Dinamalar

கலக்கல் கீப்பர் ,  
 

கலக்கல் கீப்பர்

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி (சென்னை) முன்னிலை வகிக்கிறார். இவர், 204 போட்டியில் 109 'கேட்ச்', 39 'ஸ்டெம்பிங்' என மொத்தம் 148 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இவரை அடுத்து தினேஷ் கார்த்திக் (140), உத்தப்பா (90), பார்த்திவ் படேல் (81), விரிதிமன் சகா (76), நமன் ஓஜா (75) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.

'டக்-shy;அவுட்' சோகம்

அதிக முறை 'டக்-shy;அவுட்டான' வீரர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல், ரகானே, ரோகித் சர்மா முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் தலா 13 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகினர். இவரை அடுத்து தலா 12 முறை 'டக்-அவுட்டான' பியுஸ் சாவ்லா, மன்தீப் சிங், மணிஷ் பாண்டே, அம்பதி ராயுடு, கவுதம் காம்பிர் உள்ளனர். தினேஷ் கார்த்திக் 11 முறை, ஒரு ரன் கூட எடுக்காமல் 'பெவிலியன்' திரும்பினார்.



ரன் வள்ளல்

ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை வழங்கிய பவுலர்கள் பட்டியலில் ஐதராபாத் அணியின் பசில் தம்பி முன்னிலை வகிக்கிறார். இவர், 2018ல் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில், ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல், 70 ரன்கள் வழங்கினார்.

ஐதராபாத்தின் இஷாந்த் சர்மா (66 ரன், எதிர்: சென்னை, 2013), பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் (66 ரன், எதிர்: ஐதராபாத், 2019), டில்லியின் உமேஷ் யாதவ் (65 ரன், எதிர்-shy;பெங்களூரு, 2013), பஞ்சாப் அணியின் சந்தீப் சர்மா (65, எதிர்-shy;ஐதராபாத், 2014 ), ஐதராபாத் அணியின் சித்தார்த் கவுல் (64 ரன், எதிர்: மும்பை, 2020), டில்லியின் வருண் ஆரோன் (63, எதிர்-shy;சென்னை, 2012), புனே அணியின் அசோக் டிண்டா (63, எதிர்-shy;மும்பை, 2013), ஆகியோரும் ரன் வள்ளல்களாக திகழ்ந்தனர்.







அதிக 'மெய்டன்'

துல்லியமாக பந்துவீசி ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அதிக 'மெய்டன்' ஓவர் வீசிய பவுலர்கள் பட்டியலில் பிரவீண் குமார் முதலிடத்தில் உள்ளார். இவர் 119 போட்டியில், 14 'மெய்டன்' ஓவர் வீசியுள்ளார். இவரை அடுத்து இர்பான் பதான் (10), தவால் குல்கர்னி (8), மலிங்கா (8), சந்தீப் சர்மா (8), புவனேஷ்வர் குமார் (8), ஸ்டைன் (7), அமித் மிஸ்ரா (6), ஹர்பஜன் (6), பும்ரா (6) ஆகியோர் அதிக 'மெய்டன்' ஓவர் வீசினர்.





'டாட் பால்'

கட்டுக்கோப்பாக 'பவுலிங்' செய்து, அதிக 'டாட் பால்' வீசிய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் முன்னிலை வகிக்கிறார். இவர், 160 போட்டியில், 562.2 ஓவர்கள் வீசியுள்ளார். இதில், 3967 ரன் வழங்கிய இவர், 1249 'டாட் பால்' (ஒரு ரன் கூட வழங்கவில்லை) வீசியுள்ளார்.

இவரை அடுத்து அஷ்வின் (1170), புவனேஷ்வர் குமார் (1164), மலிங்கா (1155), பியுஸ் சாவ்லா (1148), அமித் மிஸ்ரா (1129), நரைன் (1118) ஆகியோர் 'டாட்-பால்' வீசியுள்ளனர்.





Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...
சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...