கோஹ்லி 8000 ரன்கள் ,

இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 அரைசதம் 8008 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 7வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை சச்சின் (18,426 ரன்), கங்குலி (11,221), டிராவிட் (10,768), அசார் (9378), தோனி (9164), யுவராஜ் (8530) ஆகியோர் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
* இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், குறைந்த இன்னிங்சில் 8000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனை படைத்தார் கோஹ்லி. இவர், 175 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தார். இதற்கு முன், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், 182 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார்.19
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 11 முதல் 40 வரையிலான 2வது 'பவர்பிளே' ஓவர்களில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணிகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது. இதுவரை 4 போட்டியில் 19 விக்கெட்டுகள் கைப்பற்றியது. பாகிஸ்தான் (4ல் 18 விக்.,) இரண்டாவது இடத்தில் உள்ளது.
கிரிக்கெட்டினால் பிரிந்தாலும்...
கிரிக்கெட்டில் இந்தியா, வங்கதேச அணிகள் மல்லுக் கட்டுகின்றன. ஆனால், இரு நாடுகளுக்கும் வங்க மொழிக் கவிஞர் ரபிந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்கள் தான் தேசிய கீதமாக உள்ளன.
இந்தியாவின் கோல்கட்டாவைச் சேர்ந்த இவர், 1905ல் 'அமர் சோனார் பங்களா...', 1911ல் 'ஜன கண மன..' பாடல்கள் எழுதி, இசையமைத்தார். இந்தியா சுதந்திரத்துக்குப் பின், 1950, ஜன., 24ல் 'ஜன கண மன...' தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதேநேரம், 1971ல் சுதந்திரம் அடைந்த வங்கதேசம், 'அமர் சோனார் பங்களா...' பாடலை தேசிய கீதமாக அறிவித்தது. உலகளவில், உருகுவேயின் பிரான்சிஸ்கோ பிகுயரா எழுதிய பாடல்கள் தான், உருகுவே, பராகுவேக்கு தேசிய கீதமாக உள்ளன.
எகிப்தின் முகமது அப்டெல் வகாப் இசையமைத்த பாடல்கள், டுனிசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபியாவில் தேசிய கீதமாக உள்ளன.
'பெனால்டி' ரன்
அஷ்வின் வீசிய போட்டியின் 39.3வது ஓவரை எதிர்கொண்ட மகமதுல்லா, 1 ரன் எடுக்க ஓடினார். அப்போது பந்தை பெற்ற தோனி, ரன் அவுட் செய்ய 'ஸ்டம்ப்ஸ்' மீது எறிந்தார். ஆனால், பந்த அருகில் கிடந்த தோனியின் 'கிளவ்' மீது பட்டுச் சென்றது. இதனால், இந்தியாவுக்கு அபராதமாக, 5 'பெனால்டி' ரன்கள் விதிக்கப்பட்டது. இது வங்கதேச அணியின் ஸ்கோருடன் சேர்க்கப்பட்டது.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!