Dinamalar

IPL2018

சொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி! ,  
 

சொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி!

சென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவது தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். இதற்காக கைதேர்ந்த சிற்பியை போல அணியை செதுக்கினார். வீரர்கள் தேர்வு முதல் போட்டியில் வியூகம் வரை அனைத்தையும் கச்சிதமாக செய்தார். இவருக்கு சக வீரர்களும் ஒத்துழைப்பு தந்தனர். பைனலில் வாட்சன் சதம் விளாச, சென்னைக்கு கோப்பை வசமானது.

ஐ.பி.எல்., தொடரின் வெற்றிகரமான அணி சென்னை. 2013ல் வெடித்த சூதாட்ட புயல் சென்னை, ராஜஸ்தான் அணிகளை சாய்த்தது. இரு ஆண்டு (2016, 2017) தடை, முடிந்து இம்முறை மீண்டும் களம் கண்டது சென்னை. 'சரியான திட்டமிடலுடன் ஆயுதங்களின் கூர்மையும் இருந்தால் போர்க்களத்தில் எளிதாக வெல்லலாம்,' என முடிவு செய்தார் கேப்டன் தோனி. ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை வீரர்களின் சராசரி வயது 33.

தமிழகத்தின் 'நம்பர்-1' பவுலரான அஷ்வினை வாங்காதது சர்ச்சை ஏற்படுத்தியது. 'வயதான அணி' என சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். ஏலம் முடிந்து பயிற்சிகள் துவங்கின. வீரர்களிடம் உணர்ச்சி வசப்பட்டு பேசிய தோனி முதன் முறையாக கண் கலங்கினார்.

வெற்றி வேட்கை: இந்த சீசனில் சென்னை ரசிகர்களுக்காக சாதித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தது. 8 ஆண்டுகளாக மும்பை அணிக்காக பின் வரிசையில் விளையாடிய அம்பதி ராயுடுவை (602 ரன்) துவக்க வீரரக களமிறக்கினார் தோனி. 34 வயதான பிராவோ (30 பந்து, 68 ரன்) அணியை கரை சேர்த்தார். சொந்தமண்ணில் இளம் பில்லிங்ஸ் (23 பந்து, 56 ரன்) கைகொடுத்தார்.

புனேவுக்கு மாற்றம்: அடுத்து மீண்டும் சோதனை. காவிரி பிரச்னையால் சென்னையை விட்டு புனேக்கு செல்ல நேர்ந்தது. சொந்தமண் பலம் பறிபோனது. சற்று தடுமாறினாலும் ரெய்னா (445 ரன்), ஜடேஜாவுக்கு (11 விக்.,) வாய்ப்பு கொடுத்தார். சர்வதேச அனுபவம் பெற்ற ஷர்துல் தாகூர் (16 விக்.,) இருக்க, 'சுவிங் மாஸ்டர்' தீபக் சகார் மீது அதிக நம்பிக்கை வைத்தார். ரூ. 50 லட்சத்துக்கு வாங்கிய லுங்கிடியும் (11) கலக்கினார்.

பீல்டிங் அபாரம்: முன்னணி வீரர்களில் 11 பேர் 30 வயதுக்கும் மேல் இருக்க, 'டாடி ஆர்மி' என கிண்டல் செய்யப்பட்ட சென்னை வீரர்கள், லீக் சுற்றில் 82.7 சதவீதம் (2வது சிறந்தது) 'கேட்ச்' செய்து பீல்டிங்கில் மிரட்டினர். கடந்த சீசனில் அதிக பந்துகளை வீணடித்த தோனி (46.4 சதவீதம்) 2018ல் நல்ல முன்னேற்றம் (36.4) கண்டார். கடைசி கட்ட ஓவர்களில் இவர் சந்தித்த 148 பந்துகளில் 297 ரன்கள் (24 சிக்சர், 14 பவுண்டரி) விளாசினார்.

மாறிய பேட்டிங்: துவக்க வீரராக ஜொலித்த அம்பதி ராயுடுவை 'மிடில் ஆர்டருக்கு' அனுப்பினார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களுக்கே 'புரியாத புதிராக' இருந்தது. பில்லிங்சை நீக்கி விட்டு திடீரென டுபிளசியை துவக்கம் தரச் சொன்னார். தகுதிச்சுற்று 1ல் டுபிளசியின் ஆவேச ஆட்டம் சென்னை அணியை பைனலுக்கு கொண்டு சென்றது.

ஹர்பஜனுக்கு கல்தா: இம்முறை மற்றொரு புதிய திட்டத்துடன் வந்தார் தோனி. மும்பை அணிக்காக 10 ஆண்டுகள் வான்கடே மைதானத்தில் வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். தகுதிச்சுற்று 1ல் ஒரு ஓவர் கூட இவருக்கு வழங்காத தோனி மும்பையில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிாரன பைனலில் அணியை விட்டே நீக்கினார்.

