கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள் ,

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வர்ணனை பணிக்காக இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி இங்கிலாந்து சென்றுள்ளார். இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில், வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இத்தொடரின் பைனலுக்கு முன்னேறியது.
இப்போட்டி முடிந்த பின், வர்ணனை பணி முடிந்து வெளியே வந்தார் கங்குலி. அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இவரது காரை வழி மறித்து தாக்கினர்.
பாகிஸ்தான் தேசிய கொடியை கங்குலி காரின் முன் புறம் வைத்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவரை நகர விடாமல் செய்து, கேலி பேசினர்.
பொறுமையாக இருந்த கங்குலி, காரை விட்டு இறங்காமல், அவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே, மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்தச் செய்தி தற்போது தான் தெரியவந்துள்ளது.