Dinamalar

கோப்பை வெல்வாரா கோஹ்லி: நாளை இந்தியா– பாக்., மோதல் ,  
 

கோப்பை வெல்வாரா கோஹ்லி: நாளை இந்தியா– பாக்., மோதல்

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரபரப்பான பைனல் நாளை நடக்க உள்ளது. இதில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பையை சொந்தமாக்கினால் ராஜ மரியாதை தர ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் பைனலில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2007க்குப் பின், ஐ.சி.சி., நடத்தும் தொடரின் பைனலில், இவ்விரு அணிகள் மோதுவதால், ஆர்வம் அதிகரித்துள்ளது. இம்முறை லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனல் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறியது: ஒரு அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது என்றால், சிறப்பான முறையில் திறமை வௌிப்படுத்தி உள்ளனர் என்று தான் அர்த்தம். பாகிஸ்தான் சிறப்பான முறையில் மீண்டு வந்துள்ளனர். வலிமையான அணிகளை வீழ்த்தியுள்ளனர். மொத்தத்தில் பைனலில் யார் விளையாடினாலும் சரி, அது சவாலானது தான்.

மனநிலை மாறும்:

இது பெரிய போட்டி என்ற எண்ணம் தோன்றத் துவங்கி விட்டால், அப்புறம் நமது மனநிலையில் மாற்றம் வந்து விடும். இதனால், இதுவரை எப்படிப்பட்ட முறையில் விளையாடி வந்தோமோ, அதையே மீண்டும் தொடர உள்ளோம். பாகிஸ்தானின் பலம், பலவீனத்திற்கு ஏற்ப திட்டமிட்டு விளையாடுவோம்.

மாற்றம் தேவையா:

மற்றபடி, பைனல் என்பதற்காக அணியில் பெரியளவில் மாற்றங்கள் தேவைப்படுமா என, இப்போதைக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் திறமை மற்றும் செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து, குறிப்பிட்ட நாளில், எங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்.

எச்சரிக்கையா:

அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட்டில் வீழ்த்தியது, பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி என்று கூறுவது தவறு. ஒருவர் 'டக்' அவுட்டானாலும் போட்டியில் வென்றால் போதும், அது நல்ல மனநிலையை தரும். இது தான் கிரிக்கெட்டின் அழகு.

கணிக்க முடியாது:

மற்றபடி, போட்டிக்கு முன்பே இவர் தான் வெற்றியாளர் என கணித்து விட முடியாது. ஏனெனில், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாளை நடக்கும் பைனலில் விளையாட எங்களுக்கு தகுதி உள்ளது என்ற எண்ணத்துடன், உற்சாகமாக போட்டியை எதிர்கொள்வோம்.

இது தோனியின் திட்டம்

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதில், வங்கதேச அணி, ஒரு கட்டத்தில் 25 ஓவரில் 142/2 ரன்கள் என, வலுவாக இருந்தது. இந்நிலையில் பவுலிங் செய்ய வந்த கேதர் ஜாதவ், தமிம் இக்பாலை அவுட்டாக்கி, திருப்பு முனை தந்தார்.

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில்,'' கேதர் ஜாதவை பவுலிங் செய்ய அழைத்ததற்கான பாராட்டுகள் அனைத்தும் எனக்கு மட்டும் சேராது. 'சீனியர்' தோனியின் ஆலோசனை தான் இதற்கு காரணம். இருவரும் சேர்ந்து ஜாதவை பவுலிங் செய்ய அழைத்தோம். பேட்ஸ்மேன்கள் எந்த இடத்தில் தடுமாறுவர் என நன்கு தெரிந்து வைத்துள்ளார் ஜாதவ்,'' என்றார்.

---------------

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...