இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன் ,

லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெல்லும் என, ஆஸ்திரேலிய 'சுழல்' ஜாம்பவான் வார்னும், இங்கிலாந்து வெற்றி பெறும் என, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியும் பந்தயம் கட்டினர்.இதில் தோற்பவர், எதிரணியின் 'ஜெர்சியை' நாள் முழுவதும் அணிய வேண்டும் என்பது விதி. பின் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேற, கங்குலியின் கணிப்பு சரியானது.
இதையடுத்து, இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' தேடிப்பிடித்து வாங்கிய வார்ன், ஒருநாள் முழுவதும் அணிந்தார்.
இந்த 'போட்டோவை' தனது 'டுவிட்டரில்' வெ ளியிட்ட வார்ன் கூறுகையில்,' கங்குலி, நீங்கள் பந்தயத்தில் ஜெயித்து விட்டீர்கள். இதனால் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' அணிந்துள்ளேன். உலகத்தில் மிகவும் வேதனையான மனிதன் இப்போது நான் தான்,' என, தெரிவித்துள்ளார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!