Dinamalar

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...: சோகத்தில் விஜய் ,  
 

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...: சோகத்தில் விஜய்

புதுடில்லி: ''முத்தரப்பு பைனல் எனக்கான நாளாக அமையவில்லை. இதனை மறக்க முடியாமல் நெஞ்சம் தவிக்கிறது. 'ஹீரோ'வாக உருவெடுக்க கிடைத்த அரிய வாய்ப்பை வீணடித்து விட்டேன்,''என, விஜய் ஷங்கர் தெரிவித்தார்.

இந்திய அணி இளம் வீரர் விஜய் ஷங்கர், 27. தமிழகத்தின் 'ஆல்-ரவுண்டரான' இவர், சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றார். வங்கதேசத்திற்கு எதிரான பைனலில் களமிறங்கிய இவர், கடைசி கட்டத்தில் ஆமை வேகத்தில் ஆடினார். முஷ்டபிஜுர் வீசிய 18வது ஓவரில் தொடர்ந்து 4 பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. மொத்தம் 19 பந்தில் 17 ரன்கள் மட்டும் எடுத்தார். மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி, கோப்பை வெல்ல கைகொடுத்தார்.

விமர்சனம் முக்கியம்

இது குறித்து விஜய் ஷங்கர் கூறியது: நான் சற்று வருத்தமாக இருந்ததால், பெற்றோர் மற்றும் நண்பர்கள் எதுவும் பேசவில்லை. சிலர்,' சமூகவலைதளத்தில் வெளியிடப்படும் செய்தி குறித்து கவலை வேண்டாம்,' என, எஸ்.எம்.எஸ்., அனுப்பினர். இப்படி எனக்கு ஆறுதல் கூறினாலும், எந்த பயனும் இல்லை. இந்திய அணிக்காக விளையாடும்போது, சமூகவலைதளத்தில் வரும் விமர்சனத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். நான் வெற்றிக்கு கைகொடுத்திருந்தால் இந்த கடுமையான எதிர்ப்பு தலைகீழாக மாறி இருக்கும். ஒரு வீரராக முன்னேற்றம் காண, இம்மாதிரியான விமர்சனமும் முக்கியம்.

மனம் உடைந்தது

ஒருவேளை, முதலிரண்டு பந்திலேயே நான் அவுட்டாகி இருந்தால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. ஆனால், சில நேரங்களில், சவாலை சந்தித்துதான் ஆக வேண்டும். என்னை தற்காத்துக் கொள்ள எண்ணவில்லை. ஒரு 'ஹீரோவாக' மாறி இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக செயல்பட்டு, அணிக்கு வெற்றித்தேடித் தந்திருக்க வேண்டும். என்னால் முடியவில்லையே என வருத்தப்பட்டேன். போட்டி முடிந்ததும் கோப்பை வென்ற உற்சாகத்தில் ஒவ்வொரு வீரரும் இருந்தனர். நான் மட்டும் மனம் உடைந்து போய் இருந்தேன்.

மறப்பது கடினம்

ஒட்டுமொத்தமாக பார்த்தால், முத்தரப்பு 'டுவென்டி-20' தொடர் நன்றாகவே அமைந்தது. பைனல் நடந்த நாள் மட்டும் எனக்கானதாக அமையவில்லை. இதை கடந்து செல்ல வேண்டும் என எண்ணுகிறேன். இருப்பினும், மறப்பதற்கு கடினமாக உள்ளது. சையது முஷ்டாக் மற்றும் விஜய் ஹசாரே டிராபியில், ஒவ்வொரு பந்திற்கும் ரன் எடுத்துவிடுவேன். வங்கதேசத்திற்கு எதிரான பைனலில், ஒரு ரன் எடுத்து விட்டு, ஸ்டிரைக்கை எதிர்முனையில் இருக்கும் வீரருக்கு கொடுத்திருக்க வேண்டும், மாறாக பந்தை விளாச முடிவு செய்தது தான் பிரச்னைக்கு காரணம். இந்திய அணி தேர்வு குறித்து கவலைப்படவில்லை. ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக களமிறங்க உள்ளேன். இதில் மட்டும்தான் கவனம் உள்ளது. இவ்வாறு விஜய் ஷங்கர் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
நெஞ்சம் எல்லாம் தோனி

நெஞ்சம் எல்லாம் தோனி

ஏப்ரல் 18,2018 கவாஸ்கர்: ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடி துவக்கம் கிடைத்து விட்டால், 200 ரன்களை எளிதாக எட்ட முடிகிறது. பின் 'மெகா' இலக்கை சேஸ் செய்யும் அணிகளுக்கு தான் திண்டாட்டம். ...
மனம் தளராத தோனி

மனம் தளராத தோனி

ஏப்ரல் 18,2018 பொதுவாக 30 பந்தில் 76 ரன்கள் எடுப்பது, 'டுவென்டி-20' போட்டியிலும் அதிசயம் தான். இது முடியாத விஷயம் எனத் தெரிந்தாலும், 'முயன்றால் முடியாதது இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, ...
கவனம் கவர வாய்ப்பு

கவனம் கவர வாய்ப்பு

ஏப்ரல் 18,2018 சஞ்சு சாம்சன் 'ஸ்பெஷல்' திறமை படைத்த இளம் வீரர். தான் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சாதித்து, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ...