Dinamalar

ரூ. 6000 கோடி: இந்தியா–பாக்., பைனலுக்கு சூதாட்டம்... ,  
 

ரூ. 6000 கோடி: இந்தியா–பாக்., பைனலுக்கு சூதாட்டம்...

லண்டன்: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 6000 கோடி வரை சூதாட்டம் நடக்கும் எனத் தெரிகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை) தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில் கிரிக்கெட் உலகின் 'பரம எதிரிகள்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., தொடரின் பைனலில் இவ்விரு அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூதாட்ட ('பெட்டிங்') உலகமும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. இப்போதைக்கு இந்தியா மீது தான் அதிகமாக பணம் கட்டப்படுகிறது.

இந்தியா வெற்றி பெறும் என, ரூ. 100 கட்டினால், கோப்பை வெல்லும் பட்சத்தில் ரூ. 147 வரை கிடைக்கும். பாகிஸ்தான் வெற்றி பெறும் என, பணம் கட்டுபவர்கள் குறைவு தான். இதில் 'ரிஸ்க்' அதிகம் என்பதால், பாகிஸ்தான் கோப்பை வெல்லும் என, ரூ. 100 கட்டுபவர் கணக்கு பலித்தால், ரூ. 300 வரை கிடைக்கும்.

காரணம் என்ன:

பயங்கரவாத தாக்குதல், நட்பில் விரிசல் என காரணங்களுக்காக 2007க்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதவில்லை. 2012க்குப் பின் இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரும் நடக்கவில்லை.

ஐ.சி.சி., அல்லது ஆசிய கோப்பை தொடரில் மட்டும் இந்த இரு அணிகள் மோதுகின்றன. தற்போது, உலக கோப்பை தொடர் போன்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல் என்பதால், 'பெட்டிங்' மதிப்பு எகிறுகிறது.

மொத்தம் எவ்வளவு:

இங்கிலாந்தில் பெட்டிங் செய்ய சட்டரீதியிலான அனுமதி உள்ளது. இன்றைய போட்டிக்கு மட்டும் ரூ. 2000 கோடி முதல் ரூ. 3,223 கோடி வரை, அதிகாரப்பூர்வமாக பெட்டிங் நடக்கும் எனத் தெரிகிறது.

அதேநேரம், சட்டவிரோதமான முறையில் ரூ. 4000 கோடி வரை 'பெட்டிங்' உலகில் பணம் புரளும் என, நம்பப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இன்றைய போட்டியில் மட்டும் ரூ. 6000 கோடி வரை சூதாட்ட உலகில் பணம் கைமாற உள்ளது.

ரூ. 2 லட்சம் கோடி:

இதுகுறித்து அகில இந்திய 'பெட்டிங்' கூட்டமைப்பு தலைமை அதிகாரி ரோலண்ட் லாண்டர்ஸ் கூறுகையில், '' பொதுவாக ஒரு ஆண்டு முழுவதும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் ரூ. 2 லட்சம் கோடி வரை பெட்டிங் நடக்கிறது. தற்போது, 10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பைனலில் மோதுவதால், தொகை அதிகமாக உள்ளது,'' என்றார்.

'சூப்பர் சண்டே' ரசிகர்களே...

கிரிக்கெட் உலகம் பெரிதும் எதிர்பார்க்கும் சாம்பியன் டிராபி தொடரின் பைனல் இன்று நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், முடிவு என்ன ஆகுமோ என, இரு நாட்டு ரசிகர்களும் பதைபதைப்பில் காத்திருக்கின்றனர்.

பைனலுக்கு நம்முடன் மோத, பாகிஸ்தான் தான் வர வேண்டும் என, இந்திய ரசிகர்களில் பலர் விரும்பியிருப்பர். ஏனெனில், இவர்களை வீழ்த்தி தான் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் தான் காரணம்.

இந்நிலையில், இன்று பைனலைக் காண ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என, சில 'டிப்ஸ்':

*நமது 'ஹீரோ' பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, முக்கியமான நேரத்தில் 'கரண்ட் கட்' ஆகி விடும். இதை தவிர்க்க, முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

* திடீரென பலத்த மழை பெய்து கேபிள் அல்லது 'செட் டாப் பாக்ஸ்' வேலை செய்யாமல் போய்விடலாம். இதனால், 'லேப் டாப்', ஸ்மார்ட் போன்களை தயாராக வைத்து, நேரடி ஒளிபரப்பை தொடர்ந்து பார்க்கலாம்.

* போட்டி ஓய்வு நேரத்தில், முக்கிய தருணங்கள் குறித்து நண்பர்களுடன் அலைபேசியில் விவாதிப்போம். இதை தவிர்த்து விட்டு, எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து போட்டியை காணலாம். அனைவருக்கும் 'சூப்பர் சண்டே' ஆக வாழ்த்துக்கள்.

30 வினாடிக்கு ரூ. 1 கோடி

இன்று நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், அதிகமானோர் 'டிவி'யில் கண்டுகளிக்க காத்திருக்கின்றனர். இதனால் விளம்பர கட்டணம் ஒன்றுக்கு பத்தாக எகிறியுள்ளது. அதாவது 30 வினாடி விளம்பரத்துக்கு, இன்று மட்டும் ரூ. 1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.

100 போட்டிகள்

இந்திய அணியில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்கள் 6 பேர் உள்ளனர். இதில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 300 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியில் சோயப் மாலிக் (251 போட்டி), ஹபீஸ் (189) என இருவர் மட்டுமே உள்ளனர்.

30 வயது

இந்திய அணியில் 30 அல்லது அதற்கு மேல் வயதுடைய வீரர்கள் 7 பேர் உள்ளனர். பாகிஸ்தான் அணியில் நால்வர் மட்டுமே உள்ளனர்.

இளம் வீரர்

பாகிஸ்தான் அணியில் இளம் வீரராக ஷதாப் கான், 18 உள்ளார். இந்திய அணியில் இளம் வீரர்களாக பும்ரா, 23 மற்றும் பாண்ட்யா, 23 உள்ளனர்.

சர்பராஸ் 'மாமா' சர்ப்ரைஸ்

பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது மாமா மெகபூப் ஹசன். உ.பி.,யில் உள்ள எடாவா விவசாய கல்லுாரியில் 'சீனியர் கிளார்க்' ஆக உள்ளார். இவரது தங்கை அகிலா பனோ திருமணத்துக்குப் பின் கராச்சி சென்று விட்டார். இவரது மகன் தான் சர்பராஸ்.

இதனிடையே இன்றைய பைனல் குறித்து சர்பராஸ் மாமா, மெகபூப் ஹசன் கூறியது:

எனது உறவினர் சர்பராஸ், பாகிஸ்தானுக்காக விளையாடுகிறார் என்பது உண்மை தான். இவரும், இவரது அணியும் நன்றாக விளையாட வாழ்த்துகிறேன். ஆனால், தேசம் என்பது மற்ற அனைத்தையும் விட மேலானது. இன்று இந்தியா தான் வெற்றி பெறும். பாகிஸ்தான் வீரர்கள் 'ஓ.கே.,' என்றாலும், நமது வீரர்கள் அதை விட மேலாக உள்ளனர். இந்தியா நமது நாடு. இந்திய அணியின் வெற்றிக்காக பிரார்த்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...