Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021

கழிவு கொட்டும் இடமாக மாறியது... சின்னக்கரை ஓடை பாழாகுது!

திருப்பூர்:சுண்டமேடு, சின்னக்கரை ஓடை பகுதியை, சாய ஆலைகள், கழிவு கொட்டும் குப்பை தொட்டியாக மாற்றிவிட்டன.கழிவுகளை வெளியேற்றுவதில், திருப்பூர் பகுதி ஆடை உற்பத்தி, சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் அலட்சியமாக செயல்படுகின்றன. தொழிற்சாலை கழிவுகளை பொது இடங்களில் கொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.திருப்பூர் - பல்லடம் ரோடு, சுண்டமேடு பகுதியில், சின்னக்கரை ஓடையை, அப்பகுதி சாய ஆலைகள், குப்பை தொட்டியாக பயன்படுத்திவருகின்றன. சாய ஆலைகளில் பாய்லரிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவு; சாயங்கள் வைக்கப்பட்ட கேன்கள், கையுறை; கழிவு பஞ்சு மற்றும் துணி; பாலிதீன் பைகள் கொட்டப்பட்டுள்ளன.ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றன. இதனால், குப்பை மலைபோல் குவிந்துள்ளது. கழிவுகள் கலந்து, ஓடை நீர் மாசுபடுகிறது. அவ்வப்போது, தீ வைப்பதால், நச்சுபுகை உருவாகி வளிமண்டல காற்றை மாசுபடுத்துகிறது.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். எந்தெந்த நிறுவனங்கள், கழிவுகளை பொது இடங்களில் கொட்டுகின்றன என கண்டறிந்து, நடவடிக்கை



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X