நாடு திரும்புகிறார் கும்ளே? ,

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் பயிற்சியாளர் கும்ளே, நாடு திரும்புவார் எனத் தெரிகிறது.
இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் கும்ளே, 46. இவரது ஒரு ஆண்டு பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் (ஜூன் 20) முடிகிறது. இவருக்கு பதவி நீடிப்பு கிடைக்கும் என்ற நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பு வெளியானது.இதற்கு, கேப்டன் கோஹ்லி, கும்ளே மோதல், 10 வீரர்கள் எதிர்ப்பு என, பல காரணங்கள் இதற்கு கூறப்பட்டன. இதை கோஹ்லி மறுத்தார். கடைசியில், வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 ஒரு நாள், ஒரு 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடர் (ஜூன் 23-ஜூலை 9) முடியும் வரை, கும்ளே பதவியில் தொடர்வார் என, கூறப்பட்டது.
இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) இம்முடிவு, வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிக்குப் பின் கோஹ்லி கூறுகையில்,'' எனது பேட்டிங் இந்தளவுக்கு வளர்ச்சியடைய, சஞ்சய் பங்கர் (பேட்டிங் பயிற்சியாளர்) தான் காரணம். இவரது ஆலோசனைகள் விலை மதிப்பற்றவை,'' என்று பாராட்டினார்.
இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல் முடிந்தவுடன், கும்ளே தனது முடிவை தெரிவித்துவிட்டு, வெஸ்ட் இண்டீஸ் செல்லாமல் நாடு திரும்புவார் எனத் தெரிகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தானை சந்திக்க உள்ள நிலையில் இதுபோன்று வெளியாகும் செய்திகள், வீரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!