5 போட்டியில் 6.3 ஓவர் மட்டும் வீசிய கரண் சர்மாவை திடீரென கொண்டு வந்தது வியப்பு தந்தது. கடைசியில் இவர், வில்லியம்சனை வெளியேற்றி திருப்பு முனை தந்தார். பேட்டிங்கில் 36 வயதான, அனுபவ வாட்சன் (555 ரன்) மீண்டும் சதம் விளாசி மிரட்டினார்.

கடைசியில் தோனி வென்றது ஐ.பி.எல்., கோப்பை மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களையும் தான்.'ஒன் மேன் ஆர்மி' அல்ல

ஐ.பி.எல்., தொடரில் தினேஷ் கார்த்திக் அவுட்டானால் கோல்கட்டாவுக்கு திண்டாட்டம் ஆகிவிடும். பட்லர் சென்ற பின் ராஜஸ்தான் பரிதவித்துப் போனது. தவான், வில்லியம்சன், ரஷித் கான் என மூவரில் ஒருவர் சொதப்பினாலும் ஐதராபாத் அவ்வளவு தான்.

சென்னை அணி அப்படியல்ல. பிரோவா, வாட்சன், ரெய்னா, டுபிளசி என, ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் எழுச்சி பெற்று வெற்றி பெற்றுத் தந்தனர்.

6வது முறை

ஐ.பி.எல்., புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பெறும் அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பர். 2011 (சென்னை), 2012 (கோல்கட்டா), 2013 (மும்பை), 2014 (கோல்கட்டா), 2015 (மும்பை) வரிசையில் தற்போது 6 வதாக சென்னையும் இணைந்தது.

ராசியா '7'

தோனியின் பிறந்த தேதி 1981 ஜூலை 7. பைனல் நடந்தது மே 27. 7வது முறையாக பைனலில் விளையாடியது சென்னை. இந்த ராசி கைகொடுக்க சென்னை அணி கோப்பை வென்றது.

* இதேபோல மே 27ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்த ஜெர்சி எண் 7 தான்.

2008... 2018

கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., தொடரில் வார்ன், லட்சுமண், கைப் என ராஜஸ்தான் அணியில் பல சீனியர் வீரர்கள் இருந்தனர். கடைசியில் கோப்பை வெல்ல வாட்சன் தொடர் நாயகன் ஆனார். 2018ல் 'சீனியர்' அணி என விமர்சிக்கப்பட்ட சென்னை சாம்பியன் ஆனது. இம்முறை வாட்சன் ஆட்ட நாயகன்.

சமர்ப்பணம்: ஹர்பஜன்

சென்னை அணியின் ஹர்பஜன் சிங் தமிழில் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில், ' தோட்டாவென கிளம்பிய பந்துகள், கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சள் ஏந்தி ஐ.பி.எல்., கோப்பை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட (ள) முற்பட்ட போதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி இது. சென்னை மக்களுக்கு சமர்ப்பணம், மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே தரும், நன்றி,' என, தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்.,-ஐ.எஸ்.எல்.,

ஐ.பி.எல்., ('டுவென்டி-20' கிரிக்கெட்) தொடரில் சென்னை அணி 2010, 2011, 2018ல் கோப்பை வென்றது. தவிர சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2010, 2014ல் சாதித்தது.

இதேபோல ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் 2015, 2017-18ல் சென்னை அணி கோப்பை வென்றது.

பிளமிங் பெருமிதம்

ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாட நேற்று தோனி தலைமையிலான வீரர்கள் சென்னை வந்தனர்.

அப்போது, பயிற்சியாளார் பிளமிங் நிருபர்களிடம் கூறுகையில்,''சென்னை மைதானத்திற்கு ஏற்ப, வீரர்களை தேர்வு செய்திருந்தோம். அதனால், புனேயில் விளையாடியது, பெரும் சவாலாக இருந்தது. அணியின் வெற்றிக்கு, கேப்டன் தோனி தான் காரணம். இவரிடம், மற்ற வீரர்களை விளையாட வைக்கும் தலைமைப் பண்பு உள்ளது. பைனலில் எதிரணியினர், 200 ரன்கள் எடுத்திருந்தால் கூட, அதையும் நாங்கள் முறியடித்து வெற்றி பெற்றிருப்போம்,''என்றார்.Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘ஸ்டைல்’ வீரர் ரிஷாப்

‘ஸ்டைல்’ வீரர் ரிஷாப்

மே 28,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி ...
மூன்றாவது முறை

மூன்றாவது முறை

மே 28,2018 ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ...
‘மெர்சல் அரசன்’ வாட்சன்:  ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்

‘மெர்சல் அரசன்’ வாட்சன்: ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்

மே 27,2018 மும்பை: ஐ.பி.எல்., பைனலில் துாள் கிளப்பிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. 'தனி ஒருவனாக' பேட்டிங்கில் மிரட்டிய ஷேன் வாட்சன் சதம் கடந்து ...