மோனுவை துாக்கிய தோனி: பிறந்தநாள் கொண்டாட்டத்தில்... ,

துபாய்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சக வீரர் மோனு குமாரை அப்படியே துாக்கி மகிழ்ந்தார் தோனி.
ஐ.பி.எல்., தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி மூன்று முறை கோப்பை வென்றது. 13வது சீசனில் 14 போட்டியில் 6 வெற்றி மட்டும் பெற்று, 12 புள்ளியுடன், பட்டியலில் 7 வது இடம் பெற்று வெளியேறியது.முதன் முறையாக லீக் சுற்றுடன் நடையை கட்டிய சென்னை அணி வீரர்கள் அனைவரும் நாடு திரும்பிவிட்டனர். இதனிடையே சென்னை அணியில் இடம் பெற்றிருந்த கரண் சர்மா, தனது 33வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார்.
அப்போது, தோனியின் நெருங்கிய நண்பர், ராஞ்சியின் 'ஆல் ரவுண்டர்' மோனு குமாரை எல்லோரும் 'ஸ்பெஷலாக' கவனித்துள்ளனர். இதிலிருந்து தப்பி ஓடிய அவரை துரத்திச் சென்ற தோனி, அப்படியே துாக்கினர். இவருக்கு சக வீரர் டுபிளசியுடன் கைகொடுக்க, மோனு முகம், தலையில் 'கேக்' பூசி மகிழ்ந்தனர்.
நவ., 5ம் தேதி மோனுவுக்கு 26 வது பிறந்த நாள். இதை முன்னதாக கொண்டாட நினைத்த தோனி உள்ளிட்ட வீரர்கள், சென்னை அணி வீரர்கள் இப்படிச் செய்து மகிழ்ந்தனர்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!