையாட உலகின் இதைவிட சிறந்த இடம் கிடையாது. அதேநேரம், மேகமூட்டமாக இருந்தால் மிகவும் கடினமாக இருக்கும்.

வெ ள்ளை நிற பந்துகள் இங்குள்ள ஆடுகளங்களில் அதிகமாக 'சுவிங்' ஆகாது. ஒருவர் இங்கு எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்று பார்க்கக் கூடாது. ஏனெனில், சூழ்நிலைக்கு தகுந்து 'அட்ஜஸ்ட்' செய்து கொள்வது, பேட்ஸ்மேனுக்கு சவாலானது.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.ரூ. 23.7 கோடிக்கு ஏலம்

கோஹ்லியின் 10 ஆண்டு ஐ.பி.எல்., தொடர் குறித்து, உலகின் பிரபல ஓவியர் சாஷா ஜாப்ரே வரைந்த ஓவியம், ரூ. 23.7 கோடிக்கு ஏலம் போனது. இதை தொழிலதிபர் பூனம் குப்தா வாங்கினார்.மீண்டும் 'நம்பர்-1'

இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 28. இந்த ஆண்டு துவக்கத்தில் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், 4 நாட்கள் மட்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இவர் 3வது இடத்தில் இருந்தார். தற்போது லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், புதிய தரவரிசை ('ரேங்க்') பட்டியல் வெளியானது. பாகிஸ்தான் (81 ரன்), தென் ஆப்ரிக்க (76) அணிக்கு எதிராக அசத்தியதால் இரு இடங்கள் முன்னேறிய கோஹ்லி, 862 புள்ளிகள் பெற்று மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். வார்னர் (861, ஆஸி.,), டிவிலியர்ஸ் (847, தெ.ஆப்.,) 2, 3வது இடத்தில் உள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலக்கலாக ரன் குவித்து வரும் இந்திய வீரர் ஷிகர் தவான் (68, 125, 78 ரன்), 10வது இடத்துக்கு (746 புள்ளி) முன்னேறினார். மற்ற இந்திய வீரர்கள் ரோகித் சர்மா (728) 13வது, தோனி (716) 14வது இடம் பெற்றனர்.

பவுலர்களில் இந்தியாவின் அக்சர் படேல் (606), 13, அமித் மிஸ்ரா (600) 15, அஷ்வின் (572) 20வது இடத்தில் உள்ளனர். 13 இடங்கள் முன்னேறிய புவனேஷ்வர் குமார் (567), 23வது இடத்தில் உள்ளார்.முதலிடத்துக்கு முன்னேறுமா

ஒருநாள் அணிகள் தரவரிசையில் தற்போது இந்தியா (117), 3வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா (119), ஆஸ்திரேலியா (117) முதல் இரு இடத்தில் உள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்றால், ஒருநாள் தரவரிசையில் 119 புள்ளியுடன் முதலிடம் பிடிக்கலாம். தசம புள்ளியில் தென் ஆப்ரிக்கா 2வது இடத்துக்கு தள்ளப்படும்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

ஜூன் 14,2017 பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார். இங்கிலாந்து மற்றும் ...
புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

ஜூன் 12,2017 லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, ...
 ‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம்

‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம்

ஜூன் 05,2017 பர்மிங்காம்: ''பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரன் மழை பொழிந்த யுவராஜ் சிங், ஆட்டத்தின் போக்கை மாற்றினார்,'' என, கேப்டன் விராத் கோஹ்லி ...