Dinamalar

பைனலில் இந்தியா–பாக்., மோதல்: ரோகித் சர்மா அசத்தல் சதம் ,  
 

பைனலில் இந்தியா–பாக்., மோதல்: ரோகித் சர்மா அசத்தல் சதம்

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு ஜோராக முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், வங்கதேசத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார். இந்திய வீரர் யுவராஜ் சிங், 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். மழை காரணமாக 10 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது.

இரு அரைசதம்:

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சவுமியா (0) போல்டானார். சபிர் ரஹ்மான் (19) ஏமாற்றினார். தமிம் இக்பால் 38, முஷ்பிகுர் 26 வது அரைசதம் விளாசினர்.

கேதர் திருப்பம்:

3வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்த நிலையில் கேதர் ஜாதவ் இந்திய அணிக்கு திருப்பம் தந்தார். இவரது 'சுழலில்' முதலில் தமிம் இக்பால் (70) சிக்கினார். சாகிப் அல் ஹசனை (15), ஜடேஜா திருப்பி அனுப்பினார். முஷ்பிகுரும் (61), கேதர் ஜாதவிடம் சரிந்தார். பும்ரா 'வேகத்தில்' மொசாதெக் (15), மகமதுல்லா (21) வீழ்ந்தனர். வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. மொர்டசா (30), டஸ்கின் (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, புவனேஷ்வர், கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

நல்ல துவக்கம்:

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி மறுபடியும் 'சூப்பர்' துவக்கம் தந்தது. இருவரும் பவுண்டரி மழை பொழிய இந்திய அணி முதல் 10 ஓவரில் ('பவர்பிளே'), 63/0 ரன்கள் எடுத்தது. சர்வதேச அரங்கில் இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 19வது முறையாக 50 அல்லது அதற்கும் மேல் ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 46 ரன் எடுத்த தவான், அரைசத வாய்ப்பை இழந்து திரும்பினார்.

சபாஷ் ரோகித்:

சாகிப் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார் ரோகித். கோஹ்லியும் தன் பங்கிற்கு வேகமாக ரன்கள் சேர்க்க இந்திய அணி, 25 ஓவரில், 1 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ரன்மழை தொடர, ரோகித் ஒருநாள் அரங்கில் 11வது சதம் விளாசினார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த கோஹ்லியும், அரைசதம் அடித்தார். கடைசியில் கோஹ்லி ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 40.1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. கோஹ்லி (96), ரோகித் (123) அவுட்டாகாமல் இருந்தனர். வரும் 18ம் தேதி நடக்கும் பைனலில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2007 க்குப் பின்... 2017

கடந்த 2007 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் லீக் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வென்றது. பின் இரு அணிகளும் மோதிய பைனலில், மீண்டும் சாதித்த இந்தியா, கோப்பை வென்றது. தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி தொடரில், லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது. வரும் 18ம் தேதி நடக்கவுள்ள பைனலில், பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா, மறுபடியும் கோப்பை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது முறை

வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியில் 4வது முறையாக (2000, 2002, 2013, 2017) பைனலுக்கு முன்னேறியது. இதில், 2000ம் ஆண்டு நடந்த பைனலில் நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, 2002ல் நடந்த பைனல் மழையால் இரண்டு முறை பாதியில் ரத்தாக இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. கடந்த 2013ல் பர்மிங்காமில் நடந்த பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பை வென்றது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